Sunday 19 February 2017


தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.

(எபிரெயர் 4:12)

டேனியல் : பிரச்சனைகளும் போராட்டங்களும் நிறைந்த இந்த உலகத்தின், பிரச்சனைகள் போராட்டங்கள் பற்றி அல்ல அவைகளின் மத்தியில் தேவனுடைய ஜீவன் நிறைந்த வார்த்தைகளை நாம் பேச வேண்டும்...

லாரன்ஸ் : அப்படீனா பிரச்சனைகளைகளை பற்றி பேசக்கூடாதா?

டேனியல் : ஆமா! லாரன்ஸ்!  பிரச்சனைகளை பற்றி பேசக்கூடாது  பிரச்சனைகளுக்கு தீர்வு வேதாகமத்தில் எங்கு இருக்கிறது என்று கண்டுபிடித்து அந்த தீர்வை நீ பேச வேண்டும்..

லாரன்ஸ் : எப்படி சார்?

டேனியல் : ஒரு விசுவாசின் உடலில் ஏதாவது பெலவீனம் இருக்கலாம்,
ஆனால் அந்த விசுவாசி பெலவீனத்தை பேசக்கூடாது, ஏனென்றால்
இயேசு நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் (மத் 8:17)
பலவீனனும் தன்னைப் பலவான்
என்று சொல்வானாக. (யோவேல் 3:10) என்று வேதம் போதிக்கிறது....
எனவே கண்களுக்கு  முன்பாக இருக்கிற பெலவீனத்தை பேசுவதை
விட்டுவிட்டு,காணப்படாத ரூபத்தில் இருக்கிற பெலத்தை பேச வேண்டும்
பிறகு கிறிஸ்து இயேசுவுக்குள்,
பெலன் நமது பங்காக மாறும் பெலவீனம் தெறித்து ஓடும்..

லாரன்ஸ் : அப்படியா!!!

டேனியல் : ஆமா லாரான்ஸ்,
ஒரு விசுவாசின் வாழ்வில் ஏதாவது குறைவுகள் இருக்கலாம்,ஆனால்
அந்த விசுவாசி குறைவுகளை பேசக்கூடாது,ஏனென்றால்
என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.(பிலி 4:19)
எனவே குறைவுகளை அல்ல  தேவனுடைய மகிமையின் ஐஸ்வரியத்தை பேச வேண்டும்,
பெலவீனத்தை அல்ல தேவன்
நமக்காக ஏற்படுத்தி வைத்திருக்கும் ஆரோக்கியத்தை பேச வேண்டும்

மொத்தத்தில் எதிர்மறை சூழ்நிலைகளை பார்த்து பேசுவதை விட்டுவிட்டு,அந்த எதிர்மறையான சூழ்நிலைக்கு எதிராக தேவனுடைய ஜீவன் நிறைந்த வார்த்தைகளை எடுத்து பேச வேண்டும்
அப்போது எதிர்மறையான சூழல்
நேர்மறையாக மாறும்....

லாரன்ஸ் : அப்படீனா! காண்கிறதை,உணர்கிறதை
அல்ல காணாததை,உணராததை
விசுவாசித்து பேச வேண்டும் என்கிறீர்களா பிரதர்?

டேனியல் : ஆமா! லாரன்ஸ்! நாம் இருக்கிறதை பேசுவதற்கு அழைக்கப்படவில்லை,வேதத்தில் எழுதியிருக்கிறதை பேசவே அழைக்கப்பட்டிருக்கிறோம்.....

லாரன்ஸ் : புரியல,கொஞ்ஜம் ஈசியா புரியிரமாதி சொல்லுங்க..பிரதர்...

டேனியல் : ஓகே லாரன்ஸ்....
இயேசு கிறிஸ்து இந்த பூமியில்
உபவாசம் இருந்தபோது,அவருக்கு
பசி இருந்தது. ஆனால் அவர்
 #பசி #இருக்கிறது என்று
 இருக்கிறதை பேசவில்லை,அதற்கு
மாறாக மனுஷன் அப்பத்தினாலே
மாத்திரமல்ல #தேவனுடைய #வார்தையினாலே #பிழைப்பான்
என்று எழுதியிருக்கிறதே என்று #எழுதியிருக்கிறதை பேசினார்...

எனவே பிரச்சனைகள் நிறைந்த இந்த உலகத்தில்,பிரச்சனைகளை அல்ல
பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிற
தேவனுடைய ஜீவன் நிறைந்த வார்த்தைகளை பேச வேண்டும்.

குறைவுகளும் பற்றாக்குறையும் நிறைந்த இந்த உலகத்திலே,
குறைவுகளையும்,பற்றாக்குறையையும் அல்ல,தன்னை தொழுது கொள்கிற
அனைவருக்கும் தேவன் ஐஸ்வர்ய சம்பூரணராய் இருக்கிறார்,
நம் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார் என்று தேவனுடைய வல்லமை நிறைந்த வார்த்தைகளை பேச வேண்டும்..

வியாதிகள் நிறைந்த இந்த உலகத்தில்,வியாதிகளை அல்ல,
தேவன் தனது வசனத்தை அனுப்பி என்னை குணமாக்கினார்,இயேசுவின் தழும்புகளால் நான் குணமானேன் என்று ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாய் இருக்கிற தேவனுடைய வார்த்தைகளை பேச வேண்டும்..

லாரன்ஸ் : அப்படீனா தேவனுடைய
ஜீவன் நிறைந்த வாக்குதத்தங்கள்
நம் வாழ்வில் நிறைவேறுவதும், நிறைவேறாமல் போவதும்,
நம்முடைய நாவின் அதிகாரத்தில்
தான் இருக்கிறது அப்படீனு நீங்க சொல்லவர்றீங்களா பிரதர் ?

டேனியல் : ஆமா ஆனா அதை
நான் சொல்லல அதை சொன்னது கர்த்தர்.....

"மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின்
கனியைப் புசிப்பார்கள்"(நீதி 18:21)

நாம் நல்ல ஒரு கிறிஸ்தவ விசுவாசியாக இருந்தால் மட்டும் போதாது.. நாம் பேசுகிற வார்த்தைகள் தேவனுடைய வார்த்தைகளுக்கு ஒத்திருக்கிறாதா என்பதை பொருத்தே நாம் மாரணத்தின் கனிகளையா? அல்லது ஜீவனின் கனிகளையா?
எதை புசிக்கபோகிறோம் என்பது தீர்மானிக்கப்படுகிறது...
நாம் ஜீவன் நிறைந்த தேவனுடைய வார்த்தைகளையே என்றும் பேசி
ஜீவன் நிறைந்த வாழ்க்கையையும்,
சூழ்நிலையையும் அமைத்துக்கொள்ள வேண்டும் என்று தேவன் நம்மிடம் எதிர்பார்கிறார்.. எனவே அவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வேதத்தில்  எழுதியிருக்கிறதை பேசுவாம்..

ஆமென்... அல்லேலூயா...

======================
Revelation by spirit of God
======================

https://facebook.com/LIVINGWAYMARVEL/

No comments:

Post a Comment