Wednesday 10 August 2016

#இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை என்று இயேசு சொன்ன அந்த கல் யார் ?

பீட்டர்: அப்போஸ்தலர்களுக்கு வாரிசுகள் இருக்கிறார்கள் மற்றும் தெய்வீக நியமிப்பினால் அவர்களுக்கு அதிகாரம் கடத்தப்படுகிறது என்ற கொள்கை,ரோமன் கத்தோலிக்க மதத்தில் உள்ளது....

அந்தோனி: ஆமா இப்ப யாரு அத இல்லைனு சொன்னா !

பீட்டர்: திருச்சபையின் உள்ள
ஆயர்கள், பேராயர்கள் அப்போஸ்தலரின் வாரிசுகள் என்றும் #போப் #பேதுருவின் வழிவந்தவர் என்றும் கத்தோலிக்க மக்கள் மத்தியில் போதிக்கப்படுகிறது,எல்லா கத்தோலிக்கர்களும் இவைகளை நம்புகிறார்கள்

அந்தோனி:ஆமாப்பா,நானும் அவைகளை நம்புறேன்...

பீட்டர்: ஆனால் நீ நம்புவது வேதாகம உபதேசம் அல்ல

அந்தோனி: நீ என்ன சொல்ற பீட்டர் ?
மத்தேயு 16:18 வசனத்தை வாசித்து
பார்.......
"மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை"
அந்த கல் பேதுருதான்,அவரே ரோமன் கத்தோலிக்க தாய் திருச்சபைக்கு மூலைகல்லாகவும்,அவரின் வழிவந்த போப்பாண்டவரே தலைக்கல்லாகவும் இருக்கிறார்..இது கூட உனக்கு தெரியாதா ?

பீட்டர்: நீ சொல்வது தவறு அந்தோனி
நீ வசனத்திற்கு தவறான விளக்கம் கொடுக்கிறாய்...

ஏனென்றால் அதற்கு அடுத்ததாக வரும் வசனத்தில் அதாவது மத்தேயு 16:23-ல் இயேசு இவ்வாறு சொல்கிறார்......

"இயேசுவோ திரும்பிப்"பேதுருவைப் பார்த்து":எனக்குப் பின்னாகப்போ, "சாத்தானே", நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்."

அப்ப இந்த இடத்தில் பேதுருவை இயேசு,சாத்தான் என்று சொன்னதால்,
பேதுருதான் "சாத்தான்"என்று நீ சொல்லுவாயா ?

அந்தோனி :சொல்ல மாட்டேன்

பீட்டர்: ஏன் அந்தோனி மத்தேயு 16:18யை பற்றி பேசும் நீ ஏன் மத்தேயு 16:23 யை பற்றி பேச மறுக்கிறாய் ?

மத்16:23 ல் தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்தித்து, இயேசுவுக்கே இடறலாயிருந்த பேதுரு தான்,ரோமன் கத்தோலிக்க தாய் திருச்சபைக்கு தலைவர்,
அவரின் வாரிசுகள் தான்
எங்கள் ஆயர்களும்,குருக்களும்
என்று உன்னால் சொல்ல முடியுமா ?
இயேசுவே நேரடியாக "சாத்தானே" என்று சொன்ன பேதுருவின் வழிவந்த போப்பாண்டவர் தான் எனது
சபையின் தலைவர் என்று நீ சொல்வாயா ? பதில் சொல் அந்தோனி

அந்தோனி:(ஒன்றும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார்)

பீட்டர்: உண்மையில் இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன் என்று இயேசு சொன்ன அந்த "கல்லும்" பேதுரு இல்லை  எனக்குப் பின்னாகப்போ, "சாத்தானே"
இயேசு சொன்ன அந்த சாத்தனும் பேதுரு இல்லை.....வேதாகமத்தை சரியாக படித்து, தேவ ஆவியின் துணைகொண்டு வாசித்து
இயேசு கிறிஸ்து யாரை கல் என்றும்,எந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன் என்று கூறினார் என்பதை அறிந்து கொள்ளவேண்டும்..

அந்தோனி: சரி பீட்டர் நான் அறிந்து கொள்கிறேன்,எனக்கு வசனத்தின் படி விளக்கம் கொடு... யார் அந்த கல் ?
எந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன் என்று இயேசு கூறினார்.

பீட்டர்: சரி விளக்குகிறேன்,
சத்தியத்தை கவனி.....

(மத்தேயு 16ம் அதிகார சூழலை கவனிக்கையில் [வசனங்கள் 13-16,20] இந்த உரையாடல் இயேசுவை யார் என்று அடையாளங்கண்டு கொள்வதை மையமாகக் கொண்டிருக்கிறது.)

பரிசேயரும்,சதுசேயரும் இயேசுவை வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும்,
என்கிறார்கள்,இயேசும் அவர்களுக்கு தக்க பதில் அளித்துவிட்டு,அக்கரை சென்று தம் சீஷர்களுக்கு உபதேசித்துவிட்டு,அவர்களை நோக்கி ஜனங்கள் என்னை  யார்? என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன்,எலியா என்றும் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்...பேதுருவோ "நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து"என்றான், பிதா உனக்கு இதை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று கூறிவிட்டு அதற்கு பின் மத்தேயு 16:18 வசனத்தில்..................
"நான் உனக்குச் சொல்லுகிறேன்,
நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்;பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை

இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன் என்று இயேசு தன்னை குறித்தே சொன்னார்....

அந்தோனி:அப்ப, பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை,
என்கிறாரே அதற்கு அர்த்தம் என்ன ?

பீட்டர்: இயேசுவை பாதாள வாசல்  மேற்கொள்ள முடியவில்லை ,
அவர் பாதாளத்திலிருந்து உயிர்த்து எழுந்தார்.

அந்தோனி: அப்ப மத்தேயு 16:18 வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும்
அந்த கல் அப்போஸ்தலராகிய
பேதுரு இல்லயா ?

பீட்டர்: ஆமா,அப்போஸ்தலராகிய பேதுருவும் பவுலும் யாரைக் “கல்” எனவும் “மூலைக்கல்” எனவும் புரிந்துகொண்டார்கள்,போதித்தார்கள் என்று வசனத்தின் படி பார்ப்போமா அந்தோனி ?

அந்தோனி: பார்ப்போம் நண்பா !  சத்தியத்தை அறிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன் சொல்....

பீட்டர்: கத்தோலிக்கமே! கர்த்தருடைய வசனத்திற்கு செவிகொடு !

"உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும்,தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானென்று உங்களெல்லாருக்கும், இஸ்ரவேல் ஜனங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கக்கடவது.வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்கு #தலைக்கல்லானவர்.
(அப்போஸ்தலர் 4:10-11)

மனுஷரால் தள்ளப்பட்டதாயினும்,
தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற #ஜீவனுள்ள #கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்,
ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.
அந்தப்படியே: இதோ, தெரிந்து கொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற #மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.
ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான #மூலைக்கல்லாகிய #அந்தக்கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று;
(1 பேதுரு 2:4-7)

என்று அப்போஸ்தலராகிய பேதுரு
இயேசு தான் அந்த கல் என்று வெளிப்படையாக போதிக்கிறார்

அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே #மூலைக்கல்லாயிருக்கிறார்;
(எபேசியர் 2:20 )

என்று அப்போஸ்தலராகிய பவுல்
இயேசு தான் அந்த கல் என்று வெளிப்படையாக போதிக்கிறார்.

அந்தோனி: அடப்பாவிகளா ?
இவ்வளவு வசனங்களும் பைபிளில் தான் இருக்கா ?

பீட்டர்: ஆமா,அந்தோனி,

இயேசுவே சபையாகிய கல்,
கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நம்மை ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாக்கி,
தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாக கட்டியிருக்கிறார்.
பாதளத்தின் வாசல்கலால் மேற்கொள்ள முடியாத, சீயோனின் ஜீவ கல்,
அவரே மூலைக்கல்,அவரே தலைக்கல்....

அந்தோனி: அப்ப போப்பாண்டவர் ?

பீட்டர்:(சிரித்துக்கொண்டே)
 போ அந்தோனி கமெடி பண்ணாத
போய் வேதாகமத்தை எடுத்து படி,
தேவ ஆவியானவர் உதவியை நாடு,
அவர் உனக்கு எது சத்தியம் என்பதை தனது வசனத்தினால் போதிப்பார்..

அந்தோனி: சரி நண்பா, நீ சொன்ன
படி செய்கிறேன், அப்பரம் இன்னோரு சந்தேகம்,

மத்தேயு 16:19-ல் இயேசு பேதுருவை பார்த்து.......
"பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்;பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.

பரலோகராஜ்யத்தின் திறவுகோல் என்றால் என்ன ? அது பேதுருவுக்கு எப்படி கொடுக்கப்பட்டது ? பூலோகத்தில்,பரலோகத்தில்
கட்டுவது, கட்டவிழ்ப்பது இதல்லாம் என்ன இதற்கு வேதாகம சத்திய விளக்கங்களை எனக்கு நாளை போதிக்கிறாயா நண்பா ?

பீட்டர்: நிச்சயம் நாளை உனக்கு போதிக்கிறேன்,அந்தோனி..
சரி மீண்டும் சந்திப்போம்.

marveljerome.blogspot.in