Wednesday 15 April 2020

பிதா பெரியவர்,இயேசு சின்னவரா?

ஜெபராஜ்: பிதா பெரியவர்,இயேசு சின்னவர்

டேனியல்: இல்ல நண்பா,பிதா,குமாரன்,
பரிசுத்த ஆவியானவர்,ஆகிய மூவருமே
பெரியவர்கள்,அவர்கள் ஒன்றாய் இருக்கிறார்கள்,சமமாய் இருக்கிறார்கள்.

ஜெபராஜ்: இல்ல டேனி... யோவான் 14:28ல் இயேசுவே சொல்றார்ல..."பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்"... என்று,அப்ப இயேசு சின்னவர் தான ?

டேனியல்: சரி நான் ஒரு கேள்வி, கேட்குறேன் இயேசு நல்லவரா?
கேட்டவரா? இதுக்கு பதில் சொல்லு ஜெபராஜ்?

ஜெபராஜ்: அதில் என்ன சந்தேகம்,இயேசு நல்லவர்,மிகவும் நல்லவர்..

டேனியல்: ஆனால் இயேசு,
மாற்கு 10:18 ல "நீ என்னை நல்லவன்
என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே"
என்கிறாரே,அப்ப பிதா நல்லவர்,
இயேசு கெட்டவரா?

ஜெபராஜ்: இல்லை இல்லை பிதாவும் நல்லவர்,இயேசுவும் நல்லவர் தான்,இந்த இடத்துல இயேசு பிதாவுக்கு முன்பாக தன்னை தாழ்த்துகிறார்,இயேசு நல்லவர்தான்....

டேனியல்: அதேபோல தான்,பிதாவும் பெரியவர்,இயேசுவும் பிதாவுக்கு சமமாக பெரியவர்,மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாகிய இயேசு (1 தீமோ 3:16) தன் வாழ்நாள் முழுவதும் தன்னை தாழ்த்தி பிதாவை உயர்த்திக்கொண்டே செல்கிறார்..
இயேசுவின் இந்த தாழ்மை வாழ்க்கையை பார்த்துவிட்டு இயேசு சிறியவர் என்று சொல்ல முடியாது... ஏனென்றால் இயேசு தேவனுக்கு சமமானவர் (பிலி2:6) என்று வேதம் போதிக்கிறது....அந்த மகிமையை இயேசு கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.தேவ ரூபமாய் இருந்த அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்,பிதா எப்படி பெரியவரோ அதேபோல் பிதாவுக்கு இணையாக இயேசுவும் பெரியவர்...

ஜெபராஜ்: ஆமா நண்பா இப்பதான் எனக்கு புரியது.... இயேசு,பிதாவுக்கு சமமாக இருப்பதை கருத்தில் கொள்ளாமல் தன்னை தாழ்த்தி பிதாவை உயர்த்திக்கொண்டே இருந்திருக்கிறார்... இதை நான் தப்பா புரிந்து கொண்டுவிட்டேன்..

டேனியல்: ஆமா ஜெபராஜ்,நாம் வேதத்தில் வாசிக்கிறோமே! இயேசு,பிதாவுக்கு சமமாக இருப்பதை கருத்தில் கொள்ளாமல் அதை மகிமையாக எண்ணாமல்,தன்னை தாழ்த்தி பிதாவை உயர்த்திக்கொண்டே இருந்திருக்கிறார்.எனவேதான் பிதா
எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவை உயர்த்தி,இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும்,
எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.(பிலி 2:6-11)
இதை சரியாக புரிந்து கொள்ளாமல்,
#இயேசுசிறியவர்,இயேசு #கெட்டவர்
என்ற #கள்ள உபதேசங்களுக்கு செவிகொடுத்து வஞ்சிக்கப்பட்டுவிட கூடாது...

ஜெபராஜ்: ஓகே நண்பா என்னை தெளிவூட்டியதற்கு நன்றி...

No comments:

Post a Comment