Monday 16 November 2015

(பாகம்2 ) சக மனிதர்களிடம் ஜாதி பாசக மனிதர்களிடம் ஜாதி பார்ப்பவன் கிறிஸ்தவனா ?

ஜேம்ஸ்: வேதாகமத்தை நல்லா படிச்ச எங்க பாஸ்டர்மார்கள் அப்பரம் ஊழியக்காரவங்களே ஜாதி பார்க்குறாங்களே !

பீட்டர் : எந்த மனிதர்களா  இருந்தாலும் அவங்க பரிசுத்த ஆவியின் உதவியோடு வேதாகமத்தை படிக்கனும், அப்படி படிச்சிருந்தா அவங்களுக்கு
சத்தியம் நல்லா புரிஞ்சிருக்கும், தேவன் மனிதரிடத்தில் பாரபட்சம் பார்கிறவர் இல்ல எனவே நாமும் பார்க்க கூடாதுனு தெரிஞ்சிருக்கும்,

இயேசு கிறிஸ்து இந்த உலகத்திலுள்ள எல்லா மனிதர்களுக்காகவும் இரத்தம் சிந்தியிருக்கிறார், எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரி நேசிக்கிறார்,எனவே நாமும் அதே போல் நேசிக்க வேண்டும் என்ற உணர்வு தானாகவே வந்திருக்கும்.

ஆனா அவங்க வேதாகமத்தை பாஸ்டர் தொழில் செய்து பிழைப்பு நடத்த படிச்சு மனப்பாடம் பண்ணவங்க அவங்களுக்கு தேவ அன்பின் வெளிப்பாடு இருக்காது.
மனிதர்களிடம் ஜாதி பேதம் பார்க்கிற எந்த பாஸ்டரும் தேவனுடைய ஊழியக்காரவங்க இல்ல,

ஜேம்ஸ் : ஆனா எங்க பாஸ்டர் பைபிள்லயே ஜாதி இருக்குனு சொல்றாரே ?

பீட்டர்  : ஆமா அண்ணா

ஆதியாகமம்
1:12 - புல் பூண்டு மரம் செடி கொடியின் ஜாதி
1:21- பறக்கும் பறவைகள், நீர்வாழ் உயிரினங்களின் ஜாதி
1:25 -காட்டு மிருகம்,நாட்டு மிருகம்,ஊரும் பிராணிகளின் ஜாதி

 மத்தேயு 17:21- பிசாசின் ஜாதி

2கொரிந்தியர் 6:15-16 - விசுவாசி, அவிசுவாசி.

அண்ணா இப்ப சொல்லுங்க
இவைகளில் நீங்களும் உங்க பாஸ்டரும் எந்த ஜாதி ?

ஜேம்ஸ் :???????

@@@@@@@@@@@@@@@@@@@@

உன்னைபோல் பிறரையும் நேசி என்று தேவன் சொன்ன பிரதான கட்டளையை  விசுவாசிக்காமல் மீறி

பிறரிடத்தில் ஜாதி பாகுபாடு பார்த்துக்கொண்டு ஜாதிய உணர்வில்

கிறிஸ்தவ பெயரை வைத்துக்கொண்டு வாழும் நீ மக்களுடைய பார்வையில்தான் கிறிஸ்துவ விசுவாசி

ஆனால் தேவனுடைய பார்வையில் கிறிஸ்துவை அறியாத அவிசுவாசி

ஜீவ வழி-LIVING WAY

www.facebook.com/lwcomm

Marvel Jerome

No comments:

Post a Comment