Monday 16 November 2015

(6) புனிதர்கள் நமக்காக பரிந்துபேசுறங்கள்ல அப்பரம் ஏன் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கனு அவங்கட்ட ஜெபிக்க கூடாது ?



புனிதர்கள் நமக்காக தேவனிடம்
பரிந்து பேசுவாங்கள்ல அப்பரம் ஏன் எங்களுக்காக வேண்டிங்கொள்ளுங்கனு
அவங்கட்ட ஜெபிக்க கூடாது ?

அந்தோனி: அன்னை மரியாள், செபஸ்தியார், போன்ற புனிதர்களை கும்பிடக்கூடாது அது வேதாகமத்தின் படி பாவம்.

அந்த பாவத்தை நம்மை செய்ய வைக்க சாத்தான் புனிதர்கள் வடிவில் வந்து காட்சி கொடுக்கிறான் என்பதை நீ வேத வசனம் மூலம் விளக்கி சொன்ன சரி ஒ.கே..

புனிதர்களை கும்பிடாதான பாவம்,அவங்களைநோக்கி எங்களுக்காக தேவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் என்று (அதாவது) எங்களுக்காக தேவனிடம் பரிந்துபேசும் படி சொல்லி ஜெபிக்கலாம்ல ?

பீட்டர்: புனிதர்களிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கனு ஜெபிக்கனுமா ?!
அவங்க தேவனிடத்தில் நமக்காக பரிந்து பேசுவாங்களா? !
நீ என்ன சொல்ற !இதல்லாம் பைபில்ல இருக்கா ?

அந்தோனி: பைபிள்ல இல்லாமலா எங்க சபையில் இதை மக்களுக்கு போதிப்பாங்க ?

பீட்டர்: இல்ல அந்தோனி, பைபிள்லஇப்படி இருக்கு....
இயேசுவின் நாமத்தில் பிதாவிடமும் (யோவான் 16:23-24),(யோவான் 15:16)
பிதாவிடம் நேரடியாகவும் (லூக்கா 11:24) இயேசுவிடம் நேரடியாகவும் (யோவான் 14:13-14) ஜெபிக்க வேண்டும் என்று இயேசுவே நமக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார்அப்பரம்..

கடவுளுக்கும் மனிதனுக்கு இடையே ஒரே மத்தியஸ்தராக இயேசு ஒருவர் மட்டுமே இருக்கிறார் (1தீமோதேயு 2:5) என்றும். இயேசு நமக்காக தேவனிடத்தில் வேண்டுதல் செய்கிறார் என்றும்,
நமக்காக பரிந்து பேசுகிறார்
 (ரோமர்8:34) (1யோவான் 2:1-4) என்றும்
இயேசுவின் இரத்தம் நமக்காக பரிந்து பேசுகிறது
(எபிரெயர் 12:24) என்றும், பரிசுத்த
ஆவியானவர் நமக்காக தேவனிடம் பரிந்து பேசுகிறார் (ரோமர் 8:26) என்று தான் வேதத்தில் இருக்கு

புனிதர்களிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கனு ஜெபிக்கனும் அப்படினோ, அவங்க தேவனிடத்தில் நமக்காக பரிந்து பேசுவாங்க அப்படினோ வேதத்தில் இல்லவே இல்லை

அந்தோனி:அடப்பாவிகாளா ?!


ஜீவ வழி-LIVING WAY

www.facebook.com/lwcomm

No comments:

Post a Comment