Monday 16 November 2015

(7) நான் இதுக்கு முன்னாடி புனிதர்கள் மற்றும் சிலை வழியா தேவனிடம் பரிந்து பேச சொல்லி நெறய நன்மைகளை பெற்றுக்கேன் அது எப்படி ?


அந்தோனி: வேதாகமத்துல இருந்து
நீ சொன்ன காரியங்களேல்லாம் எனக்கு இப்ப தான் தெரியும் ஆனா இதுக்கு முன்னாடி நான் பல முறை புனிதர்களிடமும், சிலைகளிடமும் எனக்காக தேவனிடம் பரிந்து பேசும்படி ஜெபித்து பல நன்மையான காரியங்களை பெற்றிருக்கேன்...
அது எப்படி ?

பீட்டர்:என்ன அந்தோனி இவளவு சொல்லியும் இன்னம்புனிதர்கள் சிலைகள்னு சொல்லிகிட்டே இருக்க ! ?இயேசுவின் இரத்தம் நமக்காக நன்மையானவைகளை பேசுகிறது (எபிரேயர்12:24)என்றும் நன்மையான எல்லா காரியங்களும் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது (யாக்கோபு 1:16) என்றும்...இயேசு கிறிஸ்து, ஆவியானவர் நமக்காக தேவனிடத்தில் வேண்டுதல் செய்கிறார் என்றும், நமக்காக பரிந்து பேசுகிறார (ரோமர்8:34) (1யோவான் 2:1-4) (ரோமர் 8:26) என்று தேவனுடைய வார்த்தைகள் நமக்குமிக தெளிவாக போதிக்கிறது....

புனிதர்கள் நமக்காக தேவனிடம் பரிந்து பேசுவாங்க எனவே அவங்கள நோக்கி ஜெபம் பண்ணனும் என்பது எல்லாம் பொய் உபதேசம் அது தேவனுடைய வார்த்தைகளுக்கு எதிரான பாவம்

அந்தோனி :சரி இருந்தாலும் நான் தேவனுடைய வார்த்தைகளுக்குஎதிராக அனேக முறை பாவம் செய்து இருக்கிறேன்ல அப்பரம் இயேசு ஏன் என்னை தண்டிக்காம எனக்காக பரிந்து பேசிக்கிட்டு இருக்கிறார் ?

பீட்டர்: அந்தோனி,அன்று யூதர்கள் இயேசுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார்கள், ரோமர்கள் இயேசுவை கசையால் அடித்து முள்முடி சூட்டி அவமானப்படுத்தி சிலுவையில் அறைந்து துன்புறுத்தினார்கள் அந்த நிலையில் கூட இயேசு அவர்களை மன்னிக்கும் படி தேவனிடம் ஜெபித்தார்இயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் நீ சத்தியத்தை அறியாமல் சிலைகளையும், புனிதர்களையும் வணங்கி தேவனுடைய வார்த்தைகளுக்கு எதிராக பாவம் செய்தாய் ஆனாலும் கூட உன் அன்பு நேசர் இயேசு உனக்காக பிதாவினிடத்தில்
" பிதாவே, என் மகனை மன்னியும், தான் செய்கிறது இன்னதென்று இவன் அறியாதிருக்கிறான்" என்று உனக்காக பரிந்து பேசி உனக்கு நன்மையானகாரியங்களை
பெற்று தந்துகொண்டிருக்கிறார்.

நீ எப்படியாவது சத்தியத்தை அறிந்து மனம் திருந்தி தேவனுடைய வார்த்தையின் வழிக்கு வந்து விடுவாய் என்று அவர் உனக்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார்

(அந்தோனி கண்கலங்கிய படி அமைதியாக நிற்கிறார்...)

(தொடரும்....)

ஜீவ வழி-LIVINGWAY

www.facebook.com/lwcomm

No comments:

Post a Comment