Friday 28 October 2016

நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.

#ஜீவ வழியின் நற்செய்தி

இவ்விதமாக,நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.

(கலாத்தியர் 3:24)

டேனியல்: “எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்;
நன்மை செய்கிறவன் இல்லை,ஒருவனாகிலும் இல்லை” (சங்கீதம் 14:3) என்று சொல்லுகிறது.

ஜான்: ஆமா தேவனுடைய பார்வையில் எல்லாரும் சமமாக இருக்கிறார்கள். அவருக்கு முன் சிறிய பாவி, பெரிய பாவி, மோசமான பாவி,கொடூரமான பாவி, நல்ல பாவி, கெட்ட பாவி என்று எந்த வித்தியாசமும் இல்லை.

டேனியல்: சரிதான், தேவனுடைய பார்வையில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை புரிந்துகொண்டா தான் நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும்.......

ஜான்: ஆமா டேனி.... தேவனுடைய பார்வையில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை நமக்கு காண்பித்து உணர்த்துவதற்காகத்தான்
#பழைய ஏற்பாட்டுக் காலத்தில் #நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது.

டேனியல்: இதில் தான் பரிசேயர்கள் தவறு செய்து விட்டார்கள்.
அவர்கள், நாம்....... நியாயப்பிரமாணத்தின்படி செய்து காண்பிக்க வேண்டும், அப்போது தேவன் நம்மை நீதிமான் என்று சொல்லுவார்,அதற்காகத்தான் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது என்று எண்ணினார்கள்.இன்னும்
அந்த பரிசேய கூட்டம் இருக்கிறது

ஜான்: ஆமா அவர்தான் கிறித்தவ வேடமிட்ட பரிசேயர்கள்,ஆனால் நியாயப்பிரமாணத்தின்படி எவருமே செய்ய முடியாது என்பதுதான் உண்மை. தேவன், எல்லாரும் செய்ய முடியாமல் தோற்று,தவிக்கிறது போன்ற பிரமாணத்தைத்தான் கொடுத்தார்.

டேனியல்: எந்த ஒரு மனுஷனும்
இந்த பிரமாணத்தின்படி வாழ
முடியாது;அதை முற்றிலும் பூரணமாய் நிறைவேற்ற முடியாது.ஏனென்றால் அவன் ஒன்றில் தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாக இருப்பான்....

ஜான்: தேவன் பிரமாணத்தைக் கொடுத்ததற்கான காரணம் என்னவென்றால்,மனுஷன் #பிரமாணத்தின்படி செய்து
பார்த்து,அதை தன்னால் செய்ய முடியவில்லையே என்கிற தவிப்பு அவனுக்குள் உண்டாக வேண்டும் என்றும், தன்னுடைய #பாவத்தையும், குறைவையும், இயலாமையையும், பாவம் தனக்கு என்ன செய்திருக்கிறது என்பதையும் அவன் பார்க்க வேண்டும் வேண்டும் என்றும், இதையெல்லாம் பார்த்து அதை உணர்வதற்காகத்தான் தேவன் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார்.....

டேனியல்: மனுஷனிலிருக்கிற
பாவ சுபாவத்தையும்,அவனுடைய இயலாமையையும், அவனால் பாவத்தை ஜெயித்து வாழ முடியாது என்பதையும் காண்பிப்பதற்காகவும், அவன் பாவி என்பதை உணர்த்துவதற்காகவும்தான் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டதே ஒழிய,அவனை #இரட்சிக்கிறதற்காக கொடுக்கப்படவில்லை.

ஜான்: நியாயப்பிரமாணம் மனுஷனை இரட்சிக்க முடியுமென்றால் எல்லாருமே அதன் மூலம் இரட்சிக்கப்படலாமே! இயேசு வரவேண்டியதில்லையே! இரட்சகர் ஒருவர் தேவையில்லையே! மனுஷன் நியாயப்பிரமாணத்திற்கு முன்பாக வந்து நிற்கும்போது அது அவன் யார் என்பதை அவனுக்குக் காட்டுகிறது. இந்த விதத்தில் நியாயப்பிரமாணம் ஒரு உபாத்தியாய் இருந்தது என்று வேதம் சொல்லுகிறது.

“இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய்இருந்தது”
(கலாத்தியர் 3:24).

டேனியல்: ஆமா ஜான்.... இயேசு சிலுவையில் மரித்து,
உயிரோடெழுந்த பிறகு,அவரை
விசுவாசித்து அதன்மூலமாக நாம் நீதிமானாக்கப்படுவதற்காக
நியாயப்பிரமாணம் நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தது.

ஜான்: சரியாக சொன்னாய்...... நியாயப்பிரமாணத்தை செய்கிறதின்
மூலமாக அல்ல,விசுவாசத்தின்
மூலமாகத்தான் நாம் நீதிமானாக்கப்படமுடியும். இயேசு தான் நமக்கு இரட்சகர்,
இயேசு நமக்கு அவசியம்,
அவரில்லாமல் நமக்கு இரட்சிப்பு இல்லை என்பதை காண்பித்து,
அவரிடத்திலே நம்மைகொண்டு
வருவதற்காகவும்,நாம் இரட்சகரை நாடுவதற்காகவும் தான் நியாயப்பிரமாணம்கொடுக்கப்பட்டது.

டேனியல்: நியாயப்பிரமாணம்
நம்மை நீதிமானாக்குவதில்லை.
அது நம்மைகிறிஸ்துவண்டை
கொண்டுவருகிறது.கிறிஸ்து நம்மை
நீதிமானாக்குகிறார்.அவர்பேரில்
வைக்கிறவிசுவாசத்தினால்
நாம் நீதிமானாகிறோம்.

ஜான்:ஆமா,நாம் எப்படி
நியாயப்பிரமாணத்தை
பார்க்கிறோம் என்பது மிகவும்
முக்கியம்.

டேனியல்: இன்று ஒரு சிலர்.....
"நான் பத்து கற்பனையின்படி
செய்துவிட்டால் நான் நீதிமான்"
என்று அப்படி தங்களைபார்க்கிறார்கள்.
ஆனால் பத்துகற்பனையின்படி
எவருமே முழு நிறைவாக செய்ய முடியாது.....

ஜான்: செய்ய முடியாத ஒன்றை
தேவன்எதற்காககொடுத்தார்? என்று அனேகர் கேட்கலாம்..... !
செய்ய முடியாத ஒன்றைக்கொடுத்தால்தான் நான் பாவி என்கிற உணர்வு நமக்குள் உண்டாகும். அந்த உணர்வு
உண்டானால் தான் எனக்கு ஒரு இரட்சகர்அவசியம் என்கிற
அவசியத்தையும் நாம்மால் உணர முடியும்......அதனால் தான்
தேவன் பழைய ஏற்பாட்டுக்காலம்
முழுவதும் போதிக்கிறார்.
கிறிஸ்துவண்டை நடத்துவதற்கு நியாயப்பிரமாணத்தைதருகிறார்.
கிறிஸ்து நம்மை இரட்சிப்புக்குள்
நடத்துகிறார்.நியாயப்பிரமாணம்
கிறிஸ்துவண்டைநடத்துகிற
உபாத்தியாய் இருந்தது.

டேனியல்: ஆமா ஜான்....... ‘உபாத்தி’ என்றால் ‘teacher’ என்று
அர்த்தம்.இதை KJVஎன்கிற ஆங்கில மொழிபெயர்ப்பு வேதாகமம்
‘school master’ என்று
மொழிபெயர்க்கிறது. NKJV
என்கிற ஆங்கில மொழிபெயர்ப்பு
வேதாகமம் ‘tutor’ என்று மொழிபெயர்க்கிறது.
நியாயப்பிரமாணம் நாம் பாவி என்பதை காண்பிப்பதின் மூலமாக
கிறிஸ்துவும் அவருடையசிலுவை
மரணமும் அவசியம் என்பதையும்,
அதன் மூலமாகத்தான்
நாம் இரட்சிக்கப்பட முடியும் என்பதையும் காண்பிக்கிறது.
இதற்காகத்தான் நியாயப்பிரமாணம்கொடுக்கப்பட்டது.....

விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.
(ரோமர் 10:4)

கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.

(ரோமர் 8:2)

ஏனெனில்,#நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்;
அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
(எபேசியர் 2:10)

ஆமென்.. அல்லேலூயா....

=======================
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome

அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.

#ஜீவ வழியின் நற்செய்தி

ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.
எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது.
அன்பானது பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.

(ரோமர் 13:8-10 )

ஜான்: தேவன் அன்பாக இருக்கிறார்.
நாம் உண்மையிலே இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்று சொன்னால் அந்த தேவ  அன்பின் சாயல் நம்மிலும் இருக்க
வேண்டும்

டேனியல்: அப்போஸ்தலனாகிய
பவுலும் அன்பைக் குறித்துதான் இங்கே பேசுகிறார் "ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்"

ஜான்: இந்த இடத்தை நாம் சற்று நிதானித்து  கவனிக்க வேண்டும். நமக்கு அநேக கடன்கள் இருக்கிறது, அவை எல்லாவற்றையும் தவறாமல் செலுத்துகிறோம்.ஆனால் அன்பு செலுத்துகிற கடனோ முடிவுக்கு வருவதே கிடையாது. அது நாம் நித்தியத்திற்கும் செலுத்த வேண்டிய தீராத கடனாய் இருக்கிறது. பவுல், அன்பு என்கிற ஒரு கடனை மட்டும் வைத்திருங்கள், மற்ற கடன்களையெல்லாம் செலுத்தி விடுங்கள் என்கிறார்.

டேனியல்: இப்படி அருமையான விதத்தில் சொல்லிவிட்டு,
#பத்து கற்பனைகளிலுள்ள சில கற்பனைகளை பட்டியலிட்டு, இவையெல்லாம் நீ உன்னில் அன்புகூருவதுபோல பிறனிலும் அன்புகூருவாயாக என்கிற
#ஒரு வார்த்தையிலே #தொகையாய் அடங்கியிருக்கிறது என்கிறார்.

ஜான்: "உன்னில் அன்புகூருவதுபோல பிறனிலும் அன்புகூருவாயாக"
என்ற கற்பனை பழைய ஏற்பாட்டிலேயே சொல்லப்பட்டுள்ளது
(லேவியராகமம் 19:18).
ஆக,பழைய ஏற்பாட்டின் கட்டளைகளை
ஒரே வரியில் சுருக்கமாகச் புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது,
உன்னில் அன்புகூருவதுபோல பிறனிலும் அன்புகூருவாயாக என்பது அதுதான்.அதைச் சொன்னாலே பழைய ஏற்பாட்டு கற்பனைகள் அதில் வந்து விட்டதென்று அர்த்தமாகி விட்டது......

டேனியல்: ஆமா!!
உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும். (கலாத்தியர் 5:14)

இயேசுவும் அதையே பயன்படுத்துகிறார்.ஒருமுறை ஐசுவரியவான் வாலிபனும், மற்றொரு முறை வேதபாரகரில் ஒருவனும் அவரிடம் வந்து, கற்பனைகளிலே பிரதான கற்பனை எதுவென்று கேட்டதற்கு,

“உன் தேவனாகிய கர்த்தரிடத்தில்
உன் முழு இருதயத்தோடும்,உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும்,உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை என்று சொல்லிவிட்டு,
இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே” (மத்தேயு 22:37-39) என்று சொல்லுகிறார்.
அப்போஸ்தலனாகிய பவுலும்
இதையே ரோமர் 13 ஆம் அதிகாரத்திலும், கலாத்தியர் 4 ஆம் அதிகாரத்திலும் சொல்லுகிறார். அதுமட்டுமல்லாமல், யாக்கோபும் இதைச் சொல்லிவிட்டு, இந்த பிரமாணத்திற்கு ‘ராஜரீக பிரமாணம்’ என்று பெயரிடுகிறார்.

ஜான்: இந்த இடத்தில் தான்
அனேகருக்கு குழப்பம்
வருகிறது "நீ உன்னில் அன்புகூருவதுபோல பிறனிலும் அன்புகூருவாயாக என்கிற
#ஒரு வார்த்தையிலே
#தொகையாய் தேவனுடைய கற்பனைகள் எல்லாம் அடங்கியிருக்கிறது
என்றால்... நாம் தேவனை
அன்புகூர கூடாதா என்பார்கள் ?
ஆனால் உண்மை என்னவென்றால்
தேவனிடத்தில் அன்புகூராமல்,
தன்னை போல்  பிறரை
நம்மால் நேசிக்கவே முடியாது....
தேவ அன்பு நமக்குள் இருந்தால்
தான் நாம் பிறரை அவ்வாறு
நேசிக்க முடியும்...இது இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக,
இரட்சகராக ஏற்றுக்கொண்ட
தேவ பிள்ளைகளின் தனி சுபாவம்...

டேனியல்: சரியாக சொன்ன
நண்பா!! அநேகர் இந்த
பிரமாணத்தை தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.அவர்கள்,
நான் என்னில் அன்புகூருவதுபோல பிறனிலும் அன்புகூர வேண்டும்
என்பது மிகவும் எளிதானது,நான் அதைச் செய்து விடுவேன் என்கிறார்கள்.ஆனால் அப்படிச் செய்ய முடியாது என்பதுதான் வேத வசனத்தின் சத்தியம். ஏனென்றால், பாவம் மனுஷனை சுயநலவாதியாக மாற்றிவிட்டது. ஆகவே அவன் தன்னை அன்புகூருவதுபோல பிறனையும் அன்புகூர முடியாது.அப்படிச் செய்ய வேண்டுமென்றால் இயேசுவோடு  அவனுக்கு தொடர்பு உண்டாக வேண்டும்... வேறு எந்த வழியும் கிடையாது...

ஜான்: ஆமா நண்பா,பிறரை
அன்புகூர முடியாத நிலையில் சுயநலவாதிகளாயிருந்த நம்மை தேவன் பாவத்திலிருந்து மீட்டு,மற்றவர்களை  அன்புகூரக்கூடியவர்களாக மாற்றுகிறார்... தேவரக அன்பை
நமது இருதயத்திலே ஊற்றியிருக்கிறார்..அது
இயேசுவாலே ஆயிற்று,
அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது.

ஆமென்.. அல்லேலூயா....

=======================
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome


Saturday 22 October 2016

திரித்துவம்

#திரித்துவம்

முருகன்: ஜான் எப்படி இருக்கிறீங்க ?

ஜான்: நல்ல தேவ கிருபையால் நலமா இருக்கேன்...அப்பரம் உங்க கிறித்தவ வாழ்க்கை எப்படி போய்கிட்டு இருக்கு ?
தினமும் பைபிளில் படிக்கிறீங்களா ? ஜெபம் பண்றீங்களா ?

முருகன்: நல்லா போய்கிட்டு இருக்குங்க ஜான்,நீங்க போன வாரம் சொன்ன இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை நான் முழுசா நம்புரேன்... அவரே கடவுளிடம் நம்மை கொண்டு போய் சேர்க்கிற ஒரே வழி என்று விசுவாசிக்கிறேன்... அப்பரம் நீங்க வாங்கி கொடுத்த பைபிளையும்  கொஞ்சம் கொஞ்சம் படிக்க ஆரம்பிச்சுருக்கேன்....அடுத்த வாரம் உங்க சர்ச்சுல ஞானஸ்நானம் எடுக்கலாமுனு முடிவும் பண்ணிருக்கேன்....

ஜான்: ரொம்ப நல்லது,இன்னும்
நெறய காரியங்களை குறித்து உங்களுக்கு வேத வசனம் மூலம் விளக்குகிறேன்

முருகன்: ஓகே ஜான் அதுக்கு முன்னாடி எனது இந்த சந்தேகத்தை போக்குங்க,
நான் கடந்த வாரம்தான் இயேசு கிறித்துவை எனது சொந்த இரட்சகராக ஏற்றுகொண்டேன்... எனக்கு அந்த அளவுக்கு பெரிதாக தேவனை பற்றி தெரியாது... ஏதோ நீங்கள் போதித்ததை வச்சு கொஞ்சம் கொஞ்சம் அறிந்திருக்கேன்... திரித்துவம்
என்றால் என்ன? தேவன் ஒருவரா ?
மூவரா ? இதுபற்றி விளக்கம் கொடுங்க
ஜான்...

ஜான்: அருமையான கேள்வி முருகா!
இந்த கேள்விக்கான சரியான விடையை வேத அடிப்படையில்,
அறிந்துகொள்ளாமல் சத்தியத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் அனேக கிறிஸ்தவர்களே சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு கள்ள உபதேச கூட்டத்தில் மாட்டிக்கொள்கிறார்கள்,
ஆகவே தேவனை அறிகிற அறிவை நோக்கிய ஆரம்ப நிலையில் இருக்கிற நீங்கள் இந்த கேள்விக்கான பதிலை கட்டாயம் அறிந்தவராக இருக்க வேண்டும்...இந்த கேள்விக்கான பதிலை நான் வேதாகம அடிப்படையில் தருகிறேன்..

முருகன்: சரிங்க ஜான் சொல்லுங்க

ஜான்: முருகா,திரித்துவத்தை குறித்து
வேதாகமம்  தெளிவாக போதிக்கிறது, நமக்கு மூன்று தேவன் அல்ல.
ஒரே தேவன் ஆனால் அவர்
மூன்று ஆள்தத்துவங்களில் வெளிப்படுகிறார் ஆனால்
தேவன் ஒருவரே.....

முருகன்: அது எப்படிங்க ஜான் ?

ஜான்: பின்வரும் வசனங்களை  கவனிங்க முருகா...

இஸ்ரவேலே கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
(உபாகமம் 6:4)

ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

(1 கொரிந்தியர் 8:4)

தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய்,அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும்
விசுவாசித்து, நடுங்குகின்றன. (யாக்கோபு 2:19)

முருகன்: அப்படியென்றால் தேவன் ஒருவர்தானே ?

ஜான்: ஆமா தேவன் ஒருவர்தான் ஆனால் அவர் ஒருமைத்தன்மை கொண்டவர் அல்ல...

முருகன்: என்னாது தேவன் ஒருவர் தான் ஆனா அவர்  ஒருமைத்தன்மை கொண்டவர் கிடையாதா ? எப்படி ?

ஜான்: எபிரேய மொழியில் கடவுள் என்ற வார்த்தைக்கு Elohim,
என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது இது ஒரு பன்மை தன்மை சொல் ஆனால் ஒருமையில் "தேவன்"  அழைக்கப்படுகிறது.

முருகன்: அப்படியா !!

ஜான்: ஆமா முருகா ! வேதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது...

பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே,#இம்மூவரும் #ஒன்றாயிருக்கிறார்கள்.
(1 யோவான் 5:7)

முருகன்: இதை எப்படி நான் விளங்கி கொள்வது ஜான் ?

ஜான்: புரிகிற மாதி சொல்றேன்
முருகா.......
சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக.உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.
(1 தெசலோனிக்கேயர் 5:23)

மனிதன் என்கிற பதம்
ஒருமைத்தன்மை கொண்டது,
மனிதன் என்பவனும் ஒருவனே,
ஆனால் மனிதன் என்கிற
பதத்திற்குள்,ஆவி, ஆத்மா,சரிரம்
என்று மூன்று பகுதிகள் சேர்ந்திருக்கிறது.

ஆகவே மனிதன் என்றால்
மூன்றுப்பகுதிகள் ஒருங்கி இணைந்திருப்பது என்பது
நமக்கு தெரிகிறது இவைகளை
யாரும் பிரித்துப் பார்க்க முடியாது.
மனிதானால் தனித்தனியாக
செயல்பட முடியாது,
ஆனால் தேவனால் தனித்தனியாக,
ஏக சிந்தனையுடன் செயல்பட முடியும்..ஏனென்றால் அவர் தேவன் அவர்தான் சிருஷ்டி கர்த்தர்...
அவராலே எல்லாம் உண்டாக்கப்பட்டது.....

அவர் பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன்,பரிசுத்த ஆவியாகிய தேவன் என்று மூன்று பேரும் சேர்ந்து,ஒரே தேவனாக இருக்கிறார்.

✞ பிதாவாகிய தேவன்
1 பேதுரு1:2 2,பேதுரு1:17

✞ குமாரனாகிய தேவன்
எபி 1:8, தீத்து 2:13, ரோ 9:5

✞ பரிசுத்த ஆவியாகிய தேவன்
அப் 5:3-4, 1கொரி 6:19, 2கொரி 6:16

உதாரணமாக இயேசு தம் சீஷர்களுக்கு கொடுத்த கட்டளையின்படி.....
சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா,குமாரன்,பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,என்ற வசனத்தின் படி ஒரே நாமத்தில்
மூன்று ஆள்தத்துவத்தை பார்க்க முடியும். என்ன முருகா திருத்துவம் பற்றி நான் சொல்றது புரிகிறதா ?

முருகன்: புரிகிறது ஜான் மேலும் சொல்லுங்க.....

ஜான்: படைப்பிலேயே திருத்துவம் இருக்கிறது ஜான்,

ஆதி 1:1 ஆதியில் தேவன் உலகத்தை
சிருஷ்டித்தார்.(பிதாவாகிய தேவன்)

ஆதி 1: 2 தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். (பரிசுத்த ஆவியாகிய தேவன்)

ஆதி 1:3 வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். (வார்த்தை - குமாரனாகிய தேவன்)

முருகன்: வார்த்தையா ! அதை எப்படி குமாரனாகிய தேவன் என்று எப்படிச் செல்ல முடியும் அதற்கு வசனம் இருக்கா தெரியாமதான் கேட்கிறேன் ஜான் ?

ஜான்: யோவான் 1:1 முதல் 1:14 வரை வாசித்துப்பார்த்தால் புரியும் முருகா, மனிதனை தேவன் உருவாக்கும்
போதும் அவரின் திருத்துவ தன்மை வெளிப்பட்டது...

பின்பு தேவன்: நமது சாயலாகவும்
நமது ரூபத்தின் படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; (ஆதியாகமம்1:26)

நமது சாயல் என்றுச் சொல்லும்போது பன்மையைக் குறிக்கிறது.ஆகவே மனிதனைப் படைக்கும் போதும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் செயல் படுவதைப் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது....

முருகன்: ஓ.... !! அப்படியா!

ஜான்: அதுமட்டுமல்ல நமக்கு  இரட்சிப்பை ஏற்படுத்துவதிலும்  தேவனின் திருத்துவ தன்மைகள் வெளிப்படுகிறது....

பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே,
ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே,
கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப் படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது:கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது.
(1பேதுரு1:21)

1)பிதாவாகிய தேவன் நம்மைத் தெரிந்து கொள்கிறார்.

2)ஆவியான தேவனால் பரிசுத்தமாக்கப்படுகிறது.

3)குமாரனாகிய தேவனின் இரத்தம் தெளிக்கப்படுகிறது.(நம்முடைய பாவங்களைக் கழுவுவதற்க்கு)

இப்பொழுது உங்களுக்கு திரித்துவத்தை பற்றி புரிந்திருக்கும்,என்று நான்
நம்புகிறேன்... என்ன முருகா ?

முருகன்: ஆமா ஜான்,
எனக்கு நன்றாக புரிந்துவிட்டது,
நமக்கு மூன்று தேவன் அல்ல.
ஒரே தேவன் தான் ஆனால்
அவர் மூன்று (பிதா,குமாரன்,
பரிசுத்த ஆவி) ஆள்தத்துவங்களில்
வெளிப்படுகிறார் ஆனால்
தேவன் ஒருவரே.....

ஆமென்... அல்லேலூயா...

பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;.
(1 யோவான் 5:7)

*********************************
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome

marveljerome.blogspot.in

Wednesday 19 October 2016

கிறிஸ்தவர்கள் ‎‎שַׁבָּת (Shabbat) சாபத் நாளை அனுசரிக்க வேண்டுமா? அந்த நாளில் தான் சபையாக கூட வேண்டுமா ? ஆதி திருச்சபை விசுவாசிகள் வாரத்தின் முதல் நாள் சபையாக கூடினார்கள் என்று வேதத்தில் இருக்கிறதே ! கிறிஸ்தவர்கள் கர்த்தருக்கென்று வாரத்தில் ஒருநாளை மட்டும் அர்பணிக்க வேண்டுமா ? இல்லை தன் வாழ்நாளையே கர்த்தருக்கென்று அர்பணமாக்க வேண்டுமா ?

கிறிஸ்தவர்கள் ‎‎שַׁבָּת (Shabbat) சாபத் நாளை அனுசரிக்க வேண்டுமா?
அந்த நாளில் தான் சபையாக கூட வேண்டுமா ? ஆதி திருச்சபை விசுவாசிகள் வாரத்தின் முதல் நாள் சபையாக கூடினார்கள் என்று வேதத்தில் இருக்கிறதே ! கிறிஸ்தவர்கள் கர்த்தருக்கென்று  வாரத்தில் ஒருநாளை மட்டும் அர்பணிக்க வேண்டுமா ? இல்லை
தன் வாழ்நாளையே கர்த்தருக்கென்று அர்பணமாக்க வேண்டுமா ?

இதுபற்றி கொஞ்சம் விரிவாக பேசுவோம்.......

ஜான்: ‘‘தேவன் ஏதேனில் Shabbat ஏற்படுத்தினார்’’ என்றும்,யாத்திராகமம் 20-:11-இல் படி ஓய்வு நாள் மற்றும் சிருஷ்டிப்புக்கு இருக்கும் தொடர்பை வைத்து சிலர் கூறுகிறார்களே?
இவைகள் சரியா நண்பா ???

பீட்டர்: நானும் கேட்டுருக்கிறேன் ஆனா
தேவன் ஏழாவது நாள் ஓய்ந்திருந்தார்  (ஆதியாகமம் 2:3) ஓய்வு நாள் அனுசரிப்புக்கு நிழலாட்டமாய் இருந்தாலும், இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டு வெளியேறின
வரைக்கும் Shabbat ஓய்வு நாளை  குறித்து வேதாகமத்தில் எழுதப்படவில்லை.

சவரிமுத்து: ஆமா நண்பா!!!
ஆதாம் முதல் மோசே
வரை  Shabbat ஓய்வு நாள்
அனுசரித்தற்கான ஒரு சிறிய ஆதாரம் கூட வேதவாக்கியங்களில் இல்லை.

ஜான்: சரிதான் சவரி,
தேவனுடைய வார்த்தையில்..... தேவனுக்கும் #இஸ்ரவேலுக்கும் இடையே ஒரு விசேஷித்த அடையாளமாக ஓய்வு
நாள்  அனுசரித்தல் இருந்தது
என்று தெளிவாகக் கூறுகின்றது .

‘‘ஆகையால்,இஸ்ரவேல்
புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக அனுசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவார்கள். அது என்றைக்கும்,எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும். ஆறுநாட்களுக்குள்ளே கர்த்தர் வானத்தையும், பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார். என்றார் (யாத்திராமம் 31:16,17) என்கிறாரே !!!!!

சவரிமுத்து: ஆமா ஆனால்......
உபவாகமம் 5-ல் மோசே பத்து கட்டளைகளை இஸ்ரவேலரின் அடுத்த தலைமுறைக்கு மறுபடியும் கூறுகிறார். இங்கு, சாபத் அனுசரித்தல் குறித்து 12-14 வசனம் வரைக் கூறி, பின்பு சாபத் இஸ்ரவேலின் தேசத்துக்கு கொடுக்கப்பட்ட காரணத்தையும்  கூறுகிறார்.......

‘‘ நீ எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும்,
உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக, ஆகையால் ஓய்வு நாளை அனுசரிக்க உன்
தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார்’’ (உபாகமம் 5:15).

பீட்டர்: இஸ்ரவேல் மக்களுக்கு
ஓய்வுநாள் ஆசாரிப்பை தேவன் கொடுத்ததன் நோக்கம் அவர்கள் சிருஷ்டிப்பை நினைவுகூற அல்ல, எகிப்தின் அடிமைத்தனத்தையும் தேவன் அவர்களை  விடுதலையாக்கியதை  நினைவுக்கூறவே சாபத் அனுசரிப்பதற்கான முறைகள் ஏற்படுத்தப்பட்டது......

சவரிமுத்து: ஆமா,சாபத் ஓய்வுநாள் கட்டளையின் கீழிருக்கிற மனிதன்,
அந்த நாளில்....

1)தன் வீட்டைவிட்டு கிளம்பக்கூடாது. (யாத்திராகமம் 16:29)

2)நெருப்பு மூட்டக்கூடாது (யாத்திராகமம் 35:3)

3)வேறு யாரையும் வேலை செய்யவும் சொல்லக்கூடாது (உபாகமம் 5:14)

 4)இந்த சாபத் கட்டளையை
மீறுகிறவன் கொலை செய்யப்பட்டான் (யாத்திராகமம்31:15,
எண்ணாகமம் 15:32-35)

இன்று சாபத் ஓய்வு நாளை குறித்து உபதேசிக்கும் உபதேசிகள் இவைகளை கடைபிடிப்பார்களா ?

பீட்டர்: ஏழாம் நாள் ஓய்வுக்கார கூட்டத்தினர்கள்,கண்டிப்பாக இவைகளை கடைபிடிக்க மாட்டார்கள்
அவர்கள் ஓய்வு நாளை
சரியாக ஆசரிக்கிறார்கள் என்றால் ஓய்வுநாளில் நெருப்புகூட மூட்டக்கூடாது என்ற கட்டளையை பின்பற்றுகிறார்களா? ஒரு அடுப்பாயிருந்தாலும், ஒரு காரை ஸ்டார்ட் (car start) பண்ணுவதாக இருந்தாலும், ஒரு மின் சாதன பொருளை (electricity switch on/off) இயக்கினாலும் நெருப்பு வரும். இவர்கள் இவைகளை செய்வதால் ஓய்வுநாள் ஆசரிப்பை மீறுகிறார்களே !!!!

சவரிமுத்து: எப்பொழுது இயேசு ஓய்வுநாளிலே வியாதியஸ்தரை சுகமாக்கி, உங்களில் எவனாகிலும் ஆடாவது, மாடாவது, கழுதையாவது குழியில் விழுந்தால் தூக்கிவிடாமல் இருப்பானோ? (லூக்கா14:16-)
ஓய்வுநாளிலே நன்மை செய்வது நியாயந்தான் என்று சொன்னாரோ அதிலிருந்தே நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.
ஒரு காரியத்தை செய் என்றும் இனி செய்யதேவையில்லை என்றும்
சொல்வதற்கு தேவனுக்கு ஞானம் உண்டு, அந்த தேவ ஞானத்தை புரித்துகொள்ளும் அளவுக்கு ஓய்வு நாள் காரர்களுக்கு வெளிப்பாடு இல்லை....

பீட்டர்: ஆமா நண்பா!!!  ஐந்து
நாள் தேவன் எல்லாவற்றையும் உண்டாக்கியபின் ஆறாம் நாளும்
ஏழாம் நாளும் உள்ளதே என்ன செய்யலாம்....ஒரே குழப்பாயிருக்கே....சரி... ஏழாம் நாளுக்காக மனுஷனை ஆறாம் நாளில் உண்டாக்கி அவனை ஏழாம் நாள் ஓய்ந்திருக்கும்படி செய்வோம் என்றா செய்தார்? இல்லவே இல்லை
மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது.

430 ஆண்டுகள் இஸ்ரவேலர்கள் எகிப்திலே இருந்தார்கள்.அங்கே
ஓய்வு இன்றி அடிமையாய் வேலை செய்து வந்தார்கள்,மனுஷன் ஓய்ந்திருக்கவேண்டும் அப்படி ஓய்ந்திராமல் வேலை செய்துகொண்டே இருந்தால்,அவன் சீக்கிரத்திலே செத்துபோவன். அவனுக்கு இளைப்பாறுதல் தேவை. அது #மனுஷனுடைய நலனுக்காகத்தான், தேவனுடைய நலனுக்கு அல்ல.

ஓய்வுநாளை மனுஷன் பரிசுத்தமாய் ஆசரிக்கவேண்டும் என்னும் கட்டளையை தேவன் சீனாய் மலையில்தான் கொடுத்தார்.
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்கள் ஓய்வு நாளைக் கைகொள்ளவில்லையே!
ஆனாலும் அவர்கள் பரலோகத்திலே இருக்கிறார்கள். ஓய்வுநாளை கைக்கொள்ளாத
ஏனோக்கை தேவன் உயிரோடே எடுத்துக்கொண்டாரே!
நான் ஆபிரகாமின் தேவனும்
ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவன் அநேக இடங்களில் கூறுகிறார்......

"ஓய்வுநாள் மனுஷனுக்காகவா" அல்லது "மனுஷன் ஓய்வுநாளுக்காகவா"? இதை ஓய்வுநாள் போதகர்கள்
கொஞ்சம் யோசிச்சி பார்க்க வேண்டும்....

சவரிமுத்து: (அப்போஸ்தலர் 15:8-20)..ல்
பேதுரு சொல்கிறார்:
"பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்? இயேசுகிறிஸ்துவின் கிருபையிலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே ... விக்கிரகங்களுக்குப்
படைத்தவைகளுக்கும்,
இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டும் என்பதே. அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக்கொள்வது நலமாயிருக்கும்." என்று கூறி முடிக்கிறார்........

ஜான்: ஆனா ! அப்போஸ்தலர் நடபடிகளில் பவுல் ஓய்வு நாள்தோறும் யூதர்களோடும்,கிரேக்கர்களோடும்
வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து,
அவர்களுக்கு புத்தி சொன்னான்
என்று.... பார்க்கிறோமோ !

சவரிமுத்து: ஆமா தேவ பக்தியுள்ளவர்கள் கூடம் இடம், பொழுதுபோக்கு ஸ்தலமோ,
கோலிக்கை கூடமோ அல்ல,
அது தேவாலயம் அதுவும்
யூதர்களின் ஓய்வு நாளில்(விடுமுறை)
அதிகமாக பக்தியுள்ளவர்கள் கூடுவார்கள்... பவுல் அங்கே
அந்த பக்திமான்களோடு பங்கு கொண்டு,ஓய்வுநாளை அனுசரிக்க வரவில்லை... அவர்களுக்கு புத்தி சொல்லி சுவிசேஷத்தை பிரசங்கிங்க வந்தார்.... பவுல் ‘‘ யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப் போலவும் ஆனேன்’’ என்று எழுதியிருக்கிறார்.
(1 கொரிந்தியர்9:20) பவுல் ஜெப ஆலயத்திற்கு வந்தது அவர்களுக்கு
யூத பக்தி விருத்தியை உண்டு
பண்ண அல்ல, அவர்களுக்கு வேதவாக்கியங்களில் கிறிஸ்துவை பற்றிய சத்தியங்களை உணர்த்த....
பவுல் வந்தது ஓய்வுநாளை அனுசரிக்க... அல்ல அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தை அறிவிக்க.....

பீட்டர்: ஆமா யூதருடைய கட்டளைகள் என்பதை கிறிஸ்து சிலுவையிலேயே அழித்தார். ‘‘நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து’’ (கொலேசியா 2:14).
அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது அவைகளின் #பொருள் #கிறிஸ்துவைப் பற்றினது..... (கொலேசியர் 2:14-17)...

ஜான்: ஓ.... !!!

சவரிமுத்து: அதுமட்டுமல்ல ஜான்....
(ரோமர் 14:5)ல்.... இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது.....

"அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொருநாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே
முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்"

ஏழாம் ஓய்வுக்காரர்கள் ஒரு நாளை மட்டும் விசேஷமாக எண்ணுகிறார்கள். புதிய உடன்படிக்கையின் விசுவாசியாகிய நம்மை பொறுத்தமட்டில்  ஒவ்வொரு நாளும் விசேஷமான நாள்தான். சமயம் வாய்தாலும் வாய்க்காவிட்டாலும் நாம்
சுவிசேஷத்தை போதிக்க வேண்டும்.
நாம் எல்லா நாளுமே பரிசுத்த வாழ்க்கை வாழ வேண்டும்...

ஜான்: அருமையான விளக்கங்கள் நண்பா... ஓய்வுநாள் பற்றிய என்னுடைய சந்தேகங்கள்... நிவர்த்தியாகிவிட்டது..... ஆனா
கிறிஸ்து உயிர்தெழுந்தவராய் வெளிப்பட்டார் என்று குறிப்பிடப்பட்ட நாளெல்லாம் வாரத்தின் #முதல் நாளாக இருக்கிறது. மத்தேயு 28:1,9,10, மாற்கு16:9, லூக்கா24:1,1,13,15, யோவான்20:19,26) அதுமட்டுமல்ல

வாரத்தின் #முதல்நாளிலே,
அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில்,
பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.
(அப்போஸ்தலர் 20:7)......
ஆதித்திருச்சபை வாரத்தின் முதல்நாளென்று கூடியிருந்தனர்
என்று தெளிவாக வேதவாக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

சவரிமுத்து: ஆமா ஜான்....

ஜான்: அதோடுகூட.....
I கொரிந்தியர்16:2 – அல் பவுல் கொரிந்து சபையின் விசுவாசிகளிடம் ‘‘ நான் உங்களில் அவனவன் வாரத்தின் #முதல்நாள் தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக’’ என்று துரிதப்படுத்துகிறார்.
வேதத்தின்படி பார்த்தால் சனிக்கிழமை அல்ல ஞாயிற்றுக்கிழமைதான் கிறிஸ்தவர்கள் சபையில் கூடுகிற நாளாக இருந்தது. இது முதலாம் நூற்றாண்டிலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டுள்ளது......
எனவே வாரத்தின் முதல் நாளை நாம் ஏன் சாபத் நாளாக அனுசரிக்க கூடாது இதுதான் என்னுடைய அடுத்த கேள்வி ?

பீட்டர்: இந்த விசயத்தில் எனக்கும் சரியான புரிதல் இல்லை,நண்பா
 சவரி முத்து இதுபற்றி எங்களுக்கு தெளிவூட்ட முடியுமா ?

சவரிமுத்து: ஓ.... நிச்சயமாக
சாபத் என்பது கிறிஸ்தவ சபைக்கு அல்ல, இஸ்ரேலுக்காக கொடுக்கப்பட்ட
ஒன்று.சாபத் என்பது இன்றும் சனிக்கிழமைகளில்தான் யூதர்களால்  அனுசரிக்கப்படுகின்றது.....

ஒரு புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் சாபத்  அனுசரிக்க வேண்டும் என்ற கட்டளை  கிடையாது. ஞாயிற்றுக்கிழமைகளில் ‘‘ "கிறிஸ்தவ சாபத்’’ என்று கி.பி. 321-இல் ரோம அரசன் கான்ஸ்டான்டைன் ஆணை பிறப்பித்தார் இது வேதத்தின் படி தவறு.... ஏனென்றால் சாபத்
என்பது பழைய ஏற்பாட்டிற்கான கட்டளையாகவுள்ளது. கிறிஸ்தவர்கள் இந்த பிரமாணத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டுவிட்டார்கள். (கலாத்தியர் 4:1-26, ரோமர் 6:14). #கிறிஸ்தவர்கள் சனிக்கிழமையோ அல்லது ஞாயிற்றுக்கிழமையோ
சாபத் என்று அனுசரிக்க வேண்டிய அவசியம் இல்லை.........

இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றிகிற
நமக்கு எல்லா நாளுமே பரிசுத்த நாள்தான்,நாம் எப்போதுமே பரிசுத்த வாழ்க்கை வாழ வேண்டும்,அப்பரம் சபை கூடி ஆராதிப்பதில் மண்டையை போட்டு குழப்பி கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இல்லை, அரேபிய நாடுகளில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக உள்ளது.. அங்கே வெள்ளிக்கிழமைதான் சபை ஆராதனைகள் எல்லாம் நடைபெறுகிறது.... நமக்கு வாரத்தின் முதல் நாள் விடுமுறை நாளாக உள்ளது.. ஆகவே எது நல்ல நாள் என்று, நேரம் காலம் பாத்துக்கிட்டு இருக்காம எந்த நாளிலே எல்லோரும் ஒன்று கூடி ஆராதிக்க வசதியாக அமைகிறதோ அது வெள்ளியோ,
சனியோ,ஞாயிறோ,திங்களோ
அந்த நாளில் கிறித்தவ விசுவாசிகள் ஒன்றாக சேர்ந்து... தேவனை ஆராதிப்போம், துதிப்போம்,அவரை மகிமைப்படுத்துவோம், வேத வசனங்களை தியானிப்போம்...

புதிய உடன்படிக்கையின்
மக்களாகிய,நாம் ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருக்க வேண்டும் என்று
தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார் (அப்போஸ்தலர் 6:4) எனவே காலம் நேரம் பார்த்துக்கொண்டு ஓய்ந்திராமல் எல்லா நாட்களிலும் கர்த்தருடைய  ஊழியத்தை செய்வோம், நாம் இப்போது கடைசி காலத்தில் இருப்பதாலும்,கர்த்தருடைய
இரண்டாம் வருகை மிகவும்
சமீபமாக இருப்பதாலும்,
சுவிசேஷம் அறிவிக்கும் பணியை துரிதப்படுத்துவோம், தீவிரமாக செயல்படுவோம்....

ஆமென்... அல்லேலூயா...

"அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொருநாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே
முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்"

(ரோமர் 14:5)

ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.
அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.

(கொலோசெயர் 2:16-17)

*********************************
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome

marveljerome.blogspot.in





கள்ள போதகர்கள் மற்றும்
கள்ள தீர்க்கதரிசிகளின்,பொய் உபதேசத்திலிருந்து கிறிஸ்தவர்கள் தங்களை எப்படி காத்துக்கொள்வது ?

பால்ராஜ்: இன்றய காலகட்டத்தில் கிறிஸ்தவர்கள்,கள்ள போதகர்கள், மற்றும் கள்ள தீர்க்கதரிசிகளை அடையாளம் கண்டுகொண்டு, சாத்தானின் வஞ்ஜக கள்ள உபதேசத்தில் சிக்கிகொள்ளாமல், தங்களை காத்துகொள்வது மிகவும் அவசியமாக இருக்கிறது...

டேனியல்: ஆமா கள்ள உபதேசங்கள் ஆவிக்குரிய பெலனில்லாத  கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை கெடுத்து அவர்களின்
வாழ்க்கையை சீரழித்துவிடும்..
ஆரம்பத்தில் விசுவாசிகளாக இருந்தவர்கள் கள்ள உபதேசத்திற்கு செவிகொடுத்ததால்,இயேசுவைவிட்டு
தூரம் போய் நரக ஆக்கினைக்குள் செல்லும் நிலையும் நேரிடும்...

பால்ராஜ்: ஆமா கள்ள போதகர்கள்  கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள் என்று தேவனுடைய வார்த்தைகள் எச்சரிக்கின்றன.....
(மத்தேயு 24:23-27; 2பேதுரு 3:3;
  மற்றும் யூதா 1:17-18).

டேனியல் : பொய் உபதேசங்கள் மற்றும் கள்ள போதனைகளுக்கு எதிராக நம்மை காத்துக்கொள்ள நாம்  சத்தியத்தை நன்கு அறிந்து
கொள்வதே சிறந்த வழியாகும்.

பால்ராஜ்: ஆமா பொய்யை,போலியை  எதுவென்று கண்டுபிடிக்க,சத்தியத்தை உண்மையை நல்ல முறையில் கற்றுக்கொள்ள வேண்டும்.

டேனியல் : ஆமா எந்த ஒரு விசுவாசி சரியாக சத்திய #வசனத்தை கையாளுகிறானோ (2தீமத்தேயு 2:15) மற்றும் வேதத்தை கருத்தாக தியானிக்கிறானோ அவனால் தவறான உபதேசத்தை எளிதாக கண்டுகொள்ள முடியும்..... ஒரு சின்ன உதாரணம் சொல்றேன்.... மத்தேயு 3:16-17ல் சொல்லப்பட்ட பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் செயல்பாட்டை வாசித்திருக்கும் ஒரு விசுவாசி திரித்துவத்தை மறுக்கும் எந்த கள்ள  போதனையையும் உடனடியாக கேள்வி கேட்பான்...

எனவே முதலாவது நாம் வேதத்தை தியானிக்க வேண்டும் மற்றும் வேத வசனத்தின் படி நாம் கேட்க்க கூடிய எல்லா போதனைகளையும் நிதானிக்க வேண்டும்.

பால்ராஜ் : “மரமானது அதன் கனியினால் அறியப்படும்” என்று இயேசு சொன்னார் (மத்தேயு 12:33). கனியை பார்க்கிற போதே அவர்களுடைய போதனைகள்  சரியானதா? அல்லது தவறானதா?  என்பதை நாம் பகுத்தாய்வு செய்ய முடியும்.........

டேனியல் : ஆமா அவர்களின் உபதேசங்கள் கள்ள போதனையா ? இல்லை நல்ல போதனையா ?
என்பதை அறிந்து கொள்ள..
 எனக்கு தெரிந்த சில வழிமுறைகளை சொல்கிறேன்....

1) அவர்கள் இயேசுவை பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும்....

2) அவர்கள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை போதிக்கிறாரா?

3) அவர்கள் வெளிப்படுத்தும் குணாதிசயங்கள்  தன்மைகள் இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனை  மகிமைபடுத்துகிறதா?

***********************************
1) அவர்கள் இயேசுவை பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும்....

மத்தேயு 16:15-16 இயேசு கேட்கிறார், நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்? பேதுரு பிரதியுத்தரமாக, ஒரே ஒரு பதில்தான் சொல்கிறார்..........
“நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்,”

ஆனால் கள்ள உபதேசிகள் இயேசுவை தேவனுடைய குமாரன் என்று அழைத்து அடையாளப்படுத்த மாட்டார்கள்... அவர்கள்  இயேசு மரியாளின் குமாரன் என்று அடையாளப்படுத்துவார்கள்...

பால்ராஜ்: ஆமா பேதுருவுக்கு நன்றாக தெரியும் இயேசு,மரியாளின் வயிற்றில் பிறந்தவர் என்று ஆனால் அவர் இயேசுவை மரியாளின் குமாரன் என்று அடையாளப்படுத்தவில்லை.. அவரை தேவனுடைய குமாரன் என்று அடையாளப்படுத்துகிறார். அதனால் தான் மத்தேயு 16:17-ல் இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்;
மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். என்று கூறினார்.....

மேலும் பலர் இயேசுவை ஒரு சாதாரண தீர்க்கதரிசி என்றும் அடையாளப்படுத்துவார்கள்,அவர் சிலுவையில் மரிக்கவில்லை என்றும் கிறிஸ்துவின் உபதேசத்திற்கு மாறுபாடானவைகளை போதிப்பார்கள்
இவர்கள் எல்லோரும் கள்ள உபதேசிகளின் கூட்டதின் அங்கத்தினர்கள் ஆவார்கள்.....

டேனியல் : ஆமா! 2 யோவான் 9ல் வாசிக்கிறோமே.....

“கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற
எவனும் தேவனை உடையவனல்ல, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.”

பால்ராஜ்: மேலும் இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய மீட்பின் செயல் இந்த இரண்டும் எல்லாவற்றை பார்க்கிலும் மிக முக்கியமானது,
இயேசு கிறிஸ்து தேவனுக்கு சமமானவர் என்பதை கள்ள உபதேசிகள் மறுக்கிறவர்களாக இருப்பார்கள்.அவருடைய தியாக மரணத்தை குறைத்து மதிப்பிடுபவர்கள், அல்லது கிறிஸ்துவினுடைய  தன்மையை மறுப்பவர்களுக்கு கவனமாக இருக்க வேண்டும்.

***********************************

டேனியல் : அடுத்து......

2) அவர்கள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை போதிக்கிறாரா?

சுவிசேஷம் என்பது 2 கொரிந்தியர் 15:1-4ன் படி இயேசு கிறிஸ்துவின் மரணம்,அடக்கம், மற்றும் உயிர்த்தெழுதல் பற்றிய நற்செய்தி
என வரையறுக்கப்படுகிறது. இவைகளை அவர்களின் போதனைகள் வெளிப்படுத்துகிறாதா என்று நாம் நிதானிக வேண்டும்...

பவுல் கலாத்தியர் 1:7ல் எச்சரிப்பது போல “சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்கள்.”

தேவன் நமக்கு கொடுத்த செய்தியை மாற்ற போப்பாண்டவருக்கோ அல்லது பெரிய பாஸ்டருக்கோ, புனிதருக்கோ
தேவ தூதருக்கோ அல்லது வேறு எந்த சிருஷ்டிகளுக்கோ அதிகாரம் கிடையாது..... இதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்... இக்காலகட்டத்தில் அனேகர்கள் தேவனுடைய வசனத்தைவிட  தரிசனங்களுயும்,சொப்பனங்களையும்
காட்சி கொடுக்கிற நிகழ்வுகளையும் நம்புகிறார்கள்..

தேவனுடைய வசனத்திற்கு ஒத்துப்போகாத எந்த  தரிசனங்களும் சொப்பனங்களும்,காட்சி கொடுத்தலும் புதிய உபதேசங்களும்,
தேவனிடத்திலிருந்து வந்தது அல்ல

"நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்"
(கலாத்தியர் 1:8-9)

பால்ராஜ்: ஆமா.....

***********************************

டேனியல் : 3)அவர்கள் வெளிப்படுத்தும் குணாதிசயங்கள்  தன்மைகள் இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனை  மகிமைபடுத்துகிறதா?

கள்ள போதகர்களை குறித்து யூதா 11 சொல்கிறது, இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச்செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.” இந்த வசனத்தின் படி கள்ள போதகர்கள் அவர்களுடைய பெருமையினால் (காயினை தேவன் தவிர்ப்பதற்கான காரணம்), பேராசையினால் (பிலேயாம் காசுக்காக தீர்க்கதரிசனம் சொன்னான்) மற்றும்  மீறுதலினால் (கோரா தன்னை மோசேக்கு மேலாக உயர்த்தினான்) அறியப்படுவார்கள். இயேசு இப்படிப்பட்டவர்களுக்கு கவனமாக இருக்கும் படி சொன்னார் மற்றும் இவர்களுடைய கனியின் படி இவர்களை நாம் அறியலாம்
 (மத்தேயு 7:20).

இப்படிபட்டவர்கள் தங்களுக்கு தாங்களே தீர்க்கதரிசி,அப்போஸ்தலன்,
என்று பட்டம் வைத்துக்கொண்டு,
கள்ள தீர்க்கதரிசனம் சொல்லி மக்களை வஞ்சிப்பார்கள், அவர்கள் தேவனுடைய நாமத்தின் மகிமைக்காய் காரியங்களை செய்ய மாட்டார்கள்,
சுய பெருமை, சுய விளப்பரம், பேசுவார்கள் தங்களை அவர்கள்
சூப்பர் பரிசுத்தவான் போல் காட்டுவார்கள்...

நான் பரலோகம் சென்று பக்கோடா சாப்பிட்டேன்,நரகம் சென்று நாஸ்தா  சாப்பிப்டேன்.... கதைவிடுவார்கள்...

வேதம் போதிக்கும் ஆவியின் வரங்கள்
கனிகள் இவைகளுக்கு மாறாக,
கண்டபடி உருலுதல்,குதித்தல் ,
புரளுதல்,தாவுதல்,குதித்தல்
குத்தாட்டம் போடுதல்,மிருகங்கள் போல் ஊளையிடுதல்... இவைகள் பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் என்று சொல்லி மக்களை ஏமாற்றி வஞ்சிக்கிறார்கள்...

கள்ள உபதேசிகளை அடையாளம் கண்டுகொள்ளுதல் குறித்து  நாம் மேலும் அறிந்து கொள்ள ஆதி திருச்சபைசபைகளில் காணப்பட்ட தவறான உபதேசத்தை குறிப்பாக எதிர்க்க எழுதப்பட்ட வேதாகமத்தில் உள்ள புத்தகங்களை ஆய்வு செய்யலாம். குறிப்பாக கலாத்தியர், 2பேதுரு, 1யோவான், 2 யோவான் மற்றும் யூதா.

பால்ராஜ்: எல்லாம் இப்படி வெளிப்படையாக இருந்தும்
கள்ள போதகர்கள் மற்றும் கள்ள தீர்க்கதரிசிகளை இனங்கண்டு கொள்வது அனேக நேரங்களில் கிறிஸ்தவர்களுக்கு கடினமாக இருக்கிறது....

சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வான் (2கொரிந்தியர் 11:14), மற்றும் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வார்கள்
(2கொரிந்தியர் 11:15). என்று வேதம் போதிக்கிறது....

ஆகவே வேதாகம சத்தியத்தை அறிந்து கொள்வதன் மூலம் மட்டுமே நம்மால் போலியையும் பொய்களையும்  இனங்கண்டு கொள்ள முடியும்,அதுவே கள்ள உபதேசங்களிலிருந்து தப்பிக்க ஒரே வழி பரிசுத்த வேதாகமம் மட்டுமே
 வேறு மாற்று வழி இல்லை....

*********************************
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome

marveljerome.blogspot.in