Wednesday 15 April 2020



இஸ்ரவேலை (கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனங்களை) ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் (எண்ணாகமம் 24:1)

பீட்டர்: தேவனுடைய ஜனங்களை சபிப்பதை அல்ல,அவர்களை ஆசீர்வதிப்பதே,
தேவனுக்கு பிரியமாக இருக்கிறது.. அவர்கள் சாவதை அல்ல, அவர்கள் வாழ்வதையே தேவன் விரும்புகிறார் (எசே 33:11)

ஜேம்ஸ்: ஆம்! அவர் தம்முடைய சொந்த ஜனங்களை மனதுருகி,ஆசீர்வதிக்கிறார்.
அவர்களை  மகிழ்ச்சியோடு,
ஆசீர்வதிக்கிறார். பூமியின் முதல் மனிதர்களாகிய,ஆதாம்,ஏவாளை,
தேவன் சிருஷ்டித்தபோது,கர்த்தர்
செய்த முதல் காரியம் அவர்களை ஆசீர்வதித்ததுதான் (ஆதி.1:28).
நாம் பரிபூரண ஆசீர்வாதங்களை அனுபவிக்கவேண்டும்.(யோவா10:10)
எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாய் இருக்கவேண்டும்,(3யோவா 1:2)
என்பதுதான் நமது  அன்புள்ள
பரம பிதாவின், இருதய விருப்பமாக இருக்கிறது....

பீட்டர்: இப்படி தேவன் தம்மை விசுவாசிக்கும்,சகல ஜனங்களின் ஆசீர்வாதத்தையும்,வாழ்வையும் விரும்புகிறவராய் இருக்க,ஒரு சில  போதகர்கள்,மற்றும் சில விசுவாசிகள்
மக்கள் எல்லோரும் ஆசீர்வாதமாய்
இருக்க வேண்டும் என்று விரும்புகிறது இல்லை,தமக்கு காணிக்கை கொடுக்கிற மக்கள் மட்டும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும்,என்று போதகர்களும்,
நம்மை நேசிப்பவர்கள் மட்டும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று விசுவாசிகளும் விரும்புகிறார்கள்...
ஆனால் தேவனோ தன்னை நம்பியிருக்கும்  எல்லா மக்களும் பரபட்சம் இன்றி,
ஆசீர்வாததமாய் வாழவேண்டும் என்று விரும்புகிறார்..... தனது ஜனங்கள்
சாபத்தில் வாழ்வதையோ,தனது
ஜனத்தை யாரும் சபிப்பதையோ
தேவன் விரும்புகிறது இல்லை

ஜேம்ஸ்: ஆமா நண்பா! வேதத்தில் கூட
ஒரு சம்பவத்தை பார்க்கலாம்....
பிலேயாம் என்கிற ஒரு தீர்க்கதரிசி இருந்தான்,அவன் இஸ்ரவேலன் இல்லை,அவன் புறஜாதியா இருந்தாலும் கர்த்தர் அவனைத் தெரிந்துகொண்டார். அவனோடு பேசினார். மட்டுமல்ல, தீர்க்கதரிசன வரத்தைக் கொடுத்தார். அவனைக் கொண்டு பேசினார்.
மோவாபின் ராஜாவாகிய பாலாக், இஸ்ரவேலர் ஜனங்களைச் சபிக்கும்படிக்கு, பிலேயாமுக்கு கூலி கொடுத்து கூட்டிக் கொண்டு வந்தான்.ஆனால் கர்த்தரோ, அவனைச் சபிக்க அனுமதிக்கவே இல்லை. உருவின பட்டயத்தோடு, தம்முடைய தேவதூதனை அனுப்பி, எச்சரித்தார். ஆகவே, பிலேயாம், தனக்கு ஏராளமான வெகுமதிகளைக் கொடுத்த ராஜாவைப் பார்த்து, “இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளை பெற்றேன். அதை நான் திருப்பக்கூடாது,” என்று சொன்னான் (எண்.23:20). ஏனென்றால்,இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் (எண் 24:1) என்பதை பிலேயாம் கண்டு உணர்ந்தான்.....
தேவன் தன்னுடைய ஜனங்கள், சபிக்கப்பட்டு சாபத்தில் இருப்பதை
அல்ல,ஆசீர்வதிக்கப்பட்டு ஆசீர்வதமாய் வாழ வேண்டும் என்றே விரும்புகிறார்.

பீட்டர்: தேவனுடைய மக்களை சபிப்பதைப் போன்ற ஒரு காரியம்தான்,அவர்களுக்கு விரோதமாய்,பில்லிசூனியம் செய்வது, மந்திரவாதிகளுக்கு கூலி கொடுத்து, விசுவாசிகளின் குடும்பங்கள் அழியவேண்டும்,என்று ஆசைப்படுகிறார்கள்,அவர்கள் குடும்பத்தில் அகால மரணங்கள் நேரிடவேண்டும்,குடும்பம் சபிக்கப்படவேண்டும் என்றெல்லாம் பொல்லாத மனிதர்கள்,ஏவல் செய்கிறார்கள். ஆனால் தேவனுடைய பிள்ளைகளாகிய நாம்,(யோவா 1:12)அவைகளுக்குப் பயப்பட வேண்டியதில்லை.
“யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை” (எண். 23:23). “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும், வாய்க்காதேபோம்” என்று கர்த்தர் நமக்கு வாக்களித்திருக்கிறார்
(ஏசா. 54:17).

ஜேம்ஸ்: ஆமா  தேவபிள்ளைகளாகிய
நாம்,தீய மனுஷருக்கோ,பிசாசின் ஆவிகளுக்கோ பயப்பட தேவையில்லை,

“உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம் பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய். எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய். ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது,
வாதை உன் கூடாரத்தை அணுகாது”
(சங். 91:7-10).

பீட்டர்: ஆமென்,அல்லேலூயா,
விசுவாசிகளில் பலர்தங்களைத் தாங்களே அற்பமாய் எண்ணிக்கொள்கிறார்கள். “ஐயோ,என் மாமியார் என்னைச் சபிக்கிறாங்களே! எங்க சொந்தக்காரவங்க  எங்கள பாத்து பொறாமை படுறாங்களே!
பல வன்கண்கள் எங்களை சுத்தி  சூழ்ந்து இருக்குதே”என்று,ஒன்றும் வாய்க்காதேபோகும் அந்த அற்ப ஆயுதங்களை கண்டு,பயப்படுகிறார்கள்,
நாம் அவ்வாறு இருக்க கூடாது...
ஏனென்றால் நாம் உன்னதமான தேவனுடைய சொந்த பிள்ளைகளாக இருக்கிறோம்,நம்மை ஆசீர்வதிப்பதை
நம் பரலோக தகப்பனுக்கு பிரியம்,எனவே
எப்படிப்பட்ட எதிர் மறையான சூழ்நிலையை,நம்மை சுற்றி இருந்தாலும்,
நம்மை எதுவும் அணுக முடியாது,
ஒன்றும் சேதப்படுத்த முடியாது..
நாம் உன்னதமானவரின் மறைவிலும்,
சர்வவல்லவருடைய நிழலிலும்,
தங்கியிருக்கிறோம்....

உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.
(சங்கீதம் 91:1)

ஆமென்... அல்லேலூயா...


No comments:

Post a Comment