Friday 16 December 2016

எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்

#ஜீவ வழியின் நற்செய்தி

எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்
என்று தாவீது சொல்லியிருக்கிறான்.

(ரோமர் 4:7-8)

டேனியல்: தேவனுடைய வார்த்தையை சரியாக அறியாத அநேக கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய காரியங்களில் தெளிவற்றவர்களாய் வாழுகிறார்கள். அதில் ஒன்று பாவத்தை குறித்த  காரியம்.

ஜான்: தேவன் எந்த ஒரு மனிதனை இரட்சிக்கிறாரோ அந்த மனிதனின் பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கிறார்.சில பாவங்களை
மட்டும் மன்னித்து,மற்ற பாவங்களை மன்னிக்காமல் விடுகிறவர் அல்ல. அல்லது சிலபாவங்களை மட்டும் நீக்கி, மற்ற பாவங்களை அவர் அவனுக்கு எதிராக நிறுத்துகிறவரும் அல்ல.

டேனியல்: ஆமா ஆனால் இன்று சில ஊழியக்காரர்கள்,ஜனங்களுக்கு சத்திய வசனத்தின்படி போதிக்காமல்,தங்கள் சுய அபிப்பிராயங்களை போதித்து,
இறைமக்களை  பயமுறுத்துவார்கள்..
"நீ இரட்சிக்கப்படுவதற்கு முன்னாடி
நீ செஞ்ச பாவம்தான் உன்னை இப்ப  போட்டு ஆட்டுதுனு நெனைக்கிறேன்... அந்த காலத்துல நீ செஞ்ச அந்த பாவத்தை தேவன் இன்னம் மன்னிக்கல...." அதனால தான்
உன் வாழ்க்கையில இப்படி நடக்குது அப்படி நடக்குதுனு சொல்லி... விசுவாசிகளை குற்ற உணர்வுள்ளவர்களாக்கி அதைரியப்படுத்தி.. அவர்களை இயேசுவை பற்றும் நம்பிக்கை அற்றவர்களாக்கி,அழிவை நோக்கி நடத்துகிறார்கள்.

ஜான்: ஆமா ஆனா அந்த பிரசங்கியார்கள் போதிப்பது வேதாகமத்திற்கு ஒத்திருக்கிறதா! இல்லையா ! என்று மக்கள் அலசிப்பார்க்காமல் அதை
அப்படியே நம்பி
ஏற்றுக்கொள்கிறார்கள்
அதனால தான் மக்கள்......
பழைய பாவ குற்ற உணர்வோடு,
பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெறாதாவர்களாய் பரிதாபமாக, இருளின் பிடியில் வாழ்கிறார்கள்.

டேனியல்: ஆம் நண்பா! அவர்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதன் நிமித்தம்,
அவரது  இரத்தத்தால் தாங்கள் முற்றிலும் கழுவபட்டதையும் தூய்மையாக்கப்பட்டதையும்
ஒரு சில மக்கள் உணராமல், அந்த
மாதி கள்ள உபதேசத்திற்கு செவிசாய்த்து,தாங்கள் பாவ சேற்றில் கறைபட்டவர்களாக இருப்பதாக தங்களை எண்ணிக்கொண்டு,
அந்த சேற்றிலே மீண்டும் மீண்டும் விழுகிறார்கள்,கடவுளை விட்டு
தூரம் போகிறார்கள்....

ஜான்: ஆமா நம் தேவன் எப்படிப்பட்டவர்,எந்த மாதிரி தன்மை கொண்டவர் என்கிற அறிவும்,அவரோடு சரியான ஐக்கியமும் இல்லாமையே அவைகளுக்கு காரணம்,ஆனால்
வேதம் இவ்வாறாக போதிக்கிறது

அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.

(தீத்து 2:14)

"சகல"என்று சொல்லப்படும் போது அனைத்தும், எல்லா அக்கிரமங்களினின்று தேவன் நம்மை மீட்டுக்கொண்டார்.அதற்காகவே இயேசு ‘தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார்’ என்றும் இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

டேனியல்: ஆமா நண்பா......
மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார். (சங்கீதம் 103:12)

அவரை விசுவாசிக்கும் அவருக்கு பயப்படும்,நமக்கு தேவன் எப்படியாக பாவங்களை விலக்கிவிடுகிறார் என்று பாரு நண்பா! இவ்விதம் அவைகளை நீக்குகிற தேவன், மறுபடியுமாக அவைகளை எண்ணி நம்மை தண்டிப்பவர் அல்ல. ஆகவே தேவன் நம்மை மன்னிக்கும்பொழுது அது முழு நிறைவான மன்னிப்பே அதைத்தான் வேதம் போதிக்கிறது.....

ஜான்: ஆமா சரியாக சொன்ன டேனியல்.....

அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல
பாவங்களையும் நீக்கி,நம்மைச்
சுத்திகரிக்கும்.பாவங்களை நமக்கு
மன்னித்து எல்லா அநியாயத்தையும்
நீக்கி, நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்
(1யோவான் 1:7,9) என்று வேதம் போதிக்கிறது...

இங்கு முக்கியமான இரண்டு வார்த்தைகளைக் கவனிக்கனும்
"சகல பாவங்களையும்" என்றும்
"எல்லா அநியாயத்தையும்" என்றும் சொல்லப்படிருக்கிறது,

எந்த ஒரு மனிதன் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்டிருக்கானோ,
அந்த மனிதனின் பாவங்கள் அனைத்தையும் தேவன் மன்னிக்கிறார்.
சில பாவங்களை மட்டும் மன்னித்து, பழைய மற்ற பாவங்களை மன்னிக்காமல் விடுகிறவர் அவர் அல்ல. அவர் நமது சகல பாவங்களையும்,எல்லா அநியாயத்தையும்,அக்கிரமங்களையும் மன்னித்திருக்கிறார்.. எனவே மற்றவர்களின் பழைய பாவத்தை சொல்லி அவர்களை காயப்படுத்துவதை விட்டு விட்டு
அவர்களுக்கு தேவ அன்பை போதிக்க ஆரம்பிப்போம்,அன்பு திரளான பாவங்களை மூடும்.அன்பு
அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,அநியாயத்தில் சந்தோஷப்படாமல்,சத்தியத்தில் சந்தோஷப்படும்...

ஆமென்... அல்லேலூயா...

என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள் (ஏசாயா 40:1)

*********************************
கர்த்தரே நம் அடைக்கமும் நம் கோட்டையும் தஞ்சமுமாய்
இருக்கிறார் அவரின் அளவற்ற அன்பையும்,கிருபையை சார்ந்து வாழுங்கள்...

உங்கள் பக்கதில் ஆயிரம் பேரும் உங்கள் வலது பக்கத்தில் பதினாயிரம் பேரும் விழுந்தாலும் நீங்கள்
விழ மாட்டீர்கள் எதுவும் உங்களை அணுகாது சேதப்படுத்தாது...

ஆனால் நீங்கள் பழைய பாவத்தில் மீண்டும் விழுந்து தீமையிடம் அணுகி சென்று உங்களை நீங்களே சேதப்படுத்தி கொள்ளாதீர்கள்...

கர்த்தர் உங்களை எல்லா தீங்கிற்கும் விலக்கி காக்கிறவராய் இருக்கிறார்...

நீங்கள் அவருடைய வார்த்தைகளை  உங்கள் வாழ்விலிருந்து விலக்கி விடாமல் காத்து கைகொள்ளுங்கள்...

உங்களுடைய வாழ்நாளில் எந்த ஒரு தருணத்திலும் சத்துரு உங்களை எதிர்த்து ஜெயிக்க தேவன் அனுமதிக்க மாட்டார்...

ஆனால் நீங்கள் தேவனுடைய வார்த்தைக்கு எதிராக பாவம் செய்து சத்துரு உங்களை ஜெயிக்கும் தருணத்தை  நீங்களே உண்டாக்கி விடாதீர்கள்...

======================
Revelation by spirit of God
======================

https://facebook.com/LIVINGWAYMARVEL/

http://marveljerome.blogspot.in


Wednesday 7 December 2016


இயேசு அவளை நோக்கி:
நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். (யோவான் 11:25-26)

டேனியல்: நண்பா இந்த உலகத்தின்
பணம்,பதவி,அதிகாரம் எப்பொழுதும் மனிதனுக்கு உதவாது என்பதை நாம் ஞாபகம் வைத்து கொள்ளவேண்டும் இந்த உலகத்தில் நாம் பார்க்கும் எல்லா அதிகாரங்களும்  கண்ணிமைக்கும் நேரத்தில் இல்லாமல் போகலாம்,
ஒரு ஆதிகாரம் நிறைந்த நபர்  தன்னுடைய அதிகாரத்தால் அடைய முடியாத அனேக விலையேற பெற்ற  காரியங்கள் மனித வாழ்வில் உண்டு.

பால்ராஜ்: ஆமா,குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். (1 யோவான் 5:12)
என்று வேதம் நமக்கு போதிக்கிறது

டேனியல்: (யோவான்:8:51)..ல்
இயேசு கிறிஸ்து இவ்வாறு சொல்கிறார்...........
"ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால்,அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று கூறியுள்ளார்.

பால்ராஜ்:ஆம்... அதுமட்டுமல்ல.....
"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;#உயிரோடிருந்து
என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்" (யோவான்:11:26).. என்கிறார்....

டேனியல்: ஆமா நண்பா!
நாம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு தேவனோடு
கூட கொண்ட ஐக்கியத்தில்
வாழும் போது........
நித்திய ஜீவன் பூமியில்
ஆரம்பிக்கிறது.
அதாவது நம்முடைய ஆவி உயிர் பெறுகிறது.அதனால் தான்
நாம் #ஆவிக்குரிய மரணத்தை காணப்போவது இல்லை #சரீர மரணத்தை மட்டுமே காணப்போகிறோம்....

பால்ராஜ்: ஆமா, நம்முடைய ஆவி நித்திய நித்தியமாய் தேவனோடு உறவாடுவதாய் உயிரோடிருக்கும்..
ஆமென்.......
நாம் எப்படிப்பட்ட உன்னதமான சிலாக்கியத்தை தேவன் தம்முடைய குமாரன் இயேசு மூலமாய் நமக்கு ஏற்படுத்தி வைத்திருக்கிறார் பாரு நண்பா! ஆச்சரியமாக இருக்கு !

டேனியல்: உலகத்தை
ஆண்டவர்கள்,அதிகாரம் கொண்டவர்கள்,மாபெரும்
தலைவர்கள் என கோடிக்கணக்கான
நபர்களை இந்த பூமி கண்டிருக்கிறது
அவர்கள் பிறந்து,வளர்ந்து,ஆண்டு
பின் மறித்து போயிருக்கிறார்கள்,
அவர்களில் எத்தனை பேர் இயேசுவை பற்றும் விசுவாசம் கொண்டவர்களாக இருந்தவர்கள் என்பது எனக்கு தெரியாது... ஆனால் ஒன்று மட்டும் எனக்கு தெரியும் இயேசுவின் வருகையின் போது நாம் மறுரூபமாக்கப்படுவோம்,
மகிமையான சரீரத்தை அடைவோம்..
ஏனெனில் நாம் இயேசுவை பற்றும் விசுவாச வாழ்க்கை வாழ்கிறோம்...
அவர் நம்மை உயிர்ப்பிக்க வல்லவராய் இருக்கிறார்...

பால்ராஜ்: ஆமா நண்பா அருமையாக சொன்னாய்..... மனுஷன்,உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தி கொண்டாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபமென்ன? அவனுக்கு ஒரு
லாபமும்  கிடையாது....
ஆனால் இயேசுவை ஆதாயாமாக கொண்டு அவரை நம்பி வாழும்
நமக்கு நிச்சயமாக லாபம்
உண்டு,நிலையான சமாதானம்
உண்டு,நித்திய ஜீவன் உண்டு,

ஆமென்... அல்லேலூயா...

*********************************
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome

marveljerome.blogspot.in