Wednesday 15 April 2020

ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து,கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.(எபேசியர் 4:32)

பிரியமானவர்களே! நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்,அதாவது
நாம் மற்றவர்களை மன்னித்ததால்,
தேவன் நம்மை மன்னிக்கவில்லை,
நாம் கிறிஸ்துவுக்குள் இருப்பதால்,
தேவன் நம்மை மன்னித்திருக்கிறார்,
எனவே நாமும் மற்றவர்களை
மன்னிக்க வேண்டும்.நாம் மன்னிப்பை  கொடுத்ததால் மன்னிப்பை பெறவில்லை,நாம் மன்னிப்பை
அவரிடம் பெற்றதால் மற்றவர்களுக்கு மன்னிப்பை கொடுக்க வேண்டும்.

ஒரு சில விசுவாசிகள் சொல்வார்கள்,
எனக்கு எதிராக அக்கிரமம் செய்தவரை,எனக்கு அநியாயம் செய்தவரை,நான் மன்னித்துவிட்டேன்,
ஆனால் அந்த அநியாயத்தை என்னால் மறக்க முடியவில்லை,எனவே அந்த நபரோடு எனக்கு எந்த ஒட்டுமில்லை உறவும் இல்லை,அவரோடு
பேச்சுவார்த்தை இல்லை,மன்னித்து விட்டேன் ஆனால் அதை மறக்கமாட்டேன்
என்று சொல்வார்கள்.ஆனால் தேவன்,
நமக்கு கொடுத்த மன்னிப்பு அந்த மாதிரியான மன்னிப்பு அல்ல,
வேதம் சொல்கிறது..........
"அவர் நம்முடைய அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து,நம்முடைய  பாவங்களையும் அக்கிரமங்களையும்
இனி நினையாமலிருப்பேன் என்கிறார்"
(எபிரெயர் 8:12) நம் தேவன் நம்முடைய அநியாய அக்கிரமங்களை,மன்னிக்கிற தேவன் மாத்திரம் அல்ல,அவர் நம்முடைய அநியாய அக்கிரமங்களை மன்னித்து அதை நினையாமல் இருக்கிற தேவன்.
இவ்விதமாக மன்னிப்பைதான் நாம் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும்
என்று புதிய உடன்படிக்கை நமக்கு வழியுறுத்துகிறது (எபேசியர் 4:32)

ஆம் என் அன்பு சகோதர சகோதரிகளே!தேவன் கிறிஸ்துவுக்குள் நம் பாவங்களை கிருபையாய் மன்னித்து,அவைகளை நினையாமல் இருப்பதால் தான்,
நாம் தைரியமாய்க் கிருபாசன தண்டையிலே,தேவ சமூகத்திலே சேரக்கூடிய தகுதியை உடையவர்களாய் இருக்கிறோம்,(எபிரெயர் 4:16)
அவர் நம்முடைய அநியாயங்களை அக்கிரமங்களை,மன்னித்துவிட்டு அவைகளை நினைத்துக்கொண்டே  இருந்தால்,நம்மால் அவர் சமூகம் நெருங்க முடியாது,அவரோடு உறவாட முடியாது,
அவரும் நம்மோடு நல் உறவை தொடரமுடியாது,எனவேதான் அவர் மன்னித்து அவைகளை நினையாமல் இருக்கிறார்,

ஆம் பிரியமானவர்களே! அவருக்கு
நம்மீது அளவற்ற அன்பு இருக்கிறது,
அவர் நம்மோடு உறவாட வேண்டும் என்று அதிகமாய் விரும்புகிறார்,அந்த உறவுக்கு தடையாய் இருக்கிற,நம்முடைய பாவங்களை,அநியாய அக்கிரமங்களை அவர் கிருபையாய் மன்னித்து,அவைகளை நினையாமல் இருக்கிறார்,ஏனெனில் தகப்பனாகிய அவருக்கு பிள்ளைகளாகிய நமது அளவற்ற அன்பு இருக்கிறது.

அந்த தேவ அன்பை அந்த தேவரக மன்னிப்பை பெற்ற நாமும்,
மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும்,
நாம் தேவனுக்கு எதிராக அக்கிரமம் அநியாயம் செய்தோம்,அவைகளை
அவர் மன்னித்து மறந்து அவைகளைப்பற்றி நினையாமலிருப்பேன் இருக்கிறார்,அதனால் நாம் அவரோடு நல் உறவில் இருக்கிறோம்,அதே போல நமக்கு எதிராக அக்கிரமம் அநியாயம் செய்தவரை மன்னிப்போம்,அவர்களின் குற்றங்களை மறப்போம்,அவைகளை பற்றி நினையாமல் இருப்போம்,அவர்களோடு அன்போடு உறவாடி,நல் உறவில் இருப்போம்,
இதைதான் தேவன் நம்மிடம் எதிர்பார்கிறார்.

இல்ல பிரதர் நீங்க சொல்றது சரிதான் ஆனால் எனக்கு எதிராக அநியாய அக்கிரமம் செய்தவரை,என்னால்
மன்னிக்க முடிகிறது,அவருக்கு
நான் பதிலுக்கு எந்த தீங்கும் செய்யவில்லை,ஆனால் அவர்
செய்த குற்றத்தை என்னால் மறக்க முடியவில்லை,பிறகு எப்படி அந்த
நபரோடு  என்னால் பழையபடி பேச முடியும்?எப்படி அந்த மனிதரோடு என்னால் இணைந்து வாழ முடியும்?
எப்படி அந்த நபரோடு நல் உறவில்
இருக்க முடியும்?வேதம் சொல்வது
போல் என் செய்யதான் ஆசை ஆனால் என்னால்,அவர்களின் துரோகத்தை அநியாயத்தை மறக்க முடியவில்லையே பிரதர்,என்று நினைக்கிற என் அன்பு சகோதர சகோதரிகளே! கர்த்தருடைய வசனத்திற்கு கீழ் படியுங்கள்,அதனால் உங்களுக்கு நன்மை உண்டாகும்,இந்ந வருடம் முடியப்போகிறது,உங்கள் வைராக்கியத்தை விட்டுவிடுங்கள்,
ஆவியானவரின் உதவியை நாடுங்கள்,ஆவியானவரே
கர்த்தருடைய வசனத்திற்கு கீழ்ப்படிய எனக்கு உதவி செய்யுங்கள்,
ஆவியானவரே கிறிஸ்துவுக்குள்
தேவன் என்னை மன்னித்ததுபோல,
நானும் மற்றவர்களை மன்னிக்க கூடிய மனப்பாங்கை தாருங்கள்,எனக்கு
எதிராக அக்கிரமம் அநியாயம் செய்தவரை மன்னிப்பதற்கும்,அவர்களின் குற்றங்களை மறப்பதற்கும்,அவைகளை பற்றி நினையாமல் இருப்பதற்கும் அவர்களோடு அன்போடு உறவாடி,நல் உறவில் இருப்பதற்கும்,தேவன் விரும்புகின்ற வாழ்க்கை நான் வாழ்வதற்கும் நீங்கள் எனக்கு உதவி செய்யுங்கள்
என்று ஜெபியுங்கள்,அவர் உங்களுக்கு உதவுவார்,உங்களை மற்றுவார்,
தேவனுக்கு பிரியமாய் உங்களை
வாழ வைப்பார்,நீங்கள் சமாதானத்தோடும் சந்தோஷத்தோடும்,தேவனுடைய
சகல ஆசீர்வாதங்களோடும் என்றும் இருப்பீர்கள்.

ஆமென்... அல்லேலூயா..

No comments:

Post a Comment