Monday 30 November 2015

மன மேட்டிமை

மன மேட்டிமை

ஒரு ஊரில் சுவிசேஷக்கூட்டம் நடைபெறும் மேடைக்குப் பின்புறம்,
ஊழியக்காரரை அழைத்து அந்த ஊரின் தலைவர் பேசுகிறார்

ஜோசப்: தம்பி இந்த ஊர்லயே சர்ச்சுக்கு வாரிவாரி கொடுத்து உத்தமமா வாழ்ந்துக்கிட்டு இருக்கிற ஒரே ஆளு நான்தான்... எனவே கூட்டம் ஆரம்பிச்ச உடனே என்ன பத்தி மேடையில் கொஞ்ஜம் மேன்மையா பேசுங்க...

ஜான்:மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்.
தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.
(2கொரி10: 17-18) என்று வேதத்தின் எழுதியிருக்கு ஐயா

ஜோசப் :என்ன தம்பி எழுதியிருக்கு ! நான் ஊருக்குள்ள எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா ?பணபலத்தாலும்  செல்வாக்காலும் என்ன வீழ்த்துறதுக்கு இந்த ஜில்லாவிலே யாருமே இல்ல தெரியுமா ?

ஜான்: ஐயா உங்களுக்கு ஒரு எச்சரிக்கை,
அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.(நீதி16: 18)
வேதத்தில் இப்படி எழுதியிருக்கு
நீங்க இருக்கிற நிலையிலிருந்து விழுந்து போகாம நல்லா இருக்கனும்னு நான் விரும்புகிறேன்,
எனவே இந்த அகந்தையையும், மனமேட்டிமையும் தயவுசெய்து விட்டுவிடுங்க,இந்த மேட்டிமைதான் தேவதூதனா இருந்தவன அந்த ஸ்தானத்திலிருத்து விழவச்சு சாத்தானா  மாத்திடுச்சு

ஜோசப்: என்ன தம்பி இப்படி சொல்லிபுட்டிங்க,நான் என்ன திருத்திக்கிறேன் தம்பி,நான் விழாமல   மேன்மையா இருக்க என்ன செய்யனும் ?

ஜான் :மேன்மைக்கு முன்னானது தாழ்மை.(நீதி18: 12)மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.(நீதி 29: 23)

ஜோசப்: சரிங்க தம்பி நான் சாந்தமும், மனத்தாழ்மையுள்ளவனாக ஆக விரும்புகிறேன்,அதை யாரிடம் கற்றுக்கொள்ளனும் ?

ஜான்: இயேசு கிறிஸ்துவிடம்
(மத் 11: 29)நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்;
என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

இயேசு கிறிஸ்து தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதை பெரிதாக எண்ணாமல்,தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனிதனாகவந்து தம்மைத்தாமே தாழ்த்தி நமக்காக சிலுவை மரணத்தையே ஏற்றார் ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தியிருக்கிறார்
(பிலி 2: 6-9)
# நமக்கு உயர்வு தேவனிடத்திலிருந்து வரவேண்டும்,
# நாம் தேவனை மட்டுமே உயர்த்த வேண்டும்

ஜோசப்: சரி தம்பி இனிமேல் நான்
என் சுய பெருமையை ஒரு பொருட்டாக எண்ணவே மாட்டேன், கர்த்தரைக்குறித்து தான் மேன்மைப்பாராட்டுவேன்..
என்னை தாழ்த்தி இயேசுவின் நாமத்தை மட்டுமே உயர்த்துவேன்

ஜான்: ஆமென் அல்லேலூயா, வாங்க நம்ம மேடைக்கு போய்,
கர்த்தரைக்குறித்து மேன்மைப்பாராட்டி,
அவரின் நாமத்தை உயர்த்துவோம்


ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

No comments:

Post a Comment