Thursday 3 December 2015

வாக்குப்பண்ணின தேவன் நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறார் நீங்கள் அவைகள் நிறைவேறும் வரை பொறுமையோடு காத்து இருப்பீர்களா ?

#Regular

வாக்குப்பண்ணின தேவன் நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறார்
நீங்கள் அவைகள் நிறைவேறும் வரை பொறுமையோடு காத்து இருப்பீர்களா ?

"தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி,தேவனை மகிமைப்படுத்தி,
விசுவாசத்தில் வல்லவனானான்
(ரோமர் 4:21)."

பரத்: வாக்குத்தத்தம் செய்தவர் அதை எப்படியும் நிறைவேற்றி முடிப்பார். அவரால் மாத்திரமே அதை செய்து முடிக்க முடியும், அவரே அதை செய்து முடிக்க வேண்டும்.

பிரவீன்: அப்படியா ?

பரத்: ஆமா நமது பலத்தால் அவரது
வாக்கத்தத்தங்களை நாம்
நிறைவேறச் செய்ய முடியாது.நாம் செய்ய வேண்டியதெல்லாம்,
 வாக்குத்தத்தை விசுவாசித்து அறிக்கையிட்டு,அதற்காய் அவரைத் துதித்து,ஸ்தோத்தரித்து, அவருக்கு நன்றி செலுத்த வேண்டும்.

பிரவீன்: ஓகோ.....

பரத் : ஆம் பிரவீன் ஆபிரகாமைப் பாரு
அவருக்குக் குழந்தை இல்லாதபோதே, தேவன்,அவர் பெரிய தேசமாய் மாறுவார், அவரது சந்ததி வானத்து
நட்சத்திரத்தைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் இருக்கும் என்று வாக்குப் பண்ணினார். ஆனால் ஆபிரகாமாலும் அவரது மனைவி சாராளாளும் தேவனுடைய
வாக்குத்தத்தை தேவனே
நிறைவேற்றக் காத்திருக்க முடியவில்லை.

பிரவீன்: ஆமாப்பா அவர்கள் வேறு வழியாய் தேவனுடைய வாக்குத்தத்தை,
அவர்களே நிறைவேற்ற முயற்சி செய்தார்கள்.
ஆனால் அது சூழ்நிலையை வேறுவிதமாய் மாற்றி,
பெரிய பிரச்சனையை உருவாக்கிவிட்டது.

பரத்: எனவே, வாக்குத்தத்தம் பண்ணினவரையே
நம்பு உன்  சுய பெலத்தை நம்பாதே,
அவரது வார்த்தைகளை விசுவாசித்து அவர் கொடுத்த வாக்குத்தத்தை
அறிக்கையிட்டு, அந்த
வாக்குத்தத்தத்திற்காய் அவருக்கு நன்றி செலுத்து, பொறுமையோடு காத்திரு, அவர் அதை எப்படியும்
நிறைவேற்றுவார்.


ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

No comments:

Post a Comment