Wednesday 15 April 2020

என் ஜீவனுள்ள நாளெல்லாம்
நன்மையும் கிருபையும்
என்னைத் தொடரும்..........
(சங்கீதம் 23:6)

கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுக்கு பிரியமானவர்களே! நம் ஜீவனுள்ள ஒவ்வொரு நாளும் நன்மையும்
தீமையும் அல்ல நன்மையும்
கிருபையும்,நம்மை தொடரும்
என்று வேதம் திட்டவட்டமாக
போதிக்கிறது,ஒளி-இருள்,
வலது-இடதுஇன்பம்-துன்பம்,
நன்மை-தீமை இதுதான் சரியான
தொடர் வரிசை ஆனால் தாவீது
நன்மையும் தீமையும் என்னை
தொடரும்,என்று சொல்லாமல்,
நன்மையும் கிருபையும் என்னை
தொடரும்,என்று விசுவாசத்தோடு சொல்கிறார்,தாவீதும் தனது
வாழ்க்கையின் தீமை தொடர்வதை விரும்பவில்லை,அவன் தீமையை நிராகரித்து,கிருபையை சார்ந்து
கொண்டார்..

கிறிஸ்தவர்களாகிய நாம் நன்மையும் தீமையும் கலந்த வாழ்க்கை வாழ
வேண்டும் என்று தேவன் விரும்பவில்லை,
கிறிஸ்தவர்களாகிய நாம் நன்மையும் கிருபையும் கலந்த வாழ்க்கை வாழவேண்டும் என்று தேவன்
விரும்புகிறார்,(சங் 23:6)(சங்84:11)
(1தீமோ 1:2)

நம் ஜீவனுள்ள நாளெல்லாம்
நன்மையும் கிருபையும் நம்மை
தொடர வேண்டுமென்றால்,நாம்,நம்
சுய நீதி கிரியைகளை சார்ந்து வாழ்கிற வாழ்க்கையை விட்டுவிட்டு,கிறிஸ்து  இயேசு நமக்காக கல்வாரி சிலுவையில் செய்து முடித்த காரியங்களை
அவருடைய கிருபையை சார்ந்து
வாழ்கிற வாழ்க்கை வாழவேண்டும்,
அப்பொழுது நமது வாழ்க்கை
முமுவதும் நன்மையும் கிருபையும்
நம்மை தொடர்ந்து வரும்.

பழைய உடன்படிக்கையின் மக்கள்,
தேவனிடத்தில் கிருபை பெற்றார்கள் ஆனால் புதிய உடன்படிக்கையின்
தேவ பிள்ளைகளாகிய நாம் கிறிஸ்து இயேசுவின் பரிபூரணத்தினால் கிருபையின்மேல் கிருபை பெற்றிருக்கிறோம்(யோவா1:16)
எனவே நம்முடைய வாழ்க்கையின் எல்லாமே நன்மைக்கு ஏதுவாகவே
நடக்கும்.

பிரியமானவர்களே! ஒரு சில
நேரத்தில் நமது வாழ்வில்,தீமை
தொடர்வது போல் தோன்றினாலும்,
கர்த்தர் அதை நன்மையாக
மாற்றி முடிப்பார்,தாவீது
வாழ்க்கையில் அப்படித்தான்
நடந்தது,சவுல் ராஜா,தாவீதின்
கொலை செய்ய பின்தொடர்ந்து கொண்டேயிருந்தார்.தன் சொந்த
மகனாகிய அப்சலோம்,தன்
தகப்பனான தாவீதின் உயிரை
பறிக்க வாங்கத் தேடினான்,
சீமேயி, கேட்கக்கூடாத தூஷண
வார்த்தைகளினால் தாவீதை தூஷித்தார்,இப்படி பற்பல
தீமையான காரியங்களை தாவீதை தொடர்வது போல் காட்சிளித்தாலும்............
இவைகளுக்கெல்லாம் முடிவில்
எல்லாம் தாவீதுக்கு நன்மையும்,ஆசீர்வாதமாகவே 
வந்து முடிந்து,தாவீது சொன்னது
போல் நன்மையும் கிருபையும்
மாத்திரமே அவரை தொடர்ந்து
வந்தது,சகலமும் நன்மைக்கு
ஏதுவாகவே நடந்தது,பழைய உடன்படிக்கையின் பக்தனாகிய
அவனுக்கே அவ்விதம் நன்மையும் கிருபையும் தொடந்தது
என்றால்,புதிய உடன்படிக்கையின்
தேவ பிள்ளைகளாகிய  நமக்கு
அதைவிட அதிகமாகதான்
நன்மையும் கிருபையும் தொடரும்
இவைகளை நாம் விசுவாசிக்கும்
போது அவைகள் செயல்பட
ஆரம்பிக்கிறது,

ரோமர் 8:28 சொல்கிறது.......
அவருடைய  தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த்
தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு  சகலமும் நன்மைக்கு ஏதுவாக
நடக்கிறது என்று...தேவனிடத்தில் அன்புகூருகிறவர்கள் என்றால் யார்?
இயேசுவின் உபதேசங்களை,அவரின் கற்பனைகளை கைக்கொள்கிறவர்கள் எவர்களோ அவர்களே!
தேவனிடத்தில் அன்பு
கூறுகிறவர்கள் ஆவார்கள்
(யோவா 14:21)அவர்களுடைய வாழ்க்கையில் சகலமும்
நன்மைக்கு ஏதுவாகவே
நடக்கும்,அவர்களுடைய
ஏன்  சகலமும் நன்மைக்கு
ஏதுவாகவே நடக்கும்?
ஏனென்றால் இயேசு கிறிஸ்துவினிடத்தில்
அன்புகூருகிற யாவருக்கும்
கிருபை உண்டாகும்(எபே 6:24)
எனவே அவர்களுடைய வாழ்க்கையில் சகலமும் நன்மைக்கு ஏதுவாக
மாத்திரமே நடக்கும்.

கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய சொந்த வித்துக்களே!உங்கள் வாழ்கையில் சில காரியங்கள் இன்று தீமை போல  தோன்றினாலும் நாளை அது நன்மையாக  மாறும்... இன்று சில விஷயங்கள் உங்களுக்கு தோல்வியாக தோன்றினாலும் நாளை அது வெற்றியாக மாறும்,
ஏனெனில் அவருடைய  தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த்
தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு  சகலமும் நன்மைக்கு ஏதுவாக மாத்திரமே நடக்கும்,உங்களுடைய ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும்
உங்களை நிச்சயம் தொடரும்.

ஆமென்... அல்லேலூயா...





No comments:

Post a Comment