Monday 20 April 2020

பொறாமை படாதே! பாவத்தில் விழாதே!



பொறாமை படாதே !

"பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல்,பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்".
(ரோமர் 13:13)

ஜான் : பொறாமை என்பது ஒரு இருளின் சக்தி அது மனிதர்களை பல பிரச்சனைகளுக்குள்ளும்,
பாவத்திற்குள்ளும் நடத்துகிறது.
பொறாமையில் நடக்கிறவர்கள் இருளில் நடக்கிறார்கள்...

பீட்டர் : ஆமா ஆனால் நாம்  அவ்விதமாக இருக்கக்கூடாது.
பொறாமை எவ்விதம் கொடுமையான காரியங்களை உண்டாக்க துணிகிறது என்பதை நாம்,வேதத்தில் பல இடங்களில் பார்க்கிறோமே....

ஜான்: பொறாமைப் படுகிறவர்கள்,அதினால் பாதிக்கப்படாமல் இருப்பதில்லை. அதாவது அவர்கள் யார் மேல் பொறாமை கொள்ளுகிறார்களோ,  அவர்கள் பாதிக்கப்படுகிறார்களோ இல்லையோ ஆனால் பொறாமை படுகிறவர்கள் பயங்கரமாக பாதிக்கப்படுகிறார்கள்,பாவத்தில் விழுகிறார்கள்.

பீட்டர்: ஆமா ஜான்,நீ சொல்றது 100% சரி,பொறாமை படுகிறவர்களின் இருதயம் பொறாமையால் பாதிக்கப்படுகிறது. அவர்களின் இருதயம் கடினப்படுகிறது.
அது மாத்திரமல்ல தொடர்  பொறாமையானது எரிச்சலை ஏற்படுத்தி,இன்னும் அதிகமான பாவத்திற்குள் அவர்களை வழிநடத்திச் செல்லும்.அவர்கள் தேவனை  துக்கப்படுத்துகிறார்கள்.

ஜான்: ஆமா பொறாமையான எண்ணங்கள்,பாவம் செய்ய வழிவகுக்கும்...

பீட்டர்: ஆமா,ஆதியாகமம் 4ம் அதிகாரத்தில் நாம் பார்கிறோமே,  ஆபேலின் பலியை தேவன் அங்கிகரித்து, காயீனின் பலியை தேவன் புறக்கணித்தார். தேவன் அதை "நீதியாக" செய்தார்.ஆனால் காயீன் ஆபேலின் மேல் பொறாமை கொண்டு   எரிச்சலடைந்தான்,காயீன் அதோடு நிற்கவில்லை, அவன் ஒரு கொலைகாரனாக ஆக்கும் அளவுக்கு பொறாமை,அவனை  கொண்டு சென்றது.

ஜான்: பொறாமை என்பது ஒரு ஆவிக்குரிய கிறிஸ்தவனின் சுபாவம் இல்லை,அது உலத்தனமான மனிதனின் சுபாவம்,நாம் ஒருவேளை யார் மீதாவது பொறாமை கொண்டவர்களாய் இருந்தால் நாம் இன்னும் ஆவிக்குரிய வகையில் வளரவில்லை,ஆவியில் நாம் நடக்கிறவர்கள் இல்லை என்று நமக்கு காண்பிக்கிறது.....

பீட்டர்: ஆம் நாம் மற்றவர்களின் வளர்ச்சியை கண்டோ,முன்னேற்றத்தை கண்டோ,அவர்கள் கர்த்தரால்  ஆசீர்வதிக்கப்படுகிறதை கண்டோ
கர்ததர் அவர்களுக்கு கொடுத்த
தாலந்துகளை கண்டோ
பொறாமை கொள்ளக்கூடாது,
அவர்களின் மீது பொறாமை படுவதை விட்டுவிட்டு,கர்த்தரை நோக்கி பொறுமையோடு காத்திருப்போம் அவர்களை அங்கிகரித்த,தேவன் நம்மையும் அங்கிகரிப்பார்...
அவர்களை ஆசீர்வதித்த தேவன் நம்மையும் ஆசீர்வதிப்பார்...
அவர்களை உயர்த்திய தேவன் நம்மையும் உயர்த்துவார்...
நாம் தேவனுக்கு முன்பாக
"நீதியின் வழியில்"நடப்போம்.
ஏற்றக்காலத்தில் அவர் நம்மை மேன்மைப்படுத்துவார்...

ஆமென்... அல்லேலூயா...


No comments:

Post a Comment