Thursday 23 April 2020

மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்



மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்;
கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார். (1 சாமுவேல் 16:7)

கிறிஸ்துவுக்குள் புதுபடைப்புக்களே!
தாவீது மேய்ப்பனாக இருந்த போது,
இவன்,கோலியாதை வீழ்த்தி இஸ்ரவேலின் சேனைக்கு வெற்றி கொடுக்கப்போகிறவன்
இவன் இஸ்ரவவேலின் ராஜாவாக ஆக போகிறவன் என்று அனேகருக்கு தெரியாது, தாவீதை எல்லோரையும் போல ஒரு சாதாரண வாலிபனாக,ஆடுகளை
மேய்பவனாக,தன் சகோதரர்களுக்கு,
உணவு கொண்டு செல்கிறவனாக,
மனிதர்கள் பார்த்தார்கள்,ஆனால் தேவன் அவ்விதம் அவனை பார்க்கவில்லை,
தேவன் தாவீதை ஆடுகள் மேய்த்துக்கொண்டு இருந்த அரசனாக பார்த்தார்,ஒரு அபிஷேகம் பண்ணப்பட்ட வாலிப ராஜாவாக பார்த்தார்,
அதுமட்டுமல்ல தாவீதின் சந்ததியில் இயேசுவை பார்த்தார்,இயேசுவை தாவீதின் குமாரனாக பார்த்தார்.

மோசே எகிப்தியனை கொலை செய்த
பிறகு,பார்வோனின் கைக்கு தப்ப மீதியான் தேசத்தில் அடைக்கலம் புகுந்தான்,
திருமணம் புரிந்தான்,குமாரனைப்
பெற்றான் அங்கே அவன் தன்னை ஆடு மேய்த்துக்கொண்டு இருக்கிற ஒரு பரதேசியாக பார்த்தான்,(யாத்2:22)
தனது எதிர்காலம் இவ்வளவு தான் என்று பார்த்தான்,அவனுடைய மனைவியும்,
மாமனாரும் அவ்விதமாக தான் அவனை பார்த்திருப்பார்கள்,ஆனால் தேவன் மோசேயை அவ்விதமாக பார்க்கவில்லை,
அவனுக்கு முன்பாக செங்கடல் இரண்டாக பிரித்து போவதை பார்த்தார்,
எகிப்திய சேனையை கடலில் போட்டு முறியடிக்கிறவனாக பார்த்தார்.
அவனை இஸ்ரவேல் மக்களின் இரட்சகனாக பார்த்தார்.

கிதியோன் தன்னை சிறியவனாகவும்,
பலவீனமானவனாக பார்த்தான்,
ஆனால் கர்த்தர் அவனை பராக்கிரமசாலியாக பார்த்தார்
(நியா 6:12,15) தாவீதை மனிதர்கள்
ஒரு சாதாரண வாலிபனாக பார்த்தார்கள்,ஆனால் தாவீதை தேவன் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு ராஜாவாக பார்த்தார்,(1சாமு16:10-13)மோசேவை மனிதர்கள் கொலைகாரனாக, ஆடு மேய்க்கிற மேய்பவனாக பார்த்தார்கள்,
அவன் தன்னை பரதேசியாக பார்த்தான்,
ஆனால் தேவன் அவனை இஸ்ரவேலின் இரட்சகனாக பார்த்தார்.(யாத்2,3)
பேதுருவை மனிதர்கள் மீன் பிடிக்கிற மீனவனாக பார்த்தார்கள்,ஆனால் தேவன் பேதுருவை மனிதர்களை பிடிக்கிறவனாக பார்த்தார், பவுலை மனிதர்கள் பிரதான ஆசாரியரிடம்,நிருபங்களை வாங்கி கொண்டு சபையை துன்புறுத்துகிறவனாக பார்த்தார்கள்,ஆனால் தேவன் பவுலை,
சபைகளை கட்டி எழுப்பி,சபைகளுக்கு நிருபங்களை எழுதுகிற அப்போஸ்தலனாக பார்த்தார்.

தேவன் மனிதன் பார்க்கிறபடி பார்க்கிறவர் இல்லை,அவரோட பார்வையே வேற,மனிதர்கள் நமது கடந்த காலத்தை,நிகழ்காலத்தை பார்ப்பார்கள் அதை வைத்து நம்மை கணிப்பார்கள்,
பார்ப்பார்கள்,முடிவுகளை எடுப்பார்கள்,
ஆனால் தேவன் நமது எதிர்காலத்தை பார்த்து,முடிவெடுப்பார்,நம்மை நடத்துவார்.
உயர்த்துவார்,மேன்மைப்படுத்துவார்.
எனவே சகோதர சகோதரிகளே மற்றவர்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள்,என்பதை பற்றி கவலைப்படாதிருங்கள்,மற்றவர்கள் உங்களை பார்ப்பதோ,அல்லது நீங்கள் உங்களை பார்ப்பதோ முக்கியம் அல்ல தேவன் உங்களை எப்படி பார்க்கிறார் என்பதே முக்கியம்,எனவே எதைக்குறித்தும் கலங்க வேண்டாம். கிறிஸ்துவுக்குள் இருக்கும் உங்களை தேவன் தன் சொந்த பிள்ளையாக பார்க்கிறார்,பரிசுத்த ஜாதியாக பார்க்கிறார்,நீதிமானாக பார்க்கிறார்,புதுசிருஷ்டியாக பார்க்கிறார்,ராஜாவாக பார்க்கிறார்,
ஆசாரியராக பார்க்கிறார்,
ஒளியின் பிள்ளைகளாக பார்க்கிறார்,
எனவே எதைக்குறித்தும் கலங்க வேண்டாம்,உங்களுக்காக தேவன்,
பெரிய ஒளி மயமான திட்டத்தை வைத்திருக்கிறார்,அதை அவரே நிறைவேற்றுவார்.

ஆமென்... அல்லேலூயா...

என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.
பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.
(ஏசாயா 55:8-9)



No comments:

Post a Comment