Saturday 25 April 2020

இச்சையடக்கம்


#இச்சையடக்கம் #சுயகட்டுப்பாடு

கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
(கலாத்தியர் 5:24)

கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமானவர்களே! கிறிஸ்தவர்களாகிய நாம் எல்லாவற்றிலும்,சுயக்கட்டுப்பாடு (அதாவது) இச்சையடக்கம் கொண்டவர்களாக இருக்கவேண்டும்.
அந்தகார இருளில் இருந்த நம்மை ஆச்சரியமான ஒளியினிடத்திற்கும் உளையான சேற்றில் கிடந்த,நம்மை உயரமான ஸ்தானத்திற்கு,நம்
தேவன் கொண்டு வந்திருக்கின்றார்,
தேவன் இந்த உலகத்திலிருந்து நம்மை பிரித்தெடுத்து தன்னுடைய உன்னதமான திட்டத்திலே,நோக்கத்திலே ஓட்டத்திலே நம்மை வைத்திருக்கின்றார்,இன்று
நாம் மறுபடியும் அந்தகார இருளையோ,உளையான சேற்றையோ,உலகத்தையோ
திரும்பிப்பார்க்கக்கூடாது,
கலப்பையின் மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டு பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார் (லூக் 9:62) உலகத்திலே ஒரு பந்தயத்திலே பங்குகொள்கிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சை அடக்கமாய் இருப்பார்கள்‌,அழிவுள்ள ஒரு பரிசை,கிரீடத்தை பெற்றக்கொள்ள அவர்கள் இச்சையடக்கமாய் இருந்து,வெற்றி பெருகிறார்கள்,
ஆனால்,நாமோ அழிவில்லாத ஜீவ கிரீடத்தை (யாக் 1:12)(வெளி 2:10) பெறும்படி அவ்வாறு இருக்கிறோம்
(1கொரி 9:25)

1) இச்சையடக்கம் என்பது கிறிஸ்தவ வாழ்வின் ஒரு அங்கம்.

தேசாதிபதியாகிய பேலிக்ஸ்,அப். பவுலிடம் கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தை குறித்து கேட்கும் போது பவுல் நீதியையும், இச்சையடக்கத்தையும்,இனிவரும் நியாயத்தீர்ப்பையும் குறித்து 
பேசினார். (அப் 24:24-25)

2) இச்சையடக்கம் என்பது இயேசுவின் ஊழியக்காரனுடைய,
நீதிமானுடைய பரிசுத்தவானுடைய 
குணம் (தீத்து1:5-8)

3) இச்சையடக்கம் என்பது ஆவியின்
கனியில் ஒன்று (கலா 5:22-23)
மரமானது நிலத்தோடு இணைந்து ஐக்கியத்தில் இருக்கும் பொழுது
அது தானாகவே கனி கொடுக்க, ஆரம்பிக்கின்றது,அதேபோல,
நாம் தேவனுடைய வார்த்தையில்
தியானமாய்,இருந்து
ஆவியானவரோடு,ஐக்கியத்தில்  இணைந்து இருக்கும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் ஆவியின் கனி வெளிப்பட ஆரம்பிக்கிறது(சங் 1:2-3)(2கொரி 13:14)

4) இச்சை என்பது தேவனால் உண்டானது அல்ல,அது உலகத்தில் உண்டானது (1 யோவா 2:16)

5) இச்சையடக்கம் என்பது தேவனுடைய சித்தம்,அவர் சித்தம் செய்கிறவன்,என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.(1 யோவா 2:17)

6) இச்சை என்பது அஞ்ஞானிகளின்
குணம்,கிறிஸ்துவுக்கள் ஞானிகளாகிய நாம் இச்சையடக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும்,(1தெச 4:4)(1கொரி 1:31)(2 பேது1:6)

7) நாம் தேவபக்தி உள்ளவர்களாய்
இந்த உலகத்தில் வாழ்வதற்கும்,
நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும்,மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலில் பங்கு கொள்வதற்கு நாம் இச்சையடக்கமுள்ளவர்காக
இருக்க வேண்டும் (தீத்து 2:11-13)

கிறிஸ்தவர்களாகிய,நாம் பாவம் செய்யாமல் பரிசுத்தமாய், வாழ்வதற்கு இச்சையடக்கம் மிகவும்,அவசியம் என்று வேதம் போதிக்கின்றது

A) நாம் எந்த பாவத்திற்கு உடன்படாமல் நம்மை சுத்தமாய் காத்துக்கொள்ள வேண்டும்.(1 தீமோ 5:22)

B) பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு,
நாம் விலகி ஓட வேண்டும்,
நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடவேண்டும்( 2 தீமோ 2:22)

C) நமது ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலக வேண்டும் (1பேது 2:11)

ஏன் இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் இச்சையடக்கம் கொண்டவர்களாக
இருக்க வேண்டும்?

ஏனென்றால் இச்சையானது கர்ப்பந்தரித்து,பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும் போது, மரணத்தைப் பிறப்பிக்கும்,(யாக் 1:14-15) எனவே  இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் இச்சையடக்கம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்,அதுமட்டுமல்ல
பாவ சோதனையிலிருந்து தப்பிக்க
இச்சையடக்கம் மிக அவசியம்.

இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் பாவம் செய்ய வாய்ப்புகள் உள்ளதா?

விசுவாசிகள் பாவத்தின் வஞ்சனையினாலே,கடினப்பட்டு போவதற்கு வாய்ப்புகள் உள்ளது,
எனவே ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள் வேதம் வலியுறுத்துகிறது.(எபி 3:13)
தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.
என்றும் சொல்லுகிறது(1கொரி 10:12)

நீதிமான்கள் எப்படி இருக்க வேண்டும்?

இயேசு கிறிஸ்துவினால் நீதிமான்கள் ஆக்கப்பட்ட ஒரு நீதிமான்(ரோம 3:24)
தான் பெற்ற நீதியின் படி பாவஞ்செய்யாமல் விழித்துக்கொண்டு,தெளிவாய் இருக்க வேண்டும் (1 கொரி 15:34)

ஆக கிறிஸ்தவர்களாகிய,நாம் பாவம் செய்யாமல் பரிசுத்தமாய்,வாழ்வதற்கு இச்சையடக்கம் (அதாவது)சுய கட்டுப்பாடு மிகவும்,அவசியம் என்று வேதம் போதிக்கின்றது.

நாம் எந்தெந்த விஷயங்களில் இச்சையடக்கம் (சுய கட்டுப்பாடுடன்) இருக்க வேண்டும் என்று வேதம் நமக்கு போதிக்கிறது?

1) நம்முடைய சுபாவத்தினே சுய கட்டுப்பாடு,மிகவும் அவசியம்,

A) நாம் கோபம் கொண்டு பாவம் செய்யாமல் இருக்க,(எபே4:26)(நீதி 19:19)(நீதி12:16)நீதி 29:11)

B) சடாரென கோபம் கொள்ளாமல்,கோபத்திற்கு தாமதிக்கும் அடக்க சுபாவம்  கொண்டவர்களாக,
இருக்க (யாக் 1:19) சுய கட்டுப்பாடு நமக்கு மிகவும் அவசியம்
2)நாம் பேசக்கூடிய வார்த்தையிலே
கட்டுப்பாடு (அதாவது)அடக்கம்,மிக அவசியம்.

A) மரணமும்,ஜீவனும் நம்முடைய நாவின் அதிகாரத்தில் இருக்கிறது,
(நீதி 18:21)

B) வார்த்தைகளை அடக்குகிறவன் அறிவாளி என்றும்,தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான்
என்றும்,வேதம் கூறுகிறது
(நீதி 17:27-28)(நீதி:29:20)

C) பெருமையானவைகளை பேசும் நாவு,நமது முழுசரீரத்தை கறைப்படுத்து வாழ்நாளை அழித்துவிடும் (யாக் 3:4-6)

D) யாருக்கும் பிரயோஜனம் இல்லாத
கெட்ட வார்த்தைகளை,நாம் பேசாமல்,
சுய கட்டுப்பாடுடன் இருந்து கேட்கிற அனைவருக்கும் பிரயோஜனமான பக்தி விருத்தியை  உண்டாக கூடிய நல்ல வார்த்தைகளை நாம் பேசவேண்டும் (எபே 4:29)

3) நாம் பரிசுத்தமாய் வாழ சுய கட்டுப்பாடு (இச்சையடக்கம்) அவசியம்.

A) நாம் பரிசுத்தமுள்ளவர்களாக  இருக்கவேண்டும்,என்பதே தேவனுடைய சித்தமாக இருக்கின்றது,எனவே நம்முடைய பரிசுத்தத்திற்கு பாதகத்தை ஏற்படுத்துகின்ற,பாதிப்பை உண்டாக்குகின்ற எந்த காரியமாக இருந்தாலும் அதற்கு நாம் விலகி
இருக்க வேண்டும் (1 தெச 4:3)

B) தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் உடுத்துகின்ற உடைகள்,நமக்கு தகுதியானவைகளாகவும் கண்ணியமானவைகளாகவும் இருக்க வேண்டும்,(1 தீமோ 2:9-10)

C) நாம் உடுத்துகின்ற உடைகள் எதிர்பால் இனத்தாருக்கு இச்சையைத் தூண்டக்கூடிய வகையிலோ, அவர்களுக்கு இடறலை  உண்டாக்கக்கூடிய வகையிலோ,  இருக்கக்கூடாது (மத் 5:28)(மத் 18:6)

D) தேவனுடைய பிள்ளைகளாகிய நாம்,மதுபானம்,புகையிலை போதை பொருட்கள் ஆகியவைகளை உபயோகபடுத்துகிறவர்களாகவும், அதற்கு அடிமைப்பட்டவர்களாகவும்
நாம் இருக்க கூடாது,களியாட்ட வெறி கொண்டு,இழிவான ஆதாயத்திற்க்காக இச்சிக்கிறவர்களாயும்,நாம் இருக்க கூடாது,நாம் இச்சை அடக்கத்தோடு  பரிசுத்தமாய் வாழ வேண்டும்.
(எபே 5:18)(1தீமோ 3:8)(தீத் 1:7)
(கலா 5:21)

E) நம்முடைய சரீரம் தேவனுடைய
பரிசுத்த ஆலயம் ஆக இருக்கின்றது,
இயேசு தன்னுடைய சரீரத்தை பலியாக தந்து,நம்முடைய சரீரத்தை பரிசுத்தமாக்கியிருக்கிறார் (எபி10:10,14) எனவே நம்முடைய சரீரத்தை எக்காரணத்தைக் கொண்டும்,கெடுக்கிற நடவடிக்கைகளில் நாம், ஈடுபடக்கூடாது,
அது தேவனுக்கு பிரியமில்லாத காரியம்.(1கொரி 3:16-17)

F) தேவனுடைய பிள்ளைகளாகிய நாம்
பண ஆசை இல்லாதவர்களாகவும்,
பணத்தின் மீது இச்சை, கொண்டவர்களாகவும் இருக்க கூடாது
லஞ்சம்,ஊழல்,சூதாட்டம்,கடத்தல்‌,
பதுக்கல்,கருப்பு பணம்,கள்ள நோட்டு,
வட்டி,ஆகிய பாவ வழிகளில் பணம் சம்பாதிக்க உடன்பட கூடாது,
அது நமக்கு சாபத்தையும்,அழிவையும்
கொண்டுவரும் (எரே 17:11)(எசே 22:13) குறுக்கு வழிகளில் வருகின்ற,
ஐசுவரியம் வேதனையை தரும்
(1 தீமோ 6:9-10)ஆனால் நேர்மையான வழியிகளில்,கர்த்தருடைய ஆசீர்வாதத்தால் வருகிற ஐசுவரியம்
வேதனையை தராது (நீதி 10:22)

ஆமென்... அல்லேலூயா...



Pr.Marvel jerome
Calvary living way ministries
Bangalore-south India

We hope that you are blessed
by our ministry.

Thursday 23 April 2020

மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்



மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்;
கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார். (1 சாமுவேல் 16:7)

கிறிஸ்துவுக்குள் புதுபடைப்புக்களே!
தாவீது மேய்ப்பனாக இருந்த போது,
இவன்,கோலியாதை வீழ்த்தி இஸ்ரவேலின் சேனைக்கு வெற்றி கொடுக்கப்போகிறவன்
இவன் இஸ்ரவவேலின் ராஜாவாக ஆக போகிறவன் என்று அனேகருக்கு தெரியாது, தாவீதை எல்லோரையும் போல ஒரு சாதாரண வாலிபனாக,ஆடுகளை
மேய்பவனாக,தன் சகோதரர்களுக்கு,
உணவு கொண்டு செல்கிறவனாக,
மனிதர்கள் பார்த்தார்கள்,ஆனால் தேவன் அவ்விதம் அவனை பார்க்கவில்லை,
தேவன் தாவீதை ஆடுகள் மேய்த்துக்கொண்டு இருந்த அரசனாக பார்த்தார்,ஒரு அபிஷேகம் பண்ணப்பட்ட வாலிப ராஜாவாக பார்த்தார்,
அதுமட்டுமல்ல தாவீதின் சந்ததியில் இயேசுவை பார்த்தார்,இயேசுவை தாவீதின் குமாரனாக பார்த்தார்.

மோசே எகிப்தியனை கொலை செய்த
பிறகு,பார்வோனின் கைக்கு தப்ப மீதியான் தேசத்தில் அடைக்கலம் புகுந்தான்,
திருமணம் புரிந்தான்,குமாரனைப்
பெற்றான் அங்கே அவன் தன்னை ஆடு மேய்த்துக்கொண்டு இருக்கிற ஒரு பரதேசியாக பார்த்தான்,(யாத்2:22)
தனது எதிர்காலம் இவ்வளவு தான் என்று பார்த்தான்,அவனுடைய மனைவியும்,
மாமனாரும் அவ்விதமாக தான் அவனை பார்த்திருப்பார்கள்,ஆனால் தேவன் மோசேயை அவ்விதமாக பார்க்கவில்லை,
அவனுக்கு முன்பாக செங்கடல் இரண்டாக பிரித்து போவதை பார்த்தார்,
எகிப்திய சேனையை கடலில் போட்டு முறியடிக்கிறவனாக பார்த்தார்.
அவனை இஸ்ரவேல் மக்களின் இரட்சகனாக பார்த்தார்.

கிதியோன் தன்னை சிறியவனாகவும்,
பலவீனமானவனாக பார்த்தான்,
ஆனால் கர்த்தர் அவனை பராக்கிரமசாலியாக பார்த்தார்
(நியா 6:12,15) தாவீதை மனிதர்கள்
ஒரு சாதாரண வாலிபனாக பார்த்தார்கள்,ஆனால் தாவீதை தேவன் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு ராஜாவாக பார்த்தார்,(1சாமு16:10-13)மோசேவை மனிதர்கள் கொலைகாரனாக, ஆடு மேய்க்கிற மேய்பவனாக பார்த்தார்கள்,
அவன் தன்னை பரதேசியாக பார்த்தான்,
ஆனால் தேவன் அவனை இஸ்ரவேலின் இரட்சகனாக பார்த்தார்.(யாத்2,3)
பேதுருவை மனிதர்கள் மீன் பிடிக்கிற மீனவனாக பார்த்தார்கள்,ஆனால் தேவன் பேதுருவை மனிதர்களை பிடிக்கிறவனாக பார்த்தார், பவுலை மனிதர்கள் பிரதான ஆசாரியரிடம்,நிருபங்களை வாங்கி கொண்டு சபையை துன்புறுத்துகிறவனாக பார்த்தார்கள்,ஆனால் தேவன் பவுலை,
சபைகளை கட்டி எழுப்பி,சபைகளுக்கு நிருபங்களை எழுதுகிற அப்போஸ்தலனாக பார்த்தார்.

தேவன் மனிதன் பார்க்கிறபடி பார்க்கிறவர் இல்லை,அவரோட பார்வையே வேற,மனிதர்கள் நமது கடந்த காலத்தை,நிகழ்காலத்தை பார்ப்பார்கள் அதை வைத்து நம்மை கணிப்பார்கள்,
பார்ப்பார்கள்,முடிவுகளை எடுப்பார்கள்,
ஆனால் தேவன் நமது எதிர்காலத்தை பார்த்து,முடிவெடுப்பார்,நம்மை நடத்துவார்.
உயர்த்துவார்,மேன்மைப்படுத்துவார்.
எனவே சகோதர சகோதரிகளே மற்றவர்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள்,என்பதை பற்றி கவலைப்படாதிருங்கள்,மற்றவர்கள் உங்களை பார்ப்பதோ,அல்லது நீங்கள் உங்களை பார்ப்பதோ முக்கியம் அல்ல தேவன் உங்களை எப்படி பார்க்கிறார் என்பதே முக்கியம்,எனவே எதைக்குறித்தும் கலங்க வேண்டாம். கிறிஸ்துவுக்குள் இருக்கும் உங்களை தேவன் தன் சொந்த பிள்ளையாக பார்க்கிறார்,பரிசுத்த ஜாதியாக பார்க்கிறார்,நீதிமானாக பார்க்கிறார்,புதுசிருஷ்டியாக பார்க்கிறார்,ராஜாவாக பார்க்கிறார்,
ஆசாரியராக பார்க்கிறார்,
ஒளியின் பிள்ளைகளாக பார்க்கிறார்,
எனவே எதைக்குறித்தும் கலங்க வேண்டாம்,உங்களுக்காக தேவன்,
பெரிய ஒளி மயமான திட்டத்தை வைத்திருக்கிறார்,அதை அவரே நிறைவேற்றுவார்.

ஆமென்... அல்லேலூயா...

என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.
பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.
(ஏசாயா 55:8-9)



Tuesday 21 April 2020

தேவனிடத்தில் அன்புகூருவது என்றால் என்ன? பிறரிடத்தில் நாம் அன்பு செய்வது குறித்து,தேவன் நமக்கு எவ்விதமாக கட்டளையிட்டு இருக்கின்றார்?

தேவனிடத்தில் அன்புகூருவது என்றால் என்ன?

பிறரிடத்தில் நாம் அன்பு செய்வது குறித்து,தேவன் நமக்கு எவ்விதமாக கட்டளையிட்டு இருக்கின்றார்?

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
நம்முடைய பரலோகத் தகப்பன்,எப்படி பூரண சற்குணராய் இருக்கிறாரோ,
அதே போல நாமும் பூரண சற்குணர்களாக இருக்க வேண்டும்,என்று இயேசு நமக்கு போதித்து இருக்கின்றார் (மத் 5:48) நம்முடைய தகப்பனாகிய தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று வேதம் போதிக்கின்றது (1யோவா 4:8) அன்பென்பது பூரண சற்குணத்தின் பண்பு,அந்த இறையியல் பண்பாகிய அன்பை,தரித்தவர்களாக இந்த உலகத்திலே,நாம் இருக்க வேண்டும்
(கொலோ 3:14).எப்படி ஒரு ஆடையோடு உடலை இணைத்து கட்ட பெல்ட் என்னும் கச்சை பயன்படுத்தப்படுகிறதோ
அதே போல தேவனின் பூரண சற்குணம் என்னும் தெய்வீகப் பண்போடு,நம்மை இணைத்து கட்டக்கூடிய கட்டுதான் அன்பு.
நம்முடைய தேவன் அன்பாகவே இருக்கிறார் அதனால் நாமும் மற்ற மனிதர்களிடத்தில் அன்பாக இருக்க வேண்டும் (1யோவா 4:8) நம்முடைய தேவன் நல்லோர்,தீயோர் நீதியுள்ளவர்,
அநீதியுள்ளவர் என்ற பாரபட்சமின்றி,
அனைவரையும் நேசிப்பது போல்,(மத் 5:45) நாமும் மற்ற மனிதர்களை பாரபட்சமின்றி நேசிக்க வேண்டும்,என்று வேதம் போதிக்கின்றது

தேவன் மனிதனுக்கு கொடுத்த கட்டளைகள் எல்லாம் அன்பிற்குள்ளே அடங்கி இருக்கின்றது (மத் 22:36-40)

அன்பு என்பது இயேசுவின் சீஷர்களின் சிறப்பியல்பு,நாம் இயேசுவின் சீஷர்கள் என்பதை மற்றவர்களிடம் நாம் செலுத்துகிற  அன்பே வெளிப்படுத்தி காட்டுகிறது (யோவா 13:34-35)

மற்றவர்களிடத்தில் அன்பு செலுத்த வேண்டியது என்பது,நாம் செலுத்த வேண்டிய #கடன் அதாவது தேவனிடத்தில்,
நாம் பெற்றுக்கொண்ட, அன்பின் கடனை,மற்ற மனிதர்களுக்கு நாம் கொடுக்க வேண்டும் (ரோம 13:8)

நாம் மிகப்பெரிய வல்லமையுடைய,
வரங்கள் பெற்ற மனிதராக இருந்தாலும்,
மலையை பேர்க்கத்தக்க விசுவாச வீரனாக இருந்தாலும்,தானதர்மங்கள் செய்கின்ற,
தாராள பிரபுவாக இருந்தாலும்,நம்முடைய உடலயே சுட்டு எரிக்க கொடுக்கின்ற தியாகியாக இருந்தாலும்,நம்மிடத்தில் அன்பு,என்கிற பண்பு இல்லையேல்,
அதனால் நமக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை (1 கொரி 13:1-3)

#தேவனிடத்தில் #அன்புகூருவது என்றால் #என்ன?

தேவனிடத்தில் அன்பு கூருவது,என்பது அவருடைய கட்டளைகளைக் கடைபிடித்து வாழுதல்,அவருடைய வார்த்தையின் வழியில்,நமது வாழ்க்கையை,அமைத்துக்
கொள்ளுங்கள் என்பதே ஆகும்.என்ஜின்
இல்லாமல் எப்படி பைக்கை ஓட்ட முடியாதோ! பேட்டரி இல்லாமல் எப்படி மொபைல் போனை யூஸ் பண்ண முடியாதோ! அதேபோல தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாமல் நாம் அவரிடத்தில், அன்பு கூற முடியாது.
(யோவா 14:23)(1யோவா 5:3) (2யோவா 1:5)
கிறிஸ்துவின் உபதேச சட்டத்திற்கு நாம் மனபூர்வமாய் கீழ்ப்படிந்ததினாலே இன்று நாம் இரட்சிக்கப்பட்டு இருக்கின்றோம் (ரோம 6:17-18 )நாம் உண்மையாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களாக இருந்தால் அவருடைய கற்பனைகளை நிச்சயமாக நாம் கடைபிடிப்போம்,

#பிறரிடத்தில் நாம் #அன்பு செய்வது குறித்து,தேவன் நமக்கு #எவ்விதமாக #கட்டளையிட்டு #இருக்கின்றார்?

1)உங்கள் எதிரிகளை,நேசியுங்கள் அவர்களுக்கு,நன்மை செய்யுங்கள் உங்கள் பரமபிதா,இரக்கம் உள்ளவராக இருப்பது போல,நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.(லூக் 6:35-36)

2)உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்,உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும்,
உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.(மத் 5:44)

3)உங்கள் எதிரி,பசியாய் இருந்தால் அவனுக்கு உணவு கொடுங்கள்,
உங்கள் எதிரி தாகமாய் இருந்தால் அவனுக்கு தண்ணீர் கொடுங்கள்.(ரோம 12:20)

4)மற்றவர்களுக்காக உயிரையே கொடுக்கிற அளவுக்கு,மேலான அன்பு கொண்டவர்களாக, இயேசு கிறிஸ்துவைப்போல தியாக உள்ளம் கொண்டவர்களாக,நாம் இருக்க வேண்டும்.(யோவா 15:13)(1யோவா 3:15-16)

5)மற்ற மனிதர்கள்,உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ (அதாவது) மற்றவர்களிடத்தில், நீங்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை நீங்கள் அவர்களுக்கு செய்யுங்கள்.(லூக் 6:31)

6)ஒருவன் தேவனிடத்தில் அன்புகூருகிறவனாக,இருந்தால்,தன் சகோதரனிடத்திலும் அவன் அன்பு கூறுகிறவனாக இருக்க வேண்டும்.
இல்லையென்றால் அவன் பெய்யன்
(1யோவா 4:20)

7)நாம் வழி விலகிப் போகும் போது,
நம் மீது அன்பாய் இருக்கிற,கர்த்தர் நம்மை கடிந்து கொண்டு,கண்டித்து சிட்சித்து,நல்வழிப்படுத்தி நடத்துகிறாரோ,
அதே போல,(எபி 12:6)நாமும்,சத்திய வசனத்திற்குகீழ்ப்படியாமல்,
போகிறவர்களை,சத்துருக்களாக எண்ணாமல் சகோதரர்களாக,எண்ணி அவர்களுக்கு,புத்தி சொல்ல வேண்டும்.
(2 தெச 3:14-15 )(நீதி:13:24)

8)சகோதரர்களுக்கு,ஆறுதல் கூறி அவர்களை,மன்னித்து அன்பை காட்ட வேண்டும்.(2 கொரி 2:6-7)

9)தேவ அன்பில் நிலைத்திருக்கிற ஒருவன்,தன் சகோதரன் வறுமையிலே,
குறைச்சலிலே,இருக்கும் பொழுது,
அவனுக்கு கொடுத்து உதவி செய்ய வேண்டும்,வெறும் வசனத்திலும் வார்த்தையினாலும்அல்ல,
கிரியையினாலும்,உண்மையினாலும்,
அவனிடத்தில் அன்பை வெளிப்படுத்தி காட்டி அவனுக்கு உதவி செய்ய வேண்டும்.(1யோவா 3:17-18)

10)நாம் அன்பிலே ஏவப்பட்டு மற்றவர்களுக்கு சுவிசேஷம் என்கிற சத்தியத்தை பிரசங்கிக்க வேண்டும்
(பிலி 1:17) ஏனென்றால்,அன்பானது சத்தியத்தில் சந்தோஷப்படும்(1கொரி 13:6) சிலர் இரட்சிக்கப்படும்படியாக,அவர்கள் நிலைக்கு,நாம் இறங்கி போய்யாவது,
அவர்களை கிறிஸ்துவுக்கு
ஆதாயப்படுத்திக் கொள்ள பிரயாசப்பட வேண்டும் (1 கொரி 9:22)

11)நாம் சுயநலவாதிகளாய்,
நமக்குரியவைகளையே,நாம் நோக்கி கொண்டிருக்காமல்(அதாவது நம்முடைய தேவை,வளர்ச்சி...)நாம் பிறர் நலவாதிகளாய், மற்றவர்களுக்குரியவைகளை  நோக்கிக்கொண்டு இருக்க வேண்டும்
(பிலி 2:1,4)

12)கிறிஸ்து சபையை அன்பு கூருவது போல,கணவன் தன் மனைவியை தன்னுடைய சொந்த,சரீரமாக பாவித்து அன்பு கூற வேண்டும்.கணவனானவன்
தன்னை அன்புகூருவது போல,தன் மனைவியினிடத்திலும் அன்புகூர வேண்டும்.(எபே 5:25,28,33)

13)மனைவி கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல,தன் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் எப்படி சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதோ அதேபோல் மனைவியும் தன் கணவனுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.(எபேசியர் 5:22,24)(தீத்து 2:5)

14)கிறிஸ்துவுக்குள் புதுசிருஷ்டியாக இருக்கிற,நாம் அன்பிலே ஒருவரையொருவர் தாங்கி,ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து நமக்கு மன்னித்ததுபோல,
ஒருவருக்கொருவர் நாமும் மன்னிக்க வேண்டும்.(கொலோ 3:10,13) (எபே 4:2)

15)நாம்,சாப்பிடுகிற உணவு ஒரு சகோதரனுடைய விசுவாச வாழ்க்கையை கெடுப்பதாகவோ, அல்லது அவனுக்கு விசனத்தை உண்டாக்க கூடியதாகவோ இருக்கக்கூடாது,அது அவனுக்கு இடறலுண்டாக்க கூடாது,அவ்வாறு இருந்தால்,அவன் மீது கொண்ட அன்பின் காரணமாக அப்படிப்பட்ட உணவுகளை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் (1 கொரி 8: 9-13)( ரோமர் 14:15)

16)நீங்கள் செய்யக்கூடிய எந்த காரியமாக இருந்தாலும் அதை அன்பிலே செய்யுங்கள்
(1 கொரி16:14)

17)கிறிஸ்து இயேசுவுக்குள் உள்ள அனைவரையும் அன்பென்னும் முத்தத்தோடு வாழ்த்துங்கள்( 1 பேது5:14)

18)பரிசுத்தவான்களுக்கு உதவி செய்தல்,ஊழியம் செய்தல்,
அவர்களுக்கு கொடுத்து உதவுதல்,
குறைச்சலை நீக்குதல் ஆகியவை,
தேவன் மீது நாம் வைத்திருக்கிற
அன்புள்ள பிரயாசம்,அதை தேவன் மறக்க மாட்டார்.(ரோம 12:13)(எபி 6:10)

பிரியமானவர்களே!
நியாயத்தீர்ப்பு நாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக
அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது;
அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும் ஏனென்றால், அவர் இருக்கிற பிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம் என்று வேதம் சொல்கிறது (1 யோவா 4:17-18)அவர் எவ்வாறு இருக்கிறார்? என்கிற கேள்விக்கு பதில்,அவர் அன்பாகவே இருக்கிறார்,(1யோவா 4:8)அந்த தேவ அன்பு நமது இருதயத்தில் ஊற்றப்பட்டு இருக்கிறது (ரோம5:5) நம்மில் ஊற்றப்பட்ட தேவ அன்பை தேவ ஆவியானவரின் துணை கொண்டு,செயல்படுத்துவோம்,
பாரபட்சமின்றி அனைவரையும்,அன்பு செய்வோம்,மன்னிப்போம், இரக்கம் காட்டுவோம்,ஆதரிப்போம்,
அரவணைப்போம்,இயேசுவுக்கு
சாட்சியாக வாழுவோம்.

ஆமென்... அல்லேலூயா...

ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்;(1 பேதுரு 1:22)

இப்பொழுது விசுவாசம்,நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.

(1 கொரிந்தியர் 13:13)
******************************
போதகர்:மார்வெல் ஜெரோம்
கல்வாரி ஜீவவழி ஊழியங்கள்
பொங்களூர்-இந்தியா


Monday 20 April 2020

பொறாமை படாதே! பாவத்தில் விழாதே!



பொறாமை படாதே !

"பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல்,பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்".
(ரோமர் 13:13)

ஜான் : பொறாமை என்பது ஒரு இருளின் சக்தி அது மனிதர்களை பல பிரச்சனைகளுக்குள்ளும்,
பாவத்திற்குள்ளும் நடத்துகிறது.
பொறாமையில் நடக்கிறவர்கள் இருளில் நடக்கிறார்கள்...

பீட்டர் : ஆமா ஆனால் நாம்  அவ்விதமாக இருக்கக்கூடாது.
பொறாமை எவ்விதம் கொடுமையான காரியங்களை உண்டாக்க துணிகிறது என்பதை நாம்,வேதத்தில் பல இடங்களில் பார்க்கிறோமே....

ஜான்: பொறாமைப் படுகிறவர்கள்,அதினால் பாதிக்கப்படாமல் இருப்பதில்லை. அதாவது அவர்கள் யார் மேல் பொறாமை கொள்ளுகிறார்களோ,  அவர்கள் பாதிக்கப்படுகிறார்களோ இல்லையோ ஆனால் பொறாமை படுகிறவர்கள் பயங்கரமாக பாதிக்கப்படுகிறார்கள்,பாவத்தில் விழுகிறார்கள்.

பீட்டர்: ஆமா ஜான்,நீ சொல்றது 100% சரி,பொறாமை படுகிறவர்களின் இருதயம் பொறாமையால் பாதிக்கப்படுகிறது. அவர்களின் இருதயம் கடினப்படுகிறது.
அது மாத்திரமல்ல தொடர்  பொறாமையானது எரிச்சலை ஏற்படுத்தி,இன்னும் அதிகமான பாவத்திற்குள் அவர்களை வழிநடத்திச் செல்லும்.அவர்கள் தேவனை  துக்கப்படுத்துகிறார்கள்.

ஜான்: ஆமா பொறாமையான எண்ணங்கள்,பாவம் செய்ய வழிவகுக்கும்...

பீட்டர்: ஆமா,ஆதியாகமம் 4ம் அதிகாரத்தில் நாம் பார்கிறோமே,  ஆபேலின் பலியை தேவன் அங்கிகரித்து, காயீனின் பலியை தேவன் புறக்கணித்தார். தேவன் அதை "நீதியாக" செய்தார்.ஆனால் காயீன் ஆபேலின் மேல் பொறாமை கொண்டு   எரிச்சலடைந்தான்,காயீன் அதோடு நிற்கவில்லை, அவன் ஒரு கொலைகாரனாக ஆக்கும் அளவுக்கு பொறாமை,அவனை  கொண்டு சென்றது.

ஜான்: பொறாமை என்பது ஒரு ஆவிக்குரிய கிறிஸ்தவனின் சுபாவம் இல்லை,அது உலத்தனமான மனிதனின் சுபாவம்,நாம் ஒருவேளை யார் மீதாவது பொறாமை கொண்டவர்களாய் இருந்தால் நாம் இன்னும் ஆவிக்குரிய வகையில் வளரவில்லை,ஆவியில் நாம் நடக்கிறவர்கள் இல்லை என்று நமக்கு காண்பிக்கிறது.....

பீட்டர்: ஆம் நாம் மற்றவர்களின் வளர்ச்சியை கண்டோ,முன்னேற்றத்தை கண்டோ,அவர்கள் கர்த்தரால்  ஆசீர்வதிக்கப்படுகிறதை கண்டோ
கர்ததர் அவர்களுக்கு கொடுத்த
தாலந்துகளை கண்டோ
பொறாமை கொள்ளக்கூடாது,
அவர்களின் மீது பொறாமை படுவதை விட்டுவிட்டு,கர்த்தரை நோக்கி பொறுமையோடு காத்திருப்போம் அவர்களை அங்கிகரித்த,தேவன் நம்மையும் அங்கிகரிப்பார்...
அவர்களை ஆசீர்வதித்த தேவன் நம்மையும் ஆசீர்வதிப்பார்...
அவர்களை உயர்த்திய தேவன் நம்மையும் உயர்த்துவார்...
நாம் தேவனுக்கு முன்பாக
"நீதியின் வழியில்"நடப்போம்.
ஏற்றக்காலத்தில் அவர் நம்மை மேன்மைப்படுத்துவார்...

ஆமென்... அல்லேலூயா...


Sunday 19 April 2020

உங்களுக்கு தீமை செய்தவர்களுக்கு,நன்மை செய்யுங்கள்

தீமைக்குத் தீமையையும்,
உதாசனத்துக்கு
உதாசனத்தையும்
சரிக்கட்டாமல்,
அதற்குப் பதிலாக,நீங்கள்
ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டு இருக்கிறவர்கள் என்று அறிந்து,ஆசீர்வதியுங்கள்
(1 பேதுரு 3:9)

கிறிஸ்து இயேசுவுக்குள்
பிரியமானவர்களே!
பழைய ஏற்பாடு காலத்தில்
கண்ணுக்குக் கண்,பல்லுக்குப் பல்,
கைக்கு கை,காலுக்கு கால்,ஜீவனுக்கு
ஜீவன் என்கிற நியாயப்பிரமாணம் செயல்பாட்டில் இருந்தது,அது
அக்கால மக்களுக்கு
சட்ட  கட்டளையாக
கொடுக்கப்பட்டது (யாத் 21:24)
(லேவி 24:20)(உபா19:21)

ஆனால் இன்று நாம் புதிய உடன்படிக்கையின் கீழ் கிருபைக்கு
கீழாக இருக்கிறோம்,தேவ அன்பு
நமது இருதயத்தில் ஊற்றப்பட்டு இருக்கிறது (ரோம5:5) எனவே
நமக்கு தீமை செய்கிறவர்களுக்கு
நாம் தீமை செய்யாமலும்,
நம்மை உதாசனப்படுத்துபவர்களை,
நாம் பதிலுக்கு உதாசனப்படுத்தாமலும்
இருக்க வேண்டும் என்றும்
(1 பேது 3:9)நம் சத்துருக்களைச்
சிநேகிக்க வேண்டும்,என்றும்
நம்மை சபிக்கிறவர்களை
ஆசீர்வதிக்க வேண்டும்,என்றும்,
நம்மை பகைக்கிறவர்களுக்கு
நன்மை செய்ய வேண்டும் என்றும்,
நம்மை நிந்திக்கிறவர்கிறவர்களுக்காகவும்  நம்மை துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ண வேண்டும் என்றும்
(மத்5:44)(லூக்6:28-29) புதிய உடன்படிக்கையின் போதனை
தொடர்ந்து நமக்கு வலியுறுத்துகிறது....

பழைய ஏற்பாட்டிலே,யேசபேல் எலியாவைப் பழிவாங்க வேண்டுமென்று துடித்தாள் (1இரா 19:2),ஆகாப் ராஜா தீர்க்கதரிசியாகிய மிகாயாவைப் பழிவாங்க வேண்டுமென்று துடித்தார் (1இரா 22:27). ஆமான் மொர்தெகாயைப் பழிவாங்க வேண்டுமென்று துடித்தார் (எஸ்தர் 3:6). ஆனால் அவர்களுடைய நிலைமையெல்லாம் பரிதாபமாய்
முடிந்தது,ஆம் பிரியமானவர்களே!
கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிற
நாம் எந்த சூழ்நிலையிலும் நமக்கு
தீமை செய்தவர்களை பழிக்கு பழி
வாங்க வேண்டும்,பழி தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று எண்ணக்கூடாது,
ஏனெனில்।"பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார்"(ரோம12:19)(எபி 10:30)
ஆம் பிரியமானவர்களே! ஆதி திருச்சபையிலே பவுல் சீஷர்களை துன்புறுத்தினான்,சபையைப்
பாழாக்கினான் (அப் 8:3) ஆனால்
சீஷர்கள் அவனை பழிவாங்க
வேண்டும்,அவனுக்கு பதிற்செய்ய வேண்டுமென்று நினைக்கவில்லை
ஆனால் கர்த்தர் பவுலுக்கு பதிற்செய்தார்
(அப்9:3-5)எனவே பவுல் மனமாறினான்,
சபையைப் பாழாக்கினவன்
சபைகளை கட்டி எழுப்புகிறவனாக ஆனான்,தேவனால் வல்லமையாக பயன்படுத்தப்பட்ட அப்போஸ்தலனாக மாறினான் கர்த்தருடைய பதிற்செய்தல்
இவ்விதமாக தான் இருக்கும்.

கிறிஸ்தவர்களாகிய நாம் நமக்கு விரோதமாய் குற்றம் செய்தவர்களை,
தண்டிக்க வேண்டும்,பழிவாங்க
வேண்டும் பகைக்க வேண்டுமென
வேதம் சொல்லவில்லை,
கிறிஸ்தவர்களாகிய நாம், நமக்கு விரோதமாய் குற்றம் செய்தவர்களுக்கு
தயவுகாட்ட வேண்டும்,மனதுருக்கம் கொள்ள வேண்டும்,கிறிஸ்துவுக்குள்
தேவன் நம்மை மன்னித்ததுபோல,
நாமும் அவர்களை மன்னிக்க வேண்டும்
(எபே 4:32) என்று புதிய ஏற்பாடு வழியுறுத்துகிறது..

பிரியமானவர்களே! மற்றவர்கள் எனக்குச் செய்தபிரகாரம் நானும் அவர்களுக்கு செய்வேன்,அவர்கள் எனக்கு செய்த செய்கைக்குத்தக்கதாக நானும் அவர்களுக்கு சரிக்கட்டுவேன் என்று
நாம் சொல்லகூடாது...(நீதி 24:29)
ஏனென்றால் நம் தேவன் நம்மை
நமது செய்கைக்கு,தக்க சரிக்கட்டுகிறவர் அல்ல,அவ்வாறு அவர் நமது
செய்கைக்கு தக்க நம்மை சரிக்கட்டியிருந்தால் நம்மை நியாயம் தீர்த்திருந்தால்,நாம் என்றோ அழிந்து போயிருப்போம்,ஆனால் அவர்
நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்,(சங்103:10)
ஆம் எனக்கு அன்பானவர்களே! இயேசு கிறிஸ்துவின் மூலமாய் தேவனுடைய அன்பை,மன்னிப்பை,இரக்கத்தை,
மனதுருக்கத்தை,தயவை,
ருசிபார்த்துக்கொண்டிருக்கிற
நாம் மற்றவர்களிடமும் அந்த
தெய்வீக பண்பின் சுபாவத்தை
வெளிபடுத்தி காட்ட வேண்டும்,
நமக்கு தீமை செய்கிறவர்களுக்கு
நாம் நன்மை செய்வோம்,
நம்மை உதாசனப்படுத்துபவர்களை,
ஆசீர்வதிப்போம்,நம் சத்துருக்களைச்
சிநேகிப்போம்,நம்மை சபிக்கிறவர்களை
வாழ்த்துவோம்,நம்மை நிந்திக்கிறவர்கள் மற்றும் நம்மை துன்பப்படுத்துவோர்க்காக
ஜெபம் செய்வோம்,இப்படிப்பட்ட தேவ சுபாவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று தேவன் நம்பிடம் எதிர்பார்க்கிறார்,அவரின் எதிர்பார்ப்பை
ஆவியானவரின் துணைகொண்டு நிறைவேற்றுவோம்,ஆண்டவர்
அருளும் ஆசீர்வாதங்களை  சுதந்தரிப்போம்.

ஆமென்... அல்லேலூயா...

Pr.Marvel jerome
Calvary living way ministries
Bangalore-India


Saturday 18 April 2020

தட்டுங்கள்,அப்பொழுது
உங்களுக்குத் திறக்கப்படும்;
(மத்தேயு 7:7)

கிறிஸ்து இயேசுவுக்கு
பிரியமானவர்களே!
விசுவாச வாழ்க்கை
பயண பாதையிலே
விடுதலைக்கான,
ஆசீர்வாதத்திற்கான
அற்புதத்திற்கான,
உயர்வுக்கான
முன்னேற்றத்திற்கான,
பல வழிகளும்,
பல கதவுகளும்
அடைக்கப்பட்டும்
மூடப்பட்டும்
இருக்கின்றன,
ஒவ்வொரு
விசுவாசிகளுக்குள்ளும்
ஒரு தவிப்பு இருக்கின்றது,
அதாவது"எனக்கு
வழிகள் வாய்க்காதா
என் வாழ்க்கை
மாறாதா?"கதவுகள்
திறக்காதா என்
கஷ்டங்கள் தீராதா?
என்று கவலைப்படுகிறார்கள்.
விசுவாசிகளுக்கு
வாய்க்காத வழிகள்
வாய்க்கவும்,அடைக்கப்பட்ட
கதவுகள் திறக்கவும்,
கர்த்தர் வைத்த
நியமங்களுக்கு
அவர்கள் வரவேண்டும்,
அப்படி செய்யாமல்
விசுவாசிகள் சுயமாக
ஏதாவது,முயற்சி
செய்து தோற்றுப்போய்
கொண்டிருக்கிறார்கள்.
தட்டுங்கள் திறக்கப்படும்
என்று இயேசு
சொல்லியிருக்கின்றார்,
எதை தட்டுவது,
எப்படி கட்டுவது என்பதை
நாம் வேத வசனத்தின்
வாயிலாக பார்ப்போம்
வாய்க்காத வழிகள்
வாய்ப்பதற்கும்,
அடைக்கப்பட்ட கதவுகள் திறக்கப்படுவதற்கும்
கர்த்தர் வைத்த
நியமங்களை கற்போம்.

1)இயேசுவின் நாமத்தை
மறுதலியாமல்,அவர்
நாமத்தைஉயர்த்தி,
கர்த்தருடைய வசனத்தை கைக்கொண்டு,அவருக்கு
பிரியமான வாழ்க்கை,
வாழ்கிறவர்களுக்கு
முன் #திறந்த #வாசலை,
கர்த்தரே வைப்பார் யாரும்
அதை #பூட்ட முடியாது.
(வெளி 3:8)

2)கர்த்தரால் அபிஷேகம்
பெற்றவர்கள் முன்னால்
#வாசல்கள் #பூட்டப்படாதிருக்கும்
#கதவுகள் #திறந்து இருக்கும்
#கோணலானவைகளைச் #செவ்வையாக்கப்படும்
(ஏசா45:1-4)

கர்த்தரால் அபிஷேகம்
பெற்றவர்கள் யாவர்?

இயேசு கிறிஸ்துவை
ஆண்டவராக,இரட்சகராக
ஏற்றுக்கொண்டு பரிசுத்த
ஆவியானவரின் அபிஷேகத்தை
பெற்ற நாம் தான்.(எபே 1:13)
(2 கொரி1:21)(1 யோவா 2:20)

3) தொடர்ந்து நாம் #ஜெபம்
செய்து கொண்டே இருக்கும்
பொழுது அடைக்கப்பட்டு,
இருக்கின்ற அத்தனை
#வாசல்களும் #திறக்கப்படும்
சுவிசேஷம் அறிவிக்க
வழி உண்டாக்க படும்.

உதாரணம்:

அப்.பவுல்
கொலோசெயர்களுக்கு
எழுதின திருமுகத்திலே
நாங்கள் திருவசனத்தை
சொல்லும் படியாக
தேவன் #வாசலை
#திறந்தருளும்படி
விசுவாசிகளிடம்
ஜெபிக்க
சொல்கிறார்
(கொலோ 4:3-4)

பேதுரு சிறையில்
இருந்தபொழுது,சபையார்
அவனுக்காக ஊக்கத்தோடு
ஜெபம் செய்தார்கள்,
தேவன் அவர்கள்
ஜெபத்தைக் கேட்டு,
தனது தூதனை அனுப்பி
பல #கதவுகளை திறக்கச்
செய்து,பேதுருவை
விடுவித்தார்(அப் 12:5-11)

சுவிசேஷத்தை
பிரசங்கிக்க கர்த்தரால்
#கதவு #திறக்கப்பட்டது
என்று அப்:பவுல்
சொல்கிறார்
(2 கொரி 2:12)

#நம்மைப்போல #பாடுள்ள
மனிதனாகிய #எலியா
ஜெபம் செய்து மூன்று
வருஷமும்
ஆறு மாதமும்
அடைக்கப்பட்டிருந்த
வானத்தை #ஜெபம்
செய்து #திறக்க
செய்தார்.
(யாக் 5:17-18)

4)தேவனை துதிக்கும்
போது,ஆர்ப்பரிக்கும்
போது அடைக்கப்பட்ட
கதவுகள் திறக்கின்றன,
அலங்கம் இடிந்து
விழுகின்றன

உதாரணம்:

பவுலும் சீலாவும் தேவனை
துதித்துப்பாடும் போது,
பூமி அதிர்ந்தது,சிறை
#கதவுகள்திறந்தது,
#கட்டுகள் அறுந்தது
(அப் 16:25-26)

இஸ்ரவேல் மக்கள்
எரிகோவை சுற்றி
வந்து,மகா சத்தமாய்
எக்காளம் ஊதி
ஆர்ப்பரித்தார்கள்
அப்பொழுது
தடையாக இருந்த
அலங்கம் இடிந்து
விழுந்தன (யோசு 6:20)

5)கர்த்தருடைய
வார்த்தைக்கு,நாம் செவி கொடுக்கும்,போது
அடைபட்டிருக்கிற
பாதைகள் திறக்கும்

உதாரணம்:

மோசே கர்த்தருடைய
வார்த்தைக்கு செவி
கொடுத்ததினால்
இஸ்ரவேல் மக்களுக்கு
தடையாக இருந்த
செங்கடல் இரண்டாக
பிரிந்தது (யாத்14:16)

யோசுவா கர்த்தருடைய
வார்த்தைக்கு செவி
கொடுத்ததினால்
தடையாக இருந்த
யோர்தான்
இரண்டாக பிரிந்து
குவியலாக நின்றது
(யோசு 3:15-17)

கர்த்தருடைய
ஊழியத்திற்கென்று,
நாம் கொடுக்கும் பொழுது,
அடைக்கப்பட்டு இருக்கின்ற
பொருளாதார ஆசீர்வாத
கதவுகள் நமக்காக
திறக்கின்றன (மல் 3:10)

ஆம் பிரியமானவர்களே!
வாய்க்காத வழிகள்
வாய்ப்பதற்கும்,
அடைக்கப்பட்ட கதவுகள் திறக்கப்படுவதற்கும்
கர்த்தர் வைத்த
நியமங்களை
கைகொள்ளுவோம்

ஆமென்.. அல்லேலூயா...

Pr.Marvel jerome
Calvary living way ministries
Bangalore-India


Wednesday 15 April 2020

கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமானவர்களே!
வியாதி என்பது பிசாசின்
வல்லமை,அதில் அகப்பட்டவர்களை
குணமாக்குவதே தேவனின்
வல்லமை (அப் 10:38)
நம் தேவன் வாதையை
அனுப்பி,மக்களை
நோயாளியாக்கி
அழிக்கிறவர் அல்ல,
நம் தேவன் வசனத்தை
அனுப்பி,மக்களை குணமாக்கி
அழிவுக்கு தப்பிக்கிறவர்
(சங் 107:20) மக்கள் மீது பலவீனங்களையும்
நோய்களையும்,சுமத்தியது
கர்த்தர் அல்ல,மக்களுக்காக பலவீனங்களையும்
நோய்களையும்,கல்வாரி
சிலுவையில் சுமந்து
தீர்த்தவரே கர்த்தர்
(ஏசா 53:4)(மத் 8:17)

கொரோனா என்கிற
வாதைக்கு காரணம்
தேவ கோபத்தின் மிகுதியோ,
மனித பாவத்தின் மிகுதியோ
இல்லை,இது கடைசி காலமாக இருப்பதினால் கொள்ளை
நோய்கள் வர தான் செய்யும்
என்று வேதம் தெளிவாக
போதிக்கின்றது (மத்24:7-8)
இயேசு கிறிஸ்துவின்
இரகசிய வருகை,சபை
எடுத்துக்கொள்ளப்படுதலின்
காலம் சமீபமாக
இருப்பதினால்
பிசாசானவனுக்கு கொஞ்சக்காலமாத்திரம்
உண்டென்று அவன் அறிந்து,
மிகுந்த கோபங்கொண்டு,
உலகில் அழிவின் கரியங்களை
செய்து வருகிறான்,அவனால்
ஆபத்து வருமென்று வேதம்
நமக்கு எச்சரிக்கிறது,
(வெளி 12:12) அவன்
கொல்கிற அழிக்கிற
வேலையையே
செய்கின்றவனாகவே
இருக்கிறான் (யோவா 10:10)
கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.(1 பேது 5:8)
அவன் ஆதிமுதற்கொண்டு
மனுஷ கொலை பாதகனாய்‌
இருக்கிறான்(யோவா 8:44)

ஆம் பிரியமானவர்களே!
கொல்லுகின்ற அழிக்கின்ற சங்கரிக்கின்ற,வேலைகளை
செய்வதெல்லாம் சாத்தான்.
இவைகளிலிருந்து நம்மை
மீட்கின்ற,தப்புவிக்கின்ற,
பாதுகாக்கின்ற,காரியங்களைச் செய்கின்றனர் நம்முடைய
கர்த்தர் இவைகளை,நாம்
நன்றாக புரிந்துகொள்ள
வேண்டும்.நம் கர்த்தர்
நல்லவர்,அவரின் அன்பை
எண்ணிப்பாருங்கள்
அவரின் செயல்பாடுகளை
நோக்கிப்பாருங்கள்,
பிள்ளைகளாகிய நாம்,
மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க,
கர்த்தராகிய இயேசுவும்
நம்மைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவராக
இந்த பூமிக்கு வந்து மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனையும் அவனின் கிரியைகளையும்,
தமது கல்வாரி சிலுவை,
மரணத்தினாலே அழித்து
செயலற்று போக செய்து,
பிசாசானவனை இல்பொருள்
ஆக்கி அவனின்
துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு,வெளியரங்கமான கோலமாக்கி,அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.
(எபி:2:14) (கொலோ2:15)

இயேசு கிறிஸ்து பெற்ற வெற்றி
நாம் பெற்ற வெற்றியாகும்...
இயேசுவின் நாமத்தை நாம் பிரயோகிக்கும் போது பிசாசின் வல்லமைகள் நமக்கு கிழ்படியும்
இயேசு நமக்கு சாத்தானின் சகல வல்லமையின் மீதும் அதிகாரம் கொடுத்து இருக்கிறார்,
அந்த இருளில் வல்லமைகள்
நம்மை சேதப்படுத்தமாட்டாது
(லூக்கா 10:17,19) சாத்தானின்
சகல வல்லமைகளையும்
மேற்கொள்ள,நமக்கு இயேசுவால் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது,
என்பதை நாம் விசுவாசிக்கும் பொழுது,கொரோனாவோ அல்லது
வேறு எந்த கொள்ளை நோயோ
நம்மை அணுகவோ,
சேதப்படுத்தவோ,முடியவே முடியாது,இதை நீங்கள் விசுவாசிப்பீர்களானால்
சேதமாகாமல் இருப்பீர்கள்
(எபி 11:31)

#சாத்தானின் வல்லமைகளால்
நம்மை #சேதப்படுத்த முடியாது.

இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக இரட்சகராக  ஏற்றுக்கொண்ட
நமக்குள் அவரே வாசமாயிருக்கிறார் எனவே எந்த சாத்தானின்  வல்லமைகளும்,நம்மை
சேதப்படுத்த முடியாது,
வானத்திலும் பூமியிலும்
சகல அதிகாரமும்
உடைய (மத்:28:18)
இயேசு கிறிஸ்து நமக்குள்ளே  இருக்கின்றார் (கொலோ 1:27)
நாம் கர்த்தரோடு இசைந்து
இருக்கிறோம் அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறோம்
(1 கொரி 6:17) அதுமட்டுமல்ல
நாம் இயேசுவினுடைய  சரீரத்தின் அவயவங்களாயும்,அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.(எபே 5:30)
மொத்ததில் நாம் கிறிஸ்துவிலும்,
கிறிஸ்து நம்மிலும் இருக்கிறார்..
இனி நாம் அல்ல, கிறிஸ்துவே
நமக்குள் பிழைத்திருக்கிறார்
(கலா 2:20) எனவே நாம் எதற்கும்
பயப்படக்கூடாது,எதுவும் நம்மை
சேதப்படுத்த முடியாது.

இயேசுவின் நாமத்தை
நாம் உபயோகிக்கும் போது
பிசாசின் வல்லமைகள்
நமக்கு கிழ்படிந்து அடங்கும்,
அது தாமதமானாலும்,
அது அடங்குகிற வரை
இயேசுவின் நாமத்தை
பிசாசின் வல்லமைகளுக்கு
எதிராக பயன்படித்திகொண்டே
இருங்கள்,இயேசுவின் நமத்திற்கு
முன் எந்த வல்லமையும் எதிர்த்து
நிற்க முடியாது,அது அடங்கி
முடங்கும் (பிலி 2:10-11)
இதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இயேசு நமக்கு சாத்தானின்
சகல வல்லமைகளின்
மீதும் அதிகாரம் கொடுத்து இருக்கிறார்,வாழ்வது எனக்குள்,
நான் அல்ல,இயேசுவே எனக்குள் வாழ்கின்றார்,என்கிற விசுவாச
மனநிலையோடு உங்கள்
அதிகாரத்தை பயன்படுத்துங்கள்
நீங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிப்பீர்களானால்
நீங்கள் சத்துருவின் சகல வல்லமைகளையும்,
மேற்கொள்வீர்கள்
சாத்தானால் உங்களை
மேற்கொள்ள முடியாது,
சாத்தானுக்கு உங்களால் சேதம் உண்டாகும்,ஆனால்,உங்களை
எதுவும் சேதப்படுத்த முடியாது
ஏனென்றால் நீங்கள் அல்ல,
கிறிஸ்துவே உங்களுக்குள்
வாழ்கின்றார்,இந்த எண்ண
ஓட்டம் உங்களுக்குள் என்றும்
இருக்கட்டும்.

Pr.Marvel jerome
Calvary living way ministries
Bangalore-India

To support our ministry

Google pay:9677819582

Our face book page,kindly like And follow

👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

https://www.facebook.com/marvelcmgm/

https://youtube.com/channel/UCNWsmeveSIo7Mxp8iKoHb7A view_as=subscriber

👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻

Our youtube channel,kindly subscribe
#நோக்கிப்பார்த்தால் #பிழைப்பான்

நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்;ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்
(சங்கீதம் 23:4)

கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமானவர்களே!
இன்று உலகம் ஒரு
அசாதரண சூழ்நிலையில்
உள்ளது,மக்கள் அனைவரும் பயத்தோடும் பதட்டத்தோடும்,
அச்சத்தோடும்,அபாய
மனநிலையோடும்,
ஒவ்வொரு நாளையும் நகர்த்திக்கொண்டு இருக்கிறார்கள்,நம்மை
சுற்றி நடக்கிற நிகழ்வுகளை
நாம் பார்க்கும் போதும்,
செய்திகளை கேட்கும் போதும்,
மரண இருள் நம்மை சூழ்ந்து
கொண்டது போல் தோன்றுகிறது,
இந்த நிலையில்,நாம் மரண
இருளின் காரியங்களையே
நோக்கிக் கொண்டு இருக்காமல்
அதாவது வியாதி,மரணம்,
துர்செய்தி,எதிர்மறையான
நிகழ்வுகள்,இவைகளையே
நோக்கி கொண்டிருக்காமல்,
இந்த மரண இருள் சூழ்நிலையிலும்,
தேவன் நம்மோடு கூடவே
இருக்கிறார் (சங் 23:4) என்று
நாம் தேவனை நோக்கி
பார்க்க வேண்டும்.கொரோனா
என்கிற வாதை என்னை அணுகிவிடுமோ? மரணம்
என்கிற பொல்லாப்பு எனக்கு நேரிட்டுவிடுமோ? என்று
வாதையையும் பொல்லாப்பையும் நோக்கிப்பார்ப்பதை விட்டுவிட்டு, கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கும் நமக்கு எந்த வாதையும் அணுகாது,
எந்த பொல்லாப்பும் நேரிடாது
(சங் 91:10)என்று வசனத்தை நோக்கிப்பார்க்‌க ஆரம்பியுங்கள்.

ஆம் பிரியமானவர்களே!
வனாந்தரத்திலே,கொள்ளிவாய்
சர்ப்பங்களால் கடிக்கப்பட்டு,
சாகபோகிற நிலைமையிலிருந்த இஸ்ரவேல் மக்கள்,எப்படி
மோசேயினால் உயர்த்தப்பட்ட
வெண்கல சர்ப்பத்தை நோக்கி,
பார்த்து பிழைத்தார்களோ
(எண் 21:9) அதேபோல் கல்வாரி சிலுவையில் நமக்காக
உயர்த்தப்பட்ட கர்த்தராகிய
இயேசு கிறிஸ்துவை
நாம் நோக்கி பார்த்து
பிழைக்கும்படியாக கர்த்தரால் அழைக்கப்படுகின்றோம்
(யோவா 3:14-15)

நம்முடைய பலவீனங்களை ஏற்றுக்கொண்டு,நம்முடைய
நோய்களை கல்வாரி சிலுவையில் சுமந்து தீர்த்தவரை,நோக்கி
பார்ப்போம் (மத் 8:17) நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களின் நிமித்தம் நொறுக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை நோக்கி பார்ப்போம் (ஏசா 53:5)
இயேசுவின் தழும்புகளால்,
நாம் சுகமாக்கப்பட்டிருக்கின்றோம்,
எனவே அவருடைய தழும்புகளை
நாம் நோக்கி பார்ப்போம் (1பேது 2:24)
மரண இருளின்,காரியங்களை அல்ல மரணத்தை ஜெயித்தவர் நம்மோடு கூடவே இருக்கிறார் அவரை நோக்கி பார்ப்போம்,பிழைத்துக்கொள்வோம்.

ஆமென்... அல்லேலூயா...

நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் (எண்ணாகமம் 21:8)

Pr.Marvel jerome
Calvary living way ministries
Bangalore-south India
#சத்துருக்கள் #அடங்குவார்கள்

இஸ்ரவேலே,நீ பாக்கியவான்;
கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்;அவர்கள் மேடுகளை மிதிப்பாய்,என்று சொன்னான். (உபாகமம் 33:29)

கிறிஸ்து இயேசுவுக்குள்
பிரியமான சகோதர சகோதரிகளே!
இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக இரட்சகராக ஏற்றுக்கொண்ட,
நீங்கள்,கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட
ஜனம்,கிறிஸ்துவுக்கள் நீங்கள்
இஸ்ரவேலர்களாக இருக்கின்றீர்கள் (எபே 2:15-16) இந்த உலகம்
உங்களை சாதாரணமானவர்களாக
நினைக்கலாம்‌,ஆனால் நீங்கள் சாதாரணமானவர்கள் அல்ல,
நீங்கள் கர்த்தரால் விலைக்கிரயம் கொடுத்து வாங்கப்பட்டவர்கள்
(1கொரி 6:20) வெள்ளியை கொடுத்து தங்கத்தைக் கொடுத்து தேவன் உங்களை மீட்டு கொள்ளவில்லை தன்னுடைய ஜீவனையே கொடுத்து,
தன்னுடைய விலையேறப்பெற்ற இரத்தத்தை கொடுத்து உங்களை
மீட்டு கொண்டார் (1பேது1:18-19)
எனவே நீங்கள் தேவனுடைய பார்வையில் மிகவும் விலையேறப்பெற்றவர்களாக  இருக்கின்றீர்கள்.இந்த எண்ணங்களை எப்பொழுதும் உங்கள் மனதிலேயே
நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்.

பிரியமானவர்களே! நாம் யாரையும் எதிரியாக நினைக்கவில்லை ஆனால் நம் மீது பொறாமை கொண்ட,போட்டி மனப்பான்மை  கொண்ட,சிலர்
நம்மை எதிரியாக நினைக்கிறார்கள்.
நாம் அழவேண்டும்,விழவேண்டும்
அழிய வேண்டும்,ஒழிய வேண்டும்
என்று அவர்கள் தங்கள் இருதயத்திலே
விரும்புகிறார்கள்,எதிர்பார்க்கிறார்கள்
அதுமட்டுமல்ல! நீ அழுதால் உன்
சத்தத்தை கேட்க யார் இருக்கின்றார்?
உன் கண்ணீரைத் துடைக்க யார் இருக்கின்றார் ? நீ விழுந்தால்
உன்னை தூக்கி விடுவதற்கு
யார் இருக்கின்றார்? உன்னை உயர்த்துவதற்கு யார் இருக்கின்றார்?
உனக்கு உதவி ஒத்தாசை
செய்ய யார் இருக்கின்றார்?
என்று நம்மைப்பார்த்து
ஏளனமாக பேசுகிறார்கள்
ஆனால் அவர்களுக்கு தெரியாது
நாம் அழுகையின் சத்தத்தை
கேட்க,ஆண்டவர் இருக்கின்றார்
(ஆதி 21:16-17)(ஏசா 38:5)
நம் கண்ணீரை துடைக்க கர்த்தர் இருக்கின்றார் (சங்6:8-9)(ஏசா 25:8)
அழுகையை,ஆனந்தமாகவும்,
துக்கத்தை சந்தோஷமாகவும்,
மற்றிப்போட நம் தேவன்
இருக்கின்றார் (எரே 31:13)
விழுந்த நம்மை தூக்கவும்,
உயரமான கன்மலையின்மேல்
நம்மைநிறுத்தவும் நம் தேவன் இருக்கிறார் (மீகா 7:8)(சங் 9:13)(சங்40:2-3)நமக்கு உதவி செய்ய ஒத்தாசை செய்ய,வானத்தையும் பூமியையும் படைத்த நம் தேவனாகிய கர்த்தர் நமக்காக இருக்கின்றார்
(சங் 121:2)(சங் 72:12)(சங் 37:40)
 (சங் 118:13)

ஆம் பிரியமானவர்களே!
நாம் மற்றவர்களுக்கு எதிராக
நாம் எந்த குற்றமும் செய்யாமல்
இருக்கும்போது கூட,அவர்கள்
நம்மை காரணமின்றி
வெறுப்பார்கள்,எதிரியாக நினைப்பார்கள்,முகாந்திரம்
இல்லாமல் பகைப்பார்கள்
(சங்25:3)(சங் 35:7)(சங் 109:3)
(யோவ 15:25) நாம் அவர்களுக்கு
நன்மைதானே செய்தோம்
ஏன் அவர்கள் நமக்கு தீமை
செய்ய பார்ப்பார்க்கிறார்கள்,
ஏன் நம்மை எதிரியாக நினைக்கிறார்கள்
என்று நமக்குள்ளே கேள்விகள்
வருவதுண்டு.அவர்கள்
அவ்வாறு இருப்பதற்கான
காரணம் அவர்களின் பின்புலமாக இருந்து செயல்படும் பிசாசுதான்,
அவன்தான் அதற்கு காரணம்.
எனவே நம்மை
வெறுக்கிறவர்களுக்கு,
நம்மை எதிரியாக நினைக்கிறவர்களுக்கு
முகாந்திரம் இல்லாமல் பகைக்கிறவர்களுக்கு,
நமக்கு தீமை செய்கிறவர்களுக்கு,
நாம் நன்மை மாத்திரம்
செய்வோம்.அவர்களை
நேசிப்போம்,அவர்களோடு சண்டையிடுவதும்,
அவர்களோடு போராடுவதும்,
நமது வேலை இல்லை,
ஏனெனில் நம்முடைய
போராட்டம் மாம்சத்தோடும்
இரதத்தோடுமல்ல,மாம்சத்திற்கும் இரத்ததிற்கும் பின் நின்று
நம்மோடு போராட்டம் சாத்தானோடும் அவனுடைய சேனைகளோடும்
தான் (எபே 6:12) எனவே நம்மை பகைக்கிறவர்களையும்,நாம்
அன்பு செய்ய வேண்டும்.
கிறிஸ்தவர்களாகிய நாம்
எந்த மனிதரையும்,பகைவராக
பார்க்கவும் நம்மை பகைக்கிறவர்களை பழிவாங்க நினைக்கவும் கூடாது.ஏனெனில் பழிவாங்குதலும் பதிற்செய்தலும் நமக்குரியது அல்ல,அது கர்த்தருக்குரியது (ரோம12:19)
(எபி 10:30) நாம் பழிவாங்காமல்
பதிற்செய்யாமல் அமைதியாக
சும்மா இருக்கும் போது கர்த்தர்
நமக்காக யுத்தம் பண்ணுவார்
(யாத் 14:14)

என்னங்க பாஸ்டர் நீங்க
இப்படி சொல்றீங்க?எங்கள்
சத்துருக்களுக்கு நாங்கள்
என்ன செய்றது? எங்களைப் பகைக்கிறவர்களுக்கு நாங்கள்
என்ன செய்வது? எங்களை சபிக்கிறவர்களுக்கு நாங்கள்
என்ன செய்வது? எங்களை நிந்திக்கிறவர்களுக்கு நாங்கள்
என்ன செய்வது? என்று ஒரு கிறிஸ்தவன் கேட்டால்
அவனுக்கு இயேசு சொல்கிற
பதில்!!!!!!!!!!"

"உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்;உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்".(மத்தேயு 5:44)
இதைத்தான் நாம் செய்ய வேண்டுமென்று தேவன் நம்மிடம்
எதிர்பார்க்கிறார்.

பாஸ்டர் அவர்கள் என் பெயரை சிறுமைப்படுத்த வேண்டும்,
எனக்கு அவப்பெயரை
உண்டாக்க வேண்டும்
என்னை அவமானப்படுத்தி,அதிலே அவர்கள் சந்தோஷப்பட வேண்டும்
என்று காரியங்களை தீவிரமாய்
செய்கிறார்கள்,என்னை குறித்து மற்றவர்களிடம்,இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி
இச்சகம் பேசி என் பெயரை கெடுக்க
பார்க்கிறார்,அவர்களை நான் என்ன செய்ய? பிரியமானவர்களே!
நீங்கள் அவர்களை ஒன்றும்
செய்ய வேண்டாம்அவர்கள் உங்களுக்கு விரோதமாக செய்கின்ற துன்பங்களையும்,அவர்கள் உங்களுக்கு
விரோதமாக பேசுகின்ற
வார்த்தைகளையும் நீங்கள் பொறுமையோடு சகித்துக் கொண்டிருக்க வேண்டும்
(1 பேதுரு 2:20) கர்த்தர்
அனைத்தையும் பார்த்துக் கொள்வார்,நீங்கள்
கவலைப்படாதீர்கள்.

உங்கள் சத்துருக்கள் பல இடங்களில் உங்களை வெட்கப்படுத்தினார்களா?
உங்கள் புகழும்,கீர்த்தியும் போய்விட்டதா ? நான் உங்களுக்கு சொல்கின்றேன்,நீங்கள் வெட்கம் அநுபவித்த சகல தேசங்களிலும் உங்களை புகழ்ச்சியும் கீர்த்தியும் மீண்டும் வைக்க கர்த்தர் இருக்கிறார்,(செப்பனியா 3:19) நிச்சயமாக அவர்
உங்களை உயர்த்துவார்.

உங்கள் சத்துருக்கள் உங்களை குறித்து இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி உங்கள் பெயரை
கெடுக்க நினைக்கிறார்களா?
கவலைப்பாடதிருங்கள்,
உங்கள் பெயரை பெருமைப்படுத்த
கர்த்தர் இருக்கிறார்(ஆதி:12-2)
நிச்சயமாக அவர் உங்கள் பெயரை பெருமைப்படுத்துவார்.

உங்களுக்கு விரோதமாக இச்சகம்
பேசி இல்லாதது பொல்லாதது,
பேசுகிறவர்கள் தானாகவே அடங்குவார்கள்,கர்த்தர் அவர்களை
அடக்குவார் (சங் 76:11-12)
அவர்களின் மேடுகளை,நீங்கள்
மிதிக்கும்படி கர்த்தர் செய்வார்,
(உபா 33:29) அதாவது அவர்கள்
உயர்வானதாக கருதுகிற காரியங்களை,அவர்களின்
ஆஸ்தி,அந்தஸ்து,அதிகாரம்,
பணம்,செல்வாக்கு ஆகிய
மேடுகளை,உங்கள் கால்களுக்கு
கீழே கொண்டுவரும் படி கர்த்தர் செய்வார்.

ஆமென்.. அல்லேலூயா..

இஸ்ரவேலே, நீ பாக்கியவான்;
கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான்.

(உபாகமம் 33:29)

Pr.Marvel Jerome
Calvary living way ministries
Bangalore-south India


கிறிஸ்தவர்களாகிய நாம் ஏன் நற்கிரியைகளை செய்ய வேண்டும்?ஏன் தானதர்மங்கள் செய்யவேண்டும்?தானதர்மங்கள் செய்வதால் இம்மையில் நமக்கு உண்டாகக்கூடிய நன்மைகள் யாவை? தானதர்மங்கள் செய்வதால் மறுமையில் நமக்கு உண்டாகக்கூடிய நன்மைகள் யாவை?



1)#கிறிஸ்தவர்களாகிய நாம் ஏன் நற்கிரியைகளை செய்ய வேண்டும்?
ஏன் #தானதர்மங்கள் #செய்யவேண்டும்?

2)#தானதர்மங்கள் செய்வதால்
#இம்மையில் நமக்கு உண்டாகக்கூடிய  நன்மைகள் யாவை?

3)#தானதர்மங்கள் செய்வதால் #மறுமையில் நமக்கு உண்டாகக்கூடிய  நன்மைகள் யாவை?

கிறிஸ்து இயேசுவுக்குள்
பிரியமான,என் அன்பு
சகோதர சகோதரிகளே!
முன்பு பிதாவுக்கு பிரியமில்லாத,
துற்கிரியை செய்து வந்த நம்மை,
இயேசு கிருபையாய் இரட்சித்து,
பிதாவுக்கு பிரியமாக நற்கிரியை செய்கிறவர்களாக நம்மை மாற்றி
இருக்கிறார்,முன்பு இந்த உலகில்
பிசாசின் செய்கையாக இருந்த
நாம்,இன்று இயேசுவின் மூலம்,
தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்
(எபே2:10) நாம் ஒரு காலத்தில்
இந்த உலகத்திற்கு இருளை
காட்டிகொண்டு இருந்தோம்,
அந்தகார இருளின் பிள்ளைகளாக இருந்தோம்,ஆனால் இயேசு நமது வாழ்கையில் வந்து,நம்மை
இருளிலிருந்து மீட்டு,நமது வாழ்வை
ஒளிமயமாக்கி,நம்மை பிராகசிக்க
செய்து,இன்று இந்த உலகத்திற்கு
நம்மை வெளிச்சமாக வைத்திருக்கிறார்,
(எபே5:8)(யோவா 1:9)(மத்5:14)
நாம் நற்கிரியை செய்ததினால்,
இரட்சிக்கப்படவில்லை,நாம்
கிருபையினால் விசுவாசத்தை
கொண்டு இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்,
அவரின் கிருபையினால் இரட்சிக்கப்பட்ட நாம்,நற்கிரியைகளை செய்வதற்கு
தேவனுடைய செய்கையாய் இருக்கிறோம்,என்பதை
இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டும்,நமது தேவன் நல்லவர்
அவர் நன்மைகள் மாத்திரம் செய்கிறவர் என்று இந்த உலகத்திற்கு,நமது நல்ல செயல்கள் மூலம் வெளிப்படுத்தி காட்ட வேண்டும்,இதனால் இயேசுவின்
நாமத்திற்கு மகிமையும்,நமக்கு இம்மையிலும்,மறுமையிலும்
அனேக நன்மைகளும் உண்டாகும்.

ஆம் எனக்கு அன்பானவர்களே!
நமது ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்துவின் மூலம் வெளிச்சத்தின்
பிள்ளைகளாக ஆக்கப்பட்டிருக்கிற
நாம்,இருள் நிறைந்த இந்த உலகத்தில்,வெளிச்சத்தின்
பிள்ளைகளாய் நடந்துகொள்ள
வேண்டும் என்றும் மற்ற மனிதர்கள்
நாம் செய்கிற நற்கிரியைகளை
கண்டு நம்முடைய பரலோக பிதாவை,
மகிமைப்படுத்தும் படி நம்முடைய செயல்பாடுகள் பிராகசிக்கிறதாக
இருக்க வேண்டும்,என்று
வேதம் வழியுறுத்துகிறது
(எபே5:8)(மத்5:16)
நாம் கர்த்தருக்கு அடுத்த
கரியங்களுக்கு அதாவது,
காணிக்கை,தசமபாகம்,
ஊழியர்களுக்கு உதவி செய்தல்,ஊழியங்களை
தாங்குதல்,மிஷனரிமார்களுக்கு
கொடுத்தல்,சபை கட்ட உதவுதல்,பரிசுத்தவான்களின்
குறைவில் உதவுதல்,ஆகிய காரியங்கள் மூலம் தேவன் மீது நம் கொண்டுள்ள அன்பை காட்டுகிறோம்,அது மிகவும் நல்லது,அதே போல் கஷ்டப்படுகிற,
கைவிடப்பட்ட மக்கள்,திக்கற்ற
பிள்ளைகள்,ஏழைகள்,உடல்
ஊனமுற்றவர்கள்,மனநலம்
குன்றியவர்கள் ஆகிய மக்களுக்கும்,
நாம் உதவிகளை செய்து,தேவ அன்பை இந்த உலகத்திற்கு வெளிபடுத்தி காட்ட வேண்டும் என்று தேவன் நம்மிடம் எதிர்பார்கிறார்.

தேவன் நம்மை நேசிக்கிறார்,அதனால் நம்மை #போஷிக்கிறார்,#உடுத்துவிக்கிறார்,
#திருப்தியாக்குகிறார்,அதேபோல் நாமும்
ஏழைகளையும் வறியவர்களையும்
நேசிக்க #போஷிக்க #உடுத்துவிக்க #திருப்தியாக்க வேண்டும்.

பிரியமானவர்களே!வானத்து
பறவைகள் விதைக்கிறதுமில்லை,
அறுக்கிறதுமில்லை,களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை;
அவைகளை நம் தேவன் தான்
போஷித்து பிழைக்கவைக்கிறார்,
விசேஷமாக அவரின் பிள்ளைகளாகிய
நம்மையும் போஷித்து வருகிறார்
(மத் 6: 26)அவரால் போஷிக்கப்பட்ட
அவரால் ஆகாரம் சாப்பிட,நாம்,
ஆகாரம் இல்லாதவர்களுக்கு நமது ஆகரத்தை கொடுத்து அவர்களை போஷிக்க வேண்டும் (லூக் 3:11)
(மத்25:35)(ஏசா58:7)(நீதி22:9)
(எசே 18:7-9)

காட்டு புஷ்பங்கள் உழைக்கிறதுமில்லை,
நூற்கிறதுமில்லை,நம் தேவன் தான்
அவைகளை அழகாய்  உடுத்துவிக்கிறார்,
அவரின் பிள்ளைகளாகிய நமக்கும் அழகழகாய் ஆடைகளை கொடுத்து நம்மையும் உடுத்துவிக்கிறவர் (மத் 6:28-30)
அவரிடமிருந்து அழகழகாய் ஆடைகளை பெற்று உடுத்தி மகிழ்கிற நாம்,
அடையில்லாத ஏழைகளுக்கு
ஆடைகளை கொடுத்து அவர்களை
உடுத்துவிக்க வேண்டும்,(லூக் 3:11)
(எசே 18:16)(மத்25:36)

கிறிஸ்துவுக்குள் தேவனுடைய பிள்ளைகளாகிய நாம்
அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும்,நம் தேவன் நமக்கு,சம்பூரணமாய்க் கொடுத்துக்கொண்டிருக்கிறார்
(1 தீமோ6:17) நம்மை அவர்
திருப்தியாக்கி (மத்14: 20)
 நடத்துகிறார்,நமது வாழ்வாதார தேவைகளை அவர் சந்தித்து எல்லாவற்றிலும் எப்பொழுதும்
நாம்  சம்பூரணமாய் இருக்கவும் செய்திருக்கிறார்,(2 கொரி9:8)
இப்படி தேவனால் திருப்தியாக்கப்பட்ட
நாம்,கஷ்டப்படுகிற,கைவிடப்பட்ட மக்கள்,திக்கற்றபிள்ளைகள்,
ஏழைகள்,உடல் ஊனமுற்றவர்கள்,
மனநலம் குன்றியவர்கள் ஆகிய
மக்களுக்கு நம்மால் இயன்ற
உதவிகளை செய்து அவர்களின்
வாழ்வாதார தேவைகளை பூர்த்தி
செய்து அவர்களை திருப்தியாக்க வேண்டுமென்று நம் தேவன்
விரும்புகிறார்.(ஏசா58:10-11)
(லூக்14:13) (மத்25:45)

#கிறிஸ்தவர்களாகிய நாம் ஏன் நற்கிரியைகளை செய்ய வேண்டும்?
ஏன் #தானதர்மங்கள் #செய்யவேண்டும்?

நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்
(எபே 2:10)

கிறிஸ்தவர்களாகிய நாம்,
நன்மைசெய்யவும்,தானதர்மம்
பண்ண #மறவாமல்
இருக்க வேண்டுமென்றும்,
அப்படிப்பட்ட #பலிகளின்மேல்
தேவன் #பிரியமாயிருக்கிறார் என்று
வேதம் சொல்கிறது (எபி13:16)

பலவீனரைத் தாங்க வேண்டும்
என்றும் கொடுப்பது பாக்கியம் என்று
இயேசு நமக்கு சொல்லியிருக்கிறார்
(அப்20:35)

கிறிஸ்தவர்களாகிய நாம் தரித்திரரை நினைத்துக்கொள்ள வேண்டும்
(கலா2:10)

நம்மிடத்தில் கேட்கிறவனுக்கு
கொடுக்க வேண்டும்(மத்5:42)

நாம் தர்மஞ்செய்வதை,நம்
பிதா பார்க்கிறார் அதற்கு பலன்
அளிக்கிறார்.. தர்மஞ்செய்வது நமது நடைமுறை வாழ்க்கையில் ஒரு
பகுதியாகஇருக்கட்டும் (மத்6:3-4)

இவ்வுலக ஆஸ்தி உடைய கிறிஸ்தவர்களாகிய உங்களுக்குள்
தேவ அன்பு நிலைகொள்ளுகிறது
என்றால்,குறைவில் இருக்கிற
சகோதரனுக்கு கொடுத்து உதவ
வேண்டும்,வசனத்தினாலும் நாவினாலுமல்ல, #கிரியையினாலும் #உண்மையினாலும் #அன்புகூர
வேண்டும் (1 யோவா 3:17-18)

அந்நியரை உபசரிக்க மறவாமல் இருக்க வேண்டும்,ஏன் அவர்கள் தேவதூதர்களாக கூட இருக்கலாம் (எபி 13:2)

திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரித்து உதவுவது தேவனுக்கு முன் மாசில்லாத சுத்தமான பக்தி (யாக் 1:27)

நம்மூலமாய் ஞான நன்மைகளில்
பங்கு பெற்றவர்கள்,நம்மூலமாய்
சரீர நன்மைகளிலும் பங்கடைய
அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் அதாவது தரித்திரர்களாய் இருக்கிற பரிசுத்தவான்களுக்கு,பொருள்
சகாயம் செய்து உதவுவது நமது
கடமை (ரோம15:26-27)

இந்த உலகிலே பசியாய் இருக்கிறவர்களுக்கு
தாகமாய் இருக்கிறவர்களுக்கு வஸ்திரமில்லாமல்
இருக்கிறவர்களுக்கு
வியாதியாயிருக்கிறவர்களுக்கு
காவலிலிரருக்கிறவர்களுக்கு
மொத்தத்தில் தேவையில்
இருக்கிறவர்களுக்கு,நாம்
செய்கிற உதவிகள்,தானதர்மங்கள்
நற்கிரியைகள் எல்லாம்,இயேசுவுக்கே
நேரடியான செய்யப்படுவதாக,
இயேசுவே கூறுகிறார் அதன் அடிப்படையில் அவர் நியாயத்தீர்ப்பு
வழங்குகிறார்.(மத் 25:41-46)

இரக்கஞ்செய்யாதவனுக்கு
இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக்கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும் (யாக் 2:13)

இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்பெறுவார்கள்.
(மத் 5:7)

#தானதர்மங்கள் செய்வதால்
#இம்மையில் நமக்கு உண்டாககூடிய  நன்மைகள்

தரித்திரருக்கு தயை செய்கிறவர்கள்
கர்த்தரை கனம்பண்ணுகிறார்கள்
(நீதி14:31) என்னைக் கனம் பண்ணுகிறவர்களை,நான்
கனம் பண்ணுவேன் என்று
கர்த்தர் சொல்லுகிறார் (1சாமு2:30)

ஏழைக்கு இரங்குகிறவர்கள் கர்த்தருக்ககே கடன்கொடுக்கிறார்கள் என்றும் அவன் கொடுத்ததை கர்த்தர் திரும்பக் கொடுப்பார்
என்றும் (நீதி 19:17)ஏழைகளுக்கு தரித்திரருக்கு கொடுக்கிறவர்கள்
தாழ்ச்சி அடைய மாட்டார்கள்
தாழ்ச்சியில்லாத ஒரு நிலை
அதாவது உயர் நிலை அவர்களின்
வாழ்வில் உண்டாகும் (நீதி 28:27)
வேதம் சொல்கிறது

வாரியிறைத்து ஏழைகளுக்குக் கொடுக்கிறவர்களின் நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்றும் அவர்களின் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும் (சங் 112:9)
என்றும் வாரியிறைத்தால் விருத்தி உண்டு என்றும் உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்;  தண்ணீர் பாய்ச்சுகிறவர்களுக்கு  தண்ணீர் பாய்ச்சப்படும்.(நீதி11:24-25)
என்று வேதம் சொல்கிறது.

அநியாயமாக சம்பாரிக்கப்பட்ட ஆஸ்திகள்,தரித்திரர்பேரில்
இரங்குகிறவனுக்கு கொடுக்கப்படுகிறது
அதை அவன் சேகரிக்கிறான் பெற்றுக்கொள்ளுவான் (நீதி 28:8)

சிறுமைப்பட்டடவர்கள்
மேல் சிந்தையுள்ளவர்கள் பாகியவான்களாய் இருப்பார்கள்
என்றும்,தீங்குநாளில் அவர்கள்
கர்த்தரால்  விடுவிப்பார் என்றும்,
கர்த்தர் அவர்களை பாதுகாத்து
அவர்கள் உயிரை காப்பார்,
என்றும்,அவர்களின் சத்துருக்களின்
இஷ்டத்திற்கு தேவன் அவர்களை 
விடாமல் காத்துக்கொள்வார் என்றும்
ஒரு வேளை அவர்கள் வியாதி படுக்கையில் இருந்தால்,அவர்களை
கர்த்தர் தாங்குவார் என்றும்,அவர்களின் வியாதி படுக்கை முழுவதையும் கர்த்தர்  மாற்றிப்போட்டு அவர்களை காப்பார்
என்று வேதம் சொல்கிறது(சங் 41:1-3)

அந்தரங்கமாக தர்மஞ்செய்கிறவர்களுக்கு பிதாவாகிய தேவனால் வெளியரங்கமாக பலன் அளிக்கப்படும்(மத் 6:3-4)

பசியாக இருக்கிறவர்களுக்கு
உணவளித்து,சிறுமைப்பட்டவர்களை திருப்தியாக்குகிறவர்களின்,வாழ்வில்
இருள் நீங்கி ஒளிமயமாகும் என்றும்
கர்த்தர் அவர்களை நித்தமும் நடத்தி,
மகா வறட்சியான காலங்களில் அவர்களின்
ஆத்துமாவைத் திருப்தியாக்கி,அவர்களின் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்
என்றும்,அவர்கள் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பார்கள்
என்று கர்த்தர் சொல்லுகிறார்.(ஏசா58:10-11)

நாம் நற்கிரியை செய்யும் போது,
தேவன் நமக்கு கிருபையை பெருக செய்வார்,வாரியிறைத்து ஏழைகளுக்கு
கொடுத்தால் நம்முடைய நீதி என்றென்றும் நிற்கும்,தேவன் நமது நீதியின்
விளைச்சலை வர்த்திக்கப்பண்ணுவார்
(2கொரி 9:8-9)

#தானதர்மங்கள் செய்வதால் #மறுமையில் நமக்கு உண்டாககூடிய நன்மைகள்

பூமியிலே நாம் செய்யக்கூடிய தானதர்மங்கள்,நமது பரலோக
தேவனின் சந்நிதி வரை
வந்து,அது அவருக்கு
நினைப்பூட்டப்படுகிறது என்று
வேதம் கூறுகிறது.(அப் 10:4)

இயேசு கிறிஸ்து  மகிமை பொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்அப்பொழுது,தமது
வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து,வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
பசியாயிருந்தேன்,எனக்குப் #போஜனங்கொடுத்தீர்கள்;
தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் #தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் #சேர்த்துக்கொண்டீர்கள்;
வஸ்திரமில்லாதிருந்தேன்,
எனக்கு #வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன்,
என்னை #விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் #பார்க்கவந்தீர்கள் என்பார் என்றும்,
அதற்கு அவர்கள்,ஆண்டவரே
எப்போது நீர் வந்தீர்,எப்போது
உமக்கு நாங்கள் இவைகளை
செய்தோம்,என்பார்கள் அதற்கு
ஆண்டவர் இயேசு இவ்வாறாக
மறுமொழி கூறுவார்,மிகவும் #சிறியவர்களாகிய இவர்களில்
ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ,
அதை #எனக்கே #செய்யாதிருந்தீர்கள்
என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
(மத் 25:34-40)

இந்த உலகிலே பசியாய் இருக்கிறவர்களுக்கு
தாகமாய் இருக்கிறவர்களுக்கு வஸ்திரமில்லாமல்
இருக்கிறவர்களுக்கு
வியாதியாயிருக்கிறவர்களுக்கு
காவலிலிரருக்கிறவர்களுக்கு
மொத்தத்தில் தேவையில்
இருக்கிறவர்களுக்கு,நாம்
செய்கிற உதவிகள்,தானதர்மங்கள்
நற்கிரியைகள் எல்லாம்,இயேசுவுக்கே
நேரடியான செய்யப்படுவதாக,
இயேசுவே கூறுகிறார்.

இயேசு சொல்லுகிறார்..
விருந்து பண்ணும்போது
பதில் செய்ய முடியாத
#ஏழைகளையும் #ஊனரையும் #சப்பாணிகளையும் #குருடரையும்
அழைத்து அவர்களுக்கு #விருந்து
கொடுத்து உபசரிக்கிறவர்கள்,
பாக்கியவான்கள்,அவர்களுக்கு நீதிமான்களின் #உயிர்த்தெழுதலில்
#பதில் #செய்யப்படும் என்று....
(லூக் 14:13-14)

ஆமென்... அல்லேலூயா...

நினைவிற்கு: (நீதி 21:13) (நீதி 28:27)
(எசே16:49) (மத் 25:41-46)(யாக் 2:13)
(மத் 5:7) (1 பேது4:8)




இயேசு இந்த பூமிக்கு வந்தபோது
தனது வார்த்தையால் என்னென்ன
அற்புத கிரியைகளை செய்தாரோ,
அதே கிரியைகளை,தேவனுடைய வார்த்தையினால் பிறந்த நாமும்
செய்ய முடியும்,ஏன் அதைவிட
பெரிய கிரியைகளையும் நம்மால்
செய்ய முடியும்

என்னை விசுவாசிக்கிறவன் நான்
செய்கிற கிரியைகளைத் தானும்
செய்வான்,இவைகளைப்பார்க்கிலும்
பெரிய கிரியைகளையும் செய்வான்.
(யோவான் 14:12)

கிறிஸ்து இயேசுவுக்குள்
பிரியமானவர்களே!ஆதியிலே
தேவன் வானத்தையும் பூமியையும்,
தனது வார்த்தையால் படைத்தார்,
இருளையும்,வெறுமையையும்
ஒழுகின்மையையும் தனது வார்த்தையை கொண்டு மாற்றி சீர்படுத்தினார்,
இயேசு இந்த உலகத்திற்கு மாம்சத்தில்
வந்தபோது,தனது வார்த்தையால்
மனுக்குலத்தில் காணப்பட்ட இருளை அகற்றி ஒளியேற்றினார்,வெறுமையை மாற்றி நிறைவாக்கினார்,ஒழுகின்மையை
போக்கி ஒழுங்காக்கினார்,
அவர் ஆதியிலே வார்த்தையாக
இருந்தார்,அந்த வார்த்தையானவர்
மாம்சமாகி மனிதனானார்(யோவா1:1,14)
அவர் தனது வார்த்தையினாலே நம்மை,
அவரை போன்று அழிவில்லாத சிருஷ்டியாக,தேவனுடைய வார்த்தையின்
பிள்ளையாக,சிருஷ்டித்து இருக்கிறார் (யாக்1:18,1 பேது1:23)
இயேசு இந்த பூமிக்கு வந்த போது,
தனது வார்த்தையால்
என்னென்ன கிரியைகளை செய்தாரோ,
அதே கிரியைகளை,தேவனுடைய வார்த்தையினால் பிறந்த நாமும் செய்ய
முடியும்,ஏன் அதைவிட பெரிய கிரியைகளையும் நம்மால் செய்ய முடியும்
என்று நமது ஆண்டவர் இயேசுவே நமக்கு வாக்கு கொடுத்திருக்கிறார்(யோவா 14:12)
அதுமட்டுமல்ல இயேசுவே நமக்குள்
வாசமாக இருக்கிறார்,(கொலோ1:27)
(2 கொரி13:5)

ஆம் எனக்கு அன்பானவர்களே!
இயேசு தனது வார்த்தையால் மனித வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்தார்,
அவரின் பிள்ளைகளாகிய,நம்முடைய
வார்த்தையாலும்,மனித வாழ்வில் மாற்றத்தை கொண்டு வர முடியும்.
அவர் பேசிய எல்லா வார்த்தையும் அப்படியே நிறைவேறியது,
அவரின் வித்துக்களாகிய நாம்
பேசுகிற எல்லா வார்த்தையும்
அப்படியே நிறைவேறும்.

இயேசுவின் வார்த்தையிலே
#குணமாக்க கூடிய #வல்லமை
இருந்தது.

திமிர்வாத நோயினால் வியாதிப்பட்டிருந்த நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரனை
இயேசு தனது வார்தையை அனுப்பி சொஸ்பமாக்கினார்(மத் 8:13)
கப்பர்நாகூமிலே ராஜாவின் மனுஷனுடைய மகன் கடும் ஜுரத்தினால் வீட்டில் சாகப்போகிற நிலமையில் இருந்தான்,
இயேசு தனது வார்த்தையை அனுப்பி
அவன் மகனை குணமாக்கினார்
(யோவா 4:52-53)அவர் குருடரை
இயேசு தனது வார்த்தையால் 
பார்வை அடைய செய்தார்
(மாற்10:51-52) ஊமையும்
செவிடுமான ஆவியே,
தனது வார்தையால் கட்டளையிட்டு
விரட்டி சுகமாக்கினார்(மாற்9:25)
சூம்பிய கையுடைய மனிதனை
கையை நீட்டு என்று தனது
வார்த்தையை சொல்லி
நலமாக்கினார் (மத்12:13)
இயேசுவின் நாமத்தினால்
 நம்முடைய வார்த்தையிலும்
குணமாக்க கூடிய வல்லமை
இருக்கிறது,இவைகளை நாம்
விசுவாசித்து செயலாற்ற வேண்டும்
(அப்3:6-7) (அப்14:9-10) (அப்9:34)

இயேசுவின் வார்த்தையிலே #மரித்தவர்களை #உயிர்ப்பிக்க
வைக்க கூடிய சக்தி இருந்தது.

மரித்து நான்கு நாள்,ஆகிய லாசரை,
கல்லறையை விட்டு வெளியே வா
என்று தனது வார்த்தையால் கூப்பிட
அவன் ஜீவன் பெற்று உயிரோடு
வந்தான்.(யோவா11:43-44)
மரித்துபோய் பாடையில் கிடந்த
நாயீன் ஊர்,விதவை தாயின் மகனை
வாலிபனே, எழுந்திரு என்று தனது வார்த்தையால் அவர் சொல்ல,அவன்
உயிர் பெற்று எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான்.(லூக் 7:11,14,15)
இறந்து போன ஜெப ஆலய
தலைவனுடைய பன்னிரண்டு
வயது மகளை நோக்கி,இயேசு
தனது வார்த்தையால் சிறுபெண்ணே எழுந்திரு என்று சொல்ல அவள்,
உயிர் பெற்று எழுந்து நடக்க
ஆரம்பித்தாள்,(மாற் 5:41-42)
இன்று அவரின் பிள்ளைகளாகிய நம்முடைய வார்த்தையிலும்
மரித்தவர்களை உயிர்ப்பிக்க
வைக்க கூடிய சக்தி இருக்கிறது.
இவைகளை விசுவாசித்து
செயல்படுத்த வேண்டும்.
(அப்9:40)(அப்20:10-11)

இயேசுவின் #வார்த்தையிலே
பாவிகளை #மனந்திரும்ப வைக்க
கூடிய கிருபை இருந்தது.

இயேசு சகேயுவை அன்போடு அழைத்து
உன் வீட்டில் நான் தங்க வேண்டும் என்று
கிருபையான வார்த்தையால் அவனிடம் பேசியபோது,அவன் இயேசுவை #ஆண்டவர் என்று அறிக்கையிட்டு
மனம்திரும்பி தான் செய்த அந்நியாயங்களை விட்டுவிட
உடனே முன்வந்தான்.(லூக்19:7-9)

விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்
இயேசுவை #ஆண்டவரே என்று
அறிக்கையிட்டதன் பயனாக
நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே (யோவா 8:10-11)
என்று கிருபையாய் மன்னித்து
அவளை  அனுப்பினார்.

பல புருஷன்களை கொண்ட சமாரிய
ஸ்திரீ,இயேசுவின் கிருபையான வார்த்தைகளால் மனம்திரும்பி,
இயேசுவை குறித்து அந்த ஊர்
முழுவதும் பிரசங்கம் பண்ணினாள்
அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் இயேசுவின் மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
(யோவா 4:39) இன்று அவரின்
பிள்ளைகளாகிய நம்முடைய
வார்த்தையிலும் பாவிகளை
மனந்திரும்ப வைக்க கூடிய
(அப் 2:37)(அப்:16:29-30)
கிருபை இருக்கிறது.
இவைகளை விசுவாசித்து
நாம் பிரசங்கிக்க வேண்டும்.
அனேகரை தேவனிடத்தில்
மனம்திருப்ப வேண்டும்.

இயேசுவின் #வார்த்தையிலே
#பிசாசுகளை துரத்தக்கூடிய
அதிகாரம் இருந்தது.

இயேசுவினிடம் பிசாசு பிடித்திருந்த அநேகரை கொண்டுவந்தார்கள்;
அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்.(மத் 8:16)
ஒரு மனிதன் ஜெப ஆலயத்தில் இருந்தான்,அவனுஅசுத்த ஆவி பிடித்திருந்தது,இயேசு தனது வார்த்தையால்
அவனுக்குள் இருந்த ஆவியை துரத்தி
அவனை விடுவித்தார் (லூக் 4:35-36)
ஒரு மனிதனுக்குள் லேகியோன் அளவு ஏராளமான பிசாசுகள் பிடித்திருந்து
அவைகளை தனது அதிகாரமுள்ள வார்த்தையால் துரத்தி அம்மனிதனுக்கு
மறுவாழ்வு அளித்தார்.(லூக் 8:32)
இன்று அவரின் பிள்ளைகளாகிய நம்முடைய வார்த்தையிலும்
பிசாசுகளை துரத்தக்கூடிய
அதிகாரம் இருக்கிறது.
(அப்16:18)(அப்8:7)(அப்5:16)

இயேசு தனது வார்த்தையின்
வல்லமையை அறிந்தவராக
இருந்தார்,தனது வாயிலிருந்து
புறப்படுகிற வார்த்தைகள்
என்ன விளைவுகளை
உண்டாக்கும் என்பதை
அவர் அறிந்திருந்தார்,
இயேசுவின் #வார்த்தையிலே மக்களை #கவரக்கூடிய வல்லமை இருந்தது.

ஒரு முறை இயேசுவை கைது
செய்யும்படி பிரதான ஆசாரியராலும்
பரிசேயராலும்,அனுப்பபட்ட போர்சேவகர்கள்,இயேசு பிரசங்கிக்கிற
இடத்திற்கு வந்தார்கள்,அவர்கள்
இயேசுவின் பிரசங்கத்தால் கவரப்பட்டு,
ஈர்க்கப்பட்டு,அவரின் வார்த்தைகளின் ஆற்றலையும் சிறப்பையும் கண்டு பிரம்மித்தார்கள்,அவரை கைதுசெய்யாமல் திரும்பி போனார்கள்,பிரதான ஆசாரியரும் பரிசேயரும்,ஏன் இயேசுவை கைது பிடித்து கொண்டுவரவில்லை என்று கேட்டபோது,
அவர்கள் மறுமொழியாக இவ்வாறு கூறினார்கள்,அவர் பேசுகிறது போல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள்.(யோவா7:45-47)
மாற் 12:37 சொல்கிறது.....
இயேசுவின் வார்த்தைகளை
அநேக ஜனங்கள் விருப்பத்தோடே கேட்டார்கள் என்று..இயேசுவின் வார்த்தைகளால்அவரின்
வல்லமையால் ஈர்க்கப்பட்ட
பத்தாயிரத்திற்கு மேட்பட்ட மக்கள்,
மூன்று நாள் அவரோடு வனாந்திரத்திலே உணவு இல்லாமல்,வீட்டிற்கு செல்லாமல் அவரேடு கூடவே இருந்தார்கள் (மத்15:32)
அதேபோல அவரின் பிள்ளைகளாகிய
நம்முடைய வார்த்தையிலும் மக்களை கவரக்கூடிய ஆவினானவரின்
வல்லமை இருக்கிறது,(அப் 2:41)
(அப் 4:4)

இயேசு இந்த பூமிக்கு வந்தபோது
தனது வார்த்தையால்
என்னென்ன அற்புத செய்தாரோ,
அதே கிரியைகளை,தேவனுடைய வார்த்தையினால் பிறந்த நாமும் செய்ய
முடியும்,ஏன் அதைவிட பெரிய கிரியைகளையும் நம்மால் செய்ய முடியும்
என்று நமது ஆண்டவர் இயேசுவே நமக்கு வாக்கு கொடுத்திருக்கிறார்(யோவா 14:12)
அதுமட்டுமல்ல இயேசுவே நமக்குள்
வாசமாக இருக்கிறார்,(கொலோ1:27)
(2 கொரி13:5) எனவே விசுவாசத்தோடும் உணர்வோடும்,தைரியமாக இயேசுவுக்காக ஊழியம் செய்ய ஆரம்பியுங்கள்.

ஆமென்... அல்லேலூயா...

/
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்
(எபிரெயர் 10:38)

கிறிஸ்துவுக்குள் தேவனுடைய
சொந்த வித்துக்களே!
கிறிஸ்து இயேசுவினால் நீதிமானாக
ஆக்கப்பட்ட நாம்(ரோம4:5)
விசுவாசத்தினால் பிழைக்கும்
படி தேவனால் அழைக்கப்பட்டு
இருக்கிறோம்,உலகம் நம்மை
பார்த்து சொல்கிறது,பணம்,
பதவி,பட்டம்,செல்வாக்கு
இருந்தால் தான் இந்த பூமியில்
பிழைக்க முடியும்,இந்த
சமுதாயத்தில் நல்லா வாழ
முடியும் என்று,ஆனால்
கர்த்தர் சொல்கிறார்,உங்களுக்கு
எது இல்லவிட்டாலும்,விசுவாசம்
இருந்தால் போதும் நீங்கள்
பிழைப்பீர்கள்(ஆப2:4,கலா3:11,
ரோம1:17,எபி10:38,யோ11:25-26)
இம்மையிலும்,மறுமையிலும்
வாழ்ந்து இருப்பீர்கள்.

உங்களுக்கு இப்போது இல்லாத
நன்மைகள் ஆசீர்வாதங்கள்
எல்லாம்,ஒரு நாள் இருக்கிறதாக
மாறும்( உப 28:2) ஏனெனில்
நம் தேவன் இல்லாதவைகளை
இருக்கிறது போல் அழைக்கிற
தேவன்(ரோம4:17)அவர்
நம்முடைய தகப்பன்
அவருடைய வித்தினாலே
 நாம் மறுபடியும் (1யோ3:9) சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம்
புதுசிருஷ்டிகளாகிய நாம்,
அவரின் வார்த்தைகளை
விசுவாசித்து பிழைக்கும் படி
அவரால் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

இயேசுவை பற்றும் விசுவாசத்தினால்
தேவன் நம் இருதயத்தை சுத்தமாக்கி
இருக்கிறார்,நம்மை இஸ்ரவேலர்களாக ஆக்கியிருக்கிறார்(அப்15:9 எபே: 2:15)
இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட
வாக்குத்தத்தங்கள் அனைத்திலும்
விசுவாசித்து பிழைக்கிற நமக்கு
இன்று நமக்கும் பங்கு உண்டு
(2கொரி 1:20)இன்று நாம்
விசுவாசத்தோடு ஜெபிக்கும்
போது நாம் பெற்றுக்கொள்வோம்,
அவைகள் நமக்கு உண்டாகும்
(மாற்11:24) விசுவாசத்தினாலே
அவர் தமது ஆவியை நமக்கு
ஈவாக அளித்திருக்கிறார்,
ஆகையால் இன்று நாம்
கர்த்தரோடே ஒரே ஆவியாக
இசைந்து இருக்கிறோம்.
(1கொரி6:16) விசுவாசத்தினாலே
நாம் உலகம்,மாம்சம்,பிசாசு
ஆகியவைகளின் மீது
ஜெயிக்கிற ஜெயத்தை
பெற்றிருக்கிறோம்,
நாம்முற்றும் ஜெயம்
கொள்கிறவர்களாக 
இருக்கிறோம்.
(1யோ5:4)(ரோம8:37)

ஆம் பிரியமானவர்களே!
நாம் விசுவாசத்தினால்
தேவனிடத்திலிருந்து
எவ்வளவு பெரிய பாக்கியங்களை
பெற்றிருக்கிறோம்,பாருங்கள்!!!!
நிலவாழ் உயிரினங்கள் சுவாசித்து பிழைக்கும் படி தேவனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது..
கிறிஸ்து இயேசுவுக்குள் நீதிமானக
இருக்கிற நீங்களும் நானும்,
 விசுவாசித்து பிழைக்கும்படி
தேவனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம்.
உங்களை சுற்றி இப்போது நீங்கள் எதிர்பார்க்கிற ஆசீர்வாதங்கள்
இல்லாமல் இருக்கலாம்,பிழைக்க வழி இல்லாதது போல் தோன்றலாம்,
ஆனால் விசுவாசம் இருந்தால்
போதும் அதை மூலதனமாக வைத்து
நீங்கள் ஜீவனுக்கு தேவபக்திக்கும்,
இம்மைக்கும் மறுமைக்கும்
தேவையான சகல ஆசீர்வாதங்களையும்,
நன்மைகளையும் பெற்றுக்கொள்ளளாம்

ஆமென்... அல்லேலூயா....

ஆதலால் விசுவாசம் கேட்கிறதினால்
வரும்,கேட்பது தேவனுடைய வசனத்தினாலே வரும் (ரோமர் 10:17)


என் ஜீவனுள்ள நாளெல்லாம்
நன்மையும் கிருபையும்
என்னைத் தொடரும்..........
(சங்கீதம் 23:6)

கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுக்கு பிரியமானவர்களே! நம் ஜீவனுள்ள ஒவ்வொரு நாளும் நன்மையும்
தீமையும் அல்ல நன்மையும்
கிருபையும்,நம்மை தொடரும்
என்று வேதம் திட்டவட்டமாக
போதிக்கிறது,ஒளி-இருள்,
வலது-இடதுஇன்பம்-துன்பம்,
நன்மை-தீமை இதுதான் சரியான
தொடர் வரிசை ஆனால் தாவீது
நன்மையும் தீமையும் என்னை
தொடரும்,என்று சொல்லாமல்,
நன்மையும் கிருபையும் என்னை
தொடரும்,என்று விசுவாசத்தோடு சொல்கிறார்,தாவீதும் தனது
வாழ்க்கையின் தீமை தொடர்வதை விரும்பவில்லை,அவன் தீமையை நிராகரித்து,கிருபையை சார்ந்து
கொண்டார்..

கிறிஸ்தவர்களாகிய நாம் நன்மையும் தீமையும் கலந்த வாழ்க்கை வாழ
வேண்டும் என்று தேவன் விரும்பவில்லை,
கிறிஸ்தவர்களாகிய நாம் நன்மையும் கிருபையும் கலந்த வாழ்க்கை வாழவேண்டும் என்று தேவன்
விரும்புகிறார்,(சங் 23:6)(சங்84:11)
(1தீமோ 1:2)

நம் ஜீவனுள்ள நாளெல்லாம்
நன்மையும் கிருபையும் நம்மை
தொடர வேண்டுமென்றால்,நாம்,நம்
சுய நீதி கிரியைகளை சார்ந்து வாழ்கிற வாழ்க்கையை விட்டுவிட்டு,கிறிஸ்து  இயேசு நமக்காக கல்வாரி சிலுவையில் செய்து முடித்த காரியங்களை
அவருடைய கிருபையை சார்ந்து
வாழ்கிற வாழ்க்கை வாழவேண்டும்,
அப்பொழுது நமது வாழ்க்கை
முமுவதும் நன்மையும் கிருபையும்
நம்மை தொடர்ந்து வரும்.

பழைய உடன்படிக்கையின் மக்கள்,
தேவனிடத்தில் கிருபை பெற்றார்கள் ஆனால் புதிய உடன்படிக்கையின்
தேவ பிள்ளைகளாகிய நாம் கிறிஸ்து இயேசுவின் பரிபூரணத்தினால் கிருபையின்மேல் கிருபை பெற்றிருக்கிறோம்(யோவா1:16)
எனவே நம்முடைய வாழ்க்கையின் எல்லாமே நன்மைக்கு ஏதுவாகவே
நடக்கும்.

பிரியமானவர்களே! ஒரு சில
நேரத்தில் நமது வாழ்வில்,தீமை
தொடர்வது போல் தோன்றினாலும்,
கர்த்தர் அதை நன்மையாக
மாற்றி முடிப்பார்,தாவீது
வாழ்க்கையில் அப்படித்தான்
நடந்தது,சவுல் ராஜா,தாவீதின்
கொலை செய்ய பின்தொடர்ந்து கொண்டேயிருந்தார்.தன் சொந்த
மகனாகிய அப்சலோம்,தன்
தகப்பனான தாவீதின் உயிரை
பறிக்க வாங்கத் தேடினான்,
சீமேயி, கேட்கக்கூடாத தூஷண
வார்த்தைகளினால் தாவீதை தூஷித்தார்,இப்படி பற்பல
தீமையான காரியங்களை தாவீதை தொடர்வது போல் காட்சிளித்தாலும்............
இவைகளுக்கெல்லாம் முடிவில்
எல்லாம் தாவீதுக்கு நன்மையும்,ஆசீர்வாதமாகவே 
வந்து முடிந்து,தாவீது சொன்னது
போல் நன்மையும் கிருபையும்
மாத்திரமே அவரை தொடர்ந்து
வந்தது,சகலமும் நன்மைக்கு
ஏதுவாகவே நடந்தது,பழைய உடன்படிக்கையின் பக்தனாகிய
அவனுக்கே அவ்விதம் நன்மையும் கிருபையும் தொடந்தது
என்றால்,புதிய உடன்படிக்கையின்
தேவ பிள்ளைகளாகிய  நமக்கு
அதைவிட அதிகமாகதான்
நன்மையும் கிருபையும் தொடரும்
இவைகளை நாம் விசுவாசிக்கும்
போது அவைகள் செயல்பட
ஆரம்பிக்கிறது,

ரோமர் 8:28 சொல்கிறது.......
அவருடைய  தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த்
தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு  சகலமும் நன்மைக்கு ஏதுவாக
நடக்கிறது என்று...தேவனிடத்தில் அன்புகூருகிறவர்கள் என்றால் யார்?
இயேசுவின் உபதேசங்களை,அவரின் கற்பனைகளை கைக்கொள்கிறவர்கள் எவர்களோ அவர்களே!
தேவனிடத்தில் அன்பு
கூறுகிறவர்கள் ஆவார்கள்
(யோவா 14:21)அவர்களுடைய வாழ்க்கையில் சகலமும்
நன்மைக்கு ஏதுவாகவே
நடக்கும்,அவர்களுடைய
ஏன்  சகலமும் நன்மைக்கு
ஏதுவாகவே நடக்கும்?
ஏனென்றால் இயேசு கிறிஸ்துவினிடத்தில்
அன்புகூருகிற யாவருக்கும்
கிருபை உண்டாகும்(எபே 6:24)
எனவே அவர்களுடைய வாழ்க்கையில் சகலமும் நன்மைக்கு ஏதுவாக
மாத்திரமே நடக்கும்.

கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய சொந்த வித்துக்களே!உங்கள் வாழ்கையில் சில காரியங்கள் இன்று தீமை போல  தோன்றினாலும் நாளை அது நன்மையாக  மாறும்... இன்று சில விஷயங்கள் உங்களுக்கு தோல்வியாக தோன்றினாலும் நாளை அது வெற்றியாக மாறும்,
ஏனெனில் அவருடைய  தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த்
தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு  சகலமும் நன்மைக்கு ஏதுவாக மாத்திரமே நடக்கும்,உங்களுடைய ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும்
உங்களை நிச்சயம் தொடரும்.

ஆமென்... அல்லேலூயா...





உங்கள் அன்றாட வாழ்க்கையை
குறித்த,பொதுவான தேவ சித்தத்தை இயேசுவிலே பாருங்கள்

கிறிஸ்துவுக்குள் புதுசிருஷ்டிகளே!
வேதம் சொல்கிறது (1 யோவான் 5:14-15ல்)
நாம் தேவனிடத்தில்,அவருடைய
சித்தப்படி எதையாகிலும் கேட்டால்,
அவர் நமக்கு செவிகொடுப்பார்,
அவற்றை நாம் பெற்றுக்கொள்ளுவோம் என்று எனவே நாம் எதைக்கேட்டாலும்,
தேவ சித்தப்படி,அவரின் வார்த்தையின்
படி கேட்கவேண்டும்,ஒரு தனிப்பட்ட
முக்கிய முடிவுகளை எடுக்க,
திருமணம்,மணமகன்,மணமகள்
தேர்ந்தெடுக்க,ஊழிய அழைப்பை
அறிய,இடத்தை தேர்ந்தெடுக்க,
ஆகிய காரணங்களுக்கு சிறிது
பொருமையாக கர்த்தர் சமுகத்தில்
காத்திருந்து,அவரின் சித்தத்தை
அறிந்துகொள்ள வேண்டியதாக
இருக்கிறது.

ஆனால் நமது அன்றாட வாழ்க்கையை
குறித்த,பொதுவான தேவ சித்தத்தை
 நாம் அறிந்து கொண்டு,அவரின்
சித்தப்படி தேவனிடத்தில் ஜெபித்து,
பதில்களை பெற்று,வெற்றி வாழ்க்கை
வாழ வேண்டும்,தேவனுடைய சித்ததை அவரின் விருப்பத்தை எப்படி கண்டு
கொள்வது? யார் வழியாக தேவ
சித்ததை நாம் பார்க்க முடியும்?
என்கிற கேள்விக்கு பதில்,
இயேசு கிறிஸ்து வழியாகவே,
அவர் சொல்கிறார் "என்னைக்
கண்டவன் பிதாவைக் கண்டான்"
(யோவா14:9) என்றும்,பிதாவின்
சித்தத்தின்படி செய்யவே நான்
வானத்திலிருந்திறங்கி வந்தேன்.
(யோவா6:38)என்கிறார் இயேசு.
அப்படியானால் நாம் பிதாவின்
சித்ததை அறிய இயேசுவின்
வாழ்க்கை முறையை பார்க்க
வேண்டும்.

உங்களுடைய குழந்தை வியாதியாக
இருக்கிறதா?உங்கள் குழந்தையை
தேவன் குணமாக்குவாரா ?
தேவ சித்தத்தை இயேசுவிலே
பாருங்கள்,(மாற்கு 7:24-30)
பிசாசின் பிடியிலிருந்த கிரேக்க,
ஸ்திரீயின் மகளை இயேசு விடுவித்து
குணமாக்கினார்.(மாற்கு 5:22,24,35,43)
யவீரு மகளை இயேசு உயிரோடு
எழுப்பினார்,(லூக்கா 7:12-15)
நாயீன் ஊர் விதவையின் மகனை
இயேசு உயிரோடு எழுப்பினார்,
இயேசு அவர்களுக்கு பிசாசின்  பிடியிலிருந்து விடுதலை
கொடுத்தார்,அவர்களுக்கு
உயிர் கொடுத்தார்,அவர்கள் அனைவரையும்,குணமாக்கினார்.
தேவ சித்தத்தை இயேசுவிலே
பாருங்கள்.

பிரியமானவர்களே! தேவன்
ஒருசில நேரத்தில்,குணமாக்குவார்
சில நேரத்தில் குணமாக்க மாட்டார்,
வியாதியை கொடுப்பார்,
ஒருசில சமயம் ஆசீர்வதிப்பார்,
சில சமயம் ஆசீர்வாதத்தை
பிடுங்கிவிடுவார்,சாபத்தை
கொடுப்பார்,எல்லாம் தேவ சித்தம்
என்று தேவனை பற்றி தவறாக எண்ணாதிருங்கள்,தேவ
சித்தத்தை இயேசுவிலே
பாருங்கள். இயேசு யாரையும்
வியாதியாக்கினார் என்று
வேதத்தில் இல்லை,இயேசு
யாரையும் சாபமாக்கினார்,
தரித்திரனாக்கினார் என்றும்
வேதத்தில் இல்லை,(மத் 14:20)
அவர் சிறிய அளவு கொண்ட
அப்பங்களையும்,மீன்களையும்
பெருக செய்து 12 கூடை நிறைய
மிச்சம் எடுக்க வைத்தார்,
(லூக்:5:6-7) வலை கிழியத்தக்க,
இரண்டு படகும் அமிழத்தக்க
மீன்களை பிடிக்க வைத்தார்.

பிரியமானவர்களே! வேதம்
இயேசு கிறிஸ்துவை பற்றி சொல்கிறது,
அவர் அனைவரையும்,நேசித்தார்,
எல்லோருக்கும் நன்மை செய்தார்,
பாவங்களை மன்னித்தார்,
தன்னை விசுவாசித்த யாவரையும் குணமாக்கினார்,மரித்தோரை
உயிர்ப்பித்தார்,பிசாசின்
பிடியிலிருந்து மக்களை
விடுவித்தார்,பெருக்கத்தை
கொடுத்தார்,மக்களை
இரட்சித்தார்,என்னைக் கண்டவன்
பிதாவைக் கண்டான்"(யோவா14:9)
என்றும்,பிதாவின் சித்தத்தின்படி
செய்யவே நான் வானத்திலிருந்து
இறங்கி வந்தேன்.(யோவா6:38)
என்றார்,அவர் நேற்றும்
இன்றும் என்றும் மாறாதவராய்
இருக்கிறார் (எபி 13:8)"
எனவே உங்கள் அன்றாட
வாழ்க்கையை குறித்த,பொதுவான
தேவ சித்தத்தை இயேசுவிலே
பாருங்கள்,அவரின் சித்தப்படி
ஜெபம் செய்து பதில்களை பெற்று
வெற்றி வாழ்க்கை வாழுங்கள்.

என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.

(யோவான் 14:7)


இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும்,
எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
(பிலிப்பியர் 2:10-11)

கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டிகளே!
உங்களை துன்பப்படுத்துகிற,
உங்களை அடிமைப்படுத்துகிற
உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிற,
எந்த காரியமாக இருத்தாலும்,சரி
அவைகளை என்னால் மேற்கொள்ள முடியலயே,கண்ட்ரோல் பண்ண
முடியலயே,என்று தவிக்கிறீர்களா?
கவலைப்பாடாதீர்கள்,பயப்படாதீர்கள் அவைகள் உங்களுக்கு கீழ்படியாமல் இருக்கலாம்,ஆனால் இயேசு என்னும்  நாமத்திற்கு முன்பாக அவைகள்
கீழ்படிந்து,மண்டியிட்டே ஆக,
வேண்டும்.

மதுபான போதை புகையிலை,
பழக்கம்,இயேசுவின் நாமத்திற்கு
முன்பாக மண்டியிட்டே ஆக
வேண்டும்,அந்த கிட்னி பிரச்சனை,
கேன்சர் வியாதி இயேசுவின் நாமத்திற்கு முன்பாக மண்டியிட்டே ஆக வேண்டும்,
இயேசுவின் நாமத்திற்கு முன்பாக,
வியாதி வறுமை வேதனை,மரணம்
பாவ பழக்கம்,சத்துருவின் சகல வல்லமைகளும் கீழ்படிந்து,
மண்டியிட்டே ஆக வேண்டும்
ஏனென்றால் பிதாவாகிய தேவன்,
எல்லா நாமத்திற்கும் மேலான
நாமத்தை இயேசுவுக்கு தந்தருளி இருக்கிறார்,எனவே இயேசுவின்
நாமத்திற்கு முன்பாக எல்லாம்
மண்டியிட்டுதான் ஆக வேண்டும்,
கீழ்ப்படிந்துதான் ஆக வேண்டும்

ஏராளமான பிசாசுகள் பிடித்த
(லேகியோன்) மனிதன் இயேசுவை பார்த்தவுடன் அவருக்கு முன்பாக விழுந்து,கீழ்பணிந்து கெஞ்சுகிறான்,
அவனுக்குள் அனேக பிசாசுகள் குடியிருந்தன,இயேசு அவைகளை
துரத்தி அந்த மனிதனுக்கு மறுவாழ்வு அளித்தார்,அவன் புத்தி தெளித்தவானாக ஆனான் (லூக்:8:26-35)அதேபோல
தான் இயேசுவின் நாமத்திற்கு
முன்பாக பிசாசின் வல்லமைகள் விழும்,மண்டியிடும்,அவரின்
நாமத்தினால் நம்மால் சகல சத்துருவின் வல்லமைகளையும்,நமது கால்களுக்கு  கீழ்ப்படுத்தி அவைகளை மேற்கொள்ள முடியும்.(லூக்10:19)இயேசுவின் நாமத்தினால் பிசாசுகளை துரத்தவும்,வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்கவும் முடியும்.
(மாற் 16:17-18) ஏனெனில்
பிதாவாகிய தேவன்,எல்லா
நாமத்திற்கும் மேலான நாமத்தை இயேசுவுக்கு தந்தருளி இருக்கிறார்,
எனவே இயேசுவின் நாமத்திற்கு
முன்பாக எல்லாம் மண்டியிட்டுதான்
ஆக வேண்டும்.

ஆம்,பிரியமானவர்களே! உங்கள்
குழந்தை வியாதியாக இருக்கிறதா?
 உங்கள் கைகளைகுழந்தையின்
மீதுவைத்து சொல்லுங்கள்,
இயேசுவின் நாமத்தினால் இந்த
காய்ச்சல் ஒடிப்போவதாக,இந்த
 இருமல் நின்று போவதாக என்று சொல்லுங்கள்,இயேசுவின்
 நாமத்தினால் வியாதி மறைந்து ஆரோக்கியம் பிறந்ததை நீங்கள் காண்பீர்கள்,உங்களை துன்பப்படுத்துகிற,
உங்களை அடிமைப்படுத்துகிற
உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிற,
எந்த காரியமாக இருத்தாலும்,
அவைகளை இயேசுவின்
நாமத்தினால் கீழ்படுத்துங்கள்,
மதுபான போதை புகையிலை,
பழக்கம்இச்சையான எண்ணங்கள்,
பாவப்பழக்கங்கள் ஆகியவைகளுக்கு எதிராக இயேசுவின் நாமத்தை
சொல்லி அவைகள் உங்கள் வாழ்வை
விட்டு விலகி ஓடிப்போகும் படி கட்டளையிடுங்கள்,அவைகளை
மண்டியிட வையுங்கள்.

இயேசுவின் நாமத்தால் உங்கள்
மனதை நிறைத்து,தீய எண்ணங்கள்,
பாவ எண்ணங்கள் ஆகியவைகளை கீழ்படுத்தி மண்டியிட வையுங்கள். இயேசுவின் நாமத்திற்கு முன் எல்லாம் மண்டியிடும்.ஏனெனில் பிதாவாகிய தேவன்,எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை இயேசுவுக்கு தந்தருளி இருக்கிறார்.அவர் உங்களுக்காக மரித்து,உங்களுக்காக உயிர்த்து,உங்களுக்காக பிதாவின் வலதுபரிசத்தில் அமர்ந்திருக்கிறார்,
எனவே அவரின் நாமத்திற்கு முன்
முழங்கள் யாவும் மண்டியிடும்,
நாவுகள் யாவும் அவரை #கர்த்தர்
என்று அறிக்கையிடும்.

ஆமென்... அல்லேலூயா...

ஆதலால் #கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் #இரட்சிக்கப்படுவான்.(ரோமர் 10:13)

அவராலேயன்றி வேறொருவராலும் #இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.(அப்போஸ்தலர் 4:12)

அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப்பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது.
(அப்போஸ்தலர் 3:16)

உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் #கர்த்தருடைய #நாமத்தினாலே
அவனுக்கு எண்ணெய்பூசி,
அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.
(யாக்கோபு 5:14)


கிறிஸ்துவுக்குள் புதுசிருஷ்டிகளே!
இந்த உலகத்தின் மக்ககள்
சொல்லுவார்கள்,நான் கண்டால்தான்
விசுவாசிப்பேன்,பெற்றுக்கொண்டால்
தான் நம்புவேன்,என்று ஆனால்
கர்த்தர்,சொல்கிறார்,நீ முதலில் நம்பு
பிறகு பெற்றுக்கொள்வாய்,முதலில் விசுவாசி பிறகு மகிமையை காண்பாய் என்று,ஆம் நாம் ஆண்டவரின் அற்புதத்தை,பார்ப்பதற்கு,உணர்வதற்கு
முன் அவைகளை பெற்றுக்கொள்ள
போகிறோம் என்று விசுவாசிக்க வேண்டும்,அப்போது நாம்
அற்புதங்களை பெற்றுக்கொள்ள
முடியும்.

நாம் எந்தவிதமான நல்ல
அறிகுறிகளை,பார்ப்பதற்கு
முன்பாக அந்த அறிகுறிகளை
 நாம் சரீரத்தில்,அடைந்து
விட்டோம் என்று விசுவாசிக்க
 வேண்டும்,பெட்ரோலில் நனைந்த துணியை,எப்படி நெருப்புக்கு பக்கம் கொண்டு,போனால்,நெருப்பு
சடாரென துணியில் பற்றுவது போல்,விசுவாசத்தோடு நாம்
தேவனிடம் அணுகும் போது
அவரிடம் இருந்து வல்லமை
 சடாரென புறப்பட்டு வந்து,
அற்புதங்களை செய்கிறது.
(மாற்கு5:25-34) வேதத்தில்
பெரும்பாடுள்ள ஸ்திரீயின்
சம்பவத்தை நாம் அறிந்திருக்கிறோம்,

இயேசுவை அனேக மக்கள் நெருக்கி கொண்டும்,(மாற்5:31) வஸ்திரத்தை கூட்டத்தில்,எதார்த்தமாக  தொட்டுக்கொண்டும் இருந்தார்கள்,
ஆனால் அவர்கள் யாருக்கும்,
அற்புதம்நடக்கவில்லை,ஆனால்
அந்த 12 வருடமாக  பெரும்பாடுள்ள
ஸ்திரீ தொட்டதும்,அவளுக்கு
அற்புதம் நடந்தது,ஏனென்றால்
அவள் விசுவாசத்தோடு தொட்டால்.

நான் இயேசுவின் வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று
சொல்லி விசுவாசத்தோடு தொட்டால்,
அவளின் தொடுதலில்,விசுவாசம் இருந்தது,
உடனே இயேசுவினிடம் இருந்து,வல்லமை புறப்பட்டு வந்து அவளின் வியாதியை குணமாக்கியது,(மாற்:5:30)அவள் இதற்கு முன் இதுபோல் செய்தவள் இல்லை,
அவள் முதல் முறையாக, செய்தவள்,
இயேசுவின் அன்பையும்,அவரின்
குணமாக்கும் வல்லமையையும்,
அறிந்து விசுவாசத்தோடு தொட்டால் எனவே அவள் வேதனை நீங்கி சுகமானாள்.

ஆம் என் அன்பு சகோதர சகோதரிகளே!
நீங்கள் எப்படிப்பட்ட வியாதியின் நிலையில் இருந்தாலும்,எத்தனை
வருடமாக அந்த பிரச்சனை
இருந்தாலும்,பரவாயில்லை ஒன்றை
மனதில் வைத்துக்கொள்ளுங்கள்,
இயேசு என்னை சுகமாக போகிறார் என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
இயேசுவை நான் விசுவாசிக்கிறேன் அதனால் நான் சொஸ்தமாவேன்,
பூரண குணமாவேன்,என்று விசுவாசித்துக்கொண்டே இருங்கள்
வியாதியோடு இருக்கிறவர்கள்,
பரிகாரியாக இயேசுவை
வைத்துக்கொண்டு எதார்த்தமாக இருக்காதீர்கள்,இயேசுவால் அவரின் வார்த்தையால்,அவரின் தழும்புகளால்,
அவரின் வல்லமையினால் நான் சொஸ்தமாவேன்,பூரண குணமாவேன்,
என்று விசுவாசித்துக்கொண்டே இருங்கள்
நிச்சயம் சுகத்தை பெற்றுக்கொள்வீர்கள்,

ஆமென்... அல்லேலூயா...

அவர் உன் #அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் #நோய்களையெல்லாம் #குணமாக்கி,உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,
நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது. (சங்கீதம் 103:3-5)

நம்முடைய #பாவங்களை நாம் #அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு #மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
(1 யோவான் 1:9)


இதோ,ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி
ஒரு குமாரனைப் பெறுவாள்;அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள்
என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.(மத்தேயு 1:23)

கிறிஸ்துவுக்குள் புதுசிருஷ்டிகளே!
வேதம் சொல்கிறது,இம்மானுவேல்
என்றால் தேவன் நம்மோடு இருக்கிறார்
என்று அர்த்தமாம்,இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக,இரட்சகராக ஏற்றுக்கொண்ட அனைவரோடும்,தேவனாகிய இயேசு கூடவே இருக்கிறார்,அவர் நம்மைவிட்டு
விலகுவதும் இல்லை,நம்மை கைவிடுவதும் இல்லை என்று அவர் வாக்கு கொடுத்திருக்கிறார்.(எபிரெயர் 13:5)
இது சத்தியம்.

ஆம் பிரியமானவர்களே!
ஆனால் அவர் நம்மோடு இருக்கிறதை
நாம்அனுதினமும் உணர்கிறோமா?
அவரின் வல்லமையான பிரசனத்தை எந்நேரமும் அனுபவிக்கிறோமா?
என்றால் நம்மில் அனேகர் இல்லை என்போம்,ஆனால் உண்மையில் நாம்
அவர் நம்மோடு இருக்கிறதையும்
அவரின் வல்லமையான பிரசனத்தையும் எந்நேரமும் நம்மால், உணரவும் அனுபவிக்கவும் முடியும்.ஆம்
அவ்வாறு இருந்தால்,நம்மால் சமாதானத்தோடும்,இளைப்பாறுதலோடும்,
மிகுந்த மனமகிழ்ச்சியோடும் 24 மணிநேரமும் இருக்க முடியும்,அத்தோடு,
பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷத்தையும்,தேவனின் வல்லமையையும் எப்பொழுதும்
பெறவும் முடியும்.

தேவனாகிய இயேசு நம்மோடு கூடவே இருப்பதை, எப்படி நாம் உணர்வது,
எப்படி அவரின் பிரசனத்தின் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டே இருப்பது? ஒன்றுமில்லை,சகோதர சகோதரிகளே! அவர் நம்மோடு இருக்கிறதை நமது மனக்கண்ணில் காண வேண்டும்,சரீர கண்ணில் அவரை நாம் காணவில்லை,என்பதால் அவர் நம்மோடு இல்லை என்று ஆகிவிட முடியாது,அவர் நம்மோடு தான் இருக்கிறார்,இதை நாம் விசுவாசித்து அவரோடு நடக்க வேண்டும்.
அதாவது நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிற (2 கொரி5:6)
அனுபவத்திற்கு நேராக வரும் போது,அவரின் பிரசனத்தின் ஆசீர்வாதங்களை வல்லமைகளை
நம்மால் பெற்றுக்கொண்டே இருக்க முடியும்.

உதாரத்திற்கு,நீங்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்கிறீர்கள்,என்றால் இயேசு என்னோடு அருகில் இருக்கிறார் என்று விசுவாசித்து உணர்ந்துகொண்டே இருங்கள்,உள்ளத்தில் அவரோடு பேசுங்கள்,அப்போது அவரின் பிரசனத்தின் வல்லமையை உங்களால் பெற முடியும்,
உங்கள் வேலையில் உண்மை,நேர்மை,
இருக்கும்,உங்கள் கடமையை சரியாக நீங்கள் செய்வீர்கள்,அவரின் பிரசனத்தின் வல்லமையிலிருந்து,உங்களுக்கு,ஞானம் அறிவு,விவேகம்,சாமர்த்தியம்,சுறுசுறுப்பு,
உற்சாகம் வந்துகொண்டே,இருக்கும்.
பதவி உயர்வுகள் உங்களை தேடி ஓடி வரும்.

நீங்கள் தனியாகவோ அல்லது உங்கள் இரட்ச்சிக்கப்படாத உலக நண்பர்களோடு இருக்கிறீர்கள் என்றால்,இயேசு என்னோடு அருகில் இருக்கிறார்,என்று விசுவாசித்து உணர்ந்துகொண்டே இருங்கள்,உங்களால் பரிசுத்தமில்லாத காரியங்களை,பார்க்கவோ,
பேசவோ,கேட்க்கவோ,செய்யவோ முடியாது.அவரின் பிரசனத்தின்
வல்லமை உங்களுக்கு தேவ பயத்தையும்,
பரிசுத்தத்தை கொடுக்கும்.

நீங்கள் பயணம் செய்கிறீர்கள்,என்றால்
இயேசு என்னோடு அருகில் இருக்கிறார் என்று விசுவாசித்து உணர்ந்துகொண்டே இருங்கள்,அவரின் பிரசனத்தின் வல்லமை உங்களுக்கு பாதுகாப்பை கொடுக்கும்,
உங்கள் பயணம் ஆசீர்வாதமாக அமையும்.

நீங்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்கிறீர்கள் என்றால்,இயேசு என்னோடு அருகில் இருக்கிறார்,என்னோடு கூடவே வருகிறர்,அவரே மருத்துவரின் கரம்பிடித்து,எனக்கு சிகிச்சை அளிக்கிறார்,என்று விசுவாசித்து
அவ்விதம்  உணர்ந்துகொண்டே இருங்கள்
அப்போது அவரின் பிரசனத்தின் வல்லமையை உங்களால் பெற முடியும்,
உங்களுக்கு தைரியம் உண்டாகும்,
திட நம்பிக்கை உண்டாகும்,விசுவாசம் அதிகமாகும்,நீங்கள் முற்றிலுமாக குணம் அடைவீர்கள்.

ஆம் என் அன்பு சகோதர சகோதரிகளே!
அவர் நம்மோடு இருக்கிறதையும்
அவரின் பிரசனத்தின் வல்லமையும்,
நாம்  விசுவாசித்து அவரோடு நடந்து பயிற்சி செய்ய வேண்டும்
அதாவது நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிற (2 கொரி5:6)
அனுபவத்திற்கு நேராக கடந்து வரும் போது,அவர் இம்மானுவேலாய் நம்மோடு இருக்கிறதை நம்மால் 24மணி நேரமும் உணரமுடியும்,அதேடு அவரின் பிரசனத்தின் ஆசீர்வாதங்களை, வல்லமைகளை நம்மால் எப்போதும் பெற்றுக்கொண்டே இருக்க முடியும்.

ஆமென்... அல்லேலூயா...
ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து,கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.(எபேசியர் 4:32)

பிரியமானவர்களே! நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்,அதாவது
நாம் மற்றவர்களை மன்னித்ததால்,
தேவன் நம்மை மன்னிக்கவில்லை,
நாம் கிறிஸ்துவுக்குள் இருப்பதால்,
தேவன் நம்மை மன்னித்திருக்கிறார்,
எனவே நாமும் மற்றவர்களை
மன்னிக்க வேண்டும்.நாம் மன்னிப்பை  கொடுத்ததால் மன்னிப்பை பெறவில்லை,நாம் மன்னிப்பை
அவரிடம் பெற்றதால் மற்றவர்களுக்கு மன்னிப்பை கொடுக்க வேண்டும்.

ஒரு சில விசுவாசிகள் சொல்வார்கள்,
எனக்கு எதிராக அக்கிரமம் செய்தவரை,எனக்கு அநியாயம் செய்தவரை,நான் மன்னித்துவிட்டேன்,
ஆனால் அந்த அநியாயத்தை என்னால் மறக்க முடியவில்லை,எனவே அந்த நபரோடு எனக்கு எந்த ஒட்டுமில்லை உறவும் இல்லை,அவரோடு
பேச்சுவார்த்தை இல்லை,மன்னித்து விட்டேன் ஆனால் அதை மறக்கமாட்டேன்
என்று சொல்வார்கள்.ஆனால் தேவன்,
நமக்கு கொடுத்த மன்னிப்பு அந்த மாதிரியான மன்னிப்பு அல்ல,
வேதம் சொல்கிறது..........
"அவர் நம்முடைய அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து,நம்முடைய  பாவங்களையும் அக்கிரமங்களையும்
இனி நினையாமலிருப்பேன் என்கிறார்"
(எபிரெயர் 8:12) நம் தேவன் நம்முடைய அநியாய அக்கிரமங்களை,மன்னிக்கிற தேவன் மாத்திரம் அல்ல,அவர் நம்முடைய அநியாய அக்கிரமங்களை மன்னித்து அதை நினையாமல் இருக்கிற தேவன்.
இவ்விதமாக மன்னிப்பைதான் நாம் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும்
என்று புதிய உடன்படிக்கை நமக்கு வழியுறுத்துகிறது (எபேசியர் 4:32)

ஆம் என் அன்பு சகோதர சகோதரிகளே!தேவன் கிறிஸ்துவுக்குள் நம் பாவங்களை கிருபையாய் மன்னித்து,அவைகளை நினையாமல் இருப்பதால் தான்,
நாம் தைரியமாய்க் கிருபாசன தண்டையிலே,தேவ சமூகத்திலே சேரக்கூடிய தகுதியை உடையவர்களாய் இருக்கிறோம்,(எபிரெயர் 4:16)
அவர் நம்முடைய அநியாயங்களை அக்கிரமங்களை,மன்னித்துவிட்டு அவைகளை நினைத்துக்கொண்டே  இருந்தால்,நம்மால் அவர் சமூகம் நெருங்க முடியாது,அவரோடு உறவாட முடியாது,
அவரும் நம்மோடு நல் உறவை தொடரமுடியாது,எனவேதான் அவர் மன்னித்து அவைகளை நினையாமல் இருக்கிறார்,

ஆம் பிரியமானவர்களே! அவருக்கு
நம்மீது அளவற்ற அன்பு இருக்கிறது,
அவர் நம்மோடு உறவாட வேண்டும் என்று அதிகமாய் விரும்புகிறார்,அந்த உறவுக்கு தடையாய் இருக்கிற,நம்முடைய பாவங்களை,அநியாய அக்கிரமங்களை அவர் கிருபையாய் மன்னித்து,அவைகளை நினையாமல் இருக்கிறார்,ஏனெனில் தகப்பனாகிய அவருக்கு பிள்ளைகளாகிய நமது அளவற்ற அன்பு இருக்கிறது.

அந்த தேவ அன்பை அந்த தேவரக மன்னிப்பை பெற்ற நாமும்,
மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும்,
நாம் தேவனுக்கு எதிராக அக்கிரமம் அநியாயம் செய்தோம்,அவைகளை
அவர் மன்னித்து மறந்து அவைகளைப்பற்றி நினையாமலிருப்பேன் இருக்கிறார்,அதனால் நாம் அவரோடு நல் உறவில் இருக்கிறோம்,அதே போல நமக்கு எதிராக அக்கிரமம் அநியாயம் செய்தவரை மன்னிப்போம்,அவர்களின் குற்றங்களை மறப்போம்,அவைகளை பற்றி நினையாமல் இருப்போம்,அவர்களோடு அன்போடு உறவாடி,நல் உறவில் இருப்போம்,
இதைதான் தேவன் நம்மிடம் எதிர்பார்கிறார்.

இல்ல பிரதர் நீங்க சொல்றது சரிதான் ஆனால் எனக்கு எதிராக அநியாய அக்கிரமம் செய்தவரை,என்னால்
மன்னிக்க முடிகிறது,அவருக்கு
நான் பதிலுக்கு எந்த தீங்கும் செய்யவில்லை,ஆனால் அவர்
செய்த குற்றத்தை என்னால் மறக்க முடியவில்லை,பிறகு எப்படி அந்த
நபரோடு  என்னால் பழையபடி பேச முடியும்?எப்படி அந்த மனிதரோடு என்னால் இணைந்து வாழ முடியும்?
எப்படி அந்த நபரோடு நல் உறவில்
இருக்க முடியும்?வேதம் சொல்வது
போல் என் செய்யதான் ஆசை ஆனால் என்னால்,அவர்களின் துரோகத்தை அநியாயத்தை மறக்க முடியவில்லையே பிரதர்,என்று நினைக்கிற என் அன்பு சகோதர சகோதரிகளே! கர்த்தருடைய வசனத்திற்கு கீழ் படியுங்கள்,அதனால் உங்களுக்கு நன்மை உண்டாகும்,இந்ந வருடம் முடியப்போகிறது,உங்கள் வைராக்கியத்தை விட்டுவிடுங்கள்,
ஆவியானவரின் உதவியை நாடுங்கள்,ஆவியானவரே
கர்த்தருடைய வசனத்திற்கு கீழ்ப்படிய எனக்கு உதவி செய்யுங்கள்,
ஆவியானவரே கிறிஸ்துவுக்குள்
தேவன் என்னை மன்னித்ததுபோல,
நானும் மற்றவர்களை மன்னிக்க கூடிய மனப்பாங்கை தாருங்கள்,எனக்கு
எதிராக அக்கிரமம் அநியாயம் செய்தவரை மன்னிப்பதற்கும்,அவர்களின் குற்றங்களை மறப்பதற்கும்,அவைகளை பற்றி நினையாமல் இருப்பதற்கும் அவர்களோடு அன்போடு உறவாடி,நல் உறவில் இருப்பதற்கும்,தேவன் விரும்புகின்ற வாழ்க்கை நான் வாழ்வதற்கும் நீங்கள் எனக்கு உதவி செய்யுங்கள்
என்று ஜெபியுங்கள்,அவர் உங்களுக்கு உதவுவார்,உங்களை மற்றுவார்,
தேவனுக்கு பிரியமாய் உங்களை
வாழ வைப்பார்,நீங்கள் சமாதானத்தோடும் சந்தோஷத்தோடும்,தேவனுடைய
சகல ஆசீர்வாதங்களோடும் என்றும் இருப்பீர்கள்.

ஆமென்... அல்லேலூயா..