Sunday 19 February 2017

தடைகளை தகர்க்கும் துதி.... அலங்கத்தை அகற்றும் ஆர்ப்பரிப்பு

#தடைகளை தகர்க்கும் துதி....
#அலங்கத்தை அகற்றும் ஆர்ப்பரிப்பு

எக்காளங்களை ஊதுகையில், ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்து விழுந்தது; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப் பிடித்தனர்

(யோசுவா 6:20)

டேனியல்: இஸ்ரவேலர்,கெம்பீரமாக காண்டா மிருகத்துக்கொத்த பெலனோடு, எரிகோவை நோக்கி, வெற்றி நடைபோட்டு வந்தார்கள்.
அதுதான், அவர்கள் முதலில்
சந்தித்த பட்டணமாகும்.

பீட்டர்: அவர்களை உள்ளே போக விடாதபடி,எரிகோ மதில்கள் தடுத்தன.
வெண்கல கதவுகள்,சவால் விட்டன. ஆனால் தடைகளை நீக்கிப்போடுகிற கர்த்தரோ,இஸ்ரவேலரோடு இருந்தார்.

டேனியல்: இஸ்ரவேலருக்கு அதாவது கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனங்களுக்கு.... முதல் தடை,பார்வோனாகிய ஒரு மனுஷனால் ஏற்பட்டது.இரண்டாம் தடை,
ஒரு சமுத்திரத்தினால் வந்தது.மூன்றாம் தடை, ஒரு நதியின் வெள்ளத்தினால்
வந்தது. நான்காம் தடை, ஒரு பட்டணத்தின் மதில் சுவராய் வந்தது. தடைகள் வித்தியாசப்படலாம். ஆனால் நமக்கு
எதிராக இருக்கிற எல்லா தடைகளைத் தகர்ப்பவர்,ஒருவர் நம்மோடு இருக்கிறார்,அவர் என்றைக்கும் மாறாதவராய்,ஜீவனுள்ளவராய்,
வல்லமையுள்ளவராய் நம்மோடு இருக்கிறார்... அவர் கூறும் வழிமுறைகள் வியப்பானதாக இருக்கும் ஆனால் அதுதான் வெற்றியை நமக்கு கொடுக்கும்.

பீ்ட்டர்: ஆமா எரிகோவாகிய தடையைத் தகர்க்க, கர்த்தர் கற்றுக்கொடுத்த வழி
முறை என்ன என்பது நமக்கு தெரியுமே!
"ஆசாரியர்கள் எக்காளங்களை
ஊத வேண்டும். ஜனங்களெல்லோரும் மகா ஆரவாரத்தோடே ஆர்ப்பரிக்க வேண்டும். அப்பொழுது பட்டணத்தின் அலங்கம் இடிந்து விழும்" (யோசு. 6:2,5).

எரிகோ தடையை உடைக்க,
கர்த்தர் கொடுத்த ஆயுதம்,துதியின் சத்தமாகும்.அவருக்கு ஈட்டியும், அம்பும், குதிரை வீரர்களும் தேவையில்லை. அவருக்கு தேவையெல்லாம்,
“கர்த்தரைத் துதிக்கும் துதி.”

டேனியல்: ஆமா பீட்டர்,கர்த்தரைத் துதித்து,அவரது வாக்குதத்தங்களை அறிக்கை செய்து,நாம் ஆர்ப்பரிக்கும் போது,துதிகளின் மத்தியிலே வாசம்பண்ணுகிற கர்த்தருடைய
பிரசன்னும் அவரின் மகிமையும்
நம்மை சூழ்ந்து கொள்கிறது..
அதனால் எரிகோவின் மதில்கள்,
போல் தடையாக இருக்கிற எல்லா பிரச்சனைகளும் முறிந்து,நொறுங்கி விழுகிறது.....

பீட்டர்: ஆமா நண்பா! கர்த்தருடைய வசனம் கன்மலையை நொறுக்கும் சம்மட்டியை போல இருக்கிறது என்று வேதம் போதிக்கிறது.. எனவே நாம் போகிற வழியின் குறுக்கே தடையாய் இருக்கிற மதிகளை,கர்த்தர் நமக்கு கொடுத்த வாக்குதத்தங்கள் என்னும் சம்மட்டியால் அடித்து தகர்த்து,அவரை
துதித்துக்கொண்டே இன்னும் முன்னேறி செல்வோம்...

ஆமென்... அல்லேலூயா...

என் வார்த்தை அக்கினியைப்போலும், #கன்மலையை நொறுக்கும் #சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார்.
(எரேமியா 23:29)

======================
Revelation by spirit of God
======================

https://facebook.com/LIVINGWAYMARVEL/

No comments:

Post a Comment