Sunday 19 February 2017


இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு,
மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

(2 பேதுரு 1:4)

ஜேம்ஸ்: தேவன் நமக்கு அருளின வாக்குத்தத்தங்களில் பெரும்பாலான வாக்குதத்தங்கள் நம்முடைய குணங்களை தேவன் மாற்றுவார் என்பதைப்பற்றியே இருக்கிறது..அதைத்தான் 2 பேதுரு 1:4 ல் வசனம் சொல்கிறது.

பீட்டர் : ஆமா நண்பா! இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, அவருடைய திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவரின் காருணியத்தினால் நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது,தேவனை
அறிகிற அறிவின் மூலமாய் வருகிற, விசுவாசத்தினால் நாம் இந்த வாக்குதத்தங்களை சுதந்தரித்து கொள்ளலாம்...

ஜேம்ஸ் : ஆமா! வாக்குத்தத்தம் பண்ணினவரே அதை நிறைவேற்றியும் முடிப்பார்.. என்கிற விசுவாசத்தில் வாழ்கிற வாழ்க்கையை நாம் வாழ வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்

பீட்டர் : ஆமா நண்பா! நாம் செய்கிற செய்கைகளை நம்பி அல்ல! அவர் நமக்காக செய்தவைகளை நம்பி,விசுவாசித்து வாழ்கிற வாழ்க்கையே,புதிய ஏற்பாட்டு
விசுவாச வாழ்க்கை...

ஜேம்ஸ் : சரியாக சொன்ன!
நண்பா !

இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்ப தங்கள் கிரியைகளை
சார்ந்து பரிசுத்ததை பெற #முயற்சி செய்கிற வாழ்க்கை #பழைய ஏற்பாட்டு வாழ்க்கை....

கிருபையை சார்ந்து,கிறிஸ்துவுக்குள் தேவனுடைய வாக்குத்தத்தங்களை
விசுவாசித்து,தேவனோடு நெருங்கிய தொடர்பு வைத்து,அவருடைய
திவ்விய பரிசுத்த சுபாவத்துக்கு
நம்மை பங்குதாரர்களாக ஆக
செய்கிற வாழ்க்கை #புதிய ஏற்பாட்டு வாழ்க்கை....

இந்த வாழ்க்கை விசுவாசத்தினால் வேலை செய்கிறது,எனவே நாம் எளிதாக இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பிக்க முடியும்,ஏனென்றால் விசுவாசம் உள்ள இடத்தில் தேவனுடைய வல்லமை,அவரின் மகிமை செயல்படுகிறது...

பீட்டர் : ஆமா! ஜேம்ஸ் பாவத்தினால்
தேவ மகிமை போனது (ரோமர் 3:23)
ஆனால் போன தேவ மகிமை மறுபடியும் எப்படி வருகிறது என்று இயேசு சொல்லுகிறார் நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய்
(யோவான் 11:40)

ஜேம்ஸ்: பழைய ஏற்பாட்டின் வாழ்க்கை
சுய முயற்சியிலே நீதிமானாக பரிசுத்தவானாக ஆக விரும்புகிற வாழ்க்கை.... ஆனா புதிய ஏற்பாட்டில் தேவனுடைய வாக்குத்தத்தங்களை நம்பி விசுவாசித்து,அவருடைய மகிமையினாலே நாம் நீதிமானாக,பரிசுத்தவானாக மாற்றப்பட்டு அவரோடு இணைந்து  நடைபோடுகிற வாழ்க்கை...

பீட்டர் : ஆமா நண்பா! இயேசு
கிறிஸ்து சொல்கிறார்
நீ விசுவாசித்தால் தேவனுடைய
மகிமையை காண்பாய்
தேவன் நமக்கு அருளின வாக்குத்தத்தங்களில் பெரும்பாலான வாக்குதத்தங்கள்  உன்னை மாற்றுவேன் என்பதே,எனவே நம்முடைய குணத்தில்,சுபாவத்தில்
தேவனுக்கு ஏற்புடைய மாற்றத்தை
நாம் அடைய,அவரது கிருபையை இரக்கத்தை சார்ந்து,அவரின் வாக்குதத்தங்களை விசுவாசித்து
வாழ்வோம்...நிச்சயம் நாம் அவரின்
அன்பின் சுபாவத்திற்கும்,திவ்விய
 பரிசுத்த சுபாவத்துக்கும்
 பங்குதாரர்களாக மாறுவோம்

ஆமென்... அல்லேலூயா...

======================
Revelation by spirit of God
======================

No comments:

Post a Comment