Friday 24 August 2018

எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

(1 தெசலோனிக்கேயர் 5:16-18)

பீட்டர்: கிறிஸ்தவர்களாகிய நாம்,எதைக்குறித்தும் கவலைப்படாமல்,
எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்,எல்லாவற்றையும் கர்த்தர் பார்த்துக்கொள்வார்,அவர் நமக்காக யாவையும் செய்து முடிக்கிற கர்த்தராக இருக்கிறார்... (சங்:138:8) எனவே நாம் எதைக்குறித்தும் கவலைப்படாமல்
இருந்து இடைவிடாமல் ஜெபம் பண்ண வேண்டும்.... அப்படிச் செய்வதே
கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

ஜான்: ஆமா கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்,அவரே எனக்காக அனைத்தையும் செய்து முடிப்பார்,என்கிற விசுவாச நிலைக்கு நாம் வரும்போது,
சந்தோஷமாக தானாக வரும்,நமது ஜெபத்தில் ஸ்தோத்திரம் வரும்,
சந்தோஷமும்,ஸ்தோத்திரமும் விசுவாசத்தின் அடையாளமாக இருக்கிறது,

பீட்டர்: ஆமா நண்பா!! நீ சொல்வது சரிதான்,
கர்த்தர் மீது அவரின் வார்தைகள் மீது அவிசுவாசப்படுகிற மனிதன்,சந்தோஷமாக இருக்க மாட்டான்,அவன் கவலையாக இருப்பான்,அவன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செய்ய மாட்டான் மாறாக,முறுமுறுப்பான்

ஜான்:ஆமா நண்பா! நாம் வேதத்தில் வாசிக்கிறோமே!!! இஸ்ரவேல் மக்கள்
சென்ற  வனாந்திரபாதையில் தேவன்
செய்த எத்தனையோ அற்புதங்களை அவர்கள்  கண்டார்கள். தேவன் உண்மையுள்ளவர் என்பதை கண்டார்கள்.தேவனின் வல்லமையை பெரிதான அளவில் கண்டார்கள். ஆனாலும் தேவனை ஸ்தோத்தரிக்கத் தவறினார்கள்.

பீட்டர்: ஆமா,ஒரு சின்ன கஷ்டம் வந்தாலும் உடனே முறுமுறுப்பதே அவர்களுடைய வழக்கமாக இருந்தது. அவர்களுடைய இருதயம் அதிருப்தியினால் நிறைந்திருந்தது.
ஆகவே முறுமுறுத்து தேவனுடைய மனிதனைக் குற்றஞ்சாட்டினார்கள்.
தேவன் அவர்களுக்கு செய்த
நன்மைகளை மறந்து,தங்கள் பழைய எகிப்தின் ஆகாரங்களையும் அவ்விதமான வாழ்க்கையையுமே வாஞ்சித்தார்கள். அவர்கள் சுதந்தரிக்கப்போகிற கானானின் மேன்மைகளை எண்ணி தங்கள் இருதயத்தை சந்தோஷத்தால் நிரப்பாமல்
சின்ன சின்ன கஷ்டம் வந்தவுடன்  முறுமுறுப்பது,எரிச்சல் அடைவது என
அவிசுவாசத்தால் தங்கள் இருதயத்தை நிரப்பினார்கள்...

ஜான்: அவர்களில் அவிசுவாசத்தால், தேவனை கோபமூட்டி அவர்களில்
அனேகர் அழிந்து போனார்கள்,(சங்78:21-22) அவர்களின் அவிசுவாசத்தினாலே கானானுக்குள் பிரவேசிக்காமல்  போனார்கள்..(எபி3:19)

பீட்டர்: ஆகவே கிறிஸ்துவுக்குள் இருக்கும்  நாம்,எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்,எல்லாவற்றையும் கர்த்தர் பார்த்துக்கொள்வார்,அவருடைய வாக்குத்தத்தங்கள் உண்மையுள்ளது,
அவர் அவற்றை எப்படியும் நம்
வாழ்வில் நிறைவேற்றுவார்,எனவே
நாம் எதைக்குறித்தும் கவலைப்படாமல் இருந்து இடைவிடாமல் ஜெபம் பண்ணுவோம்,குறிப்பாக
தேவன் நம் வாழ்க்கையில் செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து அவரைத் துதித்து ஸ்தோத்தரிப்போம்,

ஜான்: பவுலும் சீலாவும் அடிக்கப்பட்டு,கட்டப்பட்டு
சரீரம் வேதனைக்குள்ளான வேளைகளில்
சிறைச்சாலையிலிருந்து,தேவனை நோக்கி ஜெபித்தார்கள்,ஸ்தோத்திரித்து துதித்து  பாடல் பாடினார்கள் கர்த்தர் அவர்களின்
வேதனையை போக்கினார்,கட்டுகளை நீக்கினார்,(அப்16:25-27) எனவே நாமும் எப்பொழுதும் எல்லா சூழ்நிலையிலும் சந்தோஷமாயிருந்து,
இடைவிடாமல் ஜெபம்பண்ணி
எல்லாவற்றிலேயும் கர்த்தருக்கு  ஸ்தோத்திரஞ்செய்யும் போது,
அவர் நம்முடைய வேதனையை போக்குவார்,கட்டுகளை நீக்குவார்,
நம்மை மென்மேலும் ஆசீர்வதித்து,
நம்மைக்கொண்டு அவரின்
நோக்கங்களை நிறைவேற்றுவார்.

ஆமென்... அல்லேலூயா...


Wednesday 22 August 2018

அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்
(நீதிமொழிகள் 23:7)

பரத்: எல்லா செயல்களுக்கும் ஆரம்பம், அவர்களுடைய இருதயத்தின் சிந்தனையிலேயே இருக்கிறது.
ஜீவனோ,மரணமோ,பரிசுத்தமோ,
இச்சையே,இவையெல்லாம் மனிதனின் இருதயத்தின் சிந்தனையிலிருந்து தான் ஆரம்பமாகிறது.

பிரவீன்: ஆமா,அந்த சிந்தனையே, நம்முடைய வாழ்க்கையின் தோற்றத்தை வெளிப்படுத்தும்."வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும்"
(ரோம. 11:16).ஆகவே, நாம்,நம் சிந்தனைகளில் மிகவும் கவனமாக
இருக்க வேண்டும்.

பரத்: சரியாக சொன்ன பிரவீன், அப்போஸ்தலானாகிய பவுல், நம்முடைய சிந்தனை வாழ்வு எப்படி பட்டதாக இருக்க வேண்டும் என்று பிலி 4: 8 ல் இவ்வாறு
 ஆலோசனை கூறுகிறார்...........

"கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ,
புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்".
(பிலி 4: 8)

பிரவீன்: ஏன் வேதம்
அவைகளையே சிந்தித்துகொண்டிருங்கள் என்று சிந்தனை வாழ்வுயை
முக்கியப்படுத்தி போதிக்கிறது
என்றால் நாம்,நம் சிந்தனை வாழ்வில் ஜெயம் பெற்றவர்களாக இருந்தால்
தான் மற்ற எல்லா பகுதிகளிலும் ஜெயமுள்ளவர்களாக இருப்போம்
எனவே நாம் தவிர்க்க வேண்டிய சில
தீய சிந்தனைகளை குறித்தும்,வாழ்வில் இருக்கவேண்டிய சில நல்ல சிந்தனைகளைக் குறித்தும் வேதம் கூறும் ஆலோசனைகளை பின்பற்றி நாம் நம்முடைய  வாழ்க்கையை வளப்படுத்துவோம்.


Saturday 18 August 2018

நீங்கள் செய்யும் ஊழியத்தை
எதுவும் தடைசெய்ய முடியாது....
ஏனென்றால்,வானத்திலும்
பூமியிலும் சகல அதிகாரமும்
உடையவர் உங்களோடு கூடவே இருக்கிறார்....

ஜான்: நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து
வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும்
உடையவராக இருக்கிறார்,அவர் நம்மை
சகல ஜனங்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கவும்,அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கவும்,அவரின் போதனைகளை ஜனங்களுக்கு போதித்து,அவர்களை அவைகளின்படி நடக்க கற்பிக்கவும்
கட்டளையிட்டு இருக்கிறார்,அதற்காக
அவர் உலகத்தின் முடிவுபரியந்தம்
சகல நாட்களிலும் நம்மோடு கூடவே
இருக்கிறார் (மத்தேயு 28:18-20)
எனவே நமது நற்செய்தி அறிவிக்கும்  நடவடிக்கைகளை எந்த சக்தியாலும்
தடை செய்ய முடியாது...

பீட்டர்: ஆமா அவர் வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும்
உடையவர் அவர் நம்மோடு கூடவே இருக்கிறார்,ஆகவே எதுவும் நம்மை
தடை செய்ய முடியாது,இது உண்மை இயேசுகிறிஸ்து நமக்குள் தான் இருக்கிறார் இதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்
(2 கொரி13:5)அப்போது நமக்குள்
விசுவாசம் வேலை செய்ய
ஆரம்பிக்கிறது,அற்புத அதியங்கள்
நமது பணித்தளங்களில்,நடைபெற ஆரம்பிக்கிறது.

ஜான்: உயிர்தெழுந்த இயேசு
நமக்குள் இருப்பதால்,அவர்
செய்த கிரியைகளை நம்மால் செய்ய
முடியும்,ஏன்! அவைகளைப்பார்க்கிலும்
பெரிய கிரியைகளையும் நம்மால்
செய்ய முடியும்..என்று இயேசுவே
நமக்கு வாக்கு கொடுத்திருக்கிறார்.
(யோவான் 14:12)

பீட்டர்: தேவ சித்தின் படி,நாம்  செல்கிற வழியிலோ அல்லது நம்முடைய ஊழியத்தின் பாதையிலோ,தேவனுக்காக நாம் எடுத்துவைக்கிற வைராக்கியமான செய்பாடுகளின் நடுவிலே,தடையாக
புயல் போன்ற பிரச்சனைகள் வந்து மோதினாலும்,கொந்தளிக்கிற அலைகளைபோல அவைகள் நம்மை சூழ்ந்தாலும்,அந்த கொந்தளிப்புகளையும்,
எதிர்ப்புகளையும்,நமது வார்த்தையால், அதட்டி சூழ்நிலைகளை அமைதி ஆக்ககூடிய அதிகாரத்தை
இயேசு நமக்கு கொடுத்திருக்கிறார்,
அந்த அதிகாரத்தை நாம் பயன்படுத்த வேண்டும்,எப்படிப்பட்ட எதிர்மறையாக சூழ்நிலைகளும் உங்களுடைய பயணத்தை தடுக்க முடியாது...(மாற்கு 4:35-41)
ஏனென்றால்,வானத்திலும் பூமியிலும்
சகல அதிகாரமும் உடையவர் நம்மோடு கூடவே இருக்கிறார் ஆமென்...

ஜான்: ஆமா நண்பா! அவர் நம்மோடு இருப்பதால்,நம்மால் இருளின் கிரியைகளை  சபிக்கவும் கனியற்ற அந்தகார கிரியைகளை கடிந்துகொண்டு(எபே5:11)(மாற்கு11:12-14)
அவைகளை செயலிழக்க செய்ய முடியும்,
நமது ஊழியத்தை,தேவசித்தத்தை,
பணிகளை செய்ய விடாதவாறு தடுக்க பிசாசு  பாவ சோதனை,வியாதி,பெலவீனம்,
தரித்திரம் ஆகிய இருளின் கிரியைகளை கொண்டுவரும் போது,அவைகளை நாம் கடிந்துகொண்டு சபித்து செயலிழக்க
செய்ய முடியும்... ஏனென்றால்,வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் உடையவர் நம்மோடு கூடவே இருக்கிறார்

பீட்டர்: நமது ஊழியத்தை,தேவசித்தத்தை,
நற்செய்தி பணிகளை,நற்கிரியைகளை நிறைவேற்ற,பொருளாதார குறைவு
ஒரு தடையே இல்லை,ஏனென்றால்
நம் தேவனால் எதிர்பாராத இடத்திலிருந்து,
இயற்கைக்கு அப்பாற்பட்ட ரீதியில்,தேவைகளை சந்திக்க முடியும், பணத்தை கொடுக்க முடியும்,
(2இராஜா7:18)(மத்தேயு 17:27)
அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்,அவர் நம்மோடு
கூடவே இருக்கிறார்,இதை நாம் மறந்துவிடக்கூடாது....

ஜான்: நமது ஊழியத்தை,நமது விசுவாச ஜீவியத்தை கெடுக்க நினைக்கும் எந்த மாந்திரவாதமும்,ஒழிந்து போகும் (எண்23:23) நாம் போதிக்கும் தேவ வசனத்தை மற்றவர்கள் கேட்க விடாதவாறு  தடை செய்கிற மந்திரவாதிகள்,பிசாசின் ஊழியக்கார்கள்,பொல்லாத மனிதர்கள் ஆகியவர்களின் கண்களை நம்மால் கட்டிப்போட முடியும்,அந்த அதிகாரம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது,
(அப் 13:6-12)

பீட்டர்: கிறிஸ்துவுக்குள் இருக்கும்
நம்மால் சர்ப்பங்களையும்,தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகலவல்லமையையும் மேற்கொள்ளவும் முடியும்,ஏனென்றால் சாத்தானை ஜெயித்த இயேசு கிறிஸ்து நமக்கு அவன் மீது அதிகாரம் கொடுத்திருக்கிறார்,
நமக்கென்று தேவன் நியமித்த ஓட்டதை,
எந்த சாத்தானும் தடுக்க முடியாது,
எந்த பிசாசின் வல்லமையும் நம்மை
அழிக்க முடியாது,
அப்:பவுலை பாம்பு கொத்தியது
அவன் ஓட்டம் முடித்துவிட்டது,
பவுல் செத்துவிடுவான் என்று அனேகர் நினைத்தார்கள்‌,அவர்களின் நினைப்பு பெய்யானது,பவுல் சாகவில்லை,
பாம்புதான் செத்தது,பவுலுக்கென்று
தேவன் வைத்த ஓட்டம் தொடர்ந்தது..(அப்28:3-6) நம்முடைய ஓட்டமும் தொடரும்,எதுவும் நம்மை கொல்ல முடியாது..ஏனென்றால்,வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் உடையவர் நம்மோடு கூடவே இருக்கிறார்


Tuesday 7 August 2018

உங்கள் #மீட்பர் #உயிரோடுஇருக்கிறார்

பால்ராஜ்: நமக்கு வேண்டியவர்கள்,
பிரியமானவர்கள்,நமக்கு தலைவராக இருந்தவர்கள்,நம்மை உலகப்பிரகாரமாக
ஆட்சி செய்தவர்கள்,மரணமடைந்த
போது,நமது எண்ணம் அவர்களை
சுற்றியே இருக்கிறது,இனி இவரை போன்றவர்கள் தோன்றுவார்களா?
இவரை போன்ற ஒரு அதிகார
மையம் அமையுமா?என்று
நமக்குள் எண்ணங்கள் வருகிறது...

பீட்டர்: ஆமா நண்பா! (ஏசாயா 6:1)
இவ்விதம் ஆரம்பிக்கிறது...
உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில்,
ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன் என்று....அதாவது உலக்கபிரகாரமாக
ஒரு கூட்ட ஐனங்களை ஆட்சி செய்த
ஒரு ராஜா மரிக்கிறான்,மக்களும் நினைத்திருப்பார்கள்,இனி இவரை
போன்ற ராஜா தோன்றுவாரா?இவரை போன்ற ஒரு ஆளுமை வருமா?என்று
அப்போது ஏசாயா ஒரு தரிசனம் காண்கிறான்.. ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறதை...
(ஏசாயா 6:1)

பால்ராஜ்: ஆம்,நமக்கு பிரியமானவர்கள்,
நமக்கு தலைவராக இருந்தவர்கள்,
நம்மை உலகப்பிரகாரமாக ஆட்சி செய்தவர்கள்,மரணமடைந்தாலும்,
அவர்களுடைய ஸ்தானம்,
அவர்களின்,சிங்காசனம்
வெறுமையாக,ஆனாலும்
நம்முடைய ராஜாதி ராஜாவாகிய
தேவன்,உயரமும் உன்னதமுமான நிலையான,சிங்காசனத்தின்மேல்
நித்தியமாக வீற்றிருக்கிறார்,
அவரது அரசாட்சிக்கு முடியே
இல்லை (லூக்கா 1:33)

பீட்டர்: யாரும் நம் சார்பாக நிற்கவிட்டாலும்,
யார் நம்மை விட்டு பிரிந்துபோனாலும்,நம் மீட்பராகிய இயேசு,என்றும் நமக்காக உயிரோடு இருக்கிறார்,இந்த பூமி,தனது கடைசி
நாளை கண்டாலும் அவர் நமது
சார்பாக நமக்க வந்து நிற்பார்
(யோபு 19:25)

பால்ராஜ்: நம்மோடு இருந்தவர்கள்,
நமக்காக வாழ்ந்தவர்கள்,நம்மோடு
கடைசி வரை இல்லாமல் இடையிலே,போயிருக்கலாம்,
ஆனால்,நம் கர்த்தராகிய இயேசு
உலகத்தின் முடிவுபரியந்தம்
சகல நாட்களிலும் நம்மோடுகூட
இருப்பார் (மத்தேயு 28:20)

பீட்டர்: வாழ்வானாலும் தாழ்வானாலும்,
உன்னை விட்டு விலகமாட்டேன்,உன் ஆபத்திலே உன்னை கைவிடமாட்டேன்,
என்று வாக்குறுதி கொடுத்தவர்,
நம்மை விட்டு விலகி,நம்மை கைவிட்டு
போயிருக்கலாம்,ஆனால்..
நம் ஆண்டவராகிய இயேசு
நமக்கு வாக்கு கொடுத்திருக்கிறார்,
நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று
(எபி 13:5)அவர் உண்மையுள்ளவர்
(எபி 10:23)அவர் நம்மை விட்டு எத்தருணத்திலும் விலக மாட்டார்,எக்காரணத்திற்காகவும்
நம்மை அவர் கைவிடமாட்டார்....

பால்ராஜ்: ஆம் நண்பா! இந்த
உலகத்தில் மக்களால் தலைவர்களாக கருதப்படுகிறவர்கள்,எல்லோரும்
மரித்தார்கள்,இன்று அவர்கள்
உயிரோடு இல்லை,ஆனால்
நம் இரட்சகராகிய இயேசு
கிறிஸ்து,நமது பாவங்களுக்காக
ஒரே ஒரு தரம் மரித்தார்,ஆனால் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறார் (வெளி1:18) ஏனென்றால் அவர்
இந்த,உலகத்தில் பிறந்து வந்த
மனிதர்களில் ஒருவர் அல்ல,
அவர் இந்த,உலகத்தில் வந்து
 பிறந்த ஒரே தேவன்,அவர்
அடிமை அல்ல,நமக்காக
அடிமையின் ரூபம் எடுத்து
வந்த ராஜாதி ராஜா ( பிலி 2:7)
அவருக்கே மகிமையும்
வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
(1 பேதுரு 5:11)

ஆமென்... அல்லோலூயா...

Bro:Marvel Jerome
Mobile Phone: 8667501353

Friday 3 August 2018

உங்கள் ஜெபத்திற்கு நிச்சயம் பதில் உண்டு

பீட்டர்: நாம் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளை கேட்கிறோமோ அவைகளை பெற்றுக்கொள்வோம்..
(மத்தேயு 21:22)

ஜான்: ஆமா நாம் ஜெபிக்கும் போது,
எவைகளை தேவனிடத்தில் கேட்கிறோமோ
அவைகளை நாம் பெற்றுகொள்வோம் என்று விசுவாசிக்கும் போது அவைகள் நமக்கு உண்டாகுகிறது....(மாற்கு 11:24)

பீட்டர்: கிறிஸ்துவுக்கும் நம்முடைய
அநியாயங்களைக் கிருபையாய்
மன்னித்து, நம்முடைய பாவங்களையும் அக்கிரமங்களையும் தேவன்  நினையாமலிருக்கிறார்(எபி8:12)
எனவே அவருடைய செவி நமது வார்த்தைகளை கவனிக்கும்
(ஏசாயா 59:1-2)நம்முடைய
ஜெபங்களுக்கு தேவன் நிச்சயமாக
பதில் தருவார்...

ஜான்: ஆமா... நண்பா.. நமது பெலவீன நேரத்தில் நாம் எப்படி ஏற்றபடி வேண்டுதல் செய்வது என்று தெரியாமல் இருக்கும் போது ஆவியானவர் நமது வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
(ரோமர் 8:26)அதனால் நமக்கு எல்லா நேரங்களிலும் தேவனிடத்திலிருந்து,
பதில் உண்டு....

பீட்டர்: ஆமா அதோடு கூட நமது..ஆசைகள் தேவ சித்தத்தின்
படி இருந்தால்,நாம் எதை கேட்டாலும்
அவர் நமக்கு நிச்சயமாக கொடுப்பார்..
(1 யோவான் 5:14-15)எனவே நாம்
தேவ சித்தத்தை வேதத்தின்படி அறிந்துகொண்டு அதன் படி நமது ஆசைகளை,அமைத்து கொள்வோம்..

ஜான்: நாம் தேவனை நோக்கி மன்னிப்புக்காக ஜெபம்பண்ணும் போது,ஒருவன்பேரில் நமக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால்,அவைகளை
நாம் அவர்களுக்கு மன்னிக்க வேண்டும்,
அப்பொழுது நமது ஜெபத்திற்கு நிச்சய பதில் உண்டு..(மாற்கு 11:25)

பீட்டர்: ஆமா நண்பா! எனவே.... நாம்,ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து  விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படி,(பிலிப்பியர் 4:6)
கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருப்போம்,அவர் நம் இருதயத்தின் வேண்டுதல்களை நமக்கு  அருள்செய்வார்.(சங்கீதம் 37:4)....

ஜான்: ஆமா... நாம் ஒன்றுக்கும் கவலைப்படாமல்,கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாய்இருந்து...நமது விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினால் செய்யும் போது தேவன் அதற்கு பதில் கொடுப்பார்,

பீட்டர்: அதோடு கூட நம் தேவன்,
பலியின் அடிப்படையில் ஜெபத்திற்கு
பதில் கொடுப்பவர்...(1 சாமு7:9)
பலியிருந்தால் பதில் உண்டு...

ஜான்: ஆமா... இயேசுகிறிஸ்து நமக்காக
பலியானார்,தன்னையே நமக்காக  கிருபாதாரபலியாக ஒப்புக்கொடுத்தார்
(எபி 10:10,12)(1 யோவ2:2)(ரோம3:26)
அவர் நமக்காக பலியானதால்,தேவன் அந்த பலியின் அடிப்படையில் நம்முடைய பாவங்களை பாராமல்,நிச்சயம் பதில் தருவார்.

ஆமென்.. அல்லேலூயா...

Bro:Marvel Jerome
Madurai