Wednesday 15 April 2020

கிறிஸ்தவர்களாகிய நாம் ஏன் நற்கிரியைகளை செய்ய வேண்டும்?ஏன் தானதர்மங்கள் செய்யவேண்டும்?தானதர்மங்கள் செய்வதால் இம்மையில் நமக்கு உண்டாகக்கூடிய நன்மைகள் யாவை? தானதர்மங்கள் செய்வதால் மறுமையில் நமக்கு உண்டாகக்கூடிய நன்மைகள் யாவை?



1)#கிறிஸ்தவர்களாகிய நாம் ஏன் நற்கிரியைகளை செய்ய வேண்டும்?
ஏன் #தானதர்மங்கள் #செய்யவேண்டும்?

2)#தானதர்மங்கள் செய்வதால்
#இம்மையில் நமக்கு உண்டாகக்கூடிய  நன்மைகள் யாவை?

3)#தானதர்மங்கள் செய்வதால் #மறுமையில் நமக்கு உண்டாகக்கூடிய  நன்மைகள் யாவை?

கிறிஸ்து இயேசுவுக்குள்
பிரியமான,என் அன்பு
சகோதர சகோதரிகளே!
முன்பு பிதாவுக்கு பிரியமில்லாத,
துற்கிரியை செய்து வந்த நம்மை,
இயேசு கிருபையாய் இரட்சித்து,
பிதாவுக்கு பிரியமாக நற்கிரியை செய்கிறவர்களாக நம்மை மாற்றி
இருக்கிறார்,முன்பு இந்த உலகில்
பிசாசின் செய்கையாக இருந்த
நாம்,இன்று இயேசுவின் மூலம்,
தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்
(எபே2:10) நாம் ஒரு காலத்தில்
இந்த உலகத்திற்கு இருளை
காட்டிகொண்டு இருந்தோம்,
அந்தகார இருளின் பிள்ளைகளாக இருந்தோம்,ஆனால் இயேசு நமது வாழ்கையில் வந்து,நம்மை
இருளிலிருந்து மீட்டு,நமது வாழ்வை
ஒளிமயமாக்கி,நம்மை பிராகசிக்க
செய்து,இன்று இந்த உலகத்திற்கு
நம்மை வெளிச்சமாக வைத்திருக்கிறார்,
(எபே5:8)(யோவா 1:9)(மத்5:14)
நாம் நற்கிரியை செய்ததினால்,
இரட்சிக்கப்படவில்லை,நாம்
கிருபையினால் விசுவாசத்தை
கொண்டு இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்,
அவரின் கிருபையினால் இரட்சிக்கப்பட்ட நாம்,நற்கிரியைகளை செய்வதற்கு
தேவனுடைய செய்கையாய் இருக்கிறோம்,என்பதை
இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டும்,நமது தேவன் நல்லவர்
அவர் நன்மைகள் மாத்திரம் செய்கிறவர் என்று இந்த உலகத்திற்கு,நமது நல்ல செயல்கள் மூலம் வெளிப்படுத்தி காட்ட வேண்டும்,இதனால் இயேசுவின்
நாமத்திற்கு மகிமையும்,நமக்கு இம்மையிலும்,மறுமையிலும்
அனேக நன்மைகளும் உண்டாகும்.

ஆம் எனக்கு அன்பானவர்களே!
நமது ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்துவின் மூலம் வெளிச்சத்தின்
பிள்ளைகளாக ஆக்கப்பட்டிருக்கிற
நாம்,இருள் நிறைந்த இந்த உலகத்தில்,வெளிச்சத்தின்
பிள்ளைகளாய் நடந்துகொள்ள
வேண்டும் என்றும் மற்ற மனிதர்கள்
நாம் செய்கிற நற்கிரியைகளை
கண்டு நம்முடைய பரலோக பிதாவை,
மகிமைப்படுத்தும் படி நம்முடைய செயல்பாடுகள் பிராகசிக்கிறதாக
இருக்க வேண்டும்,என்று
வேதம் வழியுறுத்துகிறது
(எபே5:8)(மத்5:16)
நாம் கர்த்தருக்கு அடுத்த
கரியங்களுக்கு அதாவது,
காணிக்கை,தசமபாகம்,
ஊழியர்களுக்கு உதவி செய்தல்,ஊழியங்களை
தாங்குதல்,மிஷனரிமார்களுக்கு
கொடுத்தல்,சபை கட்ட உதவுதல்,பரிசுத்தவான்களின்
குறைவில் உதவுதல்,ஆகிய காரியங்கள் மூலம் தேவன் மீது நம் கொண்டுள்ள அன்பை காட்டுகிறோம்,அது மிகவும் நல்லது,அதே போல் கஷ்டப்படுகிற,
கைவிடப்பட்ட மக்கள்,திக்கற்ற
பிள்ளைகள்,ஏழைகள்,உடல்
ஊனமுற்றவர்கள்,மனநலம்
குன்றியவர்கள் ஆகிய மக்களுக்கும்,
நாம் உதவிகளை செய்து,தேவ அன்பை இந்த உலகத்திற்கு வெளிபடுத்தி காட்ட வேண்டும் என்று தேவன் நம்மிடம் எதிர்பார்கிறார்.

தேவன் நம்மை நேசிக்கிறார்,அதனால் நம்மை #போஷிக்கிறார்,#உடுத்துவிக்கிறார்,
#திருப்தியாக்குகிறார்,அதேபோல் நாமும்
ஏழைகளையும் வறியவர்களையும்
நேசிக்க #போஷிக்க #உடுத்துவிக்க #திருப்தியாக்க வேண்டும்.

பிரியமானவர்களே!வானத்து
பறவைகள் விதைக்கிறதுமில்லை,
அறுக்கிறதுமில்லை,களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை;
அவைகளை நம் தேவன் தான்
போஷித்து பிழைக்கவைக்கிறார்,
விசேஷமாக அவரின் பிள்ளைகளாகிய
நம்மையும் போஷித்து வருகிறார்
(மத் 6: 26)அவரால் போஷிக்கப்பட்ட
அவரால் ஆகாரம் சாப்பிட,நாம்,
ஆகாரம் இல்லாதவர்களுக்கு நமது ஆகரத்தை கொடுத்து அவர்களை போஷிக்க வேண்டும் (லூக் 3:11)
(மத்25:35)(ஏசா58:7)(நீதி22:9)
(எசே 18:7-9)

காட்டு புஷ்பங்கள் உழைக்கிறதுமில்லை,
நூற்கிறதுமில்லை,நம் தேவன் தான்
அவைகளை அழகாய்  உடுத்துவிக்கிறார்,
அவரின் பிள்ளைகளாகிய நமக்கும் அழகழகாய் ஆடைகளை கொடுத்து நம்மையும் உடுத்துவிக்கிறவர் (மத் 6:28-30)
அவரிடமிருந்து அழகழகாய் ஆடைகளை பெற்று உடுத்தி மகிழ்கிற நாம்,
அடையில்லாத ஏழைகளுக்கு
ஆடைகளை கொடுத்து அவர்களை
உடுத்துவிக்க வேண்டும்,(லூக் 3:11)
(எசே 18:16)(மத்25:36)

கிறிஸ்துவுக்குள் தேவனுடைய பிள்ளைகளாகிய நாம்
அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும்,நம் தேவன் நமக்கு,சம்பூரணமாய்க் கொடுத்துக்கொண்டிருக்கிறார்
(1 தீமோ6:17) நம்மை அவர்
திருப்தியாக்கி (மத்14: 20)
 நடத்துகிறார்,நமது வாழ்வாதார தேவைகளை அவர் சந்தித்து எல்லாவற்றிலும் எப்பொழுதும்
நாம்  சம்பூரணமாய் இருக்கவும் செய்திருக்கிறார்,(2 கொரி9:8)
இப்படி தேவனால் திருப்தியாக்கப்பட்ட
நாம்,கஷ்டப்படுகிற,கைவிடப்பட்ட மக்கள்,திக்கற்றபிள்ளைகள்,
ஏழைகள்,உடல் ஊனமுற்றவர்கள்,
மனநலம் குன்றியவர்கள் ஆகிய
மக்களுக்கு நம்மால் இயன்ற
உதவிகளை செய்து அவர்களின்
வாழ்வாதார தேவைகளை பூர்த்தி
செய்து அவர்களை திருப்தியாக்க வேண்டுமென்று நம் தேவன்
விரும்புகிறார்.(ஏசா58:10-11)
(லூக்14:13) (மத்25:45)

#கிறிஸ்தவர்களாகிய நாம் ஏன் நற்கிரியைகளை செய்ய வேண்டும்?
ஏன் #தானதர்மங்கள் #செய்யவேண்டும்?

நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்
(எபே 2:10)

கிறிஸ்தவர்களாகிய நாம்,
நன்மைசெய்யவும்,தானதர்மம்
பண்ண #மறவாமல்
இருக்க வேண்டுமென்றும்,
அப்படிப்பட்ட #பலிகளின்மேல்
தேவன் #பிரியமாயிருக்கிறார் என்று
வேதம் சொல்கிறது (எபி13:16)

பலவீனரைத் தாங்க வேண்டும்
என்றும் கொடுப்பது பாக்கியம் என்று
இயேசு நமக்கு சொல்லியிருக்கிறார்
(அப்20:35)

கிறிஸ்தவர்களாகிய நாம் தரித்திரரை நினைத்துக்கொள்ள வேண்டும்
(கலா2:10)

நம்மிடத்தில் கேட்கிறவனுக்கு
கொடுக்க வேண்டும்(மத்5:42)

நாம் தர்மஞ்செய்வதை,நம்
பிதா பார்க்கிறார் அதற்கு பலன்
அளிக்கிறார்.. தர்மஞ்செய்வது நமது நடைமுறை வாழ்க்கையில் ஒரு
பகுதியாகஇருக்கட்டும் (மத்6:3-4)

இவ்வுலக ஆஸ்தி உடைய கிறிஸ்தவர்களாகிய உங்களுக்குள்
தேவ அன்பு நிலைகொள்ளுகிறது
என்றால்,குறைவில் இருக்கிற
சகோதரனுக்கு கொடுத்து உதவ
வேண்டும்,வசனத்தினாலும் நாவினாலுமல்ல, #கிரியையினாலும் #உண்மையினாலும் #அன்புகூர
வேண்டும் (1 யோவா 3:17-18)

அந்நியரை உபசரிக்க மறவாமல் இருக்க வேண்டும்,ஏன் அவர்கள் தேவதூதர்களாக கூட இருக்கலாம் (எபி 13:2)

திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரித்து உதவுவது தேவனுக்கு முன் மாசில்லாத சுத்தமான பக்தி (யாக் 1:27)

நம்மூலமாய் ஞான நன்மைகளில்
பங்கு பெற்றவர்கள்,நம்மூலமாய்
சரீர நன்மைகளிலும் பங்கடைய
அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் அதாவது தரித்திரர்களாய் இருக்கிற பரிசுத்தவான்களுக்கு,பொருள்
சகாயம் செய்து உதவுவது நமது
கடமை (ரோம15:26-27)

இந்த உலகிலே பசியாய் இருக்கிறவர்களுக்கு
தாகமாய் இருக்கிறவர்களுக்கு வஸ்திரமில்லாமல்
இருக்கிறவர்களுக்கு
வியாதியாயிருக்கிறவர்களுக்கு
காவலிலிரருக்கிறவர்களுக்கு
மொத்தத்தில் தேவையில்
இருக்கிறவர்களுக்கு,நாம்
செய்கிற உதவிகள்,தானதர்மங்கள்
நற்கிரியைகள் எல்லாம்,இயேசுவுக்கே
நேரடியான செய்யப்படுவதாக,
இயேசுவே கூறுகிறார் அதன் அடிப்படையில் அவர் நியாயத்தீர்ப்பு
வழங்குகிறார்.(மத் 25:41-46)

இரக்கஞ்செய்யாதவனுக்கு
இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக்கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும் (யாக் 2:13)

இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்பெறுவார்கள்.
(மத் 5:7)

#தானதர்மங்கள் செய்வதால்
#இம்மையில் நமக்கு உண்டாககூடிய  நன்மைகள்

தரித்திரருக்கு தயை செய்கிறவர்கள்
கர்த்தரை கனம்பண்ணுகிறார்கள்
(நீதி14:31) என்னைக் கனம் பண்ணுகிறவர்களை,நான்
கனம் பண்ணுவேன் என்று
கர்த்தர் சொல்லுகிறார் (1சாமு2:30)

ஏழைக்கு இரங்குகிறவர்கள் கர்த்தருக்ககே கடன்கொடுக்கிறார்கள் என்றும் அவன் கொடுத்ததை கர்த்தர் திரும்பக் கொடுப்பார்
என்றும் (நீதி 19:17)ஏழைகளுக்கு தரித்திரருக்கு கொடுக்கிறவர்கள்
தாழ்ச்சி அடைய மாட்டார்கள்
தாழ்ச்சியில்லாத ஒரு நிலை
அதாவது உயர் நிலை அவர்களின்
வாழ்வில் உண்டாகும் (நீதி 28:27)
வேதம் சொல்கிறது

வாரியிறைத்து ஏழைகளுக்குக் கொடுக்கிறவர்களின் நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்றும் அவர்களின் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும் (சங் 112:9)
என்றும் வாரியிறைத்தால் விருத்தி உண்டு என்றும் உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்;  தண்ணீர் பாய்ச்சுகிறவர்களுக்கு  தண்ணீர் பாய்ச்சப்படும்.(நீதி11:24-25)
என்று வேதம் சொல்கிறது.

அநியாயமாக சம்பாரிக்கப்பட்ட ஆஸ்திகள்,தரித்திரர்பேரில்
இரங்குகிறவனுக்கு கொடுக்கப்படுகிறது
அதை அவன் சேகரிக்கிறான் பெற்றுக்கொள்ளுவான் (நீதி 28:8)

சிறுமைப்பட்டடவர்கள்
மேல் சிந்தையுள்ளவர்கள் பாகியவான்களாய் இருப்பார்கள்
என்றும்,தீங்குநாளில் அவர்கள்
கர்த்தரால்  விடுவிப்பார் என்றும்,
கர்த்தர் அவர்களை பாதுகாத்து
அவர்கள் உயிரை காப்பார்,
என்றும்,அவர்களின் சத்துருக்களின்
இஷ்டத்திற்கு தேவன் அவர்களை 
விடாமல் காத்துக்கொள்வார் என்றும்
ஒரு வேளை அவர்கள் வியாதி படுக்கையில் இருந்தால்,அவர்களை
கர்த்தர் தாங்குவார் என்றும்,அவர்களின் வியாதி படுக்கை முழுவதையும் கர்த்தர்  மாற்றிப்போட்டு அவர்களை காப்பார்
என்று வேதம் சொல்கிறது(சங் 41:1-3)

அந்தரங்கமாக தர்மஞ்செய்கிறவர்களுக்கு பிதாவாகிய தேவனால் வெளியரங்கமாக பலன் அளிக்கப்படும்(மத் 6:3-4)

பசியாக இருக்கிறவர்களுக்கு
உணவளித்து,சிறுமைப்பட்டவர்களை திருப்தியாக்குகிறவர்களின்,வாழ்வில்
இருள் நீங்கி ஒளிமயமாகும் என்றும்
கர்த்தர் அவர்களை நித்தமும் நடத்தி,
மகா வறட்சியான காலங்களில் அவர்களின்
ஆத்துமாவைத் திருப்தியாக்கி,அவர்களின் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்
என்றும்,அவர்கள் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பார்கள்
என்று கர்த்தர் சொல்லுகிறார்.(ஏசா58:10-11)

நாம் நற்கிரியை செய்யும் போது,
தேவன் நமக்கு கிருபையை பெருக செய்வார்,வாரியிறைத்து ஏழைகளுக்கு
கொடுத்தால் நம்முடைய நீதி என்றென்றும் நிற்கும்,தேவன் நமது நீதியின்
விளைச்சலை வர்த்திக்கப்பண்ணுவார்
(2கொரி 9:8-9)

#தானதர்மங்கள் செய்வதால் #மறுமையில் நமக்கு உண்டாககூடிய நன்மைகள்

பூமியிலே நாம் செய்யக்கூடிய தானதர்மங்கள்,நமது பரலோக
தேவனின் சந்நிதி வரை
வந்து,அது அவருக்கு
நினைப்பூட்டப்படுகிறது என்று
வேதம் கூறுகிறது.(அப் 10:4)

இயேசு கிறிஸ்து  மகிமை பொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்அப்பொழுது,தமது
வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து,வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
பசியாயிருந்தேன்,எனக்குப் #போஜனங்கொடுத்தீர்கள்;
தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் #தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் #சேர்த்துக்கொண்டீர்கள்;
வஸ்திரமில்லாதிருந்தேன்,
எனக்கு #வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன்,
என்னை #விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் #பார்க்கவந்தீர்கள் என்பார் என்றும்,
அதற்கு அவர்கள்,ஆண்டவரே
எப்போது நீர் வந்தீர்,எப்போது
உமக்கு நாங்கள் இவைகளை
செய்தோம்,என்பார்கள் அதற்கு
ஆண்டவர் இயேசு இவ்வாறாக
மறுமொழி கூறுவார்,மிகவும் #சிறியவர்களாகிய இவர்களில்
ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ,
அதை #எனக்கே #செய்யாதிருந்தீர்கள்
என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
(மத் 25:34-40)

இந்த உலகிலே பசியாய் இருக்கிறவர்களுக்கு
தாகமாய் இருக்கிறவர்களுக்கு வஸ்திரமில்லாமல்
இருக்கிறவர்களுக்கு
வியாதியாயிருக்கிறவர்களுக்கு
காவலிலிரருக்கிறவர்களுக்கு
மொத்தத்தில் தேவையில்
இருக்கிறவர்களுக்கு,நாம்
செய்கிற உதவிகள்,தானதர்மங்கள்
நற்கிரியைகள் எல்லாம்,இயேசுவுக்கே
நேரடியான செய்யப்படுவதாக,
இயேசுவே கூறுகிறார்.

இயேசு சொல்லுகிறார்..
விருந்து பண்ணும்போது
பதில் செய்ய முடியாத
#ஏழைகளையும் #ஊனரையும் #சப்பாணிகளையும் #குருடரையும்
அழைத்து அவர்களுக்கு #விருந்து
கொடுத்து உபசரிக்கிறவர்கள்,
பாக்கியவான்கள்,அவர்களுக்கு நீதிமான்களின் #உயிர்த்தெழுதலில்
#பதில் #செய்யப்படும் என்று....
(லூக் 14:13-14)

ஆமென்... அல்லேலூயா...

நினைவிற்கு: (நீதி 21:13) (நீதி 28:27)
(எசே16:49) (மத் 25:41-46)(யாக் 2:13)
(மத் 5:7) (1 பேது4:8)


No comments:

Post a Comment