Sunday 19 February 2017


நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.

(2கொரிந்தியர் 4: 16)

பரத்: கிறிஸ்தவ வாழ்க்கை என்பது வெறும் மேலோட்டமான வெளிபிறகாரமான மனிதனுக்குரியது மாத்திரம் அல்ல அது ஆவிக்குரிய உள்ளான மனிதனின் வளர்ச்சியை சார்ந்தது....

பிரவீன்: பெயரை மாற்றிக்கொள்ளுதல்,  ஆடைகளில் மாற்றம் செய்தல்,காலனி அணியாதிருத்தல், இவைகள் எல்லாம் மிகவும் முக்கியமானதே அல்ல... இவைகளை வைத்து ஒருவரை ஆவிக்குரியவராக கருத முடியாது

பரத்: ஆமா நம்முடைய தனிப்பட்ட  வாழ்க்கை தேவனுடைய வார்த்தைகளை பிரதிபலிக்ககூடியாதாக இருக்க வேண்டும், நம் பேச்சு, நடத்தை என எல்லாம் வேதத்திற்கு ஏற்றதாக இருக்கவேண்டும்...

பிரவீன்: சரியாக சொன்னாய்
நண்பா ! வெளிபிரகாமான மாற்றத்தைவைத்து நாம் எதையும் தீர்மானிக்க முடியாது.. பலருடைய வாழ்க்கை சில நேரங்களில் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை பேல இருக்கவும் வாய்ப்புள்ளது,எனவே
கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமை, இவைகளை நாம் விட்டுவிடவேண்டும்...
அதோடுகூட மனித உறவுகளில் பிளவு, விரிசல், வெறுப்பு, பகை, கசப்பு, கோபம், பொறாமை ஆகிய பழைய மனிதனின் சுபாவத்தை களைந்து விட்டு
கிறிஸ்துவுக்குள் புதிதாய் பிறந்த,
நமது புதிய உள்ளான மனுஷனில் நாளுக்கு நாள் புதிதாக்கப்பட்டு கொண்டே இருக்க வேண்டும்....

ஆமென்... அல்லேலூயா...

அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,
உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,
மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.

(எபேசியர் 4: 22-24)

======================
Revelation by spirit of God
======================

No comments:

Post a Comment