Wednesday 30 March 2016

#தனித்துவச்செய்தி

# கர்த்தரை குறித்தே மேன்மைபாராட்டுவோம்

சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.
(சங்கீதம் 20: 7)

பரத்: அக்காலத்தில் மனிதர்கள் குதிரைகளைக் குறித்து  இரதங்களைக்குறித்து,அதாவது தங்கள் சேனைகளின் வலிமை குறித்து,தாங்கள் மிகவும் பராக்கிரமசாலிகள் என்று மேன்மைபாராட்டினார்கள்,ஆனால் தேவனுடைய ஜனங்களின் மேன்மைபாரட்டுதல் மிகவும் வித்தியாசமாக இருந்தது

பிரவீன்: ஆமா,நண்பா தேவனுடைய ஜனங்களிடமும் குதிரைகளும்,
இரதங்களும் இருந்திருக்கும் ஆனால் அவர்களின் மேன்மைபாராட்டுதல்,
தங்கள் சேனைகளை குறித்து அல்ல,
வானக சேனைகளின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தைக்குறித்து மட்டுமே இருந்தது... அதனால் தான் மற்றவர்கள்
முறிந்து விழுந்தார்கள்; தேவனுடைய ஜனங்கள் எழுந்து நிமிர்ந்து நிற்கிறார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது (சங் 20: 8)

பரத்: இன்றும் கூட இயேசுவை ஏற்றுக்கொண்ட அனேக மக்கள் தனது அழகைக்குறித்தது, அந்தஸ்தை குறித்து படிப்பைக்குறித்து, பணத்தைக் குறித்து, நிலங்களைக் குறித்து, ஏன் கேவலம்  ஜாதியை குறித்து கூட மேன்மைபாராட்டுகிறார்கள்,ஆனால் ஒரு உண்மையான ஆவிக்குரிய கிறிஸ்தவன் இவைகளை ஒரு பொருட்டாகவே நினைக்க மாட்டான்,
அவனின் மேன்மை கர்த்தரை பற்றி மட்டுமே இருக்கும்...

பிரவீன்: ஆமா, ஆவிக்குரிய கிறிஸ்தவனின் மேன்மைப்பாரட்டுதல்
அவ்வாறு தான் இருக்கும்... அவன்
தேவனுடைய அன்பைக்குறித்து, அவருடைய வல்லமையைக் குறித்து, அவருடைய தன்மைகளைக்குறித்து, அவருடைய இரட்சிக்கும் கிருபையைக் குறித்து, இரக்கத்தைக் குறித்து, நீடிய பொறுமையைக் குறித்து,அவர் என்றும்   நல்லவராகவே இருக்கிறார்
என்பதை குறித்தே அவன் மேன்மைபாராட்டுவான்...

பரத்: ஆமா நண்பா, நாமும் அவ்வாறுதான் செய்யவேண்டும் ஏனெனில் பாவிகளில்
பிரதான பாவியாகிய நம்மை இயேசு  இரட்சித்திருக்கிறாரே!

நாம் பாவிகளாய் இருக்கும் போதே  நமக்காக சிலுவையில் தொங்கி மரித்து நம்மீது அவர் வைத்திருக்கும் நித்திய அன்பை விளங்கப்பண்ணினாரே !

 நம்முடைய குருட்டாட்டத்தில் நாம்  அழிந்துப்போகாமல் நம்மை தடுத்து நித்திய வாழ்வுக்கு ஏற்புடையவர்களாக நம்மை ஆக்கியிருக்கிறாரே !

 இன்றைக்கும் பிதாவின் வலதுபாரிசத்தில் நமக்காக பரிந்துப் பேசிக்கொண்டிருக்கிறாரே!

இப்படி யாராலும் செய்ய முடியாத காரியங்களை கர்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக செய்திருக்க அவரை  அல்லாமால் இந்த உலகத்தில் நாம்  எதைக்குறித்து,யாரைக்குறித்து,
மேன்மைபாராட்டுவோம் ???

பிரவீன்: சூப்பரா சொன்ன பரத்,
 நாம் இயேசு கிறிஸ்துவை உண்மையாகவே ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்றால், அவரை எல்லாவற்றிற்கும் மேலாக நேசிக்கிறோம் என்றால்,நாம் உலகத்து  காரியங்களாகிய,அழகு,அந்தஸ்து,
ஜாதி,படிப்பு,பணம்,சொத்து,என எவைகளை குறித்தும் மேன்மைபாராட்ட மாட்டோம் இவைகளை ஒரு பொருட்டாகவே நினைக்க மாட்டோம்..

பரத்: ஆமா பிரவீன், உலகுக்கு அடுத்த காரியங்கள் எவ்வளவு நமக்கு இருந்திருந்தாலும்,இயேசு கிறிஸ்து மட்டும் நம்மை இரட்சிக்காமல் இருந்திருந்தால்,எல்லாம் Waste
நாம் இந்த நேரம் சமாதானம்,விடுதலை இல்லாமல் உளையான சேற்றில் ஊறிக்கிடந்திருப்போம்.. நமது நித்தியமும் நரகமாக இருந்திருக்கும்.
ஆனால் இயேசு நம்மை தேடிவந்து தூக்கினார்.. பரலோக குடிமகனாக இந்த பூமியில் நம்மை ஆக்கினார்..
எனவே அவரை தவிர நமக்கு இந்த உலகில் எதுவும் மேன்மையாக இருக்கவே கூடாது

ஆமென்... அல்லேலூயா...

நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக்குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.

(கலாத்தியர் 6: 14)

=======================

ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

நமது அனுதின நற்செய்திகளை எல்லோருக்கும் அறிமுகம் செய்யுங்கள். வாட்ஸ்அப் செய்திகளுக்கு
Send Message Via Whatsapp
“Need Daily Good News  ”
to +919025385098

Friday 25 March 2016

#தனித்துவச்செய்தி

# இயேசு கிறிஸ்து சிலுவையில் சொன்ன ஏழு வாசகங்கள்: #பாகம்-2

#தொடர்ச்சி

ஜேம்ஸ்: Hi, பீட்டர்...

பீட்டர்: வா, ஜேம்ஸ்... இப்பதான் உனக்கு Call பண்ணலாமுன்னு நெனச்சேன் நீயே வந்துட்ட !

ஜேம்ஸ்: Oh!  அப்படியா ! பீட்டர், சரி, நாம் மதியம் இயேசு கிறிஸ்து சிலுவையில் சொன்ன ஏழு வாசகங்கள் பற்றி  பேசிகிட்டு இருந்தோம் நீயும் இயேசு சிலுவையில் சொன்ன முதல் நான்கு வாசகங்களை பற்றி Explain பண்ண அது எனக்கு ரொம்ப Useful ல இருந்தது
மீதமுள்ள மூன்று வாசகத்தை பற்றிய விளக்கத்தை இப்ப சொல்றயா

பீட்டர்: O yes, சொல்றேன் அதுக்காக தான உன்ன Evening வர சொன்னேன்
OK continue பண்ணுவோம்...
5)“தாகமாயிருக்கிறேன்”
(யோவான்19:28) இங்கே இயேசு வேத வாக்கியம் நிறைவேறத்தக்கதாக
“தாகமாயிருக்கிறேன்” என்கிறார் அதாவது பழைய ஏற்பாட்டிலே
“என் நாவு மேல்வாயோடே
ஒட்டிக்கொண்டது” (சங் 22:15),
“என் தாகத்துக்குக் காடியைக்
குடிக்கக்கொடுத்தார்கள்” (சங் 69:21)
என்று சிலுவையைக் குறித்து
ஏற்கனவே தீர்க்கதரிசனங்கள்
சொல்லப்பட்டிருக்கின்றன.இந்த தாகம் சாதாரணமான தாகமல்ல என்றும், அக்கினியின் மத்தியில் இருக்கிற ஒரு மனிதனுக்கு ஏற்படும் மரண தாகம் போன்றது என்றும் வேத வல்லுநர்கள் கூறுகிறார்கள். இது இயேசு அனுபவித்த நரக வேதனையைக் குறிக்கிறது.

#"மனிதனுக்காக அவனுடைய நரக வேதனையை இவர் அனுபவித்தார். எந்த ஒரு மனிதனும் ஒருபோதும் நரக வேதனையை அனுபவிக்கக் கூடாது
என்பதற்காகத்தான் இவர் அந்த வேதனையை ஏற்றுக்கொண்டார்"
நாம் எல்லோரும் பரலோக இன்பத்தை அனுபவிப்பது மட்டுமே கடவுளுடைய
விருப்பம் என்பதை நாம் கவனிக்க வேண்டும். மேலும் தாகமாக இருந்த அவர் புளித்த காடியைக் குடிக்க
வாங்கிக்கொண்டது நம்மீது
தலைமுறை தலைமுறையாகத்
தொடர்ந்து வந்துகொண்டிருந்த
சாபங்களை அவர் அகற்றிவிட்டார்
என்பதைக் காட்டுகிறது.

ஜேம்ஸ்: எப்படி சொல்ற ?

பீட்டர்: முன்னோர் செய்த பாவத்தின் பலனை நாங்கள் இன்றைக்கு அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்
என்பதை எடுத்துக்காட்ட........

“பிதாக்கள் திரட்சக் காய்களைத் தின்றார்கள்,பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின” என்று அந்தக் காலத்தில் ஒரு பழமொழி இருந்தது. இந்த பழமொழி ஒருநாள்
இல்லாமல் போகும் என்று பழைய ஏற்பாட்டுக் காலத்திலேயே கடவுள்
சொல்லியிருந்தார்.(எரேமியா 31: 29)

ஜேம்ஸ்: Oh! அப்படியா !

பீட்டர்: அடுத்த வாசகம் 6)“முடிந்தது”
(யோவான் 19:30)
இது கிரேக்க மொழியில் ‘டெட்டெலெஸ்டாய்’ என்ற வார்த்தையைத்தான் தமிழில் ‘முடிந்தது’ என்று  மொழிபெயர்த்திருக்கிறார்கள்
அந்தக் காலத்தில் நிலத்தையோ, ஒரு
விலையேறப்பெற்ற பொருளையோ வாங்கும்போது,அதற்கான முழுக் கிரயமும் செலுத்தப்பட்டுவிட்டது என்பதைக்காட்ட‘டெட்டெலெஸ்டாய்’
என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். அதாவது, இந்தக்காலத்தில் ரசீதுகளில் ‘PAID’ என்று முத்திரை குத்துவதுபோல, அந்த
வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்.

ஆகவே இயேசு சிலுவையில்
தொங்கின போது ‘முடிந்தது’
என்று சொன்னது நமது பாவ
மன்னிப்பிற்கான முழுக் கிரயத்தையும் அவர் செலுத்திவிட்டார் என்பதைக்
காட்டுகிறது.‘முடிந்தது’ என்கிற அந்த ஒரு வார்த்தையில் பல காரியங்கள்
அடங்கியிருக்கின்றன.

ஜேம்ஸ்: என்னென்ன காரியங்கள் ?

பீட்டர்:
(i) கல்வாரி சிலுவையைக் குறித்து கடவுள் திட்டமிட்டு முன்னறிவித்திருந்த எல்லாம் நிறைவேறி முடிந்தது.

(ii) பழைய ஏற்பாட்டில்
அவருடைய பாடுகளைக் குறித்து சொல்லப்பட்ட அத்தனை காரியங்களும் நிறைவேறி முடிந்தது.

(iii) உலகத்தின் பாவம் தீர்ந்தது,
முடிந்தது. அதாவது, பாவம் இனி ஒரு பிரச்சனையல்ல. ஏனென்றால் அதற்குப் பரிகாரம் வந்து விட்டது.எத்தனையோ தீராத வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, தீர்வு
வந்ததுபோல மனுக் குலத்தின் பாவவியாதிக்கும் தீர்வு வந்துவிட்டது.

(iv) இயேசு ஆவி, ஆத்துமா, சரீரத்தில்பட்ட பாடுகள் முடிந்தது.

(v) இயேசுவின் உலக வாழ்க்கை முடிந்தது.

(vi) மனுக்குலத்தின் மீட்பிற்காக அவர் செய்த எல்லாம் முடிந்தது.

ஜேம்ஸ்: ஏழாவது வாசகம் 7 )“பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” (லூக்கா 23:46)

பீட்டர்: ஆமா, இயேசு தன் ஜீவன் போகிற வேளையில் மகாசத்தமாய்க் கூப்பிட்டு இப்படிச்சொன்னார். இயேசு தம்முடைய பெலன், சக்தி எல்லாவற்றையும்
சிலுவையில் இழந்து ஒன்றும் செய்ய இயலாதவராய் மரணம்
அடையவில்லை.அதாவது, அவர்கள்

# இயேசுவை கொலைசெய்ததினால் அவர் மரிக்கவில்லை அவர் ஜீவாதிபதி ஜீவனைக் கொடுக்கிறவர்
அவரிடமிருந்து யாரும் ஜீவனை எடுக்க
முடியாது

#அவரே அதைக் கொடுத்தால்தான் உண்டு. ஆகவே, அவரே அதை
ஒப்புக்கொடுக்கிறார். அவர்
தலையை சாய்த்து, ஆவியை
ஒப்புக்கொடுத்தார்.

பொதுவாகச் சிலுவையில்
மரிப்பவர்கள் உயிர்போகும் நேரத்தில் மூச்சு விட முடியாமல் திணறி, தலையை நன்றாகத் தூக்கி, மூச்சு விட முயற்சிப்பார்களாம். மூச்சு விட முடியாமல், உயிர்போன பிறகு தலை
தொங்குமாம்.

ஜேம்ஸ்: அப்படியா ?

பீட்டர்: ஆமா, ஆனால் இயேசுவோ, தலையைச் சாய்த்து, பிறகு தம்
ஆவியை ஒப்புக்கொடுத்தார்.

#அவர்கள் சாகடித்ததால் அவர்
சாகவில்லை. அவரே தம் ஜீவனைஒப்புக்கொடுத்தார்
என்பதை இந்த வாசகம் நமக்கு  காட்டுகிறது.

இயேசுவின் சிலுவை மரணம் கடவுள் காலகாலமாய்த் திட்டமிட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நடப்பித்த ஒரு சரித்திரச்
சம்பவம் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்

ஜேம்ஸ்: Thank you நண்பா கல்வாரி சிலுவையில் இயேசு சொன்ன ஏழு வசனங்களையும் அதன் விளங்கங்களையும் ரொம்ப நல்ல Explain பண்ண... ரொம்ப பிரயோஜனமா இருந்தது....

பீட்டர்: All glory to Jesus alone, அவரின் சத்திய ஆவியானவர்தான் நமக்கு இந்த சத்தியங்களை விளக்கி சொன்னார்
சரி நண்பா நாம இன்னோரு நாள் மறுபடியும் சந்திப்போம்

ஜேம்ஸ்: OK டா  Bye, மறுபடியும் ஒருநாள் Meet பண்ணுவோம்....


ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

நமது அனுதின நற்செய்திகளை எல்லோருக்கும் அறிமுகம் செய்யுங்கள். வாட்ஸ்அப் செய்திகளுக்கு
Send Message Via WhatsApp
“Need Daily Good News  ”
to +917092 377669
#தனித்துவச்செய்தி

# இயேசு கிறிஸ்து சிலுவையில் சொன்ன ஏழு வாசகங்கள்: #பாகம்-1

பீட்டர்: ஹலோ நண்பா ஜேம்ஸ், எப்படி இருக்க ? எங்க போய்டு வர்றேன் ?

ஜேம்ஸ்: நல்லா இருக்கேன்டா, இன்னைக்கு Good Friday-ல அதான்
சர்ச்சுக்கு போய்ட்டு வர்றேன்

பீட்டர்: ரொம்ப நல்லது, இன்னைக்கு உங்க சபையில என்ன செய்தி கொடுத்தாங்க ?

ஜேம்ஸ்: வழக்கம் போல இயேசு சிலுவையில் தொங்கியபோது சொன்ன ஏழு வாசகங்களை பத்திதான் செய்தி,
அதுல எனக்கு நெறய கேள்விகள் இருக்குடா, நீ இப்ப Free யா இருந்தா எனக்கு அந்த ஏழு வசனங்கள் பற்றி கொஞ்ஜம் brief explain பண்றாயா ?

பீட்டர்: Oh! Sure நண்பா, நான் ஒவ்வொரு வாசகத்தையும் Explain பண்றேன்

ஜேம்ஸ்: OK நண்பா சொல்லு...

பீட்டர்: சொல்றேன் 1)“பிதாவே, இவர்களுக்கு மன்னியும்,தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே”
 (லூக்கா 23:34)
ஒரு சிறு குழந்தை தவறு செய்யும்போது அறியாமல் செய்து விட்டது என்பதை போல்  சொல்லி, சுலபமாக நாம்
மன்னிப்பதுபோல, இயேசு தம்மை கொடூரமான சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார். அதுமட்டுமல்ல அவர்கள் செய்கிறது
இன்னதென்று அறியாமல்
செய்துவிட்டார்கள் இவர்களை மன்னியும் என்று பிதாவை நோக்கி வேண்டுகிறார்...

ஜான்: இந்த இடத்துலதான் எனக்கு ஒரு doubt இருக்கு நண்பா ! இயேசுவின் கொலைக்குக் காரணமாக இருந்த ரோம அதிகாரிகளும், யூத மக்களும், அவரை சிலுவையில் அறைந்த போர்ச் சேவகர்களும் எப்படி இதை "அறியாமல்"
செய்திருக்க முடியும் ! அவர்கள் அறிந்தே தான் செய்தார்கள்,ஏன்னா அந்த நாட்டிலேயே  மிகக்கொடூரமான குற்றவாளியான பரபாஸ் என்கிறவனை  விடுதலையாக்க சொல்லி, நன்மைகளை மாத்திரம் செய்துவந்த இயேசுவை துன்பப்படுத்தி கொலை செய்கிறார்கள்,எப்படி அவர்கள் தெரியாமல், அறியாமல்
செய்வார்கள்.... ! ஆனால் இயேசு அவர்கள் அறியாமல் செய்கிறார்கள் என்கிறாரே ? எப்படி ?

பீட்டர்: இல்லா நண்பா அவர்கள் அறியாமல்தான் செய்தார்கள்
உண்மை என்னவென்றால்,
அன்றைக்கு நடந்தது "இயற்கைக்கு அப்பாற்பட்ட" ஒரு காரியம்.
இருளின் சக்திகள் இந்த மனிதர்களுடைய மனக்கண்களைக் குருடாக்கி,அவர்களது இருதயத்தைக் கடினப்படுத்தி,இப்படி ஒரு கொடூரச்செயலைச் செய்ய ஏவின.
தங்களுடைய சுயபுத்தியின்படி
செயல்படுகிற எவரும் இப்படி ஒரு நல்ல மனிதரைக் கொடூரமாகச் சிலுவையில்
அறைய மாட்டார்கள். ஆகவேதான் இயேசு, ‘இவர்கள் செய்வது
என்னவென்று தெரியாமல்
செய்துவிட்டார்கள்’ என்று
சொல்லி மன்னிக்கிறார்.

அது மட்டுமல்ல ஜேம்ஸ், இந்தச் சம்பவம்"கடவுளுடைய சித்தத்தின்படி
"நடந்தது என்று வேதம் கூறுகிறது.
 இவரை சிலுவையில் அறைந்த கைகள் மட்டும்தான் அக்கிரமக்காரரின் கைகள் என்றும்,இதற்கான திட்டமும், தீர்மானமும் கடவுளுடையது
மனு குலத்தின் பாவத்திற்கு
இயேசுவைச் சிலுவையில் பலியாக்கக் கடவுள் சித்தம் கொண்டிருந்தார். ஆகவே தான் இந்தச் சம்பவம் நடந்தது.

ஜேம்ஸ்: Oh!  ஆமா Correct தான் சரி, அடுத்த வாசகத்தை Explain பண்ணு நண்பா

பீட்டர்: OK டா  2)“இன்றைக்கு நீ என்னுடனே கூடப்பரதீசிலுருப்பாய்”
(லூக்கா 23:43) இரண்டு திருடர்களுக்கிடையே இயேசு சிலுவையில் தொங்கினார்.
இவர்கள் இருவரும் இரண்டு விதமானவர்கள் என்பதை நாம் கவனிக்கனும் அதில் ஒருவன் இந்த நல்லவருக்கு நேர்ந்த
கொடுமையைப் பார்த்து,
அவர் யார் என்பதையும், இது ஏன்அவருக்குச் சம்பவித்தது என்பதையும் புரிந்துகொண்டு, அவனது
மரணத் தறுவாயில் மனம்
திரும்புகிறான்.

இன்னொருவனோ, வாழ்நாள்
முழுவதும் குற்றம் செய்தது
மட்டுமல்லாமல், சாகும்போதும்
திருந்தாமல் தன் இருதயத்தைக்
கடினப்படுத்திக்கொண்டு,
“நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள்”
என்று இகழ்ந்து பேசி, மேலும் குற்றம் செய்கிறான்.

இதைக் கண்ட அடுத்தவன் அவனைக்கடிந்துகொண்டு,
நீ இந்த தண்டனைக்கு உட்பட்டவனாய் இருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்;
நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனைஅடைகிறோம்;
"இவரோ தகாததொன்றையும்
நடப்பிக்கவில்லையே" என்று இயேசுவுக்காய் மனம்வருந்துகிறான்..
அது மட்டுமல்லாமல், “ஆண்டவரே, நீர்
உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்”
என்று இயேசுவிடம் கூறினான். அவனது உள்ளத்தின் எண்ணங்களை இந்த வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. தான் பாவி என்றும்,சாகும் முன்பு கடவுளின் இரக்கத்தையும் மன்னிப்பையும்
பெற வேண்டும் என்றும் அவன் உணருகிறான். மேலும் இயேசு
"குற்றவாளியாக" மரிக்கவில்லை
என்பதையும், மனுக் குலத்தின்
"பாவத்திற்காக" மரிக்கிறார்
என்பதையும் இவன் புரிந்துகொண்டான் அது மட்டுமல்லாமல், இயேசு இரட்சகர் என்றும், சிலுவையில் மரிக்கிற இவர்
ஒருநாள் அரசாளுவார் என்றும்,அந்த ராஜ்யத்தில் அவரோடுகூடத்தானும்
இருக்க வேண்டுமென்றும் இவன் விரும்புகிறான்.அதையே இயேசுவிடம்  வெப்படுத்தியும் காண்பிக்கிறான்...

#இப்படி தன்னுடைய வாழ்க்கையில்
திருந்தும்படியாக அவனுக்குக்
கொடுக்கப்பட்ட அந்தக் "கடைசி வாய்ப்பை"இவன் சரியாகப் பயன்படுத்திக் கொண்டான்.
பாவ மன்னிப்பைப் பெற்று,
மோட்சத்திற்குத் தகுதியுள்ளவனாகிவிட்டான்.

#இன்னொருவனோ,அவனுக்கு மரணத் தறுவாயில் கொடுக்கப்பட்ட "இறுதி வாய்ப்பையும்" கூடத்தவற விட்டுவிட்டான்.இன்றைக்கும் மனிதர்கள் இப்படி "இரண்டு"
விதமாகத்தான் இருக்கிறார்கள் என்பதை இந்த இரண்டு மனிதர்கள் மூலம் நாம் காண முடிகிறது.
இந்த மனிதர்களுக்கு நடுவேதான்
இயேசு சிலுவையில் தொங்கினார்.

ஜான்: Super explanation... நண்பா...
Continue பண்ணு....

பீட்டர்: Glory to Jesus... அடுத்து மூன்றாவது வாசகம்.. 3)“இயேசு தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே,அதோ, உன் மகன் என்றார்.
பின்பு அந்தச்சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்”
(யோவான் 19:26-27).

இயேசு பிறப்பதற்கு முன்னரே, இவர் உலக இரட்சகர் என்பதை தேவதூதன் உலகத்திற்கு அறிவித்திருந்தான்.
மேலும், சிலுவையின் கோர மரணத்தின் மூலமாகத்தான் இவர் உலகத்தை இரட்சிப்பார் என்பதை சிமியோன் என்னும் ஒரு மனுஷன்,
“உன் ஆத்துமாவை ஒரு
பட்டயம் உருவிப்போம்” என்று
தீர்க்கதரிசனமாக மரியாளுக்கு
அறிவித்திருந்தார். இதெல்லாம் அறிந்தவளாகத்தான் இயேசுவின் தாயாகிய மரியாள் சிலுவையின் அருகில் நின்றிருந்தாள்.

ஜான்: ஆமா... அதனால்தான் மரியாள்  மார்பில் அடித்துக்கொண்டு ஓலமிட்டு,
ஒப்பாரி வைக்கவில்லையோ !

பீட்டர்: ஆமா நண்பா !  இவைகள் எல்லாம் கடவுளின் சித்தப்படி நடக்கிறது என்பதை நன்கு அறிந்திருந்தாள்,
இயேசுவும்,அந்த வேதனையின் நேரத்தில்கூடத் தன்னுடைய தாயின் எதிர்காலப் பராமரிப்பிற்குத்
தேவையானதைச் செய்தார்.
சிலுவையில் தொங்கும்போது கூட,
“உன் தகப்பனையும் தாயையும்
கனம்பண்ணுவாயாக” என்ற
கட்டளையின்படி தன் தாயை
யோவானிடத்தில் ஒப்படைத்தார்.
இதான் மூலம் இயேசு கடவுளுடைய கற்பனைகளைக்கைக்கொள்ளத் தவறவில்லை என்பதையும், நாமும் நம்முடைய பெற்றோரைக் கனப்படுத்த வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.

ஜான் : நான்காவது வாசகம்
4 )“ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்”
(மத்தேயு27:46). Correct டா ?

பீட்டர்: Correct தான்....ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி என்பதற்கு “என் தேவனே!
என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று அர்த்தமாகும்..

ஜான் : இந்த வசனத்திலயும் எனக்கு ஒரு Doubt இருக்கு பீட்டர், நல்ல காரியங்களுக்காக உயிரை விட்ட ஏகப்பட்ட மகான்கள் தைரியத்தோடும்,
சந்தோஷத்தோடும் தங்கள் உயிரை விட்டார்கள் என்று சரித்திரம் கூறுகிறது. ஆனால் இயேசு மட்டும் ஏன் இப்படி மிகுந்த சத்தமிட்டுக்கதற வேண்டும் ? கடவுளுடைய சித்தத்தை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு மரிக்க வேண்டியதுதானே ? அப்படினு நான் கேட்கலப்பா சில இந்து நண்பர்களும்,இஸ்லாமிய நண்பர்களும் கேட்குறாங்க.....

பீட்டர்: கண்டிப்பாக இதற்கு நாம் அவர்களுக்கு சரியான விளக்கத்தை கொடுத்து புரியவைக்க வேண்டும்...

#இயேசு கிறிஸ்துவின் மரணத்தை போல் உலகத்தில் எவரும் இதுவரை இப்படிப்பட்ட ஓர் "கோரமரணத்தை" அனுபவித்ததில்லை,
அனுபவிக்கப்போவதுமில்லை. ஏனென்றால்....

#உலகத்தின் பாவம் முழுவதும் அவர்மீது அன்றைக்கு சுமத்தப்பட்டது.
அந்தப்பாவத்திற்கான தண்டனையையும் அவர் தம்மீது ஏற்றுக்
கொண்டார். இது எவருமே அறிந்திராத
சொல்லமுடியாத மிகப்பெரிய வேதனையை அவருக்குத்தந்தது.

#இயேசு நித்திய நித்தியமாக கடவுளோடுகூட இருந்த தேவகுமாரன்.
ஆனால், இவர் மனுக்குலத்தின் பாவத்தை சுமந்தபோது,பாவத்தை நோக்கிப்பார்க்கக்கூடாத (ஆபகூக்1:13) சுத்தக் கண்களை உடைய தேவன் இவரிடத்தில் இருந்து தமது
முகத்தைத் திருப்பிக்கொள்ள
வேண்டியதாயிற்று.

#இது எல்லா சரீர வேதனையைக் காட்டிலும் மிகப் பெரிய வேதனையை இவருக்கு உண்டாக்கிற்று.ஆனால் இதன் மூலம் மனுக்குலத்திற்கு மிகப் பெரிய நன்மைகளும் உண்டாயிருக்கிறது.கடவுள் கொடுத்திருக்கிற வாக்குத் தத்தங்கள்
எல்லாவற்றிலும் மிகவும் மேலான வாக்குத் தத்தம்........
“நான் உன்னை விட்டு
விலகுவதுமில்லை, உன்னைக்
கைவிடுவதுமில்லை” என்கிற வாக்குத்தத்தம்தான்.

#நம்மில் ஒருவரையும் (அதாவது) இயேசுகிறிஸ்துவை விசுவசிக்கிறவர்களை கடவுள் கைவிடாமலும், விலகாமலும் இருக்க வேண்டும் என்பதால் தான்,இந்த ஒருவர் மீது நம்முடைய பாவங்கள்
எல்லாவற்றையும் சுமத்தி, இவரைச் சிலுவையில் அதன் நிமித்தம் கைவிட வேண்டியதாயிற்று. "நம்மில் ஒருவரையும் ஒருபோதும் கைவிடாமல்
இருப்பதற்காகவே கடவுள் இயேசுவைச்சிலுவையில் கைவிட்டார்"

இப்படிப்பட்ட தாங்கிக்கொள்ள முடியாத
இந்த வேதனையின் காரணமாகத்தான் இயேசு, “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக்கைவிட்டீர்” என்று கதறினார். இதையெல்லாம்
அறிந்து கொள்ளாத காரணத்தினால்தான்
சிலர் "தன்னையே காப்பாற்றிக்
கொள்ள முடியாத இவரால்
நம்மை எப்படிக் காப்பாற்ற முடியும்"?
என்று தங்கள் அறியாமையில்  கேட்கிறார்கள்..... அவர்களின் அறியாமை கண்கள் திறக்கப்பட நாம் ஜெபித்துக்கொள்வோம்
சரி நண்பா, மீதமுள்ள மூன்று வசனத்தை பற்றிய விளக்கத்தை நான் Evening சொல்றேன்....

ஜான்: OK நண்பா,...Evening மறுபடியும் சந்திப்போம்.....

தொடரும்......

ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

நமது அனுதின நற்செய்திகளை எல்லோருக்கும் அறிமுகம் செய்யுங்கள். வாட்ஸ்அப் செய்திகளுக்கு
Send Message Via WhatsApp
“Need Daily Good News  ”
to +917092 377669

Tuesday 22 March 2016

#தனித்துவச் செய்தி; #தாழ்மை

இயேசு கிறிஸ்து பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்; பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்.
(யோவான் 3: 30-31)

பரத்: யோவான் ஸ்நானன்,
யூதர்களுக்கு மனம் திரும்புதலுக்கான  ஞானஸ்நானம் கொடுத்துவந்தவர் யூதர்கள் மத்தியில் ஒரு பிரபல
தீர்க்கதரிசியாக அங்கிகாரம் பெற்றவர்
அப்படிப்பட்ட யோவானின் வாஞ்சையை பாரு பிரவீன், நான் சிறுகவும்
இயேசு கிறிஸ்து பெருகவும் வேண்டும்
என்று வாஞ்சிக்கிறார்.

பிரவீன்: ஆமா தான் ஒரு பிரபல தீர்க்கதரிசியாக இருந்தாலும்,
தான் பூமியிலிருந்து உண்டானவன்
என்பதை அவர் மறக்கவில்லை
உன்னதத்திலிருந்து வந்த இயேசுவே எல்லோரிலும் மேலானவர் என்று அறிக்கையிட்டு கர்த்தராகிய இயேசுவின் நாமத்தை உயர்த்துகிறார்... இயேசுவின் பாதரட்சையின்
வாரை அவிழ்ப்பதற்கு கூட நான் எனக்கு தகுதி இல்லை என்று சொல்லி தன்னை முற்றிலுமாக தாழ்த்துகிறார்..

பரத்: இன்றய காலத்தில் தன்னை ஒரு தீர்க்கதரிசியாக பிரகனடப்படுத்தி காட்டுகிற அனேகர், நான் பெருக வேண்டும்...என் பெயர் மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும், எங்கள் ஊழியத்தை மட்டுமே மக்கள் வரவேற்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்..

பிரவீன்: பல விசுவாசிகள் கூட தனக்கு புகழ் கிடைக்க வேண்டும்,பாராட்டு கிடைக்க வேண்டும், தன் பெயருக்கு மகிமை உண்டாக வேண்டும் என்று விரும்புகிறார்கள்,சிலர் தன்னை மற்றவர்கள் மத்தியில் நல்லவராக காட்டப்பட வேண்டும் என்பதற்காகவே,பிறர் பார்க்கும்
படி  நன்மைகள் செய்பவர்களாக நடிக்கிறார்கள்..

பரத்: ஆமா இவைகள் எதுவும் இயேசுவின் நமத்திற்கு மகிமைகொண்டுவராது
நம்முடைய ஊழியத்தை மற்றும் வாழ்க்கையை  மற்றவர்கள் பார்க்கும்பொழுது இயேசு கிறிஸ்து அவர்களின் பார்வையில் உயர்ந்திருக்க வேண்டும், அவரின் நாமத்தின் மகிமைக்கு மட்டுமே நாம்மால்  செய்யப்படுகிற செயல்கள் இருக்க வேண்டும்...

பிரவீன்: ஆமா நண்பா நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில்,உலகத்தனமான மனிதர்களிடம் இல்லாத பண்புகளாகிய  தேவ அன்பு, நீடிய பொறுமை, சாந்த குணம், நிதானமான பேச்சு, எதிலும் நேர்மை உண்மை இவைகளை பார்த்து,
கிறிஸ்தவர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று  மற்றவர்கள் சாட்சியளிக்க வேண்டும்
அது இயேசு கிறிஸ்துவின் நாமத்தை மிகவும் மகிமைப்படுத்தும்..

பரத்: அதோடுகூட,நாம் தேவனுக்கு முன்பாக நம்மை தாழ்த்தி அவரை உயர்த்தினால் அவர் நம்மை உயர்த்துவார்,இதை வேதத்தில் நாம் பல சம்பவங்களில் பார்க்கலாம், குறிப்பாக யோவான் ஸ்நானன் இயேசுவின் பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கு கூட நான் எனக்கு தகுதி இல்லை என்று சொல்லி தன்னை முற்றிலுமாக தாழ்த்துகிறார்
(யோவான் 1: 27) ஆனால் இயேசு யோவான் ஸ்நானனை "ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை" என்று அவனை உயர்த்துகிறார் (மத்தேயு 11:11)

பிரவீன்: ஆமா பரத்,நம்மை,நம்முடைய ஊழியத்தை,நம்முடைய செயல்படுகளை மற்றவர்கள் புகழ வேண்டும் என்று நாம் ஒரு துளியளவும் விரும்பக்கூடாது,எல்லா புகழும் தேவனுக்கே போய் சேரவேண்டும் என்றுதான் நாம் விரும்ப வேண்டும்,
நமக்கு உயர்வையும்,மேன்மையையும் தேவன் நிச்சயமாகவே கொடுப்பார்.

ஆமென்... அல்லேலூயா...

கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
(கலாத்தியர் 2: 20)

=======================

ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

நமது அனுதின நற்செய்திகளை எல்லோருக்கும் அறிமுகம் செய்யுங்கள். வாட்ஸ்அப் செய்திகளுக்கு
Send Message Via Whatsapp
“Need Daily Good News  ”
to +917092 377669