Saturday 18 April 2020

தட்டுங்கள்,அப்பொழுது
உங்களுக்குத் திறக்கப்படும்;
(மத்தேயு 7:7)

கிறிஸ்து இயேசுவுக்கு
பிரியமானவர்களே!
விசுவாச வாழ்க்கை
பயண பாதையிலே
விடுதலைக்கான,
ஆசீர்வாதத்திற்கான
அற்புதத்திற்கான,
உயர்வுக்கான
முன்னேற்றத்திற்கான,
பல வழிகளும்,
பல கதவுகளும்
அடைக்கப்பட்டும்
மூடப்பட்டும்
இருக்கின்றன,
ஒவ்வொரு
விசுவாசிகளுக்குள்ளும்
ஒரு தவிப்பு இருக்கின்றது,
அதாவது"எனக்கு
வழிகள் வாய்க்காதா
என் வாழ்க்கை
மாறாதா?"கதவுகள்
திறக்காதா என்
கஷ்டங்கள் தீராதா?
என்று கவலைப்படுகிறார்கள்.
விசுவாசிகளுக்கு
வாய்க்காத வழிகள்
வாய்க்கவும்,அடைக்கப்பட்ட
கதவுகள் திறக்கவும்,
கர்த்தர் வைத்த
நியமங்களுக்கு
அவர்கள் வரவேண்டும்,
அப்படி செய்யாமல்
விசுவாசிகள் சுயமாக
ஏதாவது,முயற்சி
செய்து தோற்றுப்போய்
கொண்டிருக்கிறார்கள்.
தட்டுங்கள் திறக்கப்படும்
என்று இயேசு
சொல்லியிருக்கின்றார்,
எதை தட்டுவது,
எப்படி கட்டுவது என்பதை
நாம் வேத வசனத்தின்
வாயிலாக பார்ப்போம்
வாய்க்காத வழிகள்
வாய்ப்பதற்கும்,
அடைக்கப்பட்ட கதவுகள் திறக்கப்படுவதற்கும்
கர்த்தர் வைத்த
நியமங்களை கற்போம்.

1)இயேசுவின் நாமத்தை
மறுதலியாமல்,அவர்
நாமத்தைஉயர்த்தி,
கர்த்தருடைய வசனத்தை கைக்கொண்டு,அவருக்கு
பிரியமான வாழ்க்கை,
வாழ்கிறவர்களுக்கு
முன் #திறந்த #வாசலை,
கர்த்தரே வைப்பார் யாரும்
அதை #பூட்ட முடியாது.
(வெளி 3:8)

2)கர்த்தரால் அபிஷேகம்
பெற்றவர்கள் முன்னால்
#வாசல்கள் #பூட்டப்படாதிருக்கும்
#கதவுகள் #திறந்து இருக்கும்
#கோணலானவைகளைச் #செவ்வையாக்கப்படும்
(ஏசா45:1-4)

கர்த்தரால் அபிஷேகம்
பெற்றவர்கள் யாவர்?

இயேசு கிறிஸ்துவை
ஆண்டவராக,இரட்சகராக
ஏற்றுக்கொண்டு பரிசுத்த
ஆவியானவரின் அபிஷேகத்தை
பெற்ற நாம் தான்.(எபே 1:13)
(2 கொரி1:21)(1 யோவா 2:20)

3) தொடர்ந்து நாம் #ஜெபம்
செய்து கொண்டே இருக்கும்
பொழுது அடைக்கப்பட்டு,
இருக்கின்ற அத்தனை
#வாசல்களும் #திறக்கப்படும்
சுவிசேஷம் அறிவிக்க
வழி உண்டாக்க படும்.

உதாரணம்:

அப்.பவுல்
கொலோசெயர்களுக்கு
எழுதின திருமுகத்திலே
நாங்கள் திருவசனத்தை
சொல்லும் படியாக
தேவன் #வாசலை
#திறந்தருளும்படி
விசுவாசிகளிடம்
ஜெபிக்க
சொல்கிறார்
(கொலோ 4:3-4)

பேதுரு சிறையில்
இருந்தபொழுது,சபையார்
அவனுக்காக ஊக்கத்தோடு
ஜெபம் செய்தார்கள்,
தேவன் அவர்கள்
ஜெபத்தைக் கேட்டு,
தனது தூதனை அனுப்பி
பல #கதவுகளை திறக்கச்
செய்து,பேதுருவை
விடுவித்தார்(அப் 12:5-11)

சுவிசேஷத்தை
பிரசங்கிக்க கர்த்தரால்
#கதவு #திறக்கப்பட்டது
என்று அப்:பவுல்
சொல்கிறார்
(2 கொரி 2:12)

#நம்மைப்போல #பாடுள்ள
மனிதனாகிய #எலியா
ஜெபம் செய்து மூன்று
வருஷமும்
ஆறு மாதமும்
அடைக்கப்பட்டிருந்த
வானத்தை #ஜெபம்
செய்து #திறக்க
செய்தார்.
(யாக் 5:17-18)

4)தேவனை துதிக்கும்
போது,ஆர்ப்பரிக்கும்
போது அடைக்கப்பட்ட
கதவுகள் திறக்கின்றன,
அலங்கம் இடிந்து
விழுகின்றன

உதாரணம்:

பவுலும் சீலாவும் தேவனை
துதித்துப்பாடும் போது,
பூமி அதிர்ந்தது,சிறை
#கதவுகள்திறந்தது,
#கட்டுகள் அறுந்தது
(அப் 16:25-26)

இஸ்ரவேல் மக்கள்
எரிகோவை சுற்றி
வந்து,மகா சத்தமாய்
எக்காளம் ஊதி
ஆர்ப்பரித்தார்கள்
அப்பொழுது
தடையாக இருந்த
அலங்கம் இடிந்து
விழுந்தன (யோசு 6:20)

5)கர்த்தருடைய
வார்த்தைக்கு,நாம் செவி கொடுக்கும்,போது
அடைபட்டிருக்கிற
பாதைகள் திறக்கும்

உதாரணம்:

மோசே கர்த்தருடைய
வார்த்தைக்கு செவி
கொடுத்ததினால்
இஸ்ரவேல் மக்களுக்கு
தடையாக இருந்த
செங்கடல் இரண்டாக
பிரிந்தது (யாத்14:16)

யோசுவா கர்த்தருடைய
வார்த்தைக்கு செவி
கொடுத்ததினால்
தடையாக இருந்த
யோர்தான்
இரண்டாக பிரிந்து
குவியலாக நின்றது
(யோசு 3:15-17)

கர்த்தருடைய
ஊழியத்திற்கென்று,
நாம் கொடுக்கும் பொழுது,
அடைக்கப்பட்டு இருக்கின்ற
பொருளாதார ஆசீர்வாத
கதவுகள் நமக்காக
திறக்கின்றன (மல் 3:10)

ஆம் பிரியமானவர்களே!
வாய்க்காத வழிகள்
வாய்ப்பதற்கும்,
அடைக்கப்பட்ட கதவுகள் திறக்கப்படுவதற்கும்
கர்த்தர் வைத்த
நியமங்களை
கைகொள்ளுவோம்

ஆமென்.. அல்லேலூயா...

Pr.Marvel jerome
Calvary living way ministries
Bangalore-India


No comments:

Post a Comment