Saturday 25 April 2020

இச்சையடக்கம்


#இச்சையடக்கம் #சுயகட்டுப்பாடு

கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
(கலாத்தியர் 5:24)

கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமானவர்களே! கிறிஸ்தவர்களாகிய நாம் எல்லாவற்றிலும்,சுயக்கட்டுப்பாடு (அதாவது) இச்சையடக்கம் கொண்டவர்களாக இருக்கவேண்டும்.
அந்தகார இருளில் இருந்த நம்மை ஆச்சரியமான ஒளியினிடத்திற்கும் உளையான சேற்றில் கிடந்த,நம்மை உயரமான ஸ்தானத்திற்கு,நம்
தேவன் கொண்டு வந்திருக்கின்றார்,
தேவன் இந்த உலகத்திலிருந்து நம்மை பிரித்தெடுத்து தன்னுடைய உன்னதமான திட்டத்திலே,நோக்கத்திலே ஓட்டத்திலே நம்மை வைத்திருக்கின்றார்,இன்று
நாம் மறுபடியும் அந்தகார இருளையோ,உளையான சேற்றையோ,உலகத்தையோ
திரும்பிப்பார்க்கக்கூடாது,
கலப்பையின் மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டு பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார் (லூக் 9:62) உலகத்திலே ஒரு பந்தயத்திலே பங்குகொள்கிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சை அடக்கமாய் இருப்பார்கள்‌,அழிவுள்ள ஒரு பரிசை,கிரீடத்தை பெற்றக்கொள்ள அவர்கள் இச்சையடக்கமாய் இருந்து,வெற்றி பெருகிறார்கள்,
ஆனால்,நாமோ அழிவில்லாத ஜீவ கிரீடத்தை (யாக் 1:12)(வெளி 2:10) பெறும்படி அவ்வாறு இருக்கிறோம்
(1கொரி 9:25)

1) இச்சையடக்கம் என்பது கிறிஸ்தவ வாழ்வின் ஒரு அங்கம்.

தேசாதிபதியாகிய பேலிக்ஸ்,அப். பவுலிடம் கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தை குறித்து கேட்கும் போது பவுல் நீதியையும், இச்சையடக்கத்தையும்,இனிவரும் நியாயத்தீர்ப்பையும் குறித்து 
பேசினார். (அப் 24:24-25)

2) இச்சையடக்கம் என்பது இயேசுவின் ஊழியக்காரனுடைய,
நீதிமானுடைய பரிசுத்தவானுடைய 
குணம் (தீத்து1:5-8)

3) இச்சையடக்கம் என்பது ஆவியின்
கனியில் ஒன்று (கலா 5:22-23)
மரமானது நிலத்தோடு இணைந்து ஐக்கியத்தில் இருக்கும் பொழுது
அது தானாகவே கனி கொடுக்க, ஆரம்பிக்கின்றது,அதேபோல,
நாம் தேவனுடைய வார்த்தையில்
தியானமாய்,இருந்து
ஆவியானவரோடு,ஐக்கியத்தில்  இணைந்து இருக்கும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் ஆவியின் கனி வெளிப்பட ஆரம்பிக்கிறது(சங் 1:2-3)(2கொரி 13:14)

4) இச்சை என்பது தேவனால் உண்டானது அல்ல,அது உலகத்தில் உண்டானது (1 யோவா 2:16)

5) இச்சையடக்கம் என்பது தேவனுடைய சித்தம்,அவர் சித்தம் செய்கிறவன்,என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.(1 யோவா 2:17)

6) இச்சை என்பது அஞ்ஞானிகளின்
குணம்,கிறிஸ்துவுக்கள் ஞானிகளாகிய நாம் இச்சையடக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும்,(1தெச 4:4)(1கொரி 1:31)(2 பேது1:6)

7) நாம் தேவபக்தி உள்ளவர்களாய்
இந்த உலகத்தில் வாழ்வதற்கும்,
நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும்,மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலில் பங்கு கொள்வதற்கு நாம் இச்சையடக்கமுள்ளவர்காக
இருக்க வேண்டும் (தீத்து 2:11-13)

கிறிஸ்தவர்களாகிய,நாம் பாவம் செய்யாமல் பரிசுத்தமாய், வாழ்வதற்கு இச்சையடக்கம் மிகவும்,அவசியம் என்று வேதம் போதிக்கின்றது

A) நாம் எந்த பாவத்திற்கு உடன்படாமல் நம்மை சுத்தமாய் காத்துக்கொள்ள வேண்டும்.(1 தீமோ 5:22)

B) பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு,
நாம் விலகி ஓட வேண்டும்,
நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடவேண்டும்( 2 தீமோ 2:22)

C) நமது ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலக வேண்டும் (1பேது 2:11)

ஏன் இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் இச்சையடக்கம் கொண்டவர்களாக
இருக்க வேண்டும்?

ஏனென்றால் இச்சையானது கர்ப்பந்தரித்து,பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும் போது, மரணத்தைப் பிறப்பிக்கும்,(யாக் 1:14-15) எனவே  இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் இச்சையடக்கம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்,அதுமட்டுமல்ல
பாவ சோதனையிலிருந்து தப்பிக்க
இச்சையடக்கம் மிக அவசியம்.

இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் பாவம் செய்ய வாய்ப்புகள் உள்ளதா?

விசுவாசிகள் பாவத்தின் வஞ்சனையினாலே,கடினப்பட்டு போவதற்கு வாய்ப்புகள் உள்ளது,
எனவே ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள் வேதம் வலியுறுத்துகிறது.(எபி 3:13)
தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.
என்றும் சொல்லுகிறது(1கொரி 10:12)

நீதிமான்கள் எப்படி இருக்க வேண்டும்?

இயேசு கிறிஸ்துவினால் நீதிமான்கள் ஆக்கப்பட்ட ஒரு நீதிமான்(ரோம 3:24)
தான் பெற்ற நீதியின் படி பாவஞ்செய்யாமல் விழித்துக்கொண்டு,தெளிவாய் இருக்க வேண்டும் (1 கொரி 15:34)

ஆக கிறிஸ்தவர்களாகிய,நாம் பாவம் செய்யாமல் பரிசுத்தமாய்,வாழ்வதற்கு இச்சையடக்கம் (அதாவது)சுய கட்டுப்பாடு மிகவும்,அவசியம் என்று வேதம் போதிக்கின்றது.

நாம் எந்தெந்த விஷயங்களில் இச்சையடக்கம் (சுய கட்டுப்பாடுடன்) இருக்க வேண்டும் என்று வேதம் நமக்கு போதிக்கிறது?

1) நம்முடைய சுபாவத்தினே சுய கட்டுப்பாடு,மிகவும் அவசியம்,

A) நாம் கோபம் கொண்டு பாவம் செய்யாமல் இருக்க,(எபே4:26)(நீதி 19:19)(நீதி12:16)நீதி 29:11)

B) சடாரென கோபம் கொள்ளாமல்,கோபத்திற்கு தாமதிக்கும் அடக்க சுபாவம்  கொண்டவர்களாக,
இருக்க (யாக் 1:19) சுய கட்டுப்பாடு நமக்கு மிகவும் அவசியம்
2)நாம் பேசக்கூடிய வார்த்தையிலே
கட்டுப்பாடு (அதாவது)அடக்கம்,மிக அவசியம்.

A) மரணமும்,ஜீவனும் நம்முடைய நாவின் அதிகாரத்தில் இருக்கிறது,
(நீதி 18:21)

B) வார்த்தைகளை அடக்குகிறவன் அறிவாளி என்றும்,தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான்
என்றும்,வேதம் கூறுகிறது
(நீதி 17:27-28)(நீதி:29:20)

C) பெருமையானவைகளை பேசும் நாவு,நமது முழுசரீரத்தை கறைப்படுத்து வாழ்நாளை அழித்துவிடும் (யாக் 3:4-6)

D) யாருக்கும் பிரயோஜனம் இல்லாத
கெட்ட வார்த்தைகளை,நாம் பேசாமல்,
சுய கட்டுப்பாடுடன் இருந்து கேட்கிற அனைவருக்கும் பிரயோஜனமான பக்தி விருத்தியை  உண்டாக கூடிய நல்ல வார்த்தைகளை நாம் பேசவேண்டும் (எபே 4:29)

3) நாம் பரிசுத்தமாய் வாழ சுய கட்டுப்பாடு (இச்சையடக்கம்) அவசியம்.

A) நாம் பரிசுத்தமுள்ளவர்களாக  இருக்கவேண்டும்,என்பதே தேவனுடைய சித்தமாக இருக்கின்றது,எனவே நம்முடைய பரிசுத்தத்திற்கு பாதகத்தை ஏற்படுத்துகின்ற,பாதிப்பை உண்டாக்குகின்ற எந்த காரியமாக இருந்தாலும் அதற்கு நாம் விலகி
இருக்க வேண்டும் (1 தெச 4:3)

B) தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் உடுத்துகின்ற உடைகள்,நமக்கு தகுதியானவைகளாகவும் கண்ணியமானவைகளாகவும் இருக்க வேண்டும்,(1 தீமோ 2:9-10)

C) நாம் உடுத்துகின்ற உடைகள் எதிர்பால் இனத்தாருக்கு இச்சையைத் தூண்டக்கூடிய வகையிலோ, அவர்களுக்கு இடறலை  உண்டாக்கக்கூடிய வகையிலோ,  இருக்கக்கூடாது (மத் 5:28)(மத் 18:6)

D) தேவனுடைய பிள்ளைகளாகிய நாம்,மதுபானம்,புகையிலை போதை பொருட்கள் ஆகியவைகளை உபயோகபடுத்துகிறவர்களாகவும், அதற்கு அடிமைப்பட்டவர்களாகவும்
நாம் இருக்க கூடாது,களியாட்ட வெறி கொண்டு,இழிவான ஆதாயத்திற்க்காக இச்சிக்கிறவர்களாயும்,நாம் இருக்க கூடாது,நாம் இச்சை அடக்கத்தோடு  பரிசுத்தமாய் வாழ வேண்டும்.
(எபே 5:18)(1தீமோ 3:8)(தீத் 1:7)
(கலா 5:21)

E) நம்முடைய சரீரம் தேவனுடைய
பரிசுத்த ஆலயம் ஆக இருக்கின்றது,
இயேசு தன்னுடைய சரீரத்தை பலியாக தந்து,நம்முடைய சரீரத்தை பரிசுத்தமாக்கியிருக்கிறார் (எபி10:10,14) எனவே நம்முடைய சரீரத்தை எக்காரணத்தைக் கொண்டும்,கெடுக்கிற நடவடிக்கைகளில் நாம், ஈடுபடக்கூடாது,
அது தேவனுக்கு பிரியமில்லாத காரியம்.(1கொரி 3:16-17)

F) தேவனுடைய பிள்ளைகளாகிய நாம்
பண ஆசை இல்லாதவர்களாகவும்,
பணத்தின் மீது இச்சை, கொண்டவர்களாகவும் இருக்க கூடாது
லஞ்சம்,ஊழல்,சூதாட்டம்,கடத்தல்‌,
பதுக்கல்,கருப்பு பணம்,கள்ள நோட்டு,
வட்டி,ஆகிய பாவ வழிகளில் பணம் சம்பாதிக்க உடன்பட கூடாது,
அது நமக்கு சாபத்தையும்,அழிவையும்
கொண்டுவரும் (எரே 17:11)(எசே 22:13) குறுக்கு வழிகளில் வருகின்ற,
ஐசுவரியம் வேதனையை தரும்
(1 தீமோ 6:9-10)ஆனால் நேர்மையான வழியிகளில்,கர்த்தருடைய ஆசீர்வாதத்தால் வருகிற ஐசுவரியம்
வேதனையை தராது (நீதி 10:22)

ஆமென்... அல்லேலூயா...



Pr.Marvel jerome
Calvary living way ministries
Bangalore-south India

We hope that you are blessed
by our ministry.

No comments:

Post a Comment