Saturday 9 June 2018

பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல

#ஜீவ வழியின் நற்செய்தி

பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல
நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.
(3 யோவான் 1:2)

பரத்: ஆவி,ஆத்துமா,சரீரத்தில், ஆத்துமாவே நினைக்கும் மற்றும் மறக்கும் தன்மை கொண்டதாக உள்ளது..இம்மையின்
சமாதானமான வெற்றி வாழ்வுக்கும்,மறுமையின் நித்திய  வாழ்வுக்கும் ஆத்தும வாழ்வே  காரணியாகிறது....

பிரவீன்: தாவீதின் சங்கீதம் 103:1-2 ல்
‘என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி,என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி,அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே’ என்று ஆத்துமாவை முன்னிலைப்படுத்தி தேவனை ஸ்தோத்திரிப்பதைப் பார்க்கிறோம்.
சங்கீதகாரன் ஆத்துமாவை நோக்கி கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே என்கிறான்... எனவே நினைப்பதும் மறப்பதும் ஆத்துமாவில் இயல்பாக இருக்க கூடிய பண்பு என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது..

பரத்: ஆத்துமா சத்தியத்தை குறித்த  அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல.
உலகத்தார் இந்த நிலையில்தான் இருக்கிறார்கள்.. இவ்வாறு இருந்தால் அவர்களின் ஆத்துமா அழிவுக்கு ஏதுவாக போய்விடும்...

பிரவீன்: ஆனால் விசுவாசிகளின் ஆத்துமா சத்தியத்தால் நிறைந்திருந்தால் நிச்சயம் வெற்றியும்  வாழ்வும் அவர்களை தேடி வரும்,
அவர்கள் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கவும் முடியும்....
அதைத்தான் நம் தேவனும் விரும்புகிறார்....

பிரவீன்: ஆமா!  நம் ஆத்துமா கர்த்தருடைய வார்த்தையின் மேல்  வாஞ்சையாய் இருக்க வேண்டும், கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறக்காத ஆத்துமா கொண்டவர்களாக இருக்க வேண்டும்.அவரை என்றும்  துதித்துக்கொண்டும்  ஸ்தோத்திரித்துக்கொண்டும் இருக்க கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும்....

பரத்: ஆமா நாம் நமது ஆத்துமாவை கர்தருடைய வேதத்தால் நிறைத்து, அதற்கு பயிற்சி கொடுக்க வேண்டும்,அப்படி செய்யும்போது, நாம் ஆவி ஆத்துமா சரீரம் வாழ்ந்து சுகமாய் இருக்கும்....

பிரவீன்: அதுமட்டுமல்ல கர்த்தருடைய வேதம் சோர்ந்து போன ஆத்துமாவை உயிர்ப்பிக்கும்.. அதன் விளைவாக பேதைகள் ஞானியாவர்கள்.....(சங் 19:7)என்று வேதம் போதிக்கிறது.. எனவே நாம் கர்த்தருடைய வசனத்தால் நம் ஆத்துமாவை நிறைந்து,அதிலே வளர்ந்து,செழித்து இருந்தோம் என்றால்..நமது ஆவிக்குறிய வாழ்விலும்,உலகப்பிரகாரமான வாழ்விலும், ஞான அறிவிலும் வளர்ச்சியும், வளமையும்,
செழிப்பும், நிச்சயம் காண்போம்.....

ஆமென்... அல்லேலூயா...

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி முழுமையானதும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.

(சங்கீதம் 19:7)


No comments:

Post a Comment