Wednesday 15 April 2020



இயேசு இந்த பூமிக்கு வந்தபோது
தனது வார்த்தையால் என்னென்ன
அற்புத கிரியைகளை செய்தாரோ,
அதே கிரியைகளை,தேவனுடைய வார்த்தையினால் பிறந்த நாமும்
செய்ய முடியும்,ஏன் அதைவிட
பெரிய கிரியைகளையும் நம்மால்
செய்ய முடியும்

என்னை விசுவாசிக்கிறவன் நான்
செய்கிற கிரியைகளைத் தானும்
செய்வான்,இவைகளைப்பார்க்கிலும்
பெரிய கிரியைகளையும் செய்வான்.
(யோவான் 14:12)

கிறிஸ்து இயேசுவுக்குள்
பிரியமானவர்களே!ஆதியிலே
தேவன் வானத்தையும் பூமியையும்,
தனது வார்த்தையால் படைத்தார்,
இருளையும்,வெறுமையையும்
ஒழுகின்மையையும் தனது வார்த்தையை கொண்டு மாற்றி சீர்படுத்தினார்,
இயேசு இந்த உலகத்திற்கு மாம்சத்தில்
வந்தபோது,தனது வார்த்தையால்
மனுக்குலத்தில் காணப்பட்ட இருளை அகற்றி ஒளியேற்றினார்,வெறுமையை மாற்றி நிறைவாக்கினார்,ஒழுகின்மையை
போக்கி ஒழுங்காக்கினார்,
அவர் ஆதியிலே வார்த்தையாக
இருந்தார்,அந்த வார்த்தையானவர்
மாம்சமாகி மனிதனானார்(யோவா1:1,14)
அவர் தனது வார்த்தையினாலே நம்மை,
அவரை போன்று அழிவில்லாத சிருஷ்டியாக,தேவனுடைய வார்த்தையின்
பிள்ளையாக,சிருஷ்டித்து இருக்கிறார் (யாக்1:18,1 பேது1:23)
இயேசு இந்த பூமிக்கு வந்த போது,
தனது வார்த்தையால்
என்னென்ன கிரியைகளை செய்தாரோ,
அதே கிரியைகளை,தேவனுடைய வார்த்தையினால் பிறந்த நாமும் செய்ய
முடியும்,ஏன் அதைவிட பெரிய கிரியைகளையும் நம்மால் செய்ய முடியும்
என்று நமது ஆண்டவர் இயேசுவே நமக்கு வாக்கு கொடுத்திருக்கிறார்(யோவா 14:12)
அதுமட்டுமல்ல இயேசுவே நமக்குள்
வாசமாக இருக்கிறார்,(கொலோ1:27)
(2 கொரி13:5)

ஆம் எனக்கு அன்பானவர்களே!
இயேசு தனது வார்த்தையால் மனித வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்தார்,
அவரின் பிள்ளைகளாகிய,நம்முடைய
வார்த்தையாலும்,மனித வாழ்வில் மாற்றத்தை கொண்டு வர முடியும்.
அவர் பேசிய எல்லா வார்த்தையும் அப்படியே நிறைவேறியது,
அவரின் வித்துக்களாகிய நாம்
பேசுகிற எல்லா வார்த்தையும்
அப்படியே நிறைவேறும்.

இயேசுவின் வார்த்தையிலே
#குணமாக்க கூடிய #வல்லமை
இருந்தது.

திமிர்வாத நோயினால் வியாதிப்பட்டிருந்த நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரனை
இயேசு தனது வார்தையை அனுப்பி சொஸ்பமாக்கினார்(மத் 8:13)
கப்பர்நாகூமிலே ராஜாவின் மனுஷனுடைய மகன் கடும் ஜுரத்தினால் வீட்டில் சாகப்போகிற நிலமையில் இருந்தான்,
இயேசு தனது வார்த்தையை அனுப்பி
அவன் மகனை குணமாக்கினார்
(யோவா 4:52-53)அவர் குருடரை
இயேசு தனது வார்த்தையால் 
பார்வை அடைய செய்தார்
(மாற்10:51-52) ஊமையும்
செவிடுமான ஆவியே,
தனது வார்தையால் கட்டளையிட்டு
விரட்டி சுகமாக்கினார்(மாற்9:25)
சூம்பிய கையுடைய மனிதனை
கையை நீட்டு என்று தனது
வார்த்தையை சொல்லி
நலமாக்கினார் (மத்12:13)
இயேசுவின் நாமத்தினால்
 நம்முடைய வார்த்தையிலும்
குணமாக்க கூடிய வல்லமை
இருக்கிறது,இவைகளை நாம்
விசுவாசித்து செயலாற்ற வேண்டும்
(அப்3:6-7) (அப்14:9-10) (அப்9:34)

இயேசுவின் வார்த்தையிலே #மரித்தவர்களை #உயிர்ப்பிக்க
வைக்க கூடிய சக்தி இருந்தது.

மரித்து நான்கு நாள்,ஆகிய லாசரை,
கல்லறையை விட்டு வெளியே வா
என்று தனது வார்த்தையால் கூப்பிட
அவன் ஜீவன் பெற்று உயிரோடு
வந்தான்.(யோவா11:43-44)
மரித்துபோய் பாடையில் கிடந்த
நாயீன் ஊர்,விதவை தாயின் மகனை
வாலிபனே, எழுந்திரு என்று தனது வார்த்தையால் அவர் சொல்ல,அவன்
உயிர் பெற்று எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான்.(லூக் 7:11,14,15)
இறந்து போன ஜெப ஆலய
தலைவனுடைய பன்னிரண்டு
வயது மகளை நோக்கி,இயேசு
தனது வார்த்தையால் சிறுபெண்ணே எழுந்திரு என்று சொல்ல அவள்,
உயிர் பெற்று எழுந்து நடக்க
ஆரம்பித்தாள்,(மாற் 5:41-42)
இன்று அவரின் பிள்ளைகளாகிய நம்முடைய வார்த்தையிலும்
மரித்தவர்களை உயிர்ப்பிக்க
வைக்க கூடிய சக்தி இருக்கிறது.
இவைகளை விசுவாசித்து
செயல்படுத்த வேண்டும்.
(அப்9:40)(அப்20:10-11)

இயேசுவின் #வார்த்தையிலே
பாவிகளை #மனந்திரும்ப வைக்க
கூடிய கிருபை இருந்தது.

இயேசு சகேயுவை அன்போடு அழைத்து
உன் வீட்டில் நான் தங்க வேண்டும் என்று
கிருபையான வார்த்தையால் அவனிடம் பேசியபோது,அவன் இயேசுவை #ஆண்டவர் என்று அறிக்கையிட்டு
மனம்திரும்பி தான் செய்த அந்நியாயங்களை விட்டுவிட
உடனே முன்வந்தான்.(லூக்19:7-9)

விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்
இயேசுவை #ஆண்டவரே என்று
அறிக்கையிட்டதன் பயனாக
நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே (யோவா 8:10-11)
என்று கிருபையாய் மன்னித்து
அவளை  அனுப்பினார்.

பல புருஷன்களை கொண்ட சமாரிய
ஸ்திரீ,இயேசுவின் கிருபையான வார்த்தைகளால் மனம்திரும்பி,
இயேசுவை குறித்து அந்த ஊர்
முழுவதும் பிரசங்கம் பண்ணினாள்
அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் இயேசுவின் மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
(யோவா 4:39) இன்று அவரின்
பிள்ளைகளாகிய நம்முடைய
வார்த்தையிலும் பாவிகளை
மனந்திரும்ப வைக்க கூடிய
(அப் 2:37)(அப்:16:29-30)
கிருபை இருக்கிறது.
இவைகளை விசுவாசித்து
நாம் பிரசங்கிக்க வேண்டும்.
அனேகரை தேவனிடத்தில்
மனம்திருப்ப வேண்டும்.

இயேசுவின் #வார்த்தையிலே
#பிசாசுகளை துரத்தக்கூடிய
அதிகாரம் இருந்தது.

இயேசுவினிடம் பிசாசு பிடித்திருந்த அநேகரை கொண்டுவந்தார்கள்;
அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்.(மத் 8:16)
ஒரு மனிதன் ஜெப ஆலயத்தில் இருந்தான்,அவனுஅசுத்த ஆவி பிடித்திருந்தது,இயேசு தனது வார்த்தையால்
அவனுக்குள் இருந்த ஆவியை துரத்தி
அவனை விடுவித்தார் (லூக் 4:35-36)
ஒரு மனிதனுக்குள் லேகியோன் அளவு ஏராளமான பிசாசுகள் பிடித்திருந்து
அவைகளை தனது அதிகாரமுள்ள வார்த்தையால் துரத்தி அம்மனிதனுக்கு
மறுவாழ்வு அளித்தார்.(லூக் 8:32)
இன்று அவரின் பிள்ளைகளாகிய நம்முடைய வார்த்தையிலும்
பிசாசுகளை துரத்தக்கூடிய
அதிகாரம் இருக்கிறது.
(அப்16:18)(அப்8:7)(அப்5:16)

இயேசு தனது வார்த்தையின்
வல்லமையை அறிந்தவராக
இருந்தார்,தனது வாயிலிருந்து
புறப்படுகிற வார்த்தைகள்
என்ன விளைவுகளை
உண்டாக்கும் என்பதை
அவர் அறிந்திருந்தார்,
இயேசுவின் #வார்த்தையிலே மக்களை #கவரக்கூடிய வல்லமை இருந்தது.

ஒரு முறை இயேசுவை கைது
செய்யும்படி பிரதான ஆசாரியராலும்
பரிசேயராலும்,அனுப்பபட்ட போர்சேவகர்கள்,இயேசு பிரசங்கிக்கிற
இடத்திற்கு வந்தார்கள்,அவர்கள்
இயேசுவின் பிரசங்கத்தால் கவரப்பட்டு,
ஈர்க்கப்பட்டு,அவரின் வார்த்தைகளின் ஆற்றலையும் சிறப்பையும் கண்டு பிரம்மித்தார்கள்,அவரை கைதுசெய்யாமல் திரும்பி போனார்கள்,பிரதான ஆசாரியரும் பரிசேயரும்,ஏன் இயேசுவை கைது பிடித்து கொண்டுவரவில்லை என்று கேட்டபோது,
அவர்கள் மறுமொழியாக இவ்வாறு கூறினார்கள்,அவர் பேசுகிறது போல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள்.(யோவா7:45-47)
மாற் 12:37 சொல்கிறது.....
இயேசுவின் வார்த்தைகளை
அநேக ஜனங்கள் விருப்பத்தோடே கேட்டார்கள் என்று..இயேசுவின் வார்த்தைகளால்அவரின்
வல்லமையால் ஈர்க்கப்பட்ட
பத்தாயிரத்திற்கு மேட்பட்ட மக்கள்,
மூன்று நாள் அவரோடு வனாந்திரத்திலே உணவு இல்லாமல்,வீட்டிற்கு செல்லாமல் அவரேடு கூடவே இருந்தார்கள் (மத்15:32)
அதேபோல அவரின் பிள்ளைகளாகிய
நம்முடைய வார்த்தையிலும் மக்களை கவரக்கூடிய ஆவினானவரின்
வல்லமை இருக்கிறது,(அப் 2:41)
(அப் 4:4)

இயேசு இந்த பூமிக்கு வந்தபோது
தனது வார்த்தையால்
என்னென்ன அற்புத செய்தாரோ,
அதே கிரியைகளை,தேவனுடைய வார்த்தையினால் பிறந்த நாமும் செய்ய
முடியும்,ஏன் அதைவிட பெரிய கிரியைகளையும் நம்மால் செய்ய முடியும்
என்று நமது ஆண்டவர் இயேசுவே நமக்கு வாக்கு கொடுத்திருக்கிறார்(யோவா 14:12)
அதுமட்டுமல்ல இயேசுவே நமக்குள்
வாசமாக இருக்கிறார்,(கொலோ1:27)
(2 கொரி13:5) எனவே விசுவாசத்தோடும் உணர்வோடும்,தைரியமாக இயேசுவுக்காக ஊழியம் செய்ய ஆரம்பியுங்கள்.

ஆமென்... அல்லேலூயா...

/

No comments:

Post a Comment