Wednesday 15 April 2020

#சத்துருக்கள் #அடங்குவார்கள்

இஸ்ரவேலே,நீ பாக்கியவான்;
கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்;அவர்கள் மேடுகளை மிதிப்பாய்,என்று சொன்னான். (உபாகமம் 33:29)

கிறிஸ்து இயேசுவுக்குள்
பிரியமான சகோதர சகோதரிகளே!
இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக இரட்சகராக ஏற்றுக்கொண்ட,
நீங்கள்,கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட
ஜனம்,கிறிஸ்துவுக்கள் நீங்கள்
இஸ்ரவேலர்களாக இருக்கின்றீர்கள் (எபே 2:15-16) இந்த உலகம்
உங்களை சாதாரணமானவர்களாக
நினைக்கலாம்‌,ஆனால் நீங்கள் சாதாரணமானவர்கள் அல்ல,
நீங்கள் கர்த்தரால் விலைக்கிரயம் கொடுத்து வாங்கப்பட்டவர்கள்
(1கொரி 6:20) வெள்ளியை கொடுத்து தங்கத்தைக் கொடுத்து தேவன் உங்களை மீட்டு கொள்ளவில்லை தன்னுடைய ஜீவனையே கொடுத்து,
தன்னுடைய விலையேறப்பெற்ற இரத்தத்தை கொடுத்து உங்களை
மீட்டு கொண்டார் (1பேது1:18-19)
எனவே நீங்கள் தேவனுடைய பார்வையில் மிகவும் விலையேறப்பெற்றவர்களாக  இருக்கின்றீர்கள்.இந்த எண்ணங்களை எப்பொழுதும் உங்கள் மனதிலேயே
நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்.

பிரியமானவர்களே! நாம் யாரையும் எதிரியாக நினைக்கவில்லை ஆனால் நம் மீது பொறாமை கொண்ட,போட்டி மனப்பான்மை  கொண்ட,சிலர்
நம்மை எதிரியாக நினைக்கிறார்கள்.
நாம் அழவேண்டும்,விழவேண்டும்
அழிய வேண்டும்,ஒழிய வேண்டும்
என்று அவர்கள் தங்கள் இருதயத்திலே
விரும்புகிறார்கள்,எதிர்பார்க்கிறார்கள்
அதுமட்டுமல்ல! நீ அழுதால் உன்
சத்தத்தை கேட்க யார் இருக்கின்றார்?
உன் கண்ணீரைத் துடைக்க யார் இருக்கின்றார் ? நீ விழுந்தால்
உன்னை தூக்கி விடுவதற்கு
யார் இருக்கின்றார்? உன்னை உயர்த்துவதற்கு யார் இருக்கின்றார்?
உனக்கு உதவி ஒத்தாசை
செய்ய யார் இருக்கின்றார்?
என்று நம்மைப்பார்த்து
ஏளனமாக பேசுகிறார்கள்
ஆனால் அவர்களுக்கு தெரியாது
நாம் அழுகையின் சத்தத்தை
கேட்க,ஆண்டவர் இருக்கின்றார்
(ஆதி 21:16-17)(ஏசா 38:5)
நம் கண்ணீரை துடைக்க கர்த்தர் இருக்கின்றார் (சங்6:8-9)(ஏசா 25:8)
அழுகையை,ஆனந்தமாகவும்,
துக்கத்தை சந்தோஷமாகவும்,
மற்றிப்போட நம் தேவன்
இருக்கின்றார் (எரே 31:13)
விழுந்த நம்மை தூக்கவும்,
உயரமான கன்மலையின்மேல்
நம்மைநிறுத்தவும் நம் தேவன் இருக்கிறார் (மீகா 7:8)(சங் 9:13)(சங்40:2-3)நமக்கு உதவி செய்ய ஒத்தாசை செய்ய,வானத்தையும் பூமியையும் படைத்த நம் தேவனாகிய கர்த்தர் நமக்காக இருக்கின்றார்
(சங் 121:2)(சங் 72:12)(சங் 37:40)
 (சங் 118:13)

ஆம் பிரியமானவர்களே!
நாம் மற்றவர்களுக்கு எதிராக
நாம் எந்த குற்றமும் செய்யாமல்
இருக்கும்போது கூட,அவர்கள்
நம்மை காரணமின்றி
வெறுப்பார்கள்,எதிரியாக நினைப்பார்கள்,முகாந்திரம்
இல்லாமல் பகைப்பார்கள்
(சங்25:3)(சங் 35:7)(சங் 109:3)
(யோவ 15:25) நாம் அவர்களுக்கு
நன்மைதானே செய்தோம்
ஏன் அவர்கள் நமக்கு தீமை
செய்ய பார்ப்பார்க்கிறார்கள்,
ஏன் நம்மை எதிரியாக நினைக்கிறார்கள்
என்று நமக்குள்ளே கேள்விகள்
வருவதுண்டு.அவர்கள்
அவ்வாறு இருப்பதற்கான
காரணம் அவர்களின் பின்புலமாக இருந்து செயல்படும் பிசாசுதான்,
அவன்தான் அதற்கு காரணம்.
எனவே நம்மை
வெறுக்கிறவர்களுக்கு,
நம்மை எதிரியாக நினைக்கிறவர்களுக்கு
முகாந்திரம் இல்லாமல் பகைக்கிறவர்களுக்கு,
நமக்கு தீமை செய்கிறவர்களுக்கு,
நாம் நன்மை மாத்திரம்
செய்வோம்.அவர்களை
நேசிப்போம்,அவர்களோடு சண்டையிடுவதும்,
அவர்களோடு போராடுவதும்,
நமது வேலை இல்லை,
ஏனெனில் நம்முடைய
போராட்டம் மாம்சத்தோடும்
இரதத்தோடுமல்ல,மாம்சத்திற்கும் இரத்ததிற்கும் பின் நின்று
நம்மோடு போராட்டம் சாத்தானோடும் அவனுடைய சேனைகளோடும்
தான் (எபே 6:12) எனவே நம்மை பகைக்கிறவர்களையும்,நாம்
அன்பு செய்ய வேண்டும்.
கிறிஸ்தவர்களாகிய நாம்
எந்த மனிதரையும்,பகைவராக
பார்க்கவும் நம்மை பகைக்கிறவர்களை பழிவாங்க நினைக்கவும் கூடாது.ஏனெனில் பழிவாங்குதலும் பதிற்செய்தலும் நமக்குரியது அல்ல,அது கர்த்தருக்குரியது (ரோம12:19)
(எபி 10:30) நாம் பழிவாங்காமல்
பதிற்செய்யாமல் அமைதியாக
சும்மா இருக்கும் போது கர்த்தர்
நமக்காக யுத்தம் பண்ணுவார்
(யாத் 14:14)

என்னங்க பாஸ்டர் நீங்க
இப்படி சொல்றீங்க?எங்கள்
சத்துருக்களுக்கு நாங்கள்
என்ன செய்றது? எங்களைப் பகைக்கிறவர்களுக்கு நாங்கள்
என்ன செய்வது? எங்களை சபிக்கிறவர்களுக்கு நாங்கள்
என்ன செய்வது? எங்களை நிந்திக்கிறவர்களுக்கு நாங்கள்
என்ன செய்வது? என்று ஒரு கிறிஸ்தவன் கேட்டால்
அவனுக்கு இயேசு சொல்கிற
பதில்!!!!!!!!!!"

"உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்;உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்".(மத்தேயு 5:44)
இதைத்தான் நாம் செய்ய வேண்டுமென்று தேவன் நம்மிடம்
எதிர்பார்க்கிறார்.

பாஸ்டர் அவர்கள் என் பெயரை சிறுமைப்படுத்த வேண்டும்,
எனக்கு அவப்பெயரை
உண்டாக்க வேண்டும்
என்னை அவமானப்படுத்தி,அதிலே அவர்கள் சந்தோஷப்பட வேண்டும்
என்று காரியங்களை தீவிரமாய்
செய்கிறார்கள்,என்னை குறித்து மற்றவர்களிடம்,இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி
இச்சகம் பேசி என் பெயரை கெடுக்க
பார்க்கிறார்,அவர்களை நான் என்ன செய்ய? பிரியமானவர்களே!
நீங்கள் அவர்களை ஒன்றும்
செய்ய வேண்டாம்அவர்கள் உங்களுக்கு விரோதமாக செய்கின்ற துன்பங்களையும்,அவர்கள் உங்களுக்கு
விரோதமாக பேசுகின்ற
வார்த்தைகளையும் நீங்கள் பொறுமையோடு சகித்துக் கொண்டிருக்க வேண்டும்
(1 பேதுரு 2:20) கர்த்தர்
அனைத்தையும் பார்த்துக் கொள்வார்,நீங்கள்
கவலைப்படாதீர்கள்.

உங்கள் சத்துருக்கள் பல இடங்களில் உங்களை வெட்கப்படுத்தினார்களா?
உங்கள் புகழும்,கீர்த்தியும் போய்விட்டதா ? நான் உங்களுக்கு சொல்கின்றேன்,நீங்கள் வெட்கம் அநுபவித்த சகல தேசங்களிலும் உங்களை புகழ்ச்சியும் கீர்த்தியும் மீண்டும் வைக்க கர்த்தர் இருக்கிறார்,(செப்பனியா 3:19) நிச்சயமாக அவர்
உங்களை உயர்த்துவார்.

உங்கள் சத்துருக்கள் உங்களை குறித்து இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி உங்கள் பெயரை
கெடுக்க நினைக்கிறார்களா?
கவலைப்பாடதிருங்கள்,
உங்கள் பெயரை பெருமைப்படுத்த
கர்த்தர் இருக்கிறார்(ஆதி:12-2)
நிச்சயமாக அவர் உங்கள் பெயரை பெருமைப்படுத்துவார்.

உங்களுக்கு விரோதமாக இச்சகம்
பேசி இல்லாதது பொல்லாதது,
பேசுகிறவர்கள் தானாகவே அடங்குவார்கள்,கர்த்தர் அவர்களை
அடக்குவார் (சங் 76:11-12)
அவர்களின் மேடுகளை,நீங்கள்
மிதிக்கும்படி கர்த்தர் செய்வார்,
(உபா 33:29) அதாவது அவர்கள்
உயர்வானதாக கருதுகிற காரியங்களை,அவர்களின்
ஆஸ்தி,அந்தஸ்து,அதிகாரம்,
பணம்,செல்வாக்கு ஆகிய
மேடுகளை,உங்கள் கால்களுக்கு
கீழே கொண்டுவரும் படி கர்த்தர் செய்வார்.

ஆமென்.. அல்லேலூயா..

இஸ்ரவேலே, நீ பாக்கியவான்;
கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான்.

(உபாகமம் 33:29)

Pr.Marvel Jerome
Calvary living way ministries
Bangalore-south India


No comments:

Post a Comment