Monday 1 October 2018

உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும்
இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? (1 கொரிந்தியர் 6:19)

பீட்டர்: தேவன்,மனிதனால் உண்டாக்கிய ஆலயத்தில் தங்கி குடியிராமல்,தான் உண்டாக்கிய(கிறிஸ்துவுக்குள் இருக்கும் புது  சிருஷ்டி)மனிதனுக்குள்
தங்கி குடியிருக்கிறார்.

ஜான்: ஆமா! தேவன் கட்டிடத்தை ஆலயமாக கொள்ளாமல்,கர்த்தருடைய பிள்ளைகளாகிய நம்மையே அவர் ஆலயமாக கொண்டிருக்கிறார்..

பீட்டர்: ஆனால் இன்று அனேக விசுவாசிகள்,இந்த சத்தியங்களை
சரியாக உள்வாங்காமல்,தேவன் ஆபிரகாமிடம் பேசியதுபோல்,
மோசேயிடம்  பேசியதுபோல்,
பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களிடம் பேசியது போல் தங்களிடமும் தேவன் நேரடியான,வெளிப்பாட்டின் வழியாக
 பேச வேண்டும்,என்று எதிர்பார்கிறார்கள்,

ஜான்: பழைய ஏற்பாட்டில்,பரிசுத்த ஆவியானவர்,ஒரு சிலர் மீது இருந்தார்,
ஆனால் அவர்களுக்குள் தங்கி இருக்கவில்லை,ஆனால் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவுக்குள்,புது சிருஷ்டியாகிய நமக்குள்,பரிசுத்த ஆவியானவர் நிலையாக தங்கியே இருக்கிறார்..அவர் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்தி,வரப்போகிற காரியங்களை நமக்கு  அறிவிக்கிறார் (யோவான் 16:13)இதை நாம் நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

பீட்டர்: நமக்குள்ளே தங்கி இருக்கிற பரிசுத்த ஆவியாகிய தேவன்,
நமக்கு  போதித்து,நாம் நடக்கவேண்டிய வழியை நமக்கு காட்டுவார்,நம்மீது அவர் கண்ணை வைத்து, நமக்குஆலோசனை சொல்லுவார் (சங்கீதம் 32:8) எனவே நாம் அவரின் உள்ளான சத்தத்திற்கு,செவி கொடுத்து அவரின் ஆலோசனைகளை, கடைபிடித்து நடந்தால்,நமக்கு எதிலும் எப்போதும் வெற்றிதான்,நாம் நமது
மனதின் சுய ஆலோசனையை கேட்டு நடக்க நாம் நம்முடையவர்கள்,அல்ல நாம் தேவனுடையவர்கள்,எனவே நாம் அவரின் ஆலோசனையின் படி நடந்தால்,நமக்கு தான் நன்மை..

ஜான்: ஆமா நாம் ஆவியானவரின் உள்ளான சத்தத்திற்கு,செவி கொடுத்து அவரின் ஆலோசனைகளை,கடைபிடிக்க வேண்டும் அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்.(ஏசாயா 28:29)

பீட்டர்: ஆகவே நாம்,தேவ சத்தத்தை,
அவரின் சித்தத்தை அறிய எங்கேயோ இருந்து எதிர்பார்கமல்,நமக்குள்ளே எதிர்பார்ப்போம்,வேதத்தை வாசிக்கும் போதும்,சத்திய வசனத்தை கேட்கும் போதும்,அபிஷேகத்தில் நிறைந்து ஜெபம் செய்யும் போதும்,பரிசுத்த ஆவியானவரின் சத்தத்தை தெளிவாக கேட்க முடியும்,
எனவே நமக்குள் தங்கி இருக்கும்
பரிசுத்த ஆவியானவரின்,உள்ளான சத்தத்திற்கு,செவி கொடுத்து அவரின் ஆலோசனைகளை, கடைபிடித்து நாம்  நடந்தால்,நமக்கு எதிலும் எப்போதும் வெற்றிதான்...

ஆமென்.... அல்லேலூயா...

பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து,அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
(1 யோவான் 4:4)