Sunday 19 February 2017

கர்த்தரை குறித்தே நாம் #மேன்மைபாராட்டுவோம்

#கர்த்தரை குறித்தே நாம்  #மேன்மைபாராட்டுவோம்

சிலர் இரதங்களைக்குறித்தும்,
சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.
(சங்கீதம் 20: 7)

பரத்: அக்காலத்தில் போர்களத்தில் ராஜாக்கள் தங்கள் படை பலத்தின் வலிமையை குறித்து காட்ட குதிரைகளைக் குறித்து  இரதங்களைக்குறித்து,அதாவது
தங்கள் சேனைகளின் வலிமை குறித்து,தாங்கள் மிகவும் பராக்கிரமசாலிகள் என்று மேன்மைபாராட்டினார்கள்,ஆனால் தேவனுடைய ஜனங்களின் மேன்மைபாரட்டுதல் மிகவும் வித்தியாசமாக இருந்தது

பிரவீன்: ஆமா,நண்பா தேவனுடைய ஜனங்களிடமும் குதிரைகளும்,
இரதங்களும் இருந்திருக்கும் ஆனால் அவர்களின் மேன்மைபாராட்டுதல்,
தங்கள் சேனைகளை குறித்து அல்ல,
வானக சேனைகளின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தைக்குறித்து மட்டுமே இருந்தது... அதனால் தான் மற்றவர்கள்
முறிந்து விழுந்தார்கள்; தேவனுடைய ஜனங்கள் எழுந்து நிமிர்ந்து நிற்கிறார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது (சங் 20: 8)

பரத்: இன்றும் கூட இயேசுவை ஏற்றுக்கொண்ட அனேக மக்கள் தனது அழகைக்குறித்தது, அந்தஸ்தை குறித்து படிப்பைக்குறித்து, பணத்தைக் குறித்து, நிலங்களைக் குறித்து, ஏன் கேவலம்  ஜாதியை குறித்து கூட மேன்மைபாராட்டுகிறார்கள்,
ஆனால் ஒரு உண்மையான ஆவிக்குரிய கிறிஸ்தவன் இவைகளை ஒரு பொருட்டாகவே நினைக்க மாட்டான்,அவனின் மேன்மை கர்த்தரை,அவரின் வார்த்தையை குறித்து பற்றி மட்டுமே இருக்கும்...

பிரவீன்: ஆமா,ஆவிக்குரிய கிறிஸ்தவனின் மேன்மைப்பாரட்டுதல்
அவ்வாறு தான் இருக்கும்... அவன்
தேவனுடைய அன்பைக்குறித்து, அவருடைய வல்லமையைக் குறித்து, அவருடைய தன்மைகளைக்குறித்து, அவருடைய இரட்சிக்கும் கிருபையைக் குறித்து, இரக்கத்தைக் குறித்து, நீடிய பொறுமையைக் குறித்து,அவர் என்றும்   நல்லவராகவே இருக்கிறார் என்பதை குறித்தே அவன் மேன்மைபாராட்டுவான்...

பரத்: ஆமா நண்பா, நாமும் அவ்வாறுதான் செய்யவேண்டும் ஏனெனில் பாவிகளில்
பிரதான பாவியாகிய நம்மை இயேசு  இரட்சித்திருக்கிறாரே!

நாம் பாவிகளாய் இருக்கும் போதே  நமக்காக சிலுவையில் தொங்கி மரித்து நம்மீது அவர் வைத்திருக்கும் நித்திய அன்பை விளங்கப்பண்ணினாரே !

 நம்முடைய குருட்டாட்டத்தில் நாம்  அழிந்துப்போகாமல் நம்மை தடுத்து நித்திய வாழ்வுக்கு ஏற்புடையவர்களாக நம்மை ஆக்கியிருக்கிறாரே !

 இன்றைக்கும் பிதாவின் வலதுபாரிசத்தில் நமக்காக பரிந்துப் பேசிக்கொண்டிருக்கிறாரே!

இப்படி யாராலும் செய்ய முடியாத காரியங்களை கர்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக செய்திருக்க அவரை  அல்லாமால் இந்த உலகத்தில் நாம்  எதைக்குறித்து,யாரைக்குறித்து,
மேன்மைபாராட்டுவோம் ???

பிரவீன்: சூப்பரா சொன்ன பரத்,
 நாம் இயேசு கிறிஸ்துவை உண்மையாகவே ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்றால், அவரை எல்லாவற்றிற்கும் மேலாக நேசிக்கிறோம் என்றால்,நாம் உலகத்து  காரியங்களாகிய,அழகு,அந்தஸ்து,
ஜாதி,படிப்பு,பணம்,சொத்து,என எவைகளை குறித்தும் மேன்மைபாராட்ட மாட்டோம் இவைகளை ஒரு பொருட்டாகவே நினைக்க மாட்டோம்..

பரத்: ஆமா பிரவீன், உலகுக்கு அடுத்த காரியங்கள் எவ்வளவு நமக்கு இருந்திருந்தாலும்,இயேசு கிறிஸ்து மட்டும் நம்மை இரட்சிக்காமல் இருந்திருந்தால்,எல்லாம் Waste
நாம் இந்த நேரம் சமாதானம்,விடுதலை இல்லாமல் உளையான சேற்றில் ஊறிக்கிடந்திருப்போம்.. நமது நித்தியமும் நரகமாக இருந்திருக்கும்.
ஆனால் இயேசு நம்மை தேடிவந்து தூக்கினார்.. பரலோக குடிமகனாக இந்த பூமியில் நம்மை ஆக்கினார்..
எனவே அவரை தவிர நமக்கு இந்த உலகில் எதுவும் மேன்மையாக இருக்கவே கூடாது

ஆமென்... அல்லேலூயா...

நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக்குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக;
அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.

(கலாத்தியர் 6: 14)

======================
Revelation by spirit of God
======================

No comments:

Post a Comment