Monday 16 November 2015

கிறிஸ்துவின் ஜீவனை உடைய நாங்கள்

கிறிஸ்துவின் ஜீவனை உடைய நாங்கள்........
மலை போல் இருக்கும் பிரச்சினைகளை
சமுத்திரத்திற்கு நகர்த்துவோம்...
மதில் போல் நிற்கும் தடைகளை துதி செய்து நொறுக்குவோம் ....

அவிசுவாசமாய் ஆர்ப்பரிக்கும் அதைரிய அலைகளை அதட்டி அமைதியாக்குவோம்...
விசுவாச வாழ்கையை சீர்படுத்தி கர்த்தருக்கு வழியே ஆயத்தமாக்குவோம்...

கொந்தளிக்கும் பிரச்சினைகளை தேவ வார்த்தையால் கட்டிப்போடுவோம்...
தத்தளிக்கும் சூழ்நிலையில்  விசுவாச அறிக்கை செய்து  
தப்பி பிழைப்போம்...

இரைச்சல் தரும் சத்துருவின் சத்தத்தை கேட்க மறுப்போம்...
விடுதலை தரும் ஆவியானவரின் சத்ததை கருத்தாய் கவனிப்போம்...

இரவும் பகலும் இறைவனுடைய வேதத்தை தியானித்து இருப்போம்...
இன்னும் பல பெரிய காரியங்களை எங்களுக்குள் இருக்கும் பெரியவரால் செய்து முடிப்போம்...

ஆம் என் சகோதர சகோதரிகளே !

 இயேசுவின் நாமத்தினால்
தடைகளை தகர்ப்போம்
புது வழிகளை அமைப்போம்
சரித்திரம் படைப்போம்
பொய் வழிகளை வெறுப்போம்
சத்தியத்தில் நிலைப்போம்
சாத்தானை எதிர்ப்போம்
சர்ப்பங்களை மிதிப்போம்
சாவை ஜெயிப்போம்

ஆமென்

ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

No comments:

Post a Comment