Monday 30 November 2015

(11) முழுக்கு ஞானஸ்நானம் அவசியமா ? பகுதி-1

முழுக்கு ஞா
னஸ்நானம் அவசியமா ?

பகுதி-1

அந்தோனி:என்ன பீட்டர் நம்ம ஜேம்ஸிடம் முழுக்கு ஞானஸ்நானம் ரெம்ப அவசியமுனு சொன்னியாமுல அப்படியா வேதம் சொல்லுது ?

பீட்டர்: ஆமா,வேதம் அப்படிதான் சொல்லுது அந்தோனி, இது பெந்தகோஸ்தே சபைக்காரவங்களோ அல்லது ஏதாவது ஒரு மனிதர் கண்டுபிடிச்சு ஏற்படுத்துன சடங்காச்சாரம் இல்ல.இது இயேசுகிறிஸ்துவோட கட்டளை (மத்28:19) பிதாவாகிய தேவனே நியமிச்சது (யோ 1:33)

அந்தோனி: அப்படியா ?

பீட்டர்: நீ வேதத்தை நல்ல படிச்சுபாரு ஞானஸ்நானம் என்றாலே முழுகி எடுப்பதுதான்.
இது தேவ நீதி(மத் 3:15) அதனால தான் யோவான் ஸ்நானகன் இயேசுவை தடுத்தும் அவர் முழுகி ஞானஸ்நானம் எடுத்து தேவநீதியை நிறைவேற்றினார்.எனவே தான் ஆவியானவரால ஏவப்பட்டு அப்போஸ்தலர்கள் அதை போதிச்சாங்க (அப் 2:38) அதத்தான் நானும் நம்ம பிரதர் ஜேம்ஸ்-க்கு போதிச்சேன்

அந்தோனி: அப்படியா ? நான் இத  சும்மா ஏதோ ஒரு சடங்குமுனு  நெனச்சுக்கிட்டு இருந்தேன்,வேதத்துல இதுபற்றி இவ்வளவு விஷயம் இருக்கா !

பீட்டர்: ஆமா அந்தோனி,

விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். (மாற்கு 16:16)

ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்திலே பிரவேசிக்கமாட்டான் (யோ 3: 5)
என்று இயேசு கிறிஸ்து  பற்றியும் சொல்கிறார்

 மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்,அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.(அப் 2: 38) என்று பேதுரு போதிக்கிறார்.

மனம்திரும்புதல்,விசுவாசித்தல்,
ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறத்தல்(ஞானஸ்நானம்) புது சிருஷ்டியாக மாறுதல் பரலோகராஜ்யத்தில் பிரவேசித்தல் என எல்லாம் ஒரு தொடர்வரிசையாக வருகிறது

#மனம்திரும்பாமல்,இயேசுவை விசுவாசிக்காமல் ஒருவன் எடுத்த எந்த ஞானஸ்நானமும், வேதத்தின்படி ஞானஸ்நானம் இல்லை

#மனம்திரும்பி இயேசுவை விசுவாசித்தும்,ஒருவன் ஞானஸ்நானம் எடுக்காமல் இருப்பதும் வேதத்தின்படி ஏற்புடையது அல்ல

ஞானஸ்நானத்தில் தண்ணிக்குள்ள முழுகுகிற சமயத்தில் நாம் இயேசுவோட சேர்ந்து அடக்கம் பண்ணப்படுகிறோம்.தண்ணியை விட்டு எழுந்திருக்கும் போது பாவத்திற்கு மரித்து நீதிக்கு பிழைத்து புதிய ஜீவனைப்பெற்றுக்கொண்டு  
"மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாக நாம் எழுந்திருக்கிறோம். இதெல்லாம் மனம்திரும்பிய பிறகு விசுவாசத்தில் நடக்கிற காரியம்.

இது குறித்து (ரோமர்:6:3-6)யில் தெளிவா எழுதியிருக்கு..

அப்பரம் ஞானஸ்நானம் என்பது ஒரு சடங்கு இல்ல அந்தோனி, பாவத்திற்கு மரித்து நீதிக்கு பிழைத்தல்(ரோமர் 6:2)

ஞானஸ்நானம் என்பது தேவனைப்பற்றி பிடித்துக்கொள்ளும் ஒரு நல்மனச்சாட்சியின் உடன்படிக்கை என்று (1பேதுரு 3:21) ல்
எழுதியிருக்கு அது தேவ நீதி(மத் 3:15)
அந்த தேவ நீதிக்கு நம்ம இயேசு கிறிஸ்துவே கீழ்படிந்தது போல நாமும் கீழ்படிந்து முழுகி ஞானஸ்நானம் எடுக்கனும் அப்ப தான் பிதாவுக்கு பிரியமானவர்களாக நாம் இருப்போம் (லூக் 3:22)

அப்போஸ்தலர் நடவடிக்கைகளில் பார்த்தால் தெரியும்
கொர்நெலியு சிறந்த பக்திமான் நிறைய தான தர்மங்கள் செய்தவன் நியாயப் பிரமாணங்களை கற்றுத்தேர்ந்து அவைகளை தவறாமல் தன் வாழ்வில் கடைபிடித்தவன். அவனோடு சேர்ந்து அனேகர் அந்நியபாஷை பேசி தேவனை மகிமைப்படுத்தினார்கள்.இருந்தாலும் பேதுரு அவர்களை ஞானஸ்நானம் எடுக்கும்படி கட்டளையிட்டார்
(அப்:10:1,2,45,46,48,)

அந்தோனி: இப்ப புரியுதுப்பா இந்த ஞானஸ்நானத்தோட முக்கியத்துவம். நல்ல வேலை நான் குழந்தையா இருக்கும்போதே எங்க கோயில்ல எனக்கு ஞானஸ்நானம்  கொடுத்துட்டாங்க

பீட்டர்: உனக்கு என்ன புரிந்தது  அந்தோனி ! குழந்தையிலே ஞானஸ்நானமா? வேதத்துல எந்த குழந்தைக்காவது ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டதை
நீ வாசிச்சு இருக்கியா ?

அந்தோனி: இல்லையே

பீட்டர்: இயேசு கிறிஸ்து,மக்களுக்கு சுவிசேஷம் சொல்லி, சீஷராக்கி ஞானஸ்நானம் கொடுக்கும்படி சொன்னாரா ?
இல்ல குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி சொன்னாரா ? அப்போஸ்தலர்கள்,குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் படி வேதத்துல போதித்திருக்காங்களா ?

அந்தோனி: இல்ல

பீட்டர்: அப்பரம் எத வச்சுக்கிட்டு  குழந்தையில உனக்கு கொடுத்தது ஞானஸ்நானம் என்று நீ சொல்ற ?

அந்தோனி: எங்க சபையில சொல்றததான் நான் சொல்றேன் பீட்டர்

பீட்டர்: உங்க சபையில சொல்றத விடு வேதாகமம் என்னசொல்லுதுனு நான் சொல்றேன் அத கவனி

அந்தோனி : சொல்லு பீட்டர் கவனிக்கிறேன்....

தொடரும்.......

ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

No comments:

Post a Comment