Monday 4 May 2020

மாதிரியாயிரு


உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, 
நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும்,ஆவியிலும்,விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.(1 தீமோத்தேயு 4:12)

கிறிஸ்துவுக்குள் பிரியமான!
என் அன்பு சகோதர,சகோதரிகளே 
மூத்த ஊழியக்காரராகிய அப்:பவுல்
இளம் ஊழியக்காரர் தீமோத்தேயுக்கு இவ்விதமாக அறிவுரை வழங்குகிறார்.........
"உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, 
நீ #வார்த்தையிலும்,#நடக்கையிலும், #அன்பிலும்,ஆவியிலும்,
#விசுவாசத்திலும்,#கற்பிலும்,
விசுவாசிகளுக்கு #மாதிரியாயிரு"
என்று.......இளம் ஊழியர்கள்,
மூத்தவர்களால்,அசட்டை 
பண்ணப்படுகிற நிலை,
ஆதிகால திருச்சபையிலேயே இருந்திருக்கிறது,அவ்வாறு இளம் ஊழியர்கள் அசட்டை பண்ணப்படுவதை அப்:பவுல் விரும்பவில்லை,எனவே இளம் ஊழியர்கள்,விசுவாசிகளுக்கு முன் மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டுமென்று,யாரும் உங்களை அசட்டை செய்கிற மாதிரி வாழக்கூடாது என்று,
அறிவுறுத்துகிறார்.(1கொரி16:11)
(தீத் 2:15)(தீத்து 2:7)

சாதாரண மாவுடன் கலந்த கொஞ்சம் புளித்த மாவு,எப்படி மொத்த மாவையும்புளிக்க செய்கிறதோ! அதேபோல் நம்முடைய நல்ல குணமோ!அல்லது கெட்ட குணமோ!
அது மற்றவர்களுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும்.(1 கொரி 5:1-6)ல் புளித்த மாவு ஒரு மோசமான முன் மாதிரிக்கும்,(மத் 13:33)ல் புளித்த 
மாவு,பரலோகராஜ்யத்திற்கும் உதாரணமாக காட்டப்படுகிறது,
நாம் பரலோக ராஜ்யத்தை பரவ செய்கின்ற,புளித்த மாவாக இருக்கவேண்டும்(லூக்13:20-21)
நம்முடைய வாழ்க்கை முறை மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும்,மற்றவர்கள் நம்மைப் பார்த்துக் கற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

1) #வார்த்தையிலே முன் #மாதிரியாக இருக்க வேண்டும்.(யாக் 3:1-12)
(மத் 12:36:37)

சத்தியத்தை அறிவிப்பதிலே,
போதிக்கும்,போதனையிலே முன் 
மாதிரி:

A) நம்முடைய வாயிலிருந்து வருகிற
வசனம் எப்பொழுதும் #கிருபை #பொருந்தினதாயும் #உப்பால் #சாரமேறினதாயுமிருக்க வேண்டும்
(கொலோ 4:6)

B) சமயம் வாய்த்தாலும் #வாய்க்காவிட்டாலும் #திருவசனத்தை ஜக்கிரதையாய் #பிரசங்கம் பண்ணகிறவர்களாகவும்
எல்லா #நீடியசாந்தத்தோடும் உபதேசத்தோடும் #கண்டனம்பண்ணி, #கடிந்துகொண்டு #புத்தி சொல்லக் கூடியவர்களாக நாம் இருக்க
வேண்டும்.(2 தீமோ4:2)

C) #சுவிசேஷத்தை நான் பிரசங்கிக்கும் போது,நாம் #மேன்மைப்பாரட்ட கூடாது
ஏனென்றால் அது நம் மேல் விழுந்த #கடமை(1 கொரி 9:16)

D) நாம் போதிக்கிற #போதனை  #தேவனுடையவாக்கியங்களின்படி
இருக்க வேண்டும்(1 பேது4:11)

E) மற்றவர்களின் #மதநம்பிக்கை,
#புண்படுத்த கூடாது,அவர்களின் தெய்வங்களை #தூஷித்து அவர்களை #காயப்படுத்த கூடாது.(அப்:19:37)

F) சத்திய வசனத்தை #நிதானமாய்ப் #பகுத்துப் போதிக்க வேண்டும்
(2 தீமோ 2:15)

விமர்சனங்களை,பிரச்சனைகளை
கையாளும் விதத்தில் முன் மாதிரி:

A) நம்முடைய  நம்பிக்கையைக்குறித்து நம்மிடத்தில்,விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் #சாந்தத்தோடும் #வணக்கத்தோடும் #பதில் சொல்ல வேண்டும்.(1பேது 3:15)

B) கேட்கிறவர்களுக்கு பிரயோஜனம் 
இல்லாத,கெட்டவார்த்தை பேசாமல் 
கேட்கிறவர்களுக்கு #பிரயோஜனமான
மற்றவர்களின் #பக்திவிருத்திக்கு ஏதுவான #நல்லவார்த்தைகளை 
பேச வேண்டும் (எபே 4:29)

C) இயேசுவை போல,நம்முடைய வாயிலே #வஞ்சனை #இல்லாத #வார்த்தைகள் காணப்பட வேண்டும்
(1 பேது 2:22)

D) நமது,பேச்சிலே குற்றம் சாட்டும் படி
நம்மை சோதிக்கும் படி வருகிற சத்துருக்களிடம்,இயேசு எப்படி 
நிதானமாய்,வேதவசனத்திலிருந்து,
எடுத்து சத்தியத்தை பேசினாரோ,
அதேப்போல்,நாமும் பேசி
சத்துருக்களின்‌,சூழ்ச்சிக்கு தம்பிக்க வேண்டும்.(லூக் 20:22-47)(மத் 4:11)

வீண் வார்த்தைகளைப் பேசக்கூடிய 
வாய்,சகோதரர்கள்,மீது குற்றம் சாட்ட 
கூடிய வார்த்தை,குற்றவாளி என்று தீர்ப்பு கொடுக்க கூடிய நாவு,
மற்றவர்களை சபிக்க கூடிய பேச்சு,ஆகிய காரியங்களுக்கு,
நாம் விலகியிருக்க வேண்டும்.

A)தேவனுடைய சாயலின்படி படைக்கப்பட்ட #மனிதர்களை #சபிக்கிற வார்த்தைகளை நாம் #பேசக்கூடாது. (யாக் 3:8-12)

B) அனைவரையும் #ஆசீர்வதிக்கிற #வார்த்தைகளை,நாம் பேச வேண்டும் 
(1பேது 3:9)

C) மற்றவர்களை #குற்றவாளிகள் 
என்று நாம் தீர்க்க #கூடாது.(மத் 7:1-2)

D) சகோதரர்கள்,மீது #குற்றம்சாட்டி கொண்டே இருக்கிற குணம் #பிசாசின் #குணம்,அந்த குணம் நமக்கு இருக்க கூடாது. (வெளி 12:10)

ஆம் பிரியமானவர்களே!
ஒருவரும் நம்மை குற்றம் சாட்டாதபடி
நாம்,நற்கிரியைகளிலும்,
நல்லோழுக்கத்திலும்
நிறைந்தவர்களாய்,#ஆரோக்கியமான 
#வசனத்தைப் #பேசுகிறவர்களாக நாம் இருக்க வேண்டும்.(தீத்2:7-8 )
பொல்லாப்புக்குத் நம்முடைய நாவையும், கபடத்துக்குத் நம்முடைய  உதடுகளையும் விலக்கிக்காத்து நடக்க வேண்டும்.(1 பேது 3:10-11)
இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்,எனவே நம்முடைய இருதயத்தை தேவனுடைய வசனத்தினாலும்,தேவ அன்பினாலும்  நிறைத்து இருக்க வேண்டும் (லூக் 6:45)(ரோம 5:5) அப்பொழுது நம்முடைய பேச்சு,மற்றவர்களுக்கு 
முன் மாதிரியான இருக்கும்.

++++++++++++++++++++++++++++

2) நமது #நடக்கையில் முன் #மாதிரி:
(கொலோ 1:9-14)

A) நாம் இரட்சிக்கப்படுவதற்கு முன்பு 
நமக்குள் இருந்த கெட்டுபோகிற 
#பழைய மனிதனின் சுபாவத்தை #களைந்துபோட்டு,கிறிஸ்துவுக்குள் புதுசிருஷ்டியாக இருக்கிற #புதிய மனிதனின் சுபாவத்தை #தரித்துக் கொண்டு வாழ வேண்டும்.
(எபே 4:22-24)

B) நம்மை அழைத்த தேவன் பரிசுத்தராக இருப்பது போல,நாமும் நம்முடைய நடக்கையில் எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்(1 பேது 1:15)(2 பேது 3:11)

C) புறஜாதிகள் முன்பாக தேவனின் மகிமைக்காக,நல்நடத்தை கொண்டவர்களாக நாம்,இருக்க வேண்டும்.(1 பேது 2:12)

D) போதனையே,இன்றி மற்றவர்களை
இரட்சிக்கப்பட வைக்க கூடிய வகையிலேயே நம்முடைய நடக்கை ஒழுக்கமாகவும்,கற்பு உள்ளதாகவும் இருக்க வேண்டும்.(1 பேது 3:1-2)

E) நம் நிமித்தம்,சத்தியமார்க்கம், #தூசிக்கப்பட்டு விடக்கூடாது
எனவே நாம் #நல்நடக்கை கொண்டவர்களாக,இருக்க 
வேண்டும்.(2 பேது 2:2)

F) நாம் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்துகொள்ள வேண்டும் (எபே 4:1)(அப் 26:17-18)
நாம்,பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ள கூடாது.(2 தீமோ 2:4)
நாம் எவ்விதத்திலும் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராகமாக  நடந்துகொள்ள வேண்டும்.(பிலி 1:27)
நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும்,தேவனுக்கு  பிரியமானவர்களாயிருக்க நாட வேண்டும்.(2 கொரி 5:9)

G) காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை,நாம் நோக்கியிருக்க வேண்டும்,
(2 கொரி 4:17)
பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாட 
வேண்டும்.(கொலோ 3:2)

H) #கிறிஸ்துவின் நிமித்தம்,வருகிற,
பாடுகளை நாம் #சந்தோஷமாக #ஏற்றுக்கொள்ள வேண்டும்,(1 பேது 4:13-16) அப்.பவுலையும்,சீலாவையும் போல,(அப் 16:22-25)

I) இயேசுவின் சீஷர்களாகிய,நாம் 
கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்க வேண்டும்
(யோவா 8:31)(2யோவா 1:9)
சத்திய வசனத்தை நிதானித்து
பகுத்து போதிக்கிற,ஊழியர்களாகவும்,
தேவனுக்கு முன் உத்தமர்களாகவும் இருக்க வேண்டும்.(2 தீமோ 2:15)

++++++++++++++++++++++++++++

3) #அன்பிலே #மாதிரி (யோவா 15:9-13)

A) அன்பு செய்வதிலே இயேசு நமக்கு முன் மாதிரியை,காண்பித்து இருக்கிறார்,அதாவது,மற்றவர்களின் நலனுக்காக தன் #உயிரயே#கொடுக்க கூடிய #அன்பு (யோவா 15:13)

B) அன்பு செய்வது என்பது வேதத்திலேயே பிராதான கட்டளையாக இருக்கிறது,
#தேவனுடைய #கட்டளைகள் எல்லாம் #அன்பிலே #இயங்குகிறது (மத் 22: 36-40)(ரோம 13:10)(காலா 5:14)

C) இயேசு நம்மில்
அன்பாயிருந்ததுபோல 
நாமும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க #இயேசு நமக்கு கட்டளை #கொடுத்திருக்கிறார்.(யோவா 13:34)

D) எப்படி நம்மிலே இருக்கிற,விசுவாசத்தை 
நாம் கிரியையிலே,காட்டுகிறோமோ
(யாக்:2:14) அதே போல் நமக்குள் இருக்கிற தேவ #அன்பை நமது #அன்பின் #கிரியைகளால்,
#வெளிபடுத்தி காட்ட வேண்டும். (1யோவா 3:16-17 4:19-20)

E) நாம் நீதிமானாக இருக்குபோது,அல்ல 
(அதாவது தகுதியோடு இருக்கும் போது அல்ல)நாம் பாவிகளாக இருக்கும் போதே நம்மிடம் அன்புகூர்ந்தார் (ரோம 5:8)
எனவே நாம் யாரிடமும் #தகுதி 
#பார்த்து #நேசிக்க கூடாது.

F) நம்முடைய பரலோகத் தகப்பன்,எப்படி பூரண சற்குணராய் இருக்கிறாரோ,அதே போல நாமும் பூரண சற்குணர்களாக இருக்க வேண்டும்,என்று இயேசு நமக்கு போதித்து இருக்கின்றார் (மத் 5:48) நம்முடைய தகப்பனாகிய தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று வேதம் போதிக்கின்றது (1யோவா 4:8) அன்பென்பது பூரண சற்குணத்தின் பண்பு,அந்த இறையியல் பண்பாகிய அன்பை,தரித்தவர்களாக இந்த உலகத்திலே, நாம் இருக்க வேண்டும்
(கொலோ 3:14).

G) நம்முடைய தேவன் அன்பாகவே இருக்கிறார் அதனால் நாமும் மற்ற மனிதர்களிடத்தில் அன்பாக இருக்க வேண்டும் (1யோவா 4:8) நம்முடைய தேவன் நல்லோர்,தீயோர் நீதியுள்ளவர்,அநீதியுள்ளவர் என்ற #பாரபட்சமின்றி,அனைவரையும் #நேசிப்பது போல்,(மத் 5:45) நாமும் மற்ற மனிதர்களை #பாரபட்சமின்றி #நேசிக்க வேண்டும்,

++++++++++++++++++++++++++++

4)#ஆவியிலே முன் #மாதிரி:

1) ஆண்டவரோடு கொண்ட ஐக்கியம்:

A) ஆவியானவரோடு #ஐக்கியம் இருக்க #வேண்டும்.(2 கொரி 13:14)

B) ஆவியில் #எளிமை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.(மத் 5:3)

C) ஆவியோடும் உண்மையோடும் தேவனைத் #தொழுது கொள்ள 
வேண்டும் (யோவா4:24)

D) ஆவியினாலே தேவனுக்கு 
#ஆராதனை செய்ய வேண்டும் 
(பிலி 3:3)

E) ஆவியினாலே #ஜெபம் செய்ய 
வேண்டும் (எபே 6:18)

F) ஆவியில் ஜெபம் செய்தபோது 
பரிசுத்த ஆவியினால் #நிரப்பப்பட்டு, #தேவவசனத்தைத் #தைரியமாய் பேசுகிறவர்களாய் நாம் இருக்க 
வேண்டும்.(அப் 4:31)

G) ஆவியோடு #பாடல் பாட வேண்டும்
(1கொரி 14:15)

H) நம்முடைய பரிசுத்த நடக்கையினால் நம்முடைய #சரீரத்தினாலும்  #ஆவியினாலும் தேவனை #மகிமைப்படுத்த வேண்டும்.(1கொரி 6:20)

2) ஆவியில் வைராக்கியம்:

A) அத்தேனே  பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, 
தன் #ஆவியில் மிகுந்த #வைராக்கியமடைந்து,
#சத்தியத்தை #போதித்தார் 
(அப் 17:16)

B) கொரிந்து பட்டணத்தில் பவுல் ஆவியில் வைராக்கியங்கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினான்.(அப் 18:5)

3) ஆவியில் அனல்: 

A) அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருந்து,ஆவியிலே #அனலாயிருந்தால் தான், கர்த்தருக்கு #ஊழியஞ்செய்ய முடியும் (ரோம 12:11)

B) அப்பொல்லோ ஆவியில் #அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதகம் பண்ணிக்கொண்டுவந்தான்.(அப்18:25)

C) நாம் ஆவியில் #அனலின்றி #இருந்தால் கர்த்தர்  வாயினின்று நம்மை#வாந்திபண்ணிப்போடுவார் (வெளி 3:16)

4) ஆவியில் பலப்படுதல்:

A) ஆவியினாலே #வல்லமையாய்ப் #பலப்பட வேண்டும்:(அப்:1:8)
(எபே 3:16)

B) தேவன் நமக்கு பலமுள்ள ஆவியை கொடுத்திருக்கிறார்‌.(2தீமோ 1:7)

C) நம்முடைய பேச்சும் பிரசங்கமும் ஆவியினால் பெலப்பட்டிருக்க வேண்டும்.(1கொரி 2:5)

5) ஆவியிலே அன்பு :

A) ஆவியானவரினால் #தேவஅன்பு நமது #இருதயத்திலே #ஊற்றப்பட்டு இருக்கிறது.(ரோமர் 5:5)

B) நமக்கு கொடுக்கப்பட்ட ஆவி  அன்புள்ள ஆவி (2தீமோ 1:7)அன்பு ஆவியின் கனி (காலா 5:22)

C) ஆவியினாலே சத்தியத்திற்கு கீழ்ப்படிந்து ஒருவருக்கொருவர் சுத்த இருதயத்தோடே  ஊக்கமாய் அன்பு கொள்ள வேண்டும்.(1பேது 1:22)

6) ஆவினால் நடத்தப்படுதல்: 

A) ஆவினால் நடத்தப்படுதல்:
(ரோம 8:14) 

B)ஆவினால் போதிக்கப்படுதல் 
(சங் 32:8) (1யோவா 2:27) (ஏசா 30:21)

7) ஆவியில் நிறைந்திருத்தல்: 

A) மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து இருக்க வேண்டும் (எபே 5:18)(அப் 2:13)

B) ஆவியில் நிறைந்து அந்நியபாஷைகள் பேசுதல் (அப்:2:4)

C) ஆவியில் நிறைந்து தரிசனம் காணுதல்(அப் 7:55)

D) ஆவியில் நிறைந்து மற்றவர்களின் சுபாவத்தை கண்டுபிடித்தல்
(அப் 13:9-10)

++++++++++++++++++++++++++++

5) #விசுவாசத்தில் முன் #மாதிரி (எபி 11:1-40)

ஆபேல்,ஏனோக்,நோவா,ஆபிரகாம்,
காலேப்-யோசுவா ஆகிய தேவ மனிதர்கள் விசுவாசத்தில் நமக்கு நல்ல முன்மாதிரிகளாக இருக்கிறார்கள்.

விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாய் இருப்பது கூடாத காரியம் என்று வேதம் சொல்கிறது (எபி 11:6) எனவே நாம் விசுவாசத்தில் மற்றவர்களுக்கு மாதிரியாக,இருக்க வேண்டும்

ஆபேல்,ஏனோக்,நோவா,ஆபிரகாம்,
காலேப்-யோசுவா ஆகிய தேவ மனிதர்கள் விசுவாசத்தில் நமக்கு நல்ல முன்மாதிரிகளாக இருக்கிறார்கள்.

ஆபேலின் மேன்மையான பலி 
செலுத்தி நீதிமானென்று சாட்சி பெற்றான்,(எபி:11:4) இயேசு கிறிஸ்து நம்மை நீதிமானாக்க தன்னையே பலியாக,கொடுத்தார்,(1யோவா 2:2)அவர் சிந்திய #இரத்தத்தால் 
நாம் இன்று #நீதிமானாக #ஆக்கப்பட்டிருக்கிறோம்.(ரோம 5:9)
#நீதிமானுக்குரிய முன் #மாதிரி,
வாழ்க்கை #வாழவேண்டும்.
(1கொரி 15:34)

ஏனோக் விசுவாசத்தினாலே,
மரணத்தை காணாமல் எடுத்துக்கொள்ளப்பட்டான் அவன் தேவனுக்கு பிரியமானவன் என்று அவன் சாட்சியும் பெற்றான்
(எபி 11:5) தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழ்ந்தால்,நாமும் 
ஒரு நாள் #இரகசிய வருகையிலே,
#எடுத்துக்கெள்ளப்படுவோம்.

நோவா தன்னுடைய காலங்களில் காணாத காரியங்களை,குறித்து தேவன் எச்சரித்த போது,அதை விசுவாசித்தான் பேழை செய்தான்,அவன் விசுவாசத்தினால் உண்டான நீதிக்கு சுதந்திரவாளியானான்.(எபி 11:7)
அதேபோல நாமும்,கிழ்படிந்து
வேதத்திலே தேவன் நமக்கு சொன்ன வரப்போகிற காரியங்களை #எதிர்நோக்கி #காத்திருப்போம்,
#சுதந்தரிப்போம்.

ஆபிரகாம் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து,தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்.(எபி 11:8) நாமும் தேவனுடைய வார்த்தைகளை முற்றிலும் #விசுவாசித்து,அவர் #சொல்கிறபடி செய்ய #ஆரம்பிப்போம்.

தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற,
வல்லவராய் இருக்கிறார் என்று விசுவாசித்து,அவன் தன் சரீரம் செத்துப் போனதையும்,தன்னுடைய மனைவியின்,கர்ப்பம் செத்துப் போனதையும் அவன் #எண்ணிப்பார்காமல் இருந்தான்,
ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொண்டான்.
விசுவாசத்தில்,வல்லனானான்
(ரோம 4:19-21) நாமும் அதேபோல் #விசுவாசமுள்ளவர்களாய்,
#இருப்போம்.

கானான் தேசத்தை வேவு பார்க்கச் சென்ற,12 பேரில் 10 பேர் அவிசுவாசத்தை பேசினார்கள் காலேப்பும்,யோசுவாவும் விசுவாசத்தை பேசினார்கள்,
தேசத்தை சுதந்தரித்துக் கொண்டார்கள்.
(எண் 13:27-30)எனவே,நாம் அவிசுவாசத்தை பேசாமல் விசுவாசத்தை பேசுவோம்.#வாய்க்கு #வந்ததெல்லாம் #பேசாமல் அவர் கொடுத்த #வாக்குத்தத்தங்களை #பேசுவோம்.

பெரும்பாடுள்ள ஸ்திரீ இயேசுவின் வஸ்திரங்களை ஆவது தொட்டால்
நான் சொஸ்பமாவேன்,என்று விசுவாச அறிக்கை செய்து,இயேசுவை தொட்டு சுகத்தைப் பெற்றுக் கொண்டாள்.
அவளுடை விசுவாசம் அவளை 
இரட்சித்தது.(மாற் 5:24-34)எனவே 
நாமும் விசுவாச #அறிக்கை,செய்து ஆண்டவரை தொடுவோம்,#அற்புதம் பெறுவோம்.

கானானிய ஸ்திரீயின் விடாப்பிடியான விசுவாசம்
 அவளின் மகளுக்கு விடுதலையை பெற்றுத்தந்தது,(மத் 15:22-28) 
எனவே,நாமும் #விடாப்பிடியான விசுவாசம் கொண்டு விடுதலை பெற்றுக் #கொள்வோம்.

நான் பாத்திரன் இல்லை என்று தன்னை தாழ்த்திய விசுவாசித்த நூற்றுக்கதிபதி,இயேசுவின் வார்த்தையின் வல்லமையை,
அறிந்து விசுவாசித்தான்
அவனின் வேலைகாரன் குணமடைந்தான்.(லூக் 7:2-10)
எனவே நாமும் கர்த்தரிடத்தில் 
நம்மை தாழ்த்துவோம்,அவருடைய வார்த்தையின் வல்லமையை விசுவாசிப்போம்.

#சாதகமான சூழ்நிலையில்,மாத்திரம்
அல்ல,#சூழ்நிலைகள் நமக்கு #பாதகமாக இருந்தாலும்,தேவன் மீது வைத்திருக்கிற #விசுவாசத்தை விட்டு நாம் #விடக்கூடாது.
(1சாமு 30:6) (ஆபகூக் 3:17-18) 
(சங் 23:4)

ஆதி கிறிஸ்தவ விசுவாசிகள் அதிக 
வாஞ்சையும் பக்திவைராக்கியமும்,
ஞானமும், கொண்ட முன் மாதிரிகளாக நமக்கு இருக்கிறார்கள்,ஏனெனில் அவர்களின் விசுவாசம்  முழுவதும் கிறிஸ்துவின் உபதேசத்தின் அடிப்படையில் மட்டுமே இயங்கியது.

அவர்களுக்கு போதித்த அப்போஸ்தர்கள் இயேசு கிறிஸ்துவை பற்றிய சுவிசேஷத்தை மட்டுமே(அப்8:5,35,9:20,10:36)
(1கொரி1:23,1:17,2:2,15:1-2)(2கொரி4:5) (ரோம16:25) போதிக்கிறவர்களாக காணப்பட்டனர்.

எனவே நாமும்,கிறிஸ்துவின் உபதேசத்தை விட்டு விலகிப் போகாமல் இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருப்போம் (2யோவா 1:9-11)ஆதி கிறிஸ்தவ விசுவாசிகள் அதிக வாஞ்சையும் பக்திவைராக்கியமும்,ஞானமும், கொண்ட விசுவாச முன் மாதிரிகளாக மற்றவர்களுக்கு இருப்போம்.


++++++++++++++++++++++++++++

6) #கற்பில்(பரிசுத்தத்தில்)முன் #மாதிரி:

நம்மை அழைத்தவர் #பரிசுத்தராய், #இருப்பது போல,நாமும் நம்முடைய நடக்கையில் அனைத்திலும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
கிறிஸ்தவர்களாகிய #நாம்,
பரிசுத்தத்தில் மற்றவர்களுக்கு,
மாதிரியாக #இருக்க வேண்டும்.
(1பேது 1:15)

இதற்காக நாம் அழைக்கப்பட்டு இருக்கிறோம்,கிறிஸ்து நமக்காக,பாடுபட்டு, தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி நமக்கு மாதிரியைப் பின்வைத்து போயிருக்கிறார்,அவர் பாவம் செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை இல்லை(1பேது 2:21-22) அவர் எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும்,
இல்லாதவராய் இருக்கிறார்.(எபி 4:15) அவரே நமது முன் மாதிரி.

விசுவாசிகளாகிய நாம்,கற்புள்ள கன்னிகையை,போல நம்முடைய மணவாளனாகிய  இயேசு கிறிஸ்துவுக்காக நியமிக்கப்பட்டு இருக்கின்றோம்,சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே 
ஏவாளை வஞ்சித்ததுபோல,
நம்முடைய மனது கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகாதபடி 
இருக்க வேண்டும்,(2 கொரி11:2-3)

கிறிஸ்தவர்களாகிய நாம் எல்லாவற்றிலும்,பரிசுத்த நடக்கை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.அந்தகார இருளில் இருந்த நம்மை ஆச்சரியமான ஒளியினிடத்திற்கும் உளையான சேற்றில் கிடந்த,நம்மை உயரமான ஸ்தானத்திற்கும்,நம் தேவன் கொண்டு வந்திருக்கின்றார்,
தேவன் இந்த உலகத்திலிருந்து நம்மை பிரித்தெடுத்து தன்னுடைய உன்னதமான திட்டத்திலே,
நோக்கத்திலே ஓட்டத்திலே நம்மை வைத்திருக்கின்றார்,இன்று 
நாம் மறுபடியும் அந்தகார இருளையோ,உளையான சேற்றையோ,உலகத்தையோ திரும்பிப் பார்க்கக்கூடாது,
கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டு பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார் (லூக் 9:62) உலகத்திலே ஒரு பந்தயத்திலே பங்குகொள்கிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சை அடக்கமாய் இருப்பார்கள்‌,அழிவுள்ள ஒரு பரிசை,கிரீடத்தை
பெற்றக்கொள்ள அவர்கள் இச்சையடக்கமாய் இருந்து,வெற்றி பெருகிறார்கள்,ஆனால்,நாமோ அழிவில்லாத ஜீவ கிரீடத்தை (யாக் 1:12)(வெளி 2:10) பெறும்படி அவ்வாறு இச்சையடக்கத்தோடு பரிசுத்தமாய் இருக்கிறோம் (1கொரி 9:25)

நாம் எந்த பாவத்திற்கு உடன்படாமல்
நம்மை சுத்தமாய் காத்துக்கொள்ள வேண்டும்.(1 தீமோ 5:22)

பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு,
நாம் விலகி ஓட வேண்டும்
நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடவேண்டும்
(2 தீமோ 2:22)

நமது ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை 
விட்டு விலக வேண்டும் (1பேது 2:11)

இச்சையானது கர்ப்பந்தரித்து,
பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்,(யாக் 1:14-15) எனவே  இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் இச்சையடக்கம் கொண்டவர்களாக இருக்கவேண்டும்,அதுமட்டுமல்ல 
பாவ சோதனையிலிருந்து தப்பிக்க 
இச்சையடக்கம் மிக அவசியம்

விசுவாசிகள் பாவத்தின் வஞ்சனையினாலே,கடினப்பட்டு போவதற்கு வாய்ப்புகள் உள்ளது, 
எனவே ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள் வேதம் வலியுறுத்துகிறது.(எபி 3:13) 
தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.
என்றும் சொல்லுகிறது(1கொரி 10:12)

இயேசு கிறிஸ்துவினால் நீதிமான்கள் ஆக்கப்பட்ட ஒரு நீதிமான்(ரோம 3:24)
தான் பெற்ற நீதியின் படி பாவஞ்செய்யாமல் விழித்துக்கொண்டு,தெளிவாய் இருக்க வேண்டும் (1 கொரி 15:34)

ஆக கிறிஸ்தவர்களாகிய,நாம் பாவம் செய்யாமல் பரிசுத்தமாய்,
வாழவேண்டும்,பரிசுத்ததில் மற்றவர்களுக்கு,நாம் முன் மாதிரியாக இருக்க வேண்டும்.

A) நாம் பரிசுத்தமுள்ளவர்களாக  இருக்கவேண்டும்,என்பதே தேவனுடைய சித்தமாக இருக்கின்றது,எனவே நம்முடைய பரிசுத்தத்திற்கு பாதகத்தை ஏற்படுத்துகின்ற,பாதிப்பை உண்டாக்குகின்ற எந்த காரியமாக இருந்தாலும் அதற்கு நாம் விலகி 
இருக்க வேண்டும் (1 தெச 4:3)

B) தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் உடுத்துகின்ற உடைகள்,நமக்கு தகுதியானவைகளாகவும் கண்ணியமானவைகளாகவும் இருக்க வேண்டும்,(1 தீமோ 2:9-10)

C)நாம் #உடுத்துகின்ற #உடைகள் எதிர்பால் இனத்தாருக்கு #இச்சையைத் தூண்டக்கூடிய வகையிலோ, அவர்களுக்கு #இடறலை  உண்டாக்கக்கூடிய வகையிலோ,  #இருக்கக்கூடாது (மத் 5:28)(மத் 18:6)

D) தேவனுடைய பிள்ளைகளாகிய நாம்,#மதுபானம்,#புகையிலை #போதை பொருட்கள் ஆகியவைகளை உபயோகபடுத்துகிறவர்களாகவும், அதற்கு அடிமைப்பட்டவர்களாகவும் 
நாம் இருக்க கூடாது,களியாட்ட 
வெறி கொண்டு,இழிவான ஆதாயத்திற்க்காக இச்சிக்கிறவர்களாயும் நாம் இருக்க கூடாது,நாம் இச்சை அடக்கத்தோடு  #பரிசுத்தமாய் #வாழ #வேண்டும்.
(எபே 5:18)(1தீமோ 3:8)(தீத் 1:7)
(கலா 5:21)

E) நம்முடைய சரீரம் தேவனுடைய 
பரிசுத்த ஆலயம் ஆக இருக்கின்றது,
இயேசு தன்னுடைய சரீரத்தை பலியாக தந்து,நம்முடைய சரீரத்தை பரிசுத்தமாக்கியிருக்கிறார் (எபி10:10,14) எனவே நம்முடைய சரீரத்தை எக்காரணத்தைக் கொண்டும்,கெடுக்கிற நடவடிக்கைகளில் நாம்,ஈடுபடக்கூடாது,
அது தேவனுக்கு பிரியமில்லாத காரியம்.(1கொரி 3:16-17)

F) தேவனுடைய பிள்ளைகளாகிய நாம்#லஞ்சம்,#ஊழல்,#சூதாட்டம்,
கடத்தல்‌,பதுக்கல்,கருப்பு பணம்,கள்ள நோட்டு,
வட்டி,ஆகிய பாவ வழிகளில் பணம் சம்பாதிக்க உடன்பட கூடாது,
அது நமக்கு சாபத்தையும்,
அழிவையும் கொண்டுவரும் 
(எரே 17:11)(எசே 22:13) குறுக்கு வழிகளில் வருகின்ற,
ஐசுவரியம் வேதனையை தரும் 
(1 தீமோ 6:9-10)ஆனால் நேர்மையான வழியிகளில்,கர்த்தருடைய ஆசீர்வாதத்தால் வருகிற ஐசுவரியம் 
வேதனையை தராது (நீதி 10:22)

ஆக தேவனுடைய பிள்ளைகளாகிய நம்முடைய,சிந்தனை,சொல் செயல்பாடு,நடவடிக்கைகள் அனைத்திலும்,பரிசுத்தம் இருக்கவேண்டும்.பரிசுத்தத்திலே நாம் மற்றவர்களுக்கு,மாதிரியாக இருக்க வேண்டும்.

ஆம் பிரியமான! என் அன்பு சகோதர,சகோதரிகளே 
அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுக்கு அறிவுரை கூறினார்,அதாவது.
"உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, 
நீ #வார்த்தையிலும்,#நடக்கையிலும், #அன்பிலும்,#ஆவியிலும்,
#விசுவாசத்திலும்,#கற்பிலும்,
விசுவாசிகளுக்கு #மாதிரியாயிரு"
என்று சொன்னது போல,இன்று கர்த்தருடைய ஆவியானவர்,
நமக்கும் அறிவுரை வழங்குகிறார்.
நாமும் வார்த்தையிலும்,
#நடக்கையிலும்,#அன்பிலும்,
#ஆவியிலும்,#விசுவாசத்திலும்,
#கற்பிலும்,விசுவாசிகளுக்கு முன் மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டுமென்று.அதற்கு ஆவியானவர் தாமே,நம்மோடு கூடவே இருந்து,நம்மை முன்மாதிரியான வாழ்க்கை வாழ வைப்பாராக.

ஆமென்... அல்லேலூயா...

Pr.Marvel jerome 
Calvary living way ministries 
Bangalore-south India

We hope that you are blessed 
by our ministry.