Tuesday 17 November 2015

(9) பரிசுத்தவான்களின் ஜெபம் தேவனுக்கு முன்பாக தூபமாக செலுத்தப்படுதுல இதுக்கு என்ன சொல்ற ?


அந்தோனி: திருவெளிப்பாடு 5:8, 8:3,ல் பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபம் தேவனுக்கு முன்பாக செலுத்தப்படுகிறது.
அப்படீனு எழுதியிருக்குல இதுக்கு
நீ என்ன சொல்ற ?

பீட்டர்: பரிசுத்தவான்கள் என்றால் யார் ?

அந்தோனி: எங்க திருச்சபை யாரை பரிசுத்தவான்னு சொல்லுதோ அவங்க தான்பரிசுத்தவான்.

பீட்டர்: உங்க திருச்சபை சொல்றதெல்லாம் இருக்கட்டும்.
தேவனுடைய வார்த்தைகள் யாரை பரிசுத்தவான் என்று சொல்கிறதுனு கொஞ்சம் கவனி

இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற நாம் இயேசுவின் நாமத்தினாலும், தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்
(1கொரி 6: 11)என்றும் இயேசுவே நமது பரிசுத்தமாக இருக்கிறார் (1கொரி 1:31) என்றும் நம்முடைய சரீரம் தேவன் வாசம் செய்யும் பரிசுத்த ஆலயம் (1கொரி 3:17) என்றும் தேவனுடைய வார்த்தைகளுக்குள்ளான அதாவது கிறிஸ்து இயேசுவுக்குள்ளான விசுவாசிகளாகிய நாம் யாவரும் பரிசுத்தவான்கள்,(பிலி 4: 21)
(எபே 4:12) என்றும்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தொழுதுகொள்கிற அனைவரும் பரிசுத்தவான்கள்
(1கொரி1:2 )என்றும் நாம் மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷன் என்றும் அந்த புதிய பரிசுத்த மனுஷனை தரித்துக்கொள்ளுங்கள்
(எபே 4: 24) என்றும் தேவனுடைய வார்த்தைகள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற நம்மை பரிசுத்தவான் என்று அங்கீகாரப்படுத்துகிறது

அந்தோனி: அப்படியா ! ஆனா எங்க திருச்சபையில, பாவியாக இருக்கிற எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள், பாவியாக இருக்கிற எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்று அடிக்கடி சொல்லிக்கொடுத்து எங்களை பாவிகள் என்று அங்கீகாரப்படுத்துகிறார்களே !

பீட்டர்:சாத்தான் தான் எப்போதுமே தேவனுடைய வார்த்தைகளுக்குஎதிராக செய்யும் படி சொல்லிக்கொடுப்பான்

அந்தோனி: அப்ப பரிசுத்தவான்களின் ஜெபம் என்றால் அது நம்முடைய ஜெபம் தானா ?அது தான் தேவனுக்கு முன்பாகதூபமாக செலுத்தப்படுகிறதா ?

பீட்டர்: ஆமா! அந்தோனி.இது குறித்து ஆதி பரிசுத்தவானாகிய தாவீது இவ்வாறு சொல்கிறார் என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும்,என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது.(சங் 141: 2)

அந்தோனி: !!!!!!


(தொடரும்....)

ஜீவ வழி-LIVINGWAY

www.facebook.com/lwcomm


No comments:

Post a Comment