Wednesday 18 November 2015

எல்லேரையும் மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள்

எல்லேரையும் மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள்

கிறிஸ்தவனாய் இருக்கும் நீ இயேசுவை போல்  எப்போதும் எல்லோரிடமும் இரக்கம் காட்டுகிறவாராய் வாழ கற்றுக்கொள்...

உனக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாரபட்சம் இன்றி
அவரைப்போல்  அனைவரிடமும் அன்பாய் மட்டுமே இருக்கிறவராக உன்னை மாற்றிக்கொள்...

உனக்கு எதிராக தீமை செய்து உன் பெயரை கெடுத்து உனக்கு இழப்பை ஏற்படுத்தி உன்னை ஆழ்துயரத்தில் ஆழ்த்திய ஒருவன் மனம் வருந்தி உன்னிடத்தில் வந்து  மன்னிப்புக்கேட்டால் அவனை தயக்கமின்றி ஏற்றுக்கொள்...

ஏனென்றால் உன்னோடு இருக்கும் கிறிஸ்து மன்னிப்பிலே தயவு பெருத்தவர்,மனதுருக்கம் நிறைந்தவர் அவரது இரக்கத்தையும் கிருபையையும் பெற்று உலகத்தில் பிழைத்திருக்கிற உனக்கு இது  அனுபவ ரீதியாக நன்றாக தெரியும் எனவே அவனை உன்  முழு இருதயத்தோடு  சேர்த்துக்கொள்...

நீ தீமையில் திரும்பி
தவறி விழுந்து..
மீண்டும் மனம் வருந்தி
திருந்தி எழுந்து...
 இயேசு கிறிஸ்துவிடம் மறுபடியும் மறுபடியும் மன்னிப்புக்கேட்கிறாய்...

இயேசுவும் உன் மீது அன்பும் மனதுருக்கம் கொண்டு உன்னை மறுபடியும் மறுபடியும் மன்னித்துக்கொண்டே இருக்கிறவராய்

கிறிஸ்து உன்னிடத்தில் இப்படி இருக்க !

கிறிஸ்தவனாக நீ மற்றவர்களிடம் எப்படி இருக்கிறாய் ?

மன்னித்து மறக்கிற தேவ சுபாவம் உள்ள தேவ மனிதனாகவா ?

இல்லை....

மன்னிக்காமல் வெறுத்து ஒதுக்குகிற  மாம்ச சுபாவம் உள்ள அற்ப மனிதனாகவா ?

உன்னை நீயே ஆராய்ந்து பார்

உனக்கு எதிராக குற்றம் செய்து வருந்தி திருந்தியனை தேவனை போல் மன்னித்து மறுபடியும் ஏற்றுக்கொள்...

நீ செய்த குற்றம் "தேவனால்" மன்னிக்கப்பட்ட பிறகு நீ எப்படி தேவனிடத்திலிருந்து தேவ சமாதானத்தை பெற்று பழையபடி தேவனிடம் வந்து நல்உறவு கொள்கிறாயோ!

அதே போல் உனக்கெதிராக குற்றம் செய்தவனை நீ மனதார மன்னித்தப்பிறகு அவனை  சமாதானத்தோடு அழைத்து பழையபடி அவனிடத்தில் நல்உறவு கொள்... ...

மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார் என்று எழுதியிருக்கிறதே...

தேவன் உன்னிடத்தில் எப்படி அன்பாய்  இருக்கிறாரோ அதேபோல் நீயும் மற்றவர்களிடத்தில் இரு...

அவர் எப்படி உன்னிடம் நீடிய பொறுமையுடன் இருக்கிறாரோ அதேபோல் நீயும் அனைவர்களிடமும் இரு...

ஆமென்

ஜீவ வழி-LIVING WAY

No comments:

Post a Comment