Tuesday 17 November 2015

ஆகஸ்ட் 15

ஆகஸ்ட் 15 அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழா
=============================

பீட்டர்: என்ன அந்தோனி உங்க கோயில்ல என்ன விஷேசம்? நெறய கூட்டம் இருக்கு மக்களெல்லாம் பொங்கல் வச்சுகிட்டு இருக்காங்க

அந்தோனி: இன்னைக்கு ஆகஸ்ட் 15 அன்னை மரியாள்  உடலோடும் ஆன்மாவோடும் விண்ணேற்றம் அடைந்த நாள் அதான் இவ்வளவு கூட்டம்

பீட்டர்: நீ என்ன சொல்ற ! அன்னை மரியாள் உடலோடும்... ஆன்மாவோடும் விண்ணேற்றமா? இதல்லாம் பைபிள்ல எங்க இருக்கு அந்தோனி ?

அந்தோனி: பைபிள்ல இல்லாமலா எங்க சர்ச்சுல இந்த நாளை கொண்டாடுவாங்க? இது பற்றி கண்டிப்பா பைபிள்ல இருக்கும்

பீட்டர்: நீ சொல்றது மாதிரி பைபிள்ல ஆதியாகமம்5:24 ல் ஏனோக்கு விண்ணேற்றம் பற்றியும், 2இராஜாக்கள்2:11 ல் எலியா விண்ணேற்றம் பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது
கடைசியாக
மாற்கு16:19, லூக்கா 24: 51
 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரமேறுதல் பற்றி தான் எழுதப்பட்டிருக்கிறது...
மரியாளின் விண்ணேற்றம் பற்றி வேதத்தில் எங்கயும் எழுதப்படல அந்தோனி

அந்தோனி: வேதத்தில் எழுதப்படலேனா என்னப்ப?  ஒருவேளை மரியாளின் உடலோடு விண்ணேற்றம் அடைந்து உண்மையா கூட  இருக்கலாம்ல ?

பீட்டர்:1கொரிந்தியர்:4-6 ல்
"எழுதப்பட்டதிற்கு மிஞ்சி எண்ணவேண்டாம்"
என்று எழுதியிருக்கு..
அப்பரம்(யோவான்:17-17)
"தேவனுடைய வசனமே சத்தியம்"என்று எழுதியிருக்கு, அந்த சத்திய வசனத்தில் அன்னை மரியாளின் விண்ணேற்றம் பற்றி இல்லவே இல்லை,அந்தோனி நீ எதை நம்ப போற எதை விசுவாசிக்கப்போற ?

அந்தோனி:(சிந்தித்துக்கொண்டே)
பைபிள்ல உள்ள தேவனுடைய வார்த்தைகள் மட்டுமே சத்தியம்.எனவே நான் அதை மட்டும் தான் நம்பப்போறேன், விசுவாசிக்கப்போறேன்,
ஏனென்றால் யோவான்12:48-ன்படி நியாயத்தீர்ப்பில் தேவனுடைய வார்த்தைகள் தான் நம்மை நியாயம் தீர்க்கப்போகிறது  

பீட்டர்: சூப்பர், இதைத்தான் தேவன் எல்லாரிடமும் எதிர்பார்க்கிறார்

அந்தோனி:ஆமா பீட்டர்,ஆனா எங்க சர்ச்சுல உள்ள பாதர்,அன்னை மரியாள் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணேற்றம் அடைந்தார் என்றும்,பிறகு பிதாவாகிய தேவனால் அவர் விண்ணுக்கும் மண்ணுக்கும் அரசியாக முடிசூட்டப்பட்டார் என்று வேதத்தில் இல்லாததையெல்லாம் நம்ம மக்களுக்கு போதிக்கிறாங்கப்பா

பீட்டர்: அந்தோனி
(1பேதுரு:4-11) -ல்
"ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின் படி போதிக்கடவன்"என்று எழுதியிருக்குப்பா

அந்தோனி: அடப்பாவிகளா !?

தொடரும்.......

ஜீவ வழி-LIVING WAY

facebook.com/lwcomm

No comments:

Post a Comment