Saturday 25 February 2017

#ஜீவவழியின் நற்செய்தி

நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும், சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சி வைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொள்
(உபாகமம் 30:19 )

பரத்: ஆண்டவர் நமக்கு மரணத்திற்கும் ஜீவனுக்கும் ஏதுவான ஒரு தெரிந்தெடுத்தலை நமக்குக் கொடுத்திருக்கிறார்.

பிரவீன்: ஆமா,அதோடு கூட  ஆசீர்வாதத்துக்கும் சாபத்திற்கும் ஏதுவான தெரிந்தெடுத்தலையும் நம்மிடமே தேவன் கொடுத்திருக்கிறார்.
 சரியான ஒன்றைத் தெரிந்தெடுக்கும் பொறுப்பு நமக்கே உள்ளது.

பரத்: நாம் எதைவைத்து ஜீவனை தெரிந்தெடுக்க வேண்டும் ?

பிரவீன்: மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும். அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள் (நீதி. 18:21).என்று எழுதியிருக்கிறது.

பரத்: ஆமா பிரவீன்,நாம் நேர்மறையான வார்த்தைகளைப் பேசுவதன் மூலமும், ஆண்டவருடைய வார்த்தையை அறிக்கையிடுவதன் மூலமே நாம் ஜீவனை தெரிந்தெடுக்க முடியும்

பிரவீன்: சரியாக சொன்னாய், வேதத்திலே ஆயிரக்கணக்கான வாக்குத்தத்தங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் எடுத்து, நாம் தினமும் அறிக்கை செய்ய வேண்டும்.

பரத்: அதுமட்டுமல்ல இருதயத்தையும், சிந்தையையும் வேத வசனத்தினாலே நிறைக்க வேண்டும், அப்போது நம் இருதயத்தின் நிறைவை, நம் வாய் பேச ஆரம்பிக்கும்.....

பிரவீன்: ஆமா பரத் நாம் நம் இருதயத்தை வேத வசனத்தால் நிறைக்கும் போது, நம் வாய் தேவனுடைய வார்த்தைகளை அதிகம் பேச ஆரம்பிக்கும், அது நமக்கும் நம்மை சுற்றி இருக்கிறவர்களுக்கும் மிகவும் பலனுள்ளதான இருக்கும். நிச்சயம் ஜீவன் இழந்த வாழ்வில் நாம் பேசும் தேவனுடைய வார்த்தைகள் ஜீவனை ஏற்படுத்தும்.

பரத்: அதோடு கூட நாம் நமது வாழ்வில் பிரச்சனைகள் எழும்பும்போது, ஆண்டவரின் சமூகத்திலே அந்த பிரச்சனைக்கு உரிய தீர்வைப் பேச  முற்படவேண்டும்,தீர்வானது, கர்த்தரிடமிருந்து தான் வருகிறது என்பதை நாம் நமது விசுவாச அறிக்கையில் மூலம் உறுதிசெய்ய வேண்டும்.

பிரவீன்: ஆமா பிரச்சனை என்ன என்பதை அறிக்கையிடவோ, அதை குறித்து விவாதிப்பதற்கு மாறாக, அந்த பிரச்சனைக்குரிய தீர்வை சொல்லி, அதை அறிக்கையிடுவோம் ஏனெனில், நம்மோடிருக்கும் நம் தேவன், பிரச்சனைகளைக் காட்டிலும்  பெரியவர்.

பரத்: ஆமென்

பிரவீன்: நம் இருதயமானது ஒரு நிலம். நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் விதை. நம் வாயிலிருந்து என்ன வார்த்தைளெல்லாம் வருகிறதோ, நாம் அவற்றை நம் இருதயமாகிய நிலத்திலே விதைக்கிறோம்.

பரத்: நாம் எவற்றையெல்லாம் விதைக்கிறோமோ அதற்கான பலனையே அறுப்போம்.

பிரவீன்: ஆமா நண்பா, நாம் நல்ல நேர்மறையான வார்த்தைளையும், ஆண்டவருடைய வார்த்தையையும்
நம் இருதயமாகிய நிலத்திலே விதைத்தால், ஜீவனுக்கேதுவான பலனைப் பெறுவோம்.

பரத்: மறுபுறம்,நாம் எதிர்மறையான வார்த்தைகளை விதைத்தால், அதற்கான பலனையும் அறுக்கத் தான் வேண்டும்.

பிரவீன்: ஆம் நண்பா, நாம் நம்  வார்த்தைகளில் கவனமாயிருக்க வேண்டும்...

மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். (நீதிமொழிகள் 18:21)

ஆமென்... அல்லேலூயா...

======================
Revelation by spirit of God
======================

http
://facebook.com/LIVINGWAYMARVEL/


No comments:

Post a Comment