Wednesday 15 April 2020

நாம் எதன் மீது முழு விசுவாசத்தை வைக்க வேண்டும் ? தீர்க்கதரிசனங்களின் மீதா ? சொப்பனங்களின் மீதா? அல்லது வேத வசனங்களின் மீதா ?

**************************************
நாம் எதன் மீது முழு விசுவாசத்தை
வைக்க வேண்டும் ?
தீர்க்கதரிசனங்களின் மீதா ?
சொப்பனங்களின் மீதா?
அல்லது வேத வசனங்களின் மீதா ?
**************************************
உமது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும்
உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.
(சங்கீதம் 138:2)

டேனியல்: நம் தேவன் தீர்க்கதரிசனங்களையோ.......... சொப்பனங்களையோ............... மகிமைப்படுத்தவில்லை...
ஆனால் தனது வார்த்தையை
எல்லாவற்றிற்கும் மேலாக மகிமைப்படுதித்தி இருக்கிறார்.
எனவே நாமும் தீர்க்கதரிசனங்கள், சொப்பனங்கள் இவைகளைவிட
கர்த்தருடைய வார்த்தையை முக்கியமானதாக கருதவேண்டும்.

பால்ராஜ்: ஆமா! கிறிஸ்துவுக்குள்
இருக்கும் ஒரு விசுவாசி ஏதாவது எதிர்மறையான ஒன்றை நேரிலோ
அல்லது சொப்பனத்திலோ,தரிசனத்திலோ,
பார்த்துவிட்டு அதேபோல் எனக்கும் நடந்துவிடமோ..என்று பயந்து போய்... எதிர்மறையான காரியங்களை,எதிர்பார்த்து
கலங்கி கொண்டிருப்பது இருப்பது சரியானது அல்ல... ஏனெனில் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் ஆம்
என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறது (2 கொரி1:20) அந்த வார்த்தைகள் நேர்மறையாக,
நன்மையாகவே இருக்கின்றன...
எனவே நாம் இப்படிப்பட்ட காரியங்களை மகிழ்ச்சியோடு,எதிர்பார்த்து இருக்க வேண்டும்.... இதுவே சரியானது...

டேனியல்: அதாவது கிறிஸ்துவுக்குள் இருக்கும் ஒரு விசுவாசி,தனக்கு விபத்து நடப்பது போலவோ,தன்னை சார்ந்து இருப்பவர்களுக்கு ஏதோ அசம்பாவிதம்,
ஏற்படுவது போலவோ,ஒரு தரிசனத்தையோ,சொப்பனத்தையோ கண்டுவிட்டு,அது தனது வாழ்வில் நடக்கப்போகிறது என்று எதிர்மறையான, எதிர்பார்ப்புடன் இருக்க கூடாது...

பால்ராஜ்: ஆமா! என்ன வந்தாலும்
எனது வாழ்வில் நன்மைக்கேதுவானவை மாத்திரமே நடக்கும்,நன்மையும் கிருபையும் என்னை தொடர்ந்துவரும்,நான் போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டவன்,
நான் வருகையிலும்
ஆசீர்வதிக்கப்பட்டவன்,என் பாதம் கல்லில் இடறாதபடி தூதர்கள் தங்கள் கரங்களில் என்னை ஏந்திக்கொண்டு போவார்கள்,
பொல்லாப்பு எனக்கு நேரிடாது,
வாதை எனக்கு நேரிடாது,
என்று அந்த நபர்,விசுவாசமாக இருக்க வேண்டும்,

டேனியல்: ஆமா! அவ்வாறு அவர் இருப்பார் என்றால்,அவர் வாழ்வில் எதிர்மறையான காரியங்கள் எதுவும்  நடக்கப்போவதில்லை,அதற்கு மாறாக அவர்எதிர்பார்த்த,விசுவாசித்த,
அறிக்கையிட்ட வேதத்தில் 
எழுதியிருக்கிற நேர்மறையான நன்மையான ஆசீர்வாதமான காரியங்கள் மாத்திரம் அவர் வாழ்வில் நடக்கும்...
ஏனென்றால் தேவன் தனது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் தமது வார்த்தையை மகிமைப்படுத்தியிருக்கிறார்.

பால்ராஜ்: தீர்க்கதரிசனங்களையும், தரிசனங்களையும் சொப்பனங்களையும் நம்ப வேண்டாம் என்று நான் சொல்லவில்லை,அவைகள் தேவனுடைய வார்த்தைகளுக்கு ஒத்து இருக்கிறதா???
என்பதை பார்த்து அவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் சொல்கிறேன்....

டேனியல்: ஆமா! அவைகள் கிறிஸ்துவின் உபதேசத்திற்கு,அப்போஸ்தலர்களின் போதனைகளுக்கு,புதிய உடன்படிக்கையின் சத்தியங்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா????? என்பதை வைத்து அது மெய்யா இல்லை பொய்யா என்று நாம் பகுத்தாய்வு செய்து உள்வாங்க வேண்டும்.

பால்ராஜ்: மொத்தத்தில்
தீர்க்கதரிசனங்களையும்,
தரிசனங்களையும் சொப்பனங்களையும்
இரண்டாவது இடத்தில் நாம் நிறுத்தி வைக்கவேண்டும்,தேவனுடைய வார்த்தையை முதலிடத்தில் நிறுத்தி வைக்கவேண்டும்,அது யார் சொன்ன தீர்க்கதரிசனமாக இருக்கட்டும்,
தேவன் வேதத்தில் நமக்கு சொல்கிற தீர்க்கதரிசனத்தை விட மேலானது
எதுவும் இல்லை..

#அதிக #உறுதியான #தீர்க்கதரிசன #வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற #அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்.

(2 பேதுரு 1:19)

டேனியல்: ஆமா... தேவன் வேதத்தில் நமக்கு சொல்கிற தீர்க்கதரிசனங்கள்,
அதிக உறுதியானவை என்றும் அவ்வசனத்தை கவனித்திருப்பது நமக்கு நலமாயிருக்கும் என்று வேதம் போதிக்கிறது..

பால்ராஜ்: ஆமா! ஒரு தீர்க்கதரிசி,உங்கள் சரீரத்தில் வியாதிப்பட்டிருப்பதை போல பார்க்கிறேன் என்று முன்கூட்டியே சொல்கிறார் என்றால் அது தீர்க்கதரிசனம்,
வாதை உன் கூடாரத்தை அணுகாது
இயேசுவின் தழும்புகளால் குணமாகியிருக்கிறீர்கள், என்று வேதம் சொல்கிறது இது அதிக உறுதியான தீர்க்கதரிசனம்... நாம் எதன் மீது விசுவாசம் வைக்கப்போகிறோம்? தீர்க்கதரிசி சொல்லும் தீர்க்கதரிசனத்தின் மீதா? அல்லது வேதத்தில் தேவன் சொல்லும் அதிக உறுதியான தீர்க்கதரிசனத்தின் மீதா?

டேனியல்: வேதத்தில் தேவன் சொல்லும் அதிக உறுதியான தீர்க்கதரிசனத்தின் மீது விசுவாசம் வைத்து வாழுவோம்,ஏனெனில்
தேவனே சத்தியபரர்,எந்த மனுஷனும் பொய்யன் (ரோமர் 3:4) எனவே தேவனுடைய வார்த்தைகளோடு ஒட்டிக்கொள்ளுவோம்,அதுதான் நமது ஜீவன்,அதுதான் நமது பிழைப்பு,அது ஒழிந்து போகாது,என்றென்றும் நிலைத்து இருக்கும்,அனுப்பின காரியமாகவே வாய்க்கும்,எழுதியிருக்கிற அனைத்தும் நிறைவேறும்,தேவனுடைய வார்த்தைகளுக்கு மேலாக எந்த தீர்க்கதரிசனமும் இல்லை,வேதாகமத்திற்கு மேலாக எந்த ஊழியக்காரரும் இல்லை...

ஆமென்... அல்லேலூயா...


No comments:

Post a Comment