Sunday 19 April 2020

உங்களுக்கு தீமை செய்தவர்களுக்கு,நன்மை செய்யுங்கள்

தீமைக்குத் தீமையையும்,
உதாசனத்துக்கு
உதாசனத்தையும்
சரிக்கட்டாமல்,
அதற்குப் பதிலாக,நீங்கள்
ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டு இருக்கிறவர்கள் என்று அறிந்து,ஆசீர்வதியுங்கள்
(1 பேதுரு 3:9)

கிறிஸ்து இயேசுவுக்குள்
பிரியமானவர்களே!
பழைய ஏற்பாடு காலத்தில்
கண்ணுக்குக் கண்,பல்லுக்குப் பல்,
கைக்கு கை,காலுக்கு கால்,ஜீவனுக்கு
ஜீவன் என்கிற நியாயப்பிரமாணம் செயல்பாட்டில் இருந்தது,அது
அக்கால மக்களுக்கு
சட்ட  கட்டளையாக
கொடுக்கப்பட்டது (யாத் 21:24)
(லேவி 24:20)(உபா19:21)

ஆனால் இன்று நாம் புதிய உடன்படிக்கையின் கீழ் கிருபைக்கு
கீழாக இருக்கிறோம்,தேவ அன்பு
நமது இருதயத்தில் ஊற்றப்பட்டு இருக்கிறது (ரோம5:5) எனவே
நமக்கு தீமை செய்கிறவர்களுக்கு
நாம் தீமை செய்யாமலும்,
நம்மை உதாசனப்படுத்துபவர்களை,
நாம் பதிலுக்கு உதாசனப்படுத்தாமலும்
இருக்க வேண்டும் என்றும்
(1 பேது 3:9)நம் சத்துருக்களைச்
சிநேகிக்க வேண்டும்,என்றும்
நம்மை சபிக்கிறவர்களை
ஆசீர்வதிக்க வேண்டும்,என்றும்,
நம்மை பகைக்கிறவர்களுக்கு
நன்மை செய்ய வேண்டும் என்றும்,
நம்மை நிந்திக்கிறவர்கிறவர்களுக்காகவும்  நம்மை துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ண வேண்டும் என்றும்
(மத்5:44)(லூக்6:28-29) புதிய உடன்படிக்கையின் போதனை
தொடர்ந்து நமக்கு வலியுறுத்துகிறது....

பழைய ஏற்பாட்டிலே,யேசபேல் எலியாவைப் பழிவாங்க வேண்டுமென்று துடித்தாள் (1இரா 19:2),ஆகாப் ராஜா தீர்க்கதரிசியாகிய மிகாயாவைப் பழிவாங்க வேண்டுமென்று துடித்தார் (1இரா 22:27). ஆமான் மொர்தெகாயைப் பழிவாங்க வேண்டுமென்று துடித்தார் (எஸ்தர் 3:6). ஆனால் அவர்களுடைய நிலைமையெல்லாம் பரிதாபமாய்
முடிந்தது,ஆம் பிரியமானவர்களே!
கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிற
நாம் எந்த சூழ்நிலையிலும் நமக்கு
தீமை செய்தவர்களை பழிக்கு பழி
வாங்க வேண்டும்,பழி தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று எண்ணக்கூடாது,
ஏனெனில்।"பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார்"(ரோம12:19)(எபி 10:30)
ஆம் பிரியமானவர்களே! ஆதி திருச்சபையிலே பவுல் சீஷர்களை துன்புறுத்தினான்,சபையைப்
பாழாக்கினான் (அப் 8:3) ஆனால்
சீஷர்கள் அவனை பழிவாங்க
வேண்டும்,அவனுக்கு பதிற்செய்ய வேண்டுமென்று நினைக்கவில்லை
ஆனால் கர்த்தர் பவுலுக்கு பதிற்செய்தார்
(அப்9:3-5)எனவே பவுல் மனமாறினான்,
சபையைப் பாழாக்கினவன்
சபைகளை கட்டி எழுப்புகிறவனாக ஆனான்,தேவனால் வல்லமையாக பயன்படுத்தப்பட்ட அப்போஸ்தலனாக மாறினான் கர்த்தருடைய பதிற்செய்தல்
இவ்விதமாக தான் இருக்கும்.

கிறிஸ்தவர்களாகிய நாம் நமக்கு விரோதமாய் குற்றம் செய்தவர்களை,
தண்டிக்க வேண்டும்,பழிவாங்க
வேண்டும் பகைக்க வேண்டுமென
வேதம் சொல்லவில்லை,
கிறிஸ்தவர்களாகிய நாம், நமக்கு விரோதமாய் குற்றம் செய்தவர்களுக்கு
தயவுகாட்ட வேண்டும்,மனதுருக்கம் கொள்ள வேண்டும்,கிறிஸ்துவுக்குள்
தேவன் நம்மை மன்னித்ததுபோல,
நாமும் அவர்களை மன்னிக்க வேண்டும்
(எபே 4:32) என்று புதிய ஏற்பாடு வழியுறுத்துகிறது..

பிரியமானவர்களே! மற்றவர்கள் எனக்குச் செய்தபிரகாரம் நானும் அவர்களுக்கு செய்வேன்,அவர்கள் எனக்கு செய்த செய்கைக்குத்தக்கதாக நானும் அவர்களுக்கு சரிக்கட்டுவேன் என்று
நாம் சொல்லகூடாது...(நீதி 24:29)
ஏனென்றால் நம் தேவன் நம்மை
நமது செய்கைக்கு,தக்க சரிக்கட்டுகிறவர் அல்ல,அவ்வாறு அவர் நமது
செய்கைக்கு தக்க நம்மை சரிக்கட்டியிருந்தால் நம்மை நியாயம் தீர்த்திருந்தால்,நாம் என்றோ அழிந்து போயிருப்போம்,ஆனால் அவர்
நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்,(சங்103:10)
ஆம் எனக்கு அன்பானவர்களே! இயேசு கிறிஸ்துவின் மூலமாய் தேவனுடைய அன்பை,மன்னிப்பை,இரக்கத்தை,
மனதுருக்கத்தை,தயவை,
ருசிபார்த்துக்கொண்டிருக்கிற
நாம் மற்றவர்களிடமும் அந்த
தெய்வீக பண்பின் சுபாவத்தை
வெளிபடுத்தி காட்ட வேண்டும்,
நமக்கு தீமை செய்கிறவர்களுக்கு
நாம் நன்மை செய்வோம்,
நம்மை உதாசனப்படுத்துபவர்களை,
ஆசீர்வதிப்போம்,நம் சத்துருக்களைச்
சிநேகிப்போம்,நம்மை சபிக்கிறவர்களை
வாழ்த்துவோம்,நம்மை நிந்திக்கிறவர்கள் மற்றும் நம்மை துன்பப்படுத்துவோர்க்காக
ஜெபம் செய்வோம்,இப்படிப்பட்ட தேவ சுபாவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று தேவன் நம்பிடம் எதிர்பார்க்கிறார்,அவரின் எதிர்பார்ப்பை
ஆவியானவரின் துணைகொண்டு நிறைவேற்றுவோம்,ஆண்டவர்
அருளும் ஆசீர்வாதங்களை  சுதந்தரிப்போம்.

ஆமென்... அல்லேலூயா...

Pr.Marvel jerome
Calvary living way ministries
Bangalore-India


No comments:

Post a Comment