Wednesday 15 April 2020

உங்கள் அன்றாட வாழ்க்கையை
குறித்த,பொதுவான தேவ சித்தத்தை இயேசுவிலே பாருங்கள்

கிறிஸ்துவுக்குள் புதுசிருஷ்டிகளே!
வேதம் சொல்கிறது (1 யோவான் 5:14-15ல்)
நாம் தேவனிடத்தில்,அவருடைய
சித்தப்படி எதையாகிலும் கேட்டால்,
அவர் நமக்கு செவிகொடுப்பார்,
அவற்றை நாம் பெற்றுக்கொள்ளுவோம் என்று எனவே நாம் எதைக்கேட்டாலும்,
தேவ சித்தப்படி,அவரின் வார்த்தையின்
படி கேட்கவேண்டும்,ஒரு தனிப்பட்ட
முக்கிய முடிவுகளை எடுக்க,
திருமணம்,மணமகன்,மணமகள்
தேர்ந்தெடுக்க,ஊழிய அழைப்பை
அறிய,இடத்தை தேர்ந்தெடுக்க,
ஆகிய காரணங்களுக்கு சிறிது
பொருமையாக கர்த்தர் சமுகத்தில்
காத்திருந்து,அவரின் சித்தத்தை
அறிந்துகொள்ள வேண்டியதாக
இருக்கிறது.

ஆனால் நமது அன்றாட வாழ்க்கையை
குறித்த,பொதுவான தேவ சித்தத்தை
 நாம் அறிந்து கொண்டு,அவரின்
சித்தப்படி தேவனிடத்தில் ஜெபித்து,
பதில்களை பெற்று,வெற்றி வாழ்க்கை
வாழ வேண்டும்,தேவனுடைய சித்ததை அவரின் விருப்பத்தை எப்படி கண்டு
கொள்வது? யார் வழியாக தேவ
சித்ததை நாம் பார்க்க முடியும்?
என்கிற கேள்விக்கு பதில்,
இயேசு கிறிஸ்து வழியாகவே,
அவர் சொல்கிறார் "என்னைக்
கண்டவன் பிதாவைக் கண்டான்"
(யோவா14:9) என்றும்,பிதாவின்
சித்தத்தின்படி செய்யவே நான்
வானத்திலிருந்திறங்கி வந்தேன்.
(யோவா6:38)என்கிறார் இயேசு.
அப்படியானால் நாம் பிதாவின்
சித்ததை அறிய இயேசுவின்
வாழ்க்கை முறையை பார்க்க
வேண்டும்.

உங்களுடைய குழந்தை வியாதியாக
இருக்கிறதா?உங்கள் குழந்தையை
தேவன் குணமாக்குவாரா ?
தேவ சித்தத்தை இயேசுவிலே
பாருங்கள்,(மாற்கு 7:24-30)
பிசாசின் பிடியிலிருந்த கிரேக்க,
ஸ்திரீயின் மகளை இயேசு விடுவித்து
குணமாக்கினார்.(மாற்கு 5:22,24,35,43)
யவீரு மகளை இயேசு உயிரோடு
எழுப்பினார்,(லூக்கா 7:12-15)
நாயீன் ஊர் விதவையின் மகனை
இயேசு உயிரோடு எழுப்பினார்,
இயேசு அவர்களுக்கு பிசாசின்  பிடியிலிருந்து விடுதலை
கொடுத்தார்,அவர்களுக்கு
உயிர் கொடுத்தார்,அவர்கள் அனைவரையும்,குணமாக்கினார்.
தேவ சித்தத்தை இயேசுவிலே
பாருங்கள்.

பிரியமானவர்களே! தேவன்
ஒருசில நேரத்தில்,குணமாக்குவார்
சில நேரத்தில் குணமாக்க மாட்டார்,
வியாதியை கொடுப்பார்,
ஒருசில சமயம் ஆசீர்வதிப்பார்,
சில சமயம் ஆசீர்வாதத்தை
பிடுங்கிவிடுவார்,சாபத்தை
கொடுப்பார்,எல்லாம் தேவ சித்தம்
என்று தேவனை பற்றி தவறாக எண்ணாதிருங்கள்,தேவ
சித்தத்தை இயேசுவிலே
பாருங்கள். இயேசு யாரையும்
வியாதியாக்கினார் என்று
வேதத்தில் இல்லை,இயேசு
யாரையும் சாபமாக்கினார்,
தரித்திரனாக்கினார் என்றும்
வேதத்தில் இல்லை,(மத் 14:20)
அவர் சிறிய அளவு கொண்ட
அப்பங்களையும்,மீன்களையும்
பெருக செய்து 12 கூடை நிறைய
மிச்சம் எடுக்க வைத்தார்,
(லூக்:5:6-7) வலை கிழியத்தக்க,
இரண்டு படகும் அமிழத்தக்க
மீன்களை பிடிக்க வைத்தார்.

பிரியமானவர்களே! வேதம்
இயேசு கிறிஸ்துவை பற்றி சொல்கிறது,
அவர் அனைவரையும்,நேசித்தார்,
எல்லோருக்கும் நன்மை செய்தார்,
பாவங்களை மன்னித்தார்,
தன்னை விசுவாசித்த யாவரையும் குணமாக்கினார்,மரித்தோரை
உயிர்ப்பித்தார்,பிசாசின்
பிடியிலிருந்து மக்களை
விடுவித்தார்,பெருக்கத்தை
கொடுத்தார்,மக்களை
இரட்சித்தார்,என்னைக் கண்டவன்
பிதாவைக் கண்டான்"(யோவா14:9)
என்றும்,பிதாவின் சித்தத்தின்படி
செய்யவே நான் வானத்திலிருந்து
இறங்கி வந்தேன்.(யோவா6:38)
என்றார்,அவர் நேற்றும்
இன்றும் என்றும் மாறாதவராய்
இருக்கிறார் (எபி 13:8)"
எனவே உங்கள் அன்றாட
வாழ்க்கையை குறித்த,பொதுவான
தேவ சித்தத்தை இயேசுவிலே
பாருங்கள்,அவரின் சித்தப்படி
ஜெபம் செய்து பதில்களை பெற்று
வெற்றி வாழ்க்கை வாழுங்கள்.

என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.

(யோவான் 14:7)


No comments:

Post a Comment