Wednesday 15 April 2020

யார் ஆவிக்குரியவர்கள்?

பால்ராஜ்: யார் ஆவிக்குரியவர்கள்?
யார் ஆவிக்குரியவற்றில் முதிர்ச்சி அடைந்தவர்கள்? அவர்களின் அடையாளங்கள் யாவை சொல்லுங்கள் நண்பர்களே ? 

ஜெபராஜ்: வேதத்தை நன்று கற்றிந்தவர்கள் ஆவிக்குரிய முதிர்ச்சி உடையவர்கள்

ஜான்: அதுமட்டுமல்ல,ஆவிக்குரிய வரங்களை உடையவர்கள் ஆவிக்குரிய முதிர்ச்சி உடையவர்கள்

பீட்டர்: அதோடுகூட சபையிலே நீண்ட காலமாக அங்கத்தினராக இருந்து (அதாவது) 30,40 வருடங்களாக சபையின் வளர்ச்சிக்காக உழைத்தவர்கள்... இவர்களையும் நான் ஆவிக்குரிய முதிர்ச்சி அடைந்தவர்களாக கருதுவேன்

பால்ராஜ்: நண்பர்களே மேல் சொல்ல காரியங்களை நான் முழுமையாக மறுக்கவில்லை,அப்படிப்பட்ட காரியங்களை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்... ஆனால் நமது வேதம்,யார் ஆவிக்குரிய முதிர்ச்சி நிலையில் இருக்கிறார்கள்? யார் ஆவிக்குரிய குழந்தைகளாக இருக்கிறார்? என்பதற்கு துல்லியமான பதில் தருகிறது....

ஜான்&ஜெபராஜ்&பீட்டர் : அப்படியா?

பால்ராஜ்: ஆமா நண்பர்களே..
அப். பவுல் 1 கொரிந்தியர் 13:11 ல் இவ்வாறு.... சொல்கிறார்....
"நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்;
நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்".

இந்த 1 கொரிந்தியர் 13அதிகாரம்
முழுதும் அன்பை குறித்து பேசுகிறது..
ஒரு மனிதர் தேவ அன்பிலே நடக்காமல்
ஆவிக்குரிய வரங்களையும்,அருள் பண்புகளையும் கொண்டவராக இருந்தால்,அவர் ஆவிக்குரிய குழந்தை என்று வேதம் சொல்கிறது... அவர் ஆவிக்குரிய புருஷராவதற்கு (அதாவது)
ஆவிக்குரிய முதிர்ச்சி அடைவதற்கு அவர் தேவ அன்பிலே நடப்பது மிக அவசியம்..

ஜெபராஜ்:அப்படியானால் அவரிடம்  ஆவிக்குரிய வரங்கள் வேலை செய்தாலும்,அவர் தேவ அன்பிலே நடக்கவில்லை என்றான் அவர்  குழந்தையாக தான் கருதப்படுவாரா?

பால்ராஜ்: ஆமா ஜெபராஜ்..

ஜான்: எப்படி?

பீட்டர் : இதற்கு பதில் நான் சொல்கிறேன்
1 கொரிந்தியர் 13:1-3 எழுதப்படிருக்கிறது,நான் என்னதான் ஆவிக்குரிய வரங்களும்,அருள் கொடைகளும் உடையவனாக  இருந்தாலும்,எனக்கு உண்டான யாவற்றையும் அன்னதானம் பண்ணினாலும்,என்னிடம் அன்பு இல்லையெனில் நான் ஒன்றுமில்லை
நான் ஆவிக்குரிய குழந்தைகளாக இருக்கிறேன் என்று அர்த்தம்.. சரிதான?

பால்ராஜ்: சரிதான் நண்பா! நான் எதை செய்தாலும் தேவ அன்பில் இயக்கப்பட்டு செய்ய வேண்டும்,நான்,எனது என்கிற என் சுயம் வெளிப்படக்கூடாது, நமது
வரங்களை வெளிப்படுத்தினாலும்,
தானதர்மம் நற்கிரியைகள் செய்தாலும்
நாம் அவைகளை தேவ அன்பில்
நிறைந்து செய்ய வேண்டும்.
நான்... எனது.. என்கிற இறுமாப்புடன் எதையும் செய்யக்கூடாது

ஜெபராஜ்: இதனால் அப்:பவுல் கலாத்தியர் 2:20-ல் "இனி நான் அல்ல, கிறிஸ்துவே"
என்கிறார் அதுதான் ஆவிக்குரிய முதிர்ச்சியின் நிலை (அதாவது) குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டு
புருஷனான நிலை... ஏனென்றால் அன்பு தன்னைத்தான் புகழாது,தற்பொழியை நாடாது... அது தேவனை புகழும்... இப்படிப்பட்ட தன்மை கொண்டவர்கள் ஆவிக்குரியவர்கள் ஆவார்கள் சரியா?

பால்ராஜ்: சரிதான் நண்பா!
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது.
அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.இவைகளே ஆவிக்குரிய நற்பண்புகள்,இவைகள் ஒரு மனிதன் நடைமுறை வாழ்க்கையில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும் போது அவன் ஆவிக்குரிய முதிர்ச்சி அடைந்தவன்,(அதாவது)
அப்:பவுல்1 கொரி 13:11ல் சொன்ன குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டு
புருஷனான அந்த நிலையை அடைந்தவன்
சுயத்திற்கு மரித்து,தேவ அன்பினால் நடத்தப்பட்டு,பிறரிடத்தில் அன்பாய் இருப்பதே ஆவிக்குரிய வளர்ச்சியின் முதிர்ச்சியின் அடையாளம்..

ஜான்: ஆமா பால்ராஜ்,இப்படிப்பட்ட ஆவிக்குரிய பண்புகள் நமக்குள் நிறைந்திருக்கிறதா! என்று நம்மையே நாம் நிதானித்து பார்க்க வேண்டும்,உலகம் சொல்கிறபடி அல்ல,வேதம் சொல்கிற படி நாம் குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டு ஆவிக்குரிய புருஷர்களாக (முதிர்ச்சியில்)இருக்கிறோமா?
நாம் சுயத்திற்கு மரித்து,தேவ அன்பினால் இயக்கப்பட்டு,பிறரிடத்தில் அன்பாய் நடந்து கொள்கிறோமா? இதுவே நாம் ஆவிக்குரியவர்களா அல்லது மாம்சத்துக்குரியவர்களா என்பதை நிர்ணயிக்கும் அளவு கோளாக இருக்கிறது...

நம்மையே நாம் சுய ஆய்வு செய்துப்பார்ப்போம்


No comments:

Post a Comment