Sunday 19 February 2017

#கர்த்தரையும் அவர்
#வல்லமையையும் #நாடுங்கள்

கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்;அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.(சங்கீதம் 105:4)

பரத்: இன்று அனேக கிறிஸ்தவர்கள்,
கர்த்தருடைய வல்லமையை நாடுகிறார்கள்,அதாவது அவரிடம் இருந்து வல்லமையை பெற்று அனுபவிக்க வேண்டும்,குணமாக வேண்டும்,
பாதுகாக்கப்பட வேண்டும், ஆசீர்வாதமாய் இருக்க வேண்டும் அற்புதங்கள் செய்யும் வல்லமையை பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள்..

பிரவீன்: ஆமா நல்லதுதான் ஆனால், அதற்கு நாம் கர்த்தரையும் அவரின் சமுகத்தையும் முதலில் நாட வேண்டும், தேட வேண்டும்,என்று வேதம் போதிக்கிறது...

பரத்: ஆமா நாம் கர்த்தரையும்
அவரின் சமுகத்தையும் ஆர்வமாய், வாஞ்சையோடு நாடித்தேடும் போது அவரின் வல்லமை நமது வாழ்வில் வேலை செய்ய ஆரம்பிக்கிறது..அந்த வல்லமை,ஆவிக்குரிய மற்றும்  உலகப்பிரகாரமான சகல ஆசீர்வாதங்களையும் நமக்கு கிடைக்க செய்கிறது...

பிரவீன்: ஆமா கர்தரின் வல்லமைகளை நம் வாழ்வில்,நாம் பெற்றுக்கொள்ள, அவரின் சமுகத்தை நித்தமும் நாம் தேட வேண்டும் என்று வேதம் போதிக்கிறது..

பரத்: ஆனால் இன்றைய அனேக கிறிஸ்தவர்கள் பிரச்சனைகள், போரட்டங்கள்,சஞ்சலங்கள்,
சங்கடங்கள் வரும்போது மட்டுமே கர்த்தருடைய சமுகத்தை தேடுகிறார்கள், ஆனால் நாம் நித்தமும் அவரின் சமுகத்தை தேட வேண்டும்,அவ்வாறு நாம் இருந்தால் மேற்சொன்ன அந்த இருளின் காரியங்கள் நமது வாழ்வில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது...ஏனென்றால் கர்தருடைய வல்லமை நமது வாழ்வில் பரிபூரணமாக வெளிப்பட்டுக்கொண்டு இருக்கும்.

பிரவீன்: ஆமா! நண்பா கர்த்தருடைய சமுகத்தில் (அதாவது) அவரோடு கொண்ட நெருங்கி ஐக்கியத்தில் நாம் என்றும் தரித்து அதிலே நிலைத்து, இருந்தால்,கர்த்தருடைய வல்லமை நம்மீது செயல்பட ஆரம்பிக்கிறது,
அது நமக்கு தெரியும் ஆனால் அதோடுகூட,
அவருடைய சமுகத்தில் ஒரு சில தனிதன்மை வாய்ந்த நன்மைகளும்।கொட்டிக்கிடக்கின்றன...அவைகளும்
நமக்கு வந்து கிடைக்கிறது...

(1) பரிபூரண ஆனந்தம்

(2) நித்திய பேரின்பம்

(3) மகிழ்ச்சி

ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்;உம்முடைய சமுகத்தில் #பரிபூரண #ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் #நித்தியபேரின்பமும் உண்டு.
(சங்கீதம்  16:11 )

அவரை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர்; அவரை உம்முடைய சமுகத்தின் #மகிழ்ச்சியினால் #பூரிப்பாக்குகிறீர்.
(சங்கீதம்  21:6)

பரத்: சரியாக சொன்னாய் நண்பா!  கர்த்தரையும் அவருடைய சமுகத்தையும்
நாம் நித்தமும் தேடும் பொழுது,
அவரின் அபார வல்லமை,நமது மீது அபரிமிதமான வெளிப்படும்,
அதோடு அவருடைய சமுகத்தின்
ஆசீர்வாதங்களாகிய
பரிபூரண ஆனந்தத்தினாலும்,
நித்திய பேரின்பத்தாலும்,
மகிழ்ச்சியினாலும் அவர்
நம்மை நிரப்புவார்...

பிரவீன்: ஆமா நண்பா!
நாம் கர்த்தரோடு கொண்ட ஐக்கியத்தில் பலப்படும் போது,நாம் அவரின் சத்துவத்தின் வல்லமையால் பலப்படுத்தப்பட்டு கொண்டே இருப்போம்,எனவே அவரோடு நாம் கொண்ட ஐக்கியத்தை இன்னும் அதிகமாக்குவோம்,
நமது ஆவிக்குரிய ஜீவியத்தை இன்னும் வலிமையாக்குவோம்....

ஆமென்... அல்லேலூயா...

கடைசியாக,என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.

(எபேசியர் 6:10)

======================
Revelation by spirit of God
======================

No comments:

Post a Comment