Monday 16 November 2015

(8) நீங்க மட்டும் உங்க பாஸ்டர்கிட்ட எங்களுக்காக ஜெபம் பண்ணுங்கனு சொல்லலாம் ! ஆனா நாங்க எங்க புனிதர்களிடம் எங்களுக்காக ஜெபம் பண்ணுங்கனு சொல்லக்கூடாதா ? இது என்னயா நியாயம் ?




கிறிஸ்துவுக்குள் என் அன்பு சகோதர சகோதரிகளே!இந்த பதிவை படிப்பதற்கு முன்பு இதற்கு முன்பாக வெளியிடப்பட்ட அந்தோனி,பீட்டர் உரையாடல்கள் அடங்கிய அனைத்து பதிவுகளையும் தயவுசெய்து முழுமையாக படிக்கவும் நன்றி

அந்தோனி: இயேசு கிறிஸ்து, ஆவியானவர் நமக்காக தேவனிடத்தில் வேண்டுதல் செய்கிறார் என்றும், நமக்காக பரிந்து பேசுகிறார் என்றும்இயேசுவின் இரத்தம் நமக்காக நன்மையானவைகளை பேசுகிறது, புனிதர்கள்யாரும் பரிந்து பேசுகிறது கிடையாது இது தான் வேதாகமத்தின் படி சத்தியம்.

பீட்டர்: ஆமா வேதாகமம் சொல்வதுதான் சத்தியம்

அந்தோனி: சரி சரி ஓ.கே ... ஆனா எனக்கு ஏதாவது இக்காட்டான சூழ்நிலை வரும் போது நான் உன்னிடம் எனக்காக ஜெபம் பண்ணு என்று கேட்டுருக்கேன்...

உனக்கும் அதே மாதி நிலைமை ஏற்பட்டா நீயும்... உங்க பாஸ்டரிடமோ இல்ல வேறயாரிடமோ சொல்லி உனக்காக ஜெபிக்க சொல்லியிருப்ப....

பீட்டர்: ஆமா....

அந்தோனி: இந்த பூமியில் உயிரோடிருக்கும் மனிதர்களிதர்களிடம் நமக்காக வேண்டிக்கொள்ள சொல்லாம் அது தப்பு இல்ல ! ஆனா தேவனுக்காக வாழ்ந்து மரித்து பரலோகத்தில் இருக்கிற புனிதர்களிடம் நமக்காக வேண்டிக்கொள்ள சொன்ன மட்டும் தப்பா ? இது என்னயா நியாயம்?

பீட்டர்:அந்தோனி இந்த பூமியின் உயிரோடு இருக்கிறவங்க,பூமியின் உயிரோடு இருக்கிறவங்களுக்காக தேவனை நோக்கி ஜெபங்களையும் விண்ணப்பங்களையும் செய்யவேண்டும்.
இதையே நம் வேதாகமம் போதிக்கிறது

மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள் என்றும் அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது என்றும் சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற எதிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை.
(பிரசங்கி 9:5-6) சொல்கிறது மற்றவர்களுக்காக ஜெபம் செய்ய வேண்டும் மத்தேயு 5: 44
1தீமோத்தேயு 2:1 யாக்கோபு 5:16
என்று வேதத்தில் மரித்துப்போன விசுவாசிகளிடம் சொல்லவில்லை
இந்த பூமியில்உயிரோடிருக்கும் விசுவாசிகளிடம் தான் சொல்லி இருக்கு

அந்தோனி: அப்படியா ?

(தொடரும்....)

ஜீவ வழி-LIVINGWAY

www.facebook.com/lwcomm


No comments:

Post a Comment