Sunday 19 February 2017

கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்பட வேண்டியதில்லை


கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்பட வேண்டியதில்லை என்றார்கள். (எண்ணாகமம் 1
4:9)

ஜான்: வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்கும் முன்பு, மோசே 12 வேவுகாரர்களை அந்த தேசத்தை வேவு பார்க்க அனுப்பினான்.

பீட்டர்: ஆம், அவர்கள் அனைவரும் மிகவும் அழகான அந்த தேசத்தை சுற்றிப்பார்த்தார்கள். ஆனால் அவர்களில் 10 பேர் அங்கிருந்த தடைகளையே அதிகமாக பார்த்து, இஸ்ரவேல் மக்கள் அனைவரையும் அதைரியப்படுத்தினார்கள்(எண் 13:27-33). அவர்கள் கூறியதைக் கேட்ட அனைத்து மக்களும் திகில் அடைந்தார்கள்(எண் 14:1-4).

ஜான்: ஆனால் காலேபும்,யோசுவாவும், அதற்கு பயப்படாமலும், மற்றவர்களது பய உணர்ச்சியினால் பாதிக்கப்படாமல் தனித்துநின்றார்கள்.

பீட்டர்: ஆமா நண்பா,காலேபும், யோசுவாவும் மட்டும் அந்த சூழ்நிலையை சரியான கண்ணோட்டத்துடன் பார்த்தார்கள்(எண்14:6,9) அதாவது தேவன் வாக்குத்ததம் பண்ணினபடியே அதை பாலும் தேனும் ஓடுகிற தேசமாக மட்டுமே  பார்த்தார்கள்,மற்ற10 பேரும் அதை பராக்கிரமசாலிகள் நிறைந்த மோசமான தேசமாகவும்,ராட்சசர்கள் நிறைந்த பயங்கரமான தேசமாக பார்த்தார்கள்...

பீட்டர்: ஆமா,அந்த எதிர்மறை கண்ணோட்டக்காரர்கள்,
தேவனுடைய ஜனங்களிடம்,
அவிசுவாசமாய் பேசி,அவர்களை
அதைரிய படுத்தி,பயமுறுத்தி கலங்க வைத்தார்கள்...அதனால் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு எதிராக முறுமுறுத்த அவர்களில் ஒருவர் கூட போய் சேர வேண்டிய இடத்துக்கு போய் சேரவில்லை, அவர்கள் எதை பேசினார்களோ அது அவர்களுக்கு சம்பவித்தது..வனாந்திரத்திலே
அழிந்து போனார்கள்...

ஜான்: ஆனால், காலேபும், யோசுவாவும்,இம்மட்டும் தேவன் அவர்களை நடத்தி வந்ததைப்பற்றி நன்கு அறிந்திருந்ததினால் நிச்சயமாக தேவன் நமக்கு வெற்றியைத் தந்து தான் வாக்குத்தத்தம் பண்ணியதை நிறைவேற்றுவார்,என்ற நம்பிக்கை எண்ணத்தோடு இருந்தார்கள்,அந்த கண்ணோட்டத்தோடு அந்த தேசத்தை பார்தார்கள்,அதையே பேசினார்கள்
அதன்விளைவு,வாக்குதத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அவர்கள் சுதந்தரித்தார்கள்...

பீட்டர்: எனவே நாம், கண்களால் காண்கிறவைகளை நோக்கிப்பார்த்து சிந்திக்காமல்,கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை நோக்கிப்பார்த்து சிந்திப்போம்,சூழ்நிலையை பார்த்து அவிசுவாசமாய் பேசாமல், எந்த சூழ்நிலையிலும் கர்த்தர் நம்மோடு
இருந்து அவர் வாக்குப்பண்ணியதை
நமக்கு கொடுக்கிறவராய் இருக்கிறார்
என்று விசுவாசமாய் #பேசுவோம்...
அதை நம் தேவன் #கேட்பார்..
அவர் செவிகள் கேட்க நாம் சொன்ன #பிரகாரமே அவர் நமக்கு செய்வார்..

ஆமென்...அல்லேலூயா...

நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்:நீங்கள் #என்செவிகள் #கேட்கச் சொன்ன பிரகாரம் உங்களுக்குச் #செய்வேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.
எப்புன்னேயின் குமாரன் காலேபும்,
நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை.

(எண்ணாகமம் 14:28,30)

======================
Revelation by spirit of God
======================

No comments:

Post a Comment