Tuesday 17 November 2015

பாரம்பரியமா ? பரமனின் வார்த்தையா ?

இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்த
கிரயத்தால் மீட்டெடுக்கப்பட்ட நீதிமானே!
நீ சாத்தானின் வஞ்சக தந்திர கள்ள உபதேசத்தால் வஞ்சிக்கப்படாமல் உன் மனதை வேத வார்த்தைகளால் நிறைத்து காத்துக்கொள்...

ஏவாளும் ஆதாமும் ஏமாந்தது போல் நீயும் ஏமாந்துவிடாமல்
தேவனுடைய வார்த்தைகளை மட்டும் உன் இருதயத்தில் ஏற்றுக்கொள்...

பாரம்பரியம் என்று சொல்லிகொண்டு வேதாகமத்தில் இல்லாததை இயேசு கிறிஸ்து சொல்லாததை துனிந்து கடைபிடித்து உன் பந்தய பொருளை இழந்து பாதாளத்துக்கு போய்விடாதே!

அந்த போதகர் அப்படி போதிக்கிறார் இந்த பாதரியார்
இப்படி போதிக்கிறார் இவர்களில் யார் சொல்வது சத்தியம் என்பதை அவர்கள் வாதத்தை வைத்து முடிவு செய்துவிடாதே!

அவர்களில் யார் சொல்வது சத்தியம் என்பதை வேதத்தை வைத்து முடிவு
செய் !(யோவான்:17-17)
தேவனுடைய வசனமே "சத்தியம்"என்று
எழுதியிருக்கிறதே !

வேதத்தில் எழுதப்படாத பாரம்பரிய சபைகளில் உபதேசங்கள் சத்தியமாக இருக்குமோ? என்று உன் மனதில் நினைத்துக்கூட பார்த்து
விடாதே !(1கொரிந்தியர்:4-6)
எழுதப்பட்டதிற்கு மிஞ்சி எண்ணவேண்டாம் என்று
எழுதியிருக்கிறதே!


வேதத்தில் இல்லையென்றால் என்ன நாம் பாரம்பரியாமாக இதை தான் கடைபிடிக்கிறோம் இது தவறு இல்லை என்று யாராவது உனக்கு
போதித்தால் அவர் யாராக இருந்தாலும் சரி அவரின் போதனையை ஏற்றுக்கொள்ளாதே!(1பேதுரு:4-11)
ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின் படி போதிக்கடவன் என்று எழுதியிருக்கிறதே!

நான் மறுபடியும் எச்சரிக்கிறேன் வேதத்தில் இல்லாததை இயேசு கிறிஸ்து சொல்லாததை பாரம்பரியம் என்ற ஆட்டுத்தோலை போர்த்திக்கொண்டு வந்து பொய்களை போதித்து உன்னை பரலோகம் போகவிடாமல் தடுக்க பல
ஓநாய் கூட்டங்கள் சுற்றி இருக்கிறது...

எச்சரிக்கை!

ஆயிரம் பேர் வந்து ஆயிரம் சொல்லலாம் அதை விடு...
ஆண்டவருடைய வார்த்தை என்ன சொல்கிறது அதை மட்டும் எடு...

வானமும் பூமியும் ஒழிந்து போய்விடும் ஆனால் ஆண்டவருடைய
வார்த்தைகள் ஒருபோதும் ஒழிந்து போகாது...

உன் பாரம்பரிய வழி உன்னை நரகத்திலிருந்து தப்பிவிக்காது
தேவனுடைய வார்த்தையின் வழிமட்டுமே உன்னை நரகத்திலிருந்து தப்பிவிக்கும்...

கடைசி நாளில் நியாயதீர்ப்பில் நீ தேவனுக்கு முன்பாக நிற்கும்
போது தேவனுடைய வார்த்தைகளை புறம்பே தள்ளி நீ கடைபிடித்த வேதத்தில் இல்லாத பாரம்பரிய காரியங்களோ சடங்குகளோ
சம்பர்தாயங்களோ வந்து உனக்காக சாட்சி சொல்லப்போவது
இல்லை...(யோவான் 12 :48)
என்னைத் தள்ளி என் வார்த்தைகளை
ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது, நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும் என்று
எழுதியிருக்கிறதே!

மறுபடியும் சொல்கிறேன் வேதத்தில் இல்லாததை,இயேசு கிறிஸ்து நமக்கு சொல்லாததை யார் சொன்னாலும் அதை கடைபிடிக்காதே...

எது முக்கியமானது என்பதை நீயே நிதானித்து தெரிந்து கொள்...

பாரம்பரியமா ? பரமனின் வார்த்தையா ?

ஜீவ வழி-Living way 

No comments:

Post a Comment