Saturday 9 June 2018

எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது

#ஜீவவழியின் நற்செய்தி

எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. (ஏசாயா 60: 1)

உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1: 9)

என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.(யோவான் 12:46)

பரத்: இருள் மிகவும் மோசமானது,
எந்த மனிதன் இருளில் இருக்க விரும்பமாட்டான்,இருளில் நடக்கிறவன்  தடுமாறி,விழுவான், தனக்கு முன்னால் என்ன இருக்கு என்பதை பார்த்து
அவன் நடக்கமுடியாது.

பிரவீன்: ஆமா இரவு நேரத்துல,
வீட்டுல மின்சாரம் போய்விட்டால், மின்சாரம் திரும்ப வரும் வரை எந்த மனிதனும்,சும்மா அமர்ந்திருக்க மாட்டான்,உடனே எழுந்து விளக்கை ஏற்றிவைப்பான், இருள் அவனுக்கு ஏற்றதல்ல என்ற உணர்வு இயற்கையாகவே மனிதனுக்கு இருக்கு.

பரத்: இருள் இருக்கிற இடத்தில் வெளிச்சம் வந்ததும்,அந்த இடத்தில் எந்தெந்த பொருட்கள் இருக்கின்றன, எந்த நிலையில் இருக்கின்றன என்பதைத் தெளிவாய்க் காட்டும். சரியில்லாதவைகளைச் சரிபடுத்த உதவும்.

பிரவீன்: தேவன் சிருஷ்டிப்பில், இருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் சொன்னார், அவர் மனிதனுடைய இருதயத்தில் வெளிச்சத்தை பிரகாசிக்கப்பண்ண விரும்புகிறார்.

பரத்: ஆம் அந்த மெய்யான ஒளி
இயேசு, ஆண்டவராகிய இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொண்ட  ஒவ்வொரு மனிதனிலும் ஒளி இருக்கிறது.. அந்த மனிதன் இருளின் தீமையான செயல்களை விரும்ப மாட்டான்... இருளில் இருந்த போது அவன் விரும்பி செய்த பாவமான காரியங்களை வெறுப்பான்,

பிரவீன்: நம்மில் அனேகர்,
ஒளியாகிய இயேசுவினிடம் வரமல்  இருக்க காரணம்,அவர்கள்
ஒளியை பகைக்கிறார்கள்,

"பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்".
(யோவான் 3: 20)

பரத்: இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருக்கிறேன்,
தேவனை அன்பு செய்கிறேன் என்று சொல்லி,அவர் நம்மிடம் காட்டிய உண்மையான அன்பை மற்றவர்களிடம் காட்டாமல், பகை உணர்வுடன் இருக்கிற எந்த மனுஷனும், தான் ஒளியில் இருப்பதாக எண்ணிக்கொண்டு இருளிலே இருக்கிறான்...

தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? (1யோ4: 20)

எனவே ஒளியாகிய தேவனோடு உள்ள உறவில் நாம் வளர்ந்து..ஒளியாகிய இயேசுவின் வழியில் நடந்து.. அந்தகார இருளை கடந்து.. இன்னம் நாம் அதிகமதிகமாக பிரகாசிப்போம்...
உலகத்திற்கு வெளிச்சமாக இருப்போம்..

=======================

ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது

#ஜீவவழியின் நற்செய்தி

ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.

(1 நாளாகமம் 29:12)

பரத்: தேவனுடைய வார்த்தைகள் வல்லமையுள்ளது. தேவன் நமக்கு கொடுக்கும் வாக்குத்தத்தம் நிறைவானது.ஒவ்வொரு நாளும் தேவன் தம்முடைய வார்த்தை களினாலே நம்மை நிறைந்து நடத்தி வருகிறார்.தேவன் நமக்கு தரும் வார்த்தைகளை விசுவாசித்து தியானித்து அறிக்கை செய்து ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்வோம்.

பிரவீன்: ஆமா கர்தருடைய வார்த்தை இவ்வாறாக சொல்கிறது.....

"ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்"(1 நாளா 29:12)

பரத்: ஆமா பிரவீன், இந்த வார்த்தையானது ஜெபமாகவும், துதியாகவும் தேவ சமூகத்திலே, தாவீது மூலமாக ஏறெடுக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட ஜெபமும் விசுவாச அறிக்கையும் தான் ஆட்டு மந்தைக்கு பின் சென்ற தாவீதை அரசனாக்கியது....

பிரவீன்: ஆம் நண்பா! ஐசுவரியமும் கனமும் தேவனிடத்திலிருந்து நமக்கு வருகிறது.. அவர்தான் எல்லாவற்றையும் ஆளுகிறவர், அவருடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் அவருடைய கரத்தினால் ஆகும்,
அவர் நம்மையும் மேன்மைப்படுத்துவார்
இன்னும் பலப்படுத்துவார்... ஆமென்

பரத்:ஆமா நண்பா இது இன்று நமது விசுவாச அறிக்கையாகவும்,ஜெபமாகவும் இருக்கட்டும்...

பிரவீன்: ஓகே நண்பா!

பரத்: நம் தேவன் நம்மை கீழாக
அல்ல, மேலாக்கவே விரும்புகிறார். அவர் நம்மை குப்பையில் அல்ல கோபுரத்தில் வைக்க விரும்புகிறார்,அவர் நம்மை புழுதி வைக்க அல்லபிரபுகளோடும்,
ராஜாக்களோடும் வைக்கவே விரும்புகிறார்...

பிரவீன்: ஆமா அதுமட்டுமல்லாமல்
அவர் நம்மை அடிமையாக அல்ல அனைத்தையும் கீழ்படுத்தி ஆண்டுகொள்ளும் அரசனாக  வைக்கவே விரும்புகிறார்.நாம் வறுமையில் வாடி இருப்பது அவரின் சித்தமல்ல,நாம் எல்லா ரீதியிலும் செழிப்பாக இருக்க வேண்டும் என்பதே அவரின் சித்தம்.

பரத்: ஆம் நம்மை உயர்த்தி அழகு பார்ப்பதே தேவனுக்கு மிகவும் விருப்பம். தேவ பிள்ளைகள் யாராக இருந்தாலும் தேவன் அவர்களை மேன்மைப்படுத்தவே சித்தமாக இருக்கிறார்

பிரவீன்: என்னை குறித்து  தேவனுடைய சித்தம் என்ன ? என்று அனேகர் கேட்கிறார்கள்,அதற்கு தேவன் கூறும்
பதில் நாம் நன்றாக இருப்பதுதான்.

பரத்: பெற்றவர்களுக்கு பிள்ளைகள் எப்போதும் உயர்வாக, எல்லாவற்றிலும் கனம் பெற்று, மேன்மையாக இருக்க வேண்டும் என்று விருப்புவார்களோ, அதை விட நம்முடைய தகப்பனாகிய தேவன் நம்மை எல்லாவற்றிலும் சிறந்தவர்களாக, நாம் மேன்மையாக வாழவே விரும்புகிறார்.

பிரவீன்: ஒரு சில மனிதர்கள் நம்மை மிகவும் தாழ்வாக பார்கலாம் ஆனால் தேவன் நம்மை தாழ்வாக பார்க்கிறவர் அல்ல, நம்மை கிறிஸ்துவுக்கு தனது சொந்த பிள்ளையாக பார்க்கிறார்.. விலையேறப்பெற்றவர்களாய்  பார்கிறார்.... நம்மை தாழ்வாக பார்க்கும் மனிதர்கள் கண்பார்க்கும் படி நம்மை மேன்மைப்படுத்தி அழகு பார்க்கிறவர் நம் கர்த்தர்..

ஆமென்... அல்லேலூயா....

உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும். (சங்கீதம் 18:35)


அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால்

#ஜீவ வழியின் நற்செய்தி

அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.
(1யோவான் 4:19)

ஜேம்ஸ்: தேவன் மீது நாம் கொண்டுள்ள,விசுவாசம்,நம்பிக்கை
என எல்லாம் அன்பில் இருந்தது தான் ஆரம்பமாகிறது..தேவ அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை

ஜான்: ஆமா தேவன் நம்மில் அன்பு கூர்ந்தார்,பிறகு நாம் அவரில் அன்பு கூர்ந்தோம்..அப்பரம் தான்
விசுவாசமும், நம்பிக்கையும் நம்மில் வளரத் தொடங்கியது.. அன்பில் இருந்து தான் விசுவாசமும்,நம்பிக்கையும் ஆரம்பிக்கிறது...
"அன்பு சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும்"(1கொரி13:7)

ஜேம்ஸ்: ஆமா நண்பா,ஆவிக்குரிய வாழ்வில் அன்பு முதலில் வருகிறது ஏனெனில் அன்பு தேவனிடமிருந்து ஆரம்பிக்கிறது.....
“அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்பு கூருகிறோம்” என்று
(1யோவான் 4:19) வசனம் நமக்கு நினைப்பூட்டுகிறது.

ஜான்: அதுமட்டுமல்ல,அன்பின் அதிகாரம் என்று கூறப்படும்
1 கொரிந்தியர் 13ல்“அன்பு ஒருக்காலும் ஒழியாது”.என்று விவரிக்கப்பட்டதின் மூலம் தேவனுடைய உண்மையான அன்பின் தன்மைகளை விளக்குகிறது.

ஜேம்ஸ்: விசுவாசமும்,நம்பிக்கையும் மிகவும் முக்கியம்தான்,
விசுவாசத்தினால் தான் நாம் நீதிமான்கள் ஆக்கப்பட்டிருக்கிறோம் (ரோமர் 5:1)...அப்பரம் நம்பிக்கை அது “நிலையும் உறுதியான ஆத்தும நங்கூரமாய் இருக்கிறது”.
(எபிரேயர் 6:19) ஆக விசுவாசம்,
நம்பிக்கை ஆகியவைகள் மிக முக்கியமானவைகள் தான் நான்
அதை மறுக்கவில்லை ஆனால்,
எல்லாவற்றையும் விட தேவ அன்பே பெரியது... ஏனென்றால் தேவன் அன்பாகவே இருக்கிறார் (1யோ 4: 8)
என்று வேதம் சொல்கிறது..தேவன்
அழிவில்லாதவராக இருப்பது போல்,அவரின் அன்புக்கும் அழிவில்லை....

ஜான்: ஆமா நண்பா,தேவனும் அவரின் அன்பும் நித்தியமானவைகள், முடிவில்லாதவைகள்,எனவே நாம் இந்த உலகில் மற்றவர்களிடம் பிரதிபலன் எதிர்பார்த்து நேசிக்கும் மனுஷுக அன்பை தவிர்ப்போம், எதையும் எதிர்பார்க்கமல் நேசிக்கும்
தேவ அன்பில் நடப்போம், அவரோடு கூட நித்திய நித்தியமாய்
நிலைப்போம்....

ஆமென்... அல்லேலூயா...

அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.
(1யோவான் 4: 8)


பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல

#ஜீவ வழியின் நற்செய்தி

பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல
நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.
(3 யோவான் 1:2)

பரத்: ஆவி,ஆத்துமா,சரீரத்தில், ஆத்துமாவே நினைக்கும் மற்றும் மறக்கும் தன்மை கொண்டதாக உள்ளது..இம்மையின்
சமாதானமான வெற்றி வாழ்வுக்கும்,மறுமையின் நித்திய  வாழ்வுக்கும் ஆத்தும வாழ்வே  காரணியாகிறது....

பிரவீன்: தாவீதின் சங்கீதம் 103:1-2 ல்
‘என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி,என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி,அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே’ என்று ஆத்துமாவை முன்னிலைப்படுத்தி தேவனை ஸ்தோத்திரிப்பதைப் பார்க்கிறோம்.
சங்கீதகாரன் ஆத்துமாவை நோக்கி கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே என்கிறான்... எனவே நினைப்பதும் மறப்பதும் ஆத்துமாவில் இயல்பாக இருக்க கூடிய பண்பு என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது..

பரத்: ஆத்துமா சத்தியத்தை குறித்த  அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல.
உலகத்தார் இந்த நிலையில்தான் இருக்கிறார்கள்.. இவ்வாறு இருந்தால் அவர்களின் ஆத்துமா அழிவுக்கு ஏதுவாக போய்விடும்...

பிரவீன்: ஆனால் விசுவாசிகளின் ஆத்துமா சத்தியத்தால் நிறைந்திருந்தால் நிச்சயம் வெற்றியும்  வாழ்வும் அவர்களை தேடி வரும்,
அவர்கள் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கவும் முடியும்....
அதைத்தான் நம் தேவனும் விரும்புகிறார்....

பிரவீன்: ஆமா!  நம் ஆத்துமா கர்த்தருடைய வார்த்தையின் மேல்  வாஞ்சையாய் இருக்க வேண்டும், கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறக்காத ஆத்துமா கொண்டவர்களாக இருக்க வேண்டும்.அவரை என்றும்  துதித்துக்கொண்டும்  ஸ்தோத்திரித்துக்கொண்டும் இருக்க கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும்....

பரத்: ஆமா நாம் நமது ஆத்துமாவை கர்தருடைய வேதத்தால் நிறைத்து, அதற்கு பயிற்சி கொடுக்க வேண்டும்,அப்படி செய்யும்போது, நாம் ஆவி ஆத்துமா சரீரம் வாழ்ந்து சுகமாய் இருக்கும்....

பிரவீன்: அதுமட்டுமல்ல கர்த்தருடைய வேதம் சோர்ந்து போன ஆத்துமாவை உயிர்ப்பிக்கும்.. அதன் விளைவாக பேதைகள் ஞானியாவர்கள்.....(சங் 19:7)என்று வேதம் போதிக்கிறது.. எனவே நாம் கர்த்தருடைய வசனத்தால் நம் ஆத்துமாவை நிறைந்து,அதிலே வளர்ந்து,செழித்து இருந்தோம் என்றால்..நமது ஆவிக்குறிய வாழ்விலும்,உலகப்பிரகாரமான வாழ்விலும், ஞான அறிவிலும் வளர்ச்சியும், வளமையும்,
செழிப்பும், நிச்சயம் காண்போம்.....

ஆமென்... அல்லேலூயா...

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி முழுமையானதும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.

(சங்கீதம் 19:7)