Sunday 13 November 2016

அர்த்தமற்ற வாழ்வை அர்த்தமாக்கும், அழியும் வாழ்வை அழியாமையாக்கும், கடவுள் வழங்கும் இலவச இரட்சிப்பு

அர்த்தமற்ற வாழ்வை அர்த்தமாக்கும்,
அழியும் வாழ்வை அழியாமையாக்கும்,
கடவுள் வழங்கும் இலவச இரட்சிப்பு
*************************************
நேற்று மதியம் Bank-ல் வரிசையில் நிற்கும் போது எங்களுக்கு முன்னாடி முதியவர்கள் சிலர் நின்றுகொண்டு இருந்தார்கள்... அவர்களில் ஒருவர்  இவ்வாறாக சொன்னார்...
"வாழத்தெரியாதவன் வாழும்
நாட்டில் ஆளத்தெரியாதவன் ஆட்சி செய்கிறான்" எல்லோரும் அவரை கவனித்தார்கள்,நாங்கள் அவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தோம்..
எங்களோடு நன்றாக  பேசினார்...
அவருக்கு எப்படியாது இந்த இடத்தில் சுவிசேஷத்தை சொல்ல வேண்டுமே என்ற எண்ணம் எனக்குள் ஓடியது,
அதற்கான சந்தர்ப்பத்தை கர்த்தர் அமைத்து தந்தார்...அவர் பெயர்
பழனி... அவர் திடீரென எங்களிடம்
இவ்வாறாக பேச ஆரம்பித்தார்..
அது எனக்கு சத்தியத்தை போதிக்க வசதியாக அமைந்தது...


பழனி: “நாம் ஏன் இந்த பூமியில  இருக்கிறோம்”? எதுக்காக இப்படி பேங்க்குள கால் கடுக்க கலையில இருந்து நிக்கிறோம்? இந்தப் பூமியில்
நாம் மிக குறுகிய காலமே வாழப் போகிறோம்.என்றாவது ஒரு நாள்
நம் வாழ்வு முடியப் போகிறது அப்ப
நாம் எதற்காக வாழ்கிறோம்?
அர்த்த மற்ற வாழ்வு.. அர்த்த மற்ற
சாவு இதுதான் நமது வாழ்க்கையா ?

டேனியல்: ஏன் அண்ணே இவளவு சலிப்பு உங்க வாழ்வின் நோக்கத்தை அறிந்து கொள்ளவும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழவும் வேண்டுமா அப்படினா நான் சொல்றத கொஞ்சம் கவனிங்க அதுக்கான
வழிய சொல்றேன்...
கவனிக்கிறீங்களா ?

பழனி: சொல்லுங்க தம்பி,எப்படியும்
நம்ம பேங்க்குள இருந்து வீட்டுக்குபோக சாயங்காலம் ஆகிடும்.. ஏதாவது பேசிக்கிட்டே இருந்தா பொழுது
போவது தெரியாது.. அதனால சொல்லுங்க..

டேனியல்: ஓ.கே ஐயா,சொல்றேன்,
ஆனா உங்க பொழுதுபோக்காக அல்ல,
உங்க நிலையில்லா வாழ்க்கையை,
நிலையான வாழ்க்கையாய்  மாற்றுவதுக்காய்....

பழனி: (ஆர்வத்துடன்) சரி சரி சொல்லுங்க தம்பி...

டேனியல்: ஆரம்பத்துல கடவுள் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.கடவுள் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார்,அது மிகவும்
நன்றாயிருந்தது.என்று கண்டார்...
கடவுள்  இவ்வுலகில் உள்ள அனைத்தையும் உண்டாக்கினார். அவருடைய படைப்பில் மிக சிறந்த படைப்பு மனிதனே, ஏனென்றால் கடவுள் மனிதனை தம்முடைய சாயலில் படைத்தார்,அவர் மனிதனை ஆணும் பெண்ணுமாக படைத்தார்

கடவுள் மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனிதன் ஜீவாத்துமாவானான்.கடவுள் மனிதனை நேசித்தார். கடவுள் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, அவர்களை ஆசீர்வதித்தார். கடவுள் மனிதனுக்கு சுயமாக முடிவெடுக்கும் திறனை தந்தருளினார்,ஆனால் மனிதன் அதை தவறாக பயன்படுத்தி கடவுளுக்கு கீழ்ப்படியாமற் போனான்.
பாவம் நம்மை கடவுளிடத்திலிருந்துப் பிரித்தது.....

மனிதனின் கீழ்ப்படியாமை நிமித்தம் பாவம் இவ்வுலகில் தோன்றியது. மனிதனின் இருதயத்தின் யோசனைகள் எல்லாம் பொல்லாப்பு நிறைந்ததாய் இருந்தது.ஆகவே பாவம் மனிதனை கடவுளிடம் இருந்து பிரித்தது. பாவம் என்பது கடவுளால்  விலக்கப்பட்ட செயல் அல்லது சிந்தனை ஆகும். நாம் அனைவரும் வழி விலகி நம்மை நேசிக்கும் உண்மையான கடவுளை விட்டு பின்னோக்கி சென்றோம்.

பாவத்தை விட்டு முற்றிலும் விலகி நன்மை செய்யும் நீதிமான் ஒருவராகிலும் இவ்வுலகில் இல்லை. பூமியிலே பாவம் பெருக மனிதன் தேவனை மறந்து போனான், மனிதனுக்கும் தேவனுக்கும் உள்ள இடைவெளியும் அதிகமாகி கொண்டே இருந்தது. பாவத்தின் சம்பளம் மரணம். நாம் எல்லோரும் பாவம் செய்து நரகத்தில் நித்திய மரண தண்டனை பெறுவதற்கு ஏதுவானோம்.

பாவம் நிறைந்த மனித இனத்தின் மீட்பிற்காக பாவ நிவாரண பலி தேவைப்பட்டது, ஆதலால் இயேசு கிறிஸ்து இவ்வுலகில் மனிதனாகப் பிறந்தார். இப்படியாக கடவுள் தம்முடைய ஒரே குமாரனை
தந்தருளி தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார். அவரை நம்புகின்ற அனைவருக்கும் நித்திய வாழ்வு உண்டு. பாவத்தின் நிமித்தம் கடவுளுக்கும் மனிதனுக்கும் ஏற்பட்ட இடைவெளியை நீக்க இயேசு கிறிஸ்து மத்தியஸ்தராக தோன்றினார்.கடவுள் ஒருவரே, கடவுளுக்கும் மனிதர்களுக்கும் மத்தியஸ்தர்  ஒருவரே. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த கிறிஸ்து இயேசு அவரே. அவர் நமது பாவங்களுக்காக பாவ நிவாரண பலியாக சிலுவையில் பலியாகி மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து,
விண்ணேற்றம் அடைந்து,நமது பரம தகப்பனாகிய கடவுளிடம் நமக்காக பரிந்து பேசிக்கொண்டு இருக்கிறார்
 இவ்வாறு கடவுள் உலகத்தார் மீது தான் கொண்ட தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார்.

பழனி: தம்பி... நீங்க கிறிஸ்டீனா !
நான் கிறித்தவ பள்ளிகூடத்துல தான் படிச்சேன்.. எனக்கு நெறய கிறித்தவ பாட்டுகள் தெரியும்.. ஆனா நீங்க இப்ப சொன்ன விஷயங்கள் எனக்கு புதுசு,
இதுக்கு முன்னாடி யாரும் எனக்கு இத
சொன்னது இல்லை,எனக்கு ஜீசஸ்-னா பிடிக்கும்...

டேனியல்: ரொம்ப நல்லதுங்க ஐயா,
இயேசுவை உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் போதாது அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவர் கட்டளை இட்டபடி நாம் நடக்க வேண்டும்...
அதுதான் கடவுளின் விருப்பம்
நாம் அனைவரும் நித்திய மரண தண்டனையில் இருந்து தப்புவதே கடவுளின் விருப்பமாகும். இயேசுவின் மரணத்தின் மூலமாய் நாம் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து இருந்து விடுதலை பெற்று அவருடைய உயிர்த்தெழுதலின் மூலமாய் நாம் புது வாழ்வு பெற்று இருக்கிறோம்.
இயேசு கிறிஸ்து மட்டுமே நித்திய மரணத்திலிருந்து மனிதனை விடுவிக்க கடவுள் கொடுத்த ஒரே வழியாகும். அவரே பரலோகத்திற்கு (மோட்சம்) செல்ல ஒரே வழி ஆவார். அவர் மூலமாய் அல்லாமல் யாரும் கடவுளிடம் சேர முடியாது.

பழனி: இயேசுவை ஏற்றுக்கொள்ள அவரை என் உள்ளத்தில் பெற்றுக்கொள்ள நான் என்ன செய்யனும் ஏதாவது பாதையாத்திரை? போகனுமா ? இல்ல பட்டினி கிடக்கனுமா வெள்ள ஜிப்பா போடனுமா ? செருப்பு போடாம நடக்கனுமா ? இல்ல இந்த போங்க்குக்கு முன்னாடி நிற்கிறமாதி ஏதாவது சர்ச்சுக்கு முன்னாடி போய் நிக்கனுமா ?
 எதாவது கிறித்தவ நிறுவனத்திற்கோ ஸ்தாபனத்துக்கோ நன்கொடை  கொடுக்கனுமா ?

டேனியல்: இயேசுவை உங்கள் வாழ்வில் பெற்று கொள்ள நீங்கள் எதையும் செய்ய வேண்டியது இல்லை.
இயேசுவை சொந்த இரட்ச்சகராக ஏற்றுக் கொள்ள, உங்கள் பாவ நிலையை உணர்ந்து, மனம் திரும்பி இயேசுவை விசுவாசித்தால் போதும். இயேசுவை நீங்கள் உங்கள் வாயினாலே அறிக்கையிட்டு,
தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உங்கள் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப் படுவீர்கள்.

************************************
இந்த உரையாடலை படித்துகொண்டிருக்கும் என் அன்பு சகோதரா,என் அன்பு சகோதரி
இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா ? இன்றே உங்கள் உள்ளத்தில் அவரை ஏற்றுக்கொளுங்கள், அர்த்தமற்ற வாழ்வை அர்த்தமாக்கி கொள்ளுங்கள்
அழிவுள்ள வாழ்வை அழியாமையாக்கி கொள்ளுங்கள்..

எல்லாம் இலவசம்

=======================
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome

marveljerome.blogspot.in

Monday 7 November 2016

மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது

#ஜீவ வழியின் நற்செய்தி

மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்த
து; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.

(ரோமர் 5:20-21)

ஜான்: தேர்வு எழுதியிருக்கிற ஒரு மாணவன் தேர்ச்சி பெறுவதற்கு குறைந்தபட்சம் 35  மதிப்பெண்கள் எடுக்கனும் அப்படீனு வச்சுகிருவோம்...
அவன் எழுதியிருப்பதற்கு 30 மதிப்பெண்கள் மட்டுமே கொடுக்க முடியும். திருத்துகின்ற ஆசிரியர் மதிப்பெண்களின் காரணமாக அவன் பெயில் ஆகி ஒரு ஆண்டை இழக்க வேண்டுமே என்று கருதி +5 என்று சேர்த்து அவனை தேர்ச்சிபெறச் செய்கிறார்.அந்த 5 மதிப்பெண்களைப் பெறுவதற்கு அவன் தகுதியில்லை. ஆனாலும் ஆசிரியரின் தயவினால் அவன் தேர்ச்சி பெறுகிறான்.
அவர் அவனுக்குக் கொடுத்த  மதிப்பெண்கள்தான்
"கிரேஸ் மார்க்".....அதாவது தகுதியற்றவனுக்கு கொடுக்கப்படும் ஈவு.அதைப்போல தகுதியற்றவர்களான நமக்கு தேவன் கொடுக்கும்
ஈவுதான் "கிருபை"

டேனியல்: ஆமா! கிருபை தேவனுடைய தன்மைகளில் ஒன்று.."கிருபை" என்றால் "தகுதியற்றவர்களுக்கு தேவனால் அருளப்படும் ஈவு"என்று பொருளாகும்.அந்த மாணவன் கூட
30 மதிப்பெண்கள் எடுத்திருந்தான்.
ஆனால் நமக்கோ எந்த தகுதியும் இல்லை. அப்படியிருந்தும் தேவன் அவருடைய மிகுந்த கிருபையினால் நாம் தேவனுடைய பிள்ளைகளாகும் சிலாக்கியத்தை பெற்றிருகிறோம். கிருபை என்ற வார்த்தையைப் பார்க்கும் போதெல்லாம் "தகுதியற்றவனுக்கு அருளப்பட்ட ஈவு" என்ற பொருள் நம்முடைய நினைவிற்கு வரவேண்டும்.

ஜான்: அநேகர் தங்களுடைய பிள்ளைகளுக்கு பெயர் சூட்டும்போது, ‘கிருபை’ என்றும், ‘கிரேஸ்’ என்றும் ‘தேவ கிருபை’ என்றும் பெயர் சூட்டுகிறார்கள். அநேகர்.... ஜெபிக்கும்போது, “கிருபையின் தேவனே, கிருபையில் ஐசுவரிய முள்ளவரே என்று தங்கள் ஜெபங்களை ஆரம்பிக்கிறார்கள்.

டேனியல்: ஏன் சிலர் தங்கள் வியாபார ஸ்தலத்திற்கு கிருபை,கிருபா...என்றும்
தங்களுடைய ஊழியங்களுக்கு ‘கிருபையின் ஊழியங்கள்’ என்றும்  பெயரை சூட்டுகிறார்கள்.
ஒவ்வொரு போதகர்களும் சபை
ஆராதனையை முடிக்கும் போது,
“கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையும், பிதாவாகிய தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக”
(2 கொரி. 13:14) என்று சோல்லி முடிக்கிறார்கள். இந்த ஆசீர்வாதத்தில் அவர்கள் முதலாவது வைப்பது இயேசுகிறிஸ்துவினுடைய "கிருபை".

ஜான்: ஆமா! தேவனுடைய கிருபையை நினைக்கும் போது உள்ளம் உருகி அழுகை வருகிறது நண்பா,

நாம் பாவிகளாயிருக்கையில்
அவர் நம்மைத் தேடி வந்தாரே!
அதுதான் அவருடைய கிருபை.
நம் பாவங்களையெல்லாம் கிருபையால் மன்னித்தாரே!
நம்மை தம்முடைய
சோந்தப் பிள்ளைகளாக அரவணைத்துக்கொண்டாரே!

டேனியல்: அதனாலதான்..... அப்போஸ்தலனாகிய பவுல்  இவ்வாறு சொல்லுகிறார்,

“கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு” (எபே. 2:8).

ஜான்: உலகில் மிகவும்
பிரபலமான போதகரிடம் அமெரிக்காவை சேர்ந்த ஒரு
வாலிபன் போய் இவ்வாறு
கேட்டான்.......,

பாஸ்டர் "என்னுடைய வாழ்க்கை ஓட்டத்தை பரிசுத்ததோடும் வெற்றியோடும்,ஓடி முடிப்பதற்கு
நான் என்ன செய்ய வேண்டும் ?
நான் பாவியாக இருக்கிறேன்,
பலவிதமான பாவ சோதனைகள் என் மேல் வந்து மோதுகின்றன.
விழுந்துவிடுவேனோ என்று
பயமா இருக்கிறது இதற்கு நீங்கள் சொல்லும் ஆலோசனை என்ன?” என்றான்.....

அதற்கு அந்த போதகர் இவ்வாறு
பதில் சொன்னார்......

அன்பு சகோதரனே ! நீ இயேசு
கிறிஸ்து உனக்காக கல்வாரி சிலுவையில் செய்து முடித்தவைகளே,உன் முழு உள்ளத்தோடு விசுவாசிப்பாய் என்றால்...நீ நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டு இருக்காமல்,கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறவனாய் இருப்பாய்,அப்படி நீ கிருபைக்கு கீழ்ப்பட்டிருந்தால்,பாவம் உன்னை  மேற்கொள்ள மாட்டாது என்று
வேதம் போதிக்கிறது...

"நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல்,கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிற படியால்,பாவம் உங்களை மேற்கொள்ள மாட்டாது"(ரோமர் 6:14).
இதை நீ விசுவாசிக்கிறாயா ?

"தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன்
தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்".
(1 யோவான் 3:9) இதை நீ விசுவாசிக்கிறாயா ? என்றார்

அந்த வாலிபன் அமைதியாக இருந்தான்...

பிறகு அந்த போதகர்...
மறுமொழியாக.....
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்,இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் நாம் நீதிமான்கள்
என்று வேதம் போதிக்கிறது.....
அது மட்டுமல்ல,இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற நாம் இயேசுவின் நாமத்தினாலும், தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்

(1கொரி 6: 11)என்றும் இயேசுவே நமது பரிசுத்தமாக இருக்கிறார் (1கொரி 1:31) என்றும் நம்முடைய சரீரம் தேவன் வாசம் செய்யும் பரிசுத்த ஆலயம் (1கொரி 3:17) என்றும் தேவனுடைய வார்த்தைகளுக்குள்ளான அதாவது கிறிஸ்து இயேசுவுக்குள்ளான விசுவாசிகளாகிய நாம் யாவரும் பரிசுத்தவான்கள்,(பிலி 4: 21)
(எபே 4:12) என்றும் கர்த்தராகிய
இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தொழுதுகொள்கிற அனைவரும் பரிசுத்தவான்கள்(1கொரி1:2 )
என்றும் நாம் மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய
சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷன் என்றும் அந்த புதிய பரிசுத்த மனுஷனை தரித்துக்கொள்ளுங்கள்
(எபே 4: 24) என்றும் தேவனுடைய வார்த்தைகள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற நம்மை பரிசுத்தவான் என்று அங்கீகாரப்படுத்துகிறது

எனவே புதிய உடன்படிக்கையின் அடிப்படையில் வேதாகமம் (விசுவாசியை) உன்னை குறித்து
என்ன சொல்கிறதோ அவ்வாறாக உன்னை #எண்ணிக்கொள்..
ஏனென்றால்..."அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே
அவன் இருக்கிறான்"(நீதி23:7)

"அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் #எண்ணிக்கொள்ளுங்கள்"
(ரோமர் 6:11)

அவ்வாறு நீ #எண்ணிக்கொள்ளும் போது.. உனக்கு விசுவாசம் வளர ஆரம்பிக்கும்...தேவ கிருபை
உனக்குள் செயல்பட ஆரம்பிக்கும்..
உன் வேத அடிப்படையிலான
உன் பரிசுத்த எண்ணங்கள்
செயல் வடிவம் பெற
ஆரம்பிக்கும்...

பிறகு பலவிதமான பாவ சோதனைகள்
உன் மேல் வந்து மோதினாலும்
நீ விழ மாட்டாய்,பாவம் உன்னை மேற்கொள்ளாது நீ பாவத்தை மேற்கொண்டு கிறிஸ்துவுக்குள்
வெற்றி சிறப்பாய்...

நான் அல்ல கிறிஸ்துவே!
என் கிரியை அல்ல கர்த்தருடைய
கிருபை..கிருபை என்று உன்னை கர்த்தருக்கு முன் எப்போதும் தாழ்த்தி
தேவகிருபைக்கு உன் வாழ்க்கை வழிகளை ஒப்புக்கொடுப்பாயானால், கிருபையினாலே உன்னுடைய
வாழ்க்கை ஓட்டம் பரிசுத்தத்தோடும் வெற்றியோடும் முடியும்.”என்றாரம்.....

டேனியல்: ஆமென்... அல்லேலூயா....

கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;

(எபேசியர் 2:8-9)

======================
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome

அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்

#ஜீவ வழியின் நற்செய்தி

டேனியல்: பாவத்தினால் மரித்து
தேவனைவிட்டு பிரிந்து அவரை
கிட்டி சேரமுடியாத ஒரு மோசமான
நிலையில் இருந்த நமக்காகாக
நம் இரட்சகராகிய இயேசு பரிகார பலியாகி, நம்முடைய பாவங்கள் துக்கங்கள் எல்லாவற்றையும் சிலுவையில் சுமந்து தீர்த்தார்.

ஜான்: இந்த சிலுவை பலியின்
மூலம் அவர் நம்மை தேவனோடு ஒப்புரவாக்கினார். இந்த நற்செய்தியை விசுவாசிப்பன் மூலம்  நாம்
"தேவனுடைய பிள்ளைகள்"
என்ற அந்தஸ்தையும் பாவமன்னிப்பையும்,நித்திய ஜீவனையும்,பரலோக வாழ்வின் நிச்சயத்தையும் பெறுகிறோம்..

"அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன்நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்."

(கொலோசெயர் 1:20-21)

டேனியல்: நாம் தேவனோடு
கிட்டி சேர முடியாதபடிக்கு
அவருக்கும் நமக்கும் இடையில்
இருந்த கட்டளைகளாகிய
நியாயப்பிரமாணத்தை
சிலுவையில் ஆணியடித்து
குலைத்தார் ...

"நமக்கு எதிரிடையாகவும் #கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து,
அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது,பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.
அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது"

(கொலோசெயர் 2:14-17)

ஜான்: நியப்பிரமாண உபதேசம்
அல்ல, சிலுவையை பற்றிய உபதேசமே
பாவ மனிதனை பாவத்திலிருந்து வெளிவர செய்கிறது, ஆனால் நியப்பிரமாணவாதிகளுக்கு சிலுவையை பற்றிய உபதேசம் பைத்தியகாரத்தனமாக
தோன்றும்..ஆனால் சிலுவையை பற்றிய உபதேசமே பாவ
மன்னிப்பை,பரலோக வாழ்வை தருகிறது.. இது விசுவாசத்தினால் வேலை செய்கிறது...

டேனியல்: ஆமா இயேசுவே நமது விசுவாசத்தின் துவக்கமும் முடிவுமாய் இருக்கிறார், அவரே ஆதியும் அந்தமுமாக,வழியும் சத்தியமும், ஜீவனுமாக இருக்கிறார். அவரே நமது இரட்சிப்பின் தலைவராக, உலகத்தில் வந்த எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கும் ஒளியாக, உலகத்தில் வந்த எந்த மனிதனையும் தமது விலையேறப்பெற்ற இரத்தத்தால் கழுவி சுத்திகரிப்பவராக,அவரே நமது சமாதான கர்த்தராக, தேவனுடைய ஒரே பேறான குமாரனாக, இருப்பவராகவே இருக்கிறவர்....

ஜான்: சரியாக சொன்ன
அவருடைய நாமமே அன்றி இரட்சிக்கப்படவதற்கு வேறொரு
நாமம் கொடுக்கப்படவில்லை.
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ,அத்தனை
பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி,அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
- (யோவான் 1:12).

ஆமா நம் பரலோக தகப்பனை
போல் அன்புள்ளவர் யாருமில்லை,
நமது பாவங்களை கழுவி நம்மை
இரட்சித்து, நம்மை பரலோக ராஜ்ஜியத்திற்கு பங்குள்ளவர்களாய் மாற்றும் இவரை விசுவாசிக்கிறவர்கள் யாரும் வெட்கப்பட்டு போவதில்லை. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ,தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று என்று
வேதம் சொல்கிறது....
எனவே இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற நாம்
பாக்கியவான்கள்...

ஆமென்... அல்லேலூயா...

அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்
; விசுவாசியாதவனோ,தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.

(யோவான் 3:18)

=======================
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome