Friday 30 September 2016

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இரட்சிக்கப்படாத நமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நாம் எப்படி சுவிசேஷத்தை சொல்வது ? அதற்கான வழிமுறைகள் என்ன ?

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இரட்சிக்கப்படாத நமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு  நாம் எப்படி சுவிசேஷத்தை சொல்வது ?
அதற்கான வழிமுறைகள் என்ன ?

டேனியல்: ஒரு இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவனுக்கு,கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத குடும்ப உறுப்பினர்கள்,நண்பர்கள் உடன் பணிபுரிகிறார்கள் அல்லது தெரிந்தவர்கள் நிச்சயம் இருப்பாங்க....

பால்ராஜ்: நமக்கு தெரியாதவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிப்பது நமக்கு எளிதாக உள்ளது ஆனா நமக்கு தெரிந்தவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிப்பது சிறிது கஷ்டமான காரியமாக அதுவும் உறவினருக்கு
நாம் சுவிசேஷத்தை அறிவிப்பது இன்னும் கொஞ்சம் கடினமான காரியமா இருக்கு... சிலர் சுவிசேஷத்தின் நிமித்தம் இடறல் அடைவார்கள் என்று வேதம் சொல்லுகிறது (லூக்கா 12:51–53). ஆனாலும், சுவிசேஷத்தை அறிவிக்க நமக்கு கட்டளை இடப்பட்டிருக்கிறது, மற்றும் சாக்கு போக்கு சொல்ல நமக்கு இடமில்லை (மத்தேயு 28:19–20; அப்போஸ்தலர் 1:8; 1 பேதுரு 3:15).

டேனியல்: ஆமா ! பால்ராஜ் ! கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத,
நமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடன் பணிபுரிகிறார்கள் ஆகியவர்களுக்கு நாம் சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு முன் நாம் அவர்களுக்காக ஜெபிப்பதே நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியம் ஆகும்.

பால்ராஜ்: சரியாக சொன்ன நண்பா!
தேவன் அவர்கள் இருதயங்களை மாற்றவும் அவர்கள் கண்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கு திறக்கப்படுவும் முதலில் நாம்
ஜெபிக்க வேண்டும்.....
(2 கொரிந்தியர் 4:4). தேவனின் அன்பை அவர்கள் அறிந்து கொள்ளவும் இயேசு கிறிஸ்து மூலமாக அவர்கள் இரட்சிப்படையவும் வேண்டும் என்று அவர்களுக்கு தேவன் உணர்த்தும்படி ஜெபிக்க வேண்டும் (யோவான் 3:16).

டேனியல்: அதுமட்டுமல்ல நாம்
அவர்கள் மத்தியில் ஞானத்தோடு செயல்பட வேண்டும்,சுவிசேஷம் சொல்ல நாம் வாஞ்சை உள்ளவர்களாக மற்றும் தைரியமும் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.....

பால்ராஜ்: “ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே(கேட்கிறதுனாலே)
வரும்,கேள்வி (கேட்கிறது)
தேவனுடைய வசனத்தினாலே வரும்”
(ரோமர் 10:17).#faith comes by #hearing
தேவனுடைய வசனங்களை எவர்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்களோ,
அவர்களுக்கு விசுவாசம் வந்துவிடும்,
அவர்களும் நம்மைபோல் விசுவாசிகளாக மாறிவிடுவார்கள்...
எனவே நமது #வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தைகளும் #தேவனுடைய வசனத்தின் #பிரதிபலிப்பாக இருக்க வேண்டும்

டேனியல்: ஆமா,இயேசு கிறிஸ்துவின் மூலமாகத்தான் இரட்சிப்பு கிடைக்கிறது  எனவே அதற்கு வேதம் போதிக்கும் முறையை நாம் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்
(ரோமர் 10:9–10).

பால்ராஜ்: அதோடு கூட நமது கிறிஸ்தவ விசுவாசத்தை அவர்களிடம் தன்மையாகவும்,மரியாதையோடும் பேச நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.....(1 பேதுரு 3:15).

டேனியல்: அவர்களுக்காக ஜெபிப்பதும் மற்றும் சுவிசேஷம் அறிவிப்பதோடு மட்டுமல்ல நமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்பதாக நாம் தேவ அன்போடு,சமாதானத்தோடு,
நீதியோடு,நேர்மையோடு,
பரிசுத்தோடு நடப்பதும் மிக முக்கியம், ஏனென்றால், தேவன் நமது வாழ்கையில் செய்த மாற்றங்களை அவர்கள் பார்ப்பார்கள்.....

பால்ராஜ்: ஆம் அவைகள் மிகவும், முக்கியம்,நமது வாயில் வசனத்தை பேசுவது மட்டுமல்ல,நமது செயல்பாடுகளும் வசனத்தின் பிரதியாக கட்டாயம் இருந்தே ஆக வேண்டும்... முடிவாக,நாம் நேசிப்பவர்களின் இரட்சிப்பை தேவனின் கரத்தில் நாம் அர்ப்பணிப்போம், நமது பிரயாசங்களோ நமது முயற்சிகளோ அல்ல, தேவனின் அன்பு, வல்லமை மற்றும் கிருபை மட்டுமே ஜனங்களை இரட்சிக்கும்,நாம் அவர்களுக்காக செய்யும் சிறந்த காரியமாய் இருப்பது என்னவென்றால் அவர்களின் இரட்சிப்புக்காக ஜெபிப்பது,
திருவசனத்தை சரியாக போதிப்பது, சாட்சியாய் வாழ்வது மட்டும்தான்....
மற்றவைகளை தேவ ஆவியானவர் பார்த்துக்கொள்வார்.... விரைவில் அவர்களும் நம்மை போல் இரட்சிப்பை அடைவார்கள்...... என்பது நிச்சயம்...

ஆமென்... அல்லேலூயா....

*********************************
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome

marveljerome.blogspot.in

Tuesday 20 September 2016

பரமண்டல ஜெபம் நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதற்கான இயேசு கற்றுக்கொடுத்த ஒரு மாதிரி முறையா ? இல்லை மந்திரம் போல் நாம் தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டிய மனப்பாட முறையா ?

#பரமண்டல ஜெபம் நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதற்கான இயேசு கற்றுக்கொடுத்த ஒரு மாதிரி முறையா ? இல்லை மந்திரம் போல் நாம் தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டிய மனப்பாட முறையா ?

டேனியல்: பரமண்டல ஜெபம் என்பது இயேசு தமது சீஷர்களுக்கு (நமக்கு) கற்றுகொடுத்த ஜெபமாகும்
(மத்தேயு 6:9-13 மற்றும் லூக்கா 11:2-4).

மத்தேயு 6:9-13 சொல்லுகிறது......

“பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்.”

பீட்டர்: அநேகர் இந்த ஜெபத்தை நாம் மனப்பாடம் செஞ்சு அத அப்படியே சொல்லி ஜெபிக்கனும் என்று தவறாக புரிஞ்சுகிட்டு இருக்காங்க....
அதனால பலர் பரமண்டல ஜெபத்தை ஒரு மந்திரம்  போல நினைத்து அதை திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டே இருக்கிறாங்க... இப்படி செஞ்சா அவங்க ஜெபம் நிறைவாகிடுமுனு நெனைக்கிறாங்க....

டேனியல்: ஆமா ஆனா அவங்க நெனப்புக்கு  எதிர் மாறாக வேதம் நமக்கு இவ்வாறு கற்றுக்கொடுக்கின்றது.....
அதாவது நாம் ஜெபம் செய்யும்போது, தேவன் நமது வார்த்தைகளில் கவனம் செலுத்துவதைவிட, நாம் இருதயத்தையே கவனிக்கிறார் (மத்தேயு 6:6-7).ஜெபிக்கும்போது,
நமது இருதயத்தை தேவனிடம் ஊற்ற வேண்டும் (பிலிப்பியர் 4:6-7),
மனதில் ஏதாவதை நினைத்து கொண்டு வெறுமனே  மனப்பாடம் செய்து தேவனிடம் ஒப்பிக்கப்படுர  வார்த்தைகள் பிரயோஜனமற்றது..
அது ஒன்றுக்கும் உதவாது....

பீட்டர்: அதனால குழந்தைகளுக்கு
பரமண்டல ஜெபத்தை மனப்பாடம் செய்ய சொல்லி கொடுக்க வேண்டாமுனு,நாம் சொல்ல கூடாது
தேவனுடைய வார்த்தைகளை அவர்களது மனதில் விதைக்க வேண்டும்.. அது மிக அவசியமே ஆனால் மனப்பாடம் செய்து சொல்வது,
வாசிப்பது இவைகள் ஜெபம் என்று வேதம் போதிக்கவில்லை.....

பரமண்டல ஜெபம் நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதற்க்கான ஒரு மாதிரி வடிவம்... நமது ஜெபத்தில் இருக்க வேண்டிய “பொருட்களை” அது காட்டுகிறது.

டேனியல்: சரியான சொன்ன நண்பா! இதை பற்றி நான் கொஞ்சம் விரிவாக சொல்றேன்.....கவனி....

1)“பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே” என்பது நாம் யாரிடம் ஜெபம் செய்யவேண்டும் என்று சொல்லுகிறது—பிதாவானவரிடம்.

2)“உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக”—இது நாம் தேவனை துதித்து ஆராதிக்க வேண்டும் என்று சொல்லுகிறது.

3)“உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்ற வார்த்தைகள் நாம் நமது வாழ்கையில் மற்றும் உலகத்தின் மேல், நம் திட்டங்கள் அல்ல, தேவன் வைத்துள்ள திட்டங்கள் நடக்கும்படி ஜெபிக்க வேண்டும் என்று நமக்கு ஞாபகப்படுத்துகிறது.

4)“எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” நமது தேவைக்கு தேவனிடம் கேட்க வேண்டும் என்று உணர்த்துகிறது

5)“எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” என்ற வார்த்தைகள் நமது பாவங்களை தேவனிடம் அறிக்கை செய்ய வேண்டும் என்றும் நாம் மற்றவர்களை மன்னிக்க வேண்டும் என்றும் சொல்லுகிறது.

6) ஜெபத்தின் முடிவில் இருக்கும்
இந்த வார்த்தைகள் “எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்,” நாம் பாவத்தின் மேல் வெற்றி அடையும்படி தேவனின் உதவிக்காக மற்றும் பிசாசின் தாக்குதல்கள் அனுகாமல் பாதுகாப்பிற்காக தேவனிடம்  வேண்டுதல் செய்ய வேண்டும் என்று சொல்கிறது..

இப்படியாக, பரமண்டல ஜெபம் என்பது ஏதோ மனப்பாடம் செய்து தேவனிடம் ஒப்புவிக்கின்ற ஒன்று அல்ல. அது நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதற்கு இயேசு கற்றுக்கொடுத்த மாதிரி முறை  ஆகும்...

*********************************
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome

marveljerome.blogspot.in

facebook.com/LIVINGWAYMARVEL



Sunday 18 September 2016

கிறித்தவர்கள் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டிருக்க வேண்டுமா ? இல்லை புதிய ஏற்பாட்டு கிறிஸ்துவின் பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டிருக்க வேண்டுமா ?

#கிறித்தவர்கள் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டிருக்க வேண்டுமா ?
இல்லை புதிய ஏற்பாட்டு கிறிஸ்துவின் பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டிருக்க வேண்டுமா ?

ஜான்: பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் இஸ்ரவேல் தேசத்தாருக்கு அளிக்கப்பட்டதேயன்றி கிறிஸ்தவர்களுக்கல்ல என்பதை அறிந்து நாம் கொள்ளவேண்டும்.
அதுமட்டுமல்ல நியாயப்பிரமாணம் கிறித்தவர்களுக்கு பிரயோஜனமற்றது
என்று சொல்வது தவறு....

பீட்டர்: ஆமா ! கிறிஸ்துவுக்குள் நாம் இன்று நியாயப்பிமாணத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல...என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்....
நியாயப்பிராமாணம் இஸ்ரவேல் மக்களுக்கு கொடுக்கப்பட்ட பிரமாணம்.சில சட்டங்கள் இஸ்ரவேல் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிந்து பிரியப்படுத்த வேண்டுமென்பதை விளக்குவதாயும் சில சட்டங்கள் இஸ்ரவேல் எவ்வாறு தேவனை ஆராதிக்க வேண்டும் என்பதைக் காட்டுவதாகவும்,பாவ நிவர்த்திக்கான வழியை விளக்குவதாகவும் இருக்கின்றன (பலிகள் பற்றிய ஒழுங்கு).மேலும், சில சட்டங்கள் இஸ்ரவேலரை மற்ற நாடுகளிலிருந்து வேறுபடுத்திக் காண்பிக்க ஏற்படுத்தப்பட்டன (உணவு மற்றும் உடைகள் சார்ந்த சட்டங்கள்). ஆனால் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம்  இன்று கிறித்தவர்களாய் இருக்கிற நம்மைக் கட்டுப்படுத்துகிறதில்லை.

ஜான்: ஆமா! இயேசு சிலுவையில் மரித்த போது, பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். (ரோமர் 10:4; கலாத்தியர் 3:23-25; எபேசியர் 2:15).

பீட்டர்:ஆம், நாம் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்திற்கு பதிலாக,
கிறிஸ்துவின் பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிருக்கிறோம் (கலாத்தியர் 6:2),
அதாவது

1)#உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக...

2)#உன்னிடத்தில் நீ அன்பு கூருவது போல பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக” (மத்தேயு 22:37-39).
நாம் இந்த இரண்டு கற்பனைகளுக்கு கீழ்ப்படிந்தால், கிறிஸ்து நம்மிடம் எதிர்பார்க்கும் அனைத்தையும் நிறைவேற்றி விடுகிறோம்......

ஜான்:ஆமா சரிதான்,
“இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது” (மத்தேயு 22:40).

பீட்டர்: ஆமா நண்பா,இருப்பினும் இன்றைய காலகட்டத்துல பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் பிரயோஜனமற்றது என்று சிலர் எண்ணுகிறார்கள்,அவங்கல போல நாமும் எண்ணிவிடக் கூடாது.

ஜான்: ஆமா பீட்டர்,ஒரு
சிலர் அவ்வாறு தான் நெனைக்கிறாங்க,ஆனால் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தின் பெரும்பாலான கட்டளைகள் “தேவனிடத்தில் அன்புகூருவாயாக” மற்றும் “பிறனிடத்தில் அன்புகூருவாயாக” என்ற இரண்டு கட்டளைகளில் அடங்கி விடுகின்றன,இது அவர்களுக்கு விளங்கவில்லை....அதுனால தான் அவங்க பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் பிரயோஜனமற்றதுனு நெனைக்கிறாங்க.....

பீட்டர்: நாம் தேவனிடத்திலும் பிறரிடத்திலும் எவ்வாறு அன்புகூர வேண்டுமென்பதை நன்கு விளக்குகிற ஒரு #வழிகாட்டியே #பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம்.ஆனால் இன்றைய கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவர்கள் என்று சொன்னால் அது தவறு. நியாயப்பிரமாணத்தின் ஒரு சில சட்டங்கள் இன்று நமக்குப் பொருந்தும் என்று சொல்வதும் தவறு. ஏனென்றால் கிறிஸ்துவானவர் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணமத்தின் அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றினார்......

ஜான்: ஆமா நண்பா! நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் #பாரமானவைகளுமல்ல
(1 யோவான் 5:3).பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணமத்தின் இரத்தினச்சுருக்கமே பத்துக் கட்டளைகள்.

#பத்துக் கட்டளைகள் #புதிய ஏற்பாட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது

நாம் தேவனில் அன்புகூருவோமானால் நிச்சயமாகவே நாம் அன்னிய தேவர்களை வணங்கவோ விக்கிரங்களுக்கு முன்பாக தலை வணங்கி நிற்கவோ மாட்டோம். இதே போல, நாம் பிறரை நேசிப்போமானால் சக மனிதர்களுக்கு விரோதமாக கொலை, பொய், விபச்சாரம், பொருள் அபகரிப்பு போன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம்.

பீட்டர்: 100% கரைக்ட் ஜான்.....
பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தின் பிரதான நோக்கமாவது நம்மால் நியாயப்பிரமாணத்தை கடைபிடிக்க முடியாதென்பதை உணர்த்தி நமக்கு இயேசு கிறிஸ்து என்ற இரட்சகர் தேவை என்பதை விளக்குவதேயாகும்
(ரோமர் 7:7-9; கலாத்தியர் 3:24).

ஜான்: பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் ஒருபோதும் உலகாளவிய அளவில் எல்லா மக்களுக்கும் எல்லா கால கட்டத்திற்கும் உகந்த ஒரு சட்டமாக தேவனால் நியமிக்கப்படவில்லை......
 நாம் தேவனையும் பிறரையும் நேசிக்கவேண்டும். இவ்விரண்டு கட்டளைகளையும் உண்மையாகக் கடைபிடிப்போமானால் நிச்சயமாகவே தேவன் நம்மிடத்திலிருந்து எதிர்பார்க்கிற அனைத்தையும் நாம் நிறைவேற்றிவிடுவோம்.... எனவே புதிய உடன்படிக்கையின் கீழ் புது சிருஷ்டியாக ஆக்கப்பட்ட நாம் கிறிஸ்துவின் பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டிருக்க வேண்டும் என்பதே புதிய ஏற்பாட்டின் சாராம்சம்....

*********************************
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome

marveljerome.blogspot.in

facebook.com/LIVINGWAYMARVEL

Tuesday 13 September 2016

மரணத்திற்குப்பின் மனிதனுக்கு நடப்பது என்ன?

மரணத்திற்குப்பின் மனிதனுக்கு
நடப்பது என்ன?

டேனியல்: மரணத்திற்குப்பின்
மனிதனுக்கு நடப்பது என்ன என்பது குறித்து கிறிஸ்தவ மக்களிடையே கொஞ்சம் குழப்பமே நிலவி வருது,இது பத்தி கிறித்தவ விசுவாச அடிப்படையில வேதாகம ஆதாரத்தோட இன்று  பார்ப்போம்மா ?

பீட்டர்: கண்டிப்பா நண்பா,அதுக்கு முன்னாடி, மரணத்திற்குப்பின்
நடப்பது குறித்து கிறித்தவர்கள்
எந்தந்த மாதிரியான நம்பிக்கை வச்சுருக்காங்கனு பார்ப்போம்....

டேனியல்: ஆமா,முதலில் அதை பாத்துட்டு அது கிறித்தவ விசுவாச அடிப்படையில் ஒத்துப்போகிறதானு நிதானிச்சுட்டு,இயேசு கிறிஸ்து மற்றும் அப்போஸ்தர்களின் உபதேசங்களின் அடிப்படையில் முடிவு எடுப்போம்.

பீட்டர்: ஓகே.. நண்பா!

1)சில கிறித்தவர்கள் மரணத்திற்குப்பின் கடைசி நியாயத்தீர்ப்பு வரை எல்லோரும் "நித்திரையடைகிறார்கள்" அதன்பின்பு பரலோகத்திற்கோ நரகத்திற்கோ அனைவரும் அனுப்படுவார்கள் என்று கருதுகிறார்கள்

2)வேறு சில கிறித்தவர்கள்
மரிக்கும் தருணத்தில்தானே மனிதர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு தங்களது நித்திய குடியிருப்புக்கு அனுப்பப்படுகிறார்கள் என்று நம்புகிறார்கள்.

3)இன்னும் சில கிறித்தவர்கள், மனிதர்கள் இறக்கும்போது கடைசி உயிர்த்தெழுதலுக்கும் கடைசி நியாயத்தீர்ப்பிற்கும்,இறுதியாக, தங்கள் நித்திய குடியிருப்புக்கும் காத்திருக்கும்படி ஒரு"தற்காலிகமான" பரலோகத்திற்கோ நரகத்திற்கோ அனுப்படுகிறார்கள் என்று நம்புகிறார்கள்,

4) மேலும் சிலர்,மனிதர்கள் மரணத்திற்குப் பின்
பரலோக சந்தோஷத்துக்குள்
நுழையும்படியான பரிசுத்தம்
அடையும்படியாக,கடைசி
நேர சுத்திகரிப்புக்காக
உத்தரிக்கும் ஸ்தலம் என்னும்
இடத்தில் காத்திருப்பதாகவும்,
அவர்களுக்காக அவர்களின் உறவினர்கள்,நண்பர்கள்
பிரத்தனை செய்தால் அவர்கள் பரலோகம் அடைவார்கள் என்று நம்புகிறார்கள்.

டேனியல்: சரி,இப்ப கிறித்தவ விசுவாச அடிப்படையில் மரணத்திற்குப்பின் மனிதனுக்கு நடப்பது என்ன
என்பதைக் குறித்து பார்ப்போமா ?

பீட்டர்: கண்டிப்பா முதலாவது,
இயேசு கிறிஸ்துவில் விசுவாசம், நம்பிக்கை கொண்டவர்களைப் பற்றி வேதாகமம் நமக்குச் சொல்லுகிறது (யோவான் 3:16,18,36) மரணத்திற்குப்பின் விசுவாசிகளுடைய ஆத்துமா/ஆவி பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
ஏனென்றால்,கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டிருப்பதினால் அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளன.

டேனியல்: ஆமா இதுபற்றித்தான் நாம் (2கொரிந்தியர் 5:6-8 பிலிப்பியர் 1:23)
வாசிகிறோமே ! "இந்த தேகத்திவிட்டு  குடிபோகவும், கர்த்தரிடத்தில் குடியிருக்கவும்"என்றுள்ளதே " அதுமட்டுமல்ல அப்போஸ்தலனாகிய பவுலும் இதை பிலிப்பியர் 1:23-24 ல்
சற்று தெளிவாக எழுதுகிறார்

"ஏனெனில் இவ்விரண்டினாலும்
நான் நெருக்கப்படுகிறேன்; தேகத்தைவிட்டுப்பிரிந்து, #கிறிஸ்துவுடனேகூட #இருக்க
எனக்கு ஆசையுண்டு, அது
அதிக நன்மையாயிருக்கும்;
அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்." என்று பிலிப்பிய விசுவாசிகளுக்கு எழுதுகிறார்.
இதிலிருந்து மரணத்திற்குப்பின் விசுவாசிகளுடைய ஆத்துமா/ஆவி பரலோகத்தின் தேவனாகிய இயேசு கிறிஸ்துவிடம் செல்கிறது என்று நாம் பார்க்கிறோம்.....

பீட்டர்: ஆனால்,1கொரிந்தியர் 15:50-54
மற்றும் 1தெசலோனேக்கியர் 4:13-17 போன்ற வேதபகுதிகள் விசுவாசிகள் மறுபடி எழுந்திருப்பதையும் மகிமையின் தேகம் அவர்களுக்கு  கொடுக்கப்படுவதையும் பற்றி விவரிக்கிறதே ? விசுவாசிகள் மரித்தவுடனே கிறிஸ்துவோடுகூட இருக்கச் செல்வார்கள் என்றால், இந்த எழுந்திருக்குதலின் நோக்கம் என்ன?

டேனியல்: சொல்கிறேன் நண்பா, மரித்தவுடன் விசுவாசிகளின்
ஆத்துமா/ஆவி கிறிஸ்துவுடனே இருக்கச் செல்லுகிறது,மாம்சசரீரம் கல்லறையில் "நித்திரையில்"
இருக்கும்,விசுவாசிகளின் எழுந்திருக்குதலின்போது மாம்சசரீரமானது உயிர்த்தெழப்பட்டு, மகிமையடைந்து பின்பு
ஆத்துமா/ஆவியுடன் மறுபடி இணைக்கப்படுகிறது.மீண்டுமாய் இணைக்கப்பட்ட இந்த மகிமையின் ஆவி ஆத்துமா சரீரமே புதிய வானமும் புதிய பூமியும் உண்டாகும்பொழுது விசுவாசிகள் சுதந்தரித்துக்கொள்ளும் நித்திய சொத்தாயிருக்கும் (வெளிப்படுத்தின விசேஷம் 21-22).

பீட்டர்: நன்றாக புரிகிறது
டேனியல்,இது இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுக்கு மரணத்திற்குப்பின் நடக்கப்போகிற காரியம் சரி ஆனால் இயேசுவை நம்பாத விசுவாசிக்காத,அவரை ஏற்றுக்கொள்ளாத மக்களுக்கு மரணத்திற்குப்பின் என்ன நடக்கும் ?

டேனியல்: சொல்கிறேன் நண்பா!இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்காத அவரை இரட்சகராக ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு
மரணம் என்பதன் பொருள் நித்திய ஆக்கினை.ஆனாலும்,விசுவாசிகளுக்கு நடப்பதைப்போலவே,அவிசுவாசிகளும் தங்களுடைய கடைசி உயிர்த்தெழுதலுக்கும், நியாயத்தீர்ப்பிற்கும்,நித்தியமாக வாழும்நிலைக்கும் காத்திரும்படி ஒரு தற்காலிகமான ஒரு குடியிருப்புக்கே அனுப்பப்படுகிறார்கள் என்று
லூக்கா 16:22-23ன் படி நாம்
பார்க்க முடியும்....

பீட்டர்: ஓ... இப்போ எனக்கு நன்றாக புரிகிறது ! ஐசுவரியமுள்ள மனுஷன் மரித்தவுடனே வேதனைக்குள்ளாகிறதாக வசனம்  கூறுகிறது. ஆனால் வெளிப்படுத்தின விசேஷம் 20:11-15 மரித்த #அவிசுவாசிகள் அனைவரும் #உயிர்தெழப்பட்டு,வெள்ளைச் சிங்காசனத்தின் முன் நியாயந்தீர்க்கப்பட்டு பின்பு #அக்கினிக்கடலிலே தள்ளப்படுவதாக வேதம் விவரிக்கிறது.

டேனியல்: ஆமா நண்பா! அவிசுவாசிகள் மரித்தவுடனேயே நரகத்திற்கு (அக்கினிக்கடல்) அனுப்பப்படுவதில்லை பதிலாக நியாயத்தீர்ப்பிற்கும் தண்டனைக்குமெனெ ஒரு தற்காலிகமான இடத்தில் இருக்கிறார்கள்.அவிசுவாசிகள் உடனடியாக அக்கினிக்கடலுக்கு அனுப்பப்படவில்லை என்றாலும் அவர்களின் மரணத்திற்கு அடுத்த நிலை இன்பமாக இருக்கப்போவது இல்லை.....

"இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே"(லூக்கா 16:24) என்றுதான் அந்த ஐசுவரியமுள்ள மனுஷனும் கூப்பிட்டான்.

பீட்டர்: மரணத்திற்குப் பின்பு,
ஒரு மனிதர் ஒரு "தற்காலிகமான" பரலோகத்திலோ, நரகத்திலோ வசிக்கிறார். இந்த தற்காலிகமான இடத்திற்குப்பின் கடைசி உயிர்தெழுதலின்போது அவருடைய நித்தியமாக வாழும் நிலையில் மாற்றம் இருக்காது. நித்தியமாக வாழும்படி குறிப்பிடப்படும் "இடத்தில்" மட்டுமே மாற்றம் இருக்கும்.

டேனியல்: ஆமா,விசுவாசிகள்
புதிய வானத்திலும் புதிய பூமியிலும் நுழையும்படி இறுதியாக அனுமதி பெறுவார்கள் (வெளிப்படுத்தின விசேஷம் 21:1). அவிசுவாசிகள் அக்கினிக்கடலுக்கு இறுதியாக அனுப்பப்படுவார்கள் (வெளிப்படுத்தின விசேஷம் 20:11-15).இதுவே மனிதர்களின் இறுதியான, நித்தியமான குடியிருப்பு....

பீட்டர்: இவைகள் அவர்கள் இரட்சிப்பிற்காக இயேசு கிறிஸ்துவில் மீது மாத்திரம் நம்பிக்கை கொண்டிருந்தார்களா என்பதை மட்டுமே பொறுத்து அமைகிறது....

*********************************

நன்றி மீண்டும் சந்திப்போம்.....

"இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; இயேசுவை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்"
(யோவான் 3:36)

*********************************
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome

marveljerome.blogspot.in

facebook.com/LIVINGWAYMARVEL