Wednesday 15 April 2020

#நோக்கிப்பார்த்தால் #பிழைப்பான்

நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்;ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்
(சங்கீதம் 23:4)

கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமானவர்களே!
இன்று உலகம் ஒரு
அசாதரண சூழ்நிலையில்
உள்ளது,மக்கள் அனைவரும் பயத்தோடும் பதட்டத்தோடும்,
அச்சத்தோடும்,அபாய
மனநிலையோடும்,
ஒவ்வொரு நாளையும் நகர்த்திக்கொண்டு இருக்கிறார்கள்,நம்மை
சுற்றி நடக்கிற நிகழ்வுகளை
நாம் பார்க்கும் போதும்,
செய்திகளை கேட்கும் போதும்,
மரண இருள் நம்மை சூழ்ந்து
கொண்டது போல் தோன்றுகிறது,
இந்த நிலையில்,நாம் மரண
இருளின் காரியங்களையே
நோக்கிக் கொண்டு இருக்காமல்
அதாவது வியாதி,மரணம்,
துர்செய்தி,எதிர்மறையான
நிகழ்வுகள்,இவைகளையே
நோக்கி கொண்டிருக்காமல்,
இந்த மரண இருள் சூழ்நிலையிலும்,
தேவன் நம்மோடு கூடவே
இருக்கிறார் (சங் 23:4) என்று
நாம் தேவனை நோக்கி
பார்க்க வேண்டும்.கொரோனா
என்கிற வாதை என்னை அணுகிவிடுமோ? மரணம்
என்கிற பொல்லாப்பு எனக்கு நேரிட்டுவிடுமோ? என்று
வாதையையும் பொல்லாப்பையும் நோக்கிப்பார்ப்பதை விட்டுவிட்டு, கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கும் நமக்கு எந்த வாதையும் அணுகாது,
எந்த பொல்லாப்பும் நேரிடாது
(சங் 91:10)என்று வசனத்தை நோக்கிப்பார்க்‌க ஆரம்பியுங்கள்.

ஆம் பிரியமானவர்களே!
வனாந்தரத்திலே,கொள்ளிவாய்
சர்ப்பங்களால் கடிக்கப்பட்டு,
சாகபோகிற நிலைமையிலிருந்த இஸ்ரவேல் மக்கள்,எப்படி
மோசேயினால் உயர்த்தப்பட்ட
வெண்கல சர்ப்பத்தை நோக்கி,
பார்த்து பிழைத்தார்களோ
(எண் 21:9) அதேபோல் கல்வாரி சிலுவையில் நமக்காக
உயர்த்தப்பட்ட கர்த்தராகிய
இயேசு கிறிஸ்துவை
நாம் நோக்கி பார்த்து
பிழைக்கும்படியாக கர்த்தரால் அழைக்கப்படுகின்றோம்
(யோவா 3:14-15)

நம்முடைய பலவீனங்களை ஏற்றுக்கொண்டு,நம்முடைய
நோய்களை கல்வாரி சிலுவையில் சுமந்து தீர்த்தவரை,நோக்கி
பார்ப்போம் (மத் 8:17) நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களின் நிமித்தம் நொறுக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை நோக்கி பார்ப்போம் (ஏசா 53:5)
இயேசுவின் தழும்புகளால்,
நாம் சுகமாக்கப்பட்டிருக்கின்றோம்,
எனவே அவருடைய தழும்புகளை
நாம் நோக்கி பார்ப்போம் (1பேது 2:24)
மரண இருளின்,காரியங்களை அல்ல மரணத்தை ஜெயித்தவர் நம்மோடு கூடவே இருக்கிறார் அவரை நோக்கி பார்ப்போம்,பிழைத்துக்கொள்வோம்.

ஆமென்... அல்லேலூயா...

நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் (எண்ணாகமம் 21:8)

Pr.Marvel jerome
Calvary living way ministries
Bangalore-south India

No comments:

Post a Comment