Sunday 19 February 2017

#2017ஜீவவழியின்நற்செய்தி

#2017ஜீவவழியின்நற்செய்தி

கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி,
மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்;
நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.

(ஏசாயா 58:11)

பரத்: கடந்த வருடத்தில்,கர்த்தர்
நம்மை நடத்திவந்த பாதைகளை
திரும்பி பார்த்தால் ஆச்சரியமாக இருக்குது நண்பா! யாரும் எளிதாக,கடக்க முடியாத கடுமையான பாதைகளை,கர்த்தர் நம்மை
எளிதாக கடக்க வைத்திருக்கிறார்...

பிரவீன்: அதுமட்டுமல்ல பிரவீன், எவராலும்,விரைவில் முடிக்க முடியாத, அனேக காரியங்களை, கர்த்தர் நம்மை வைத்து முடித்திருக்கிறார்...

பரத்: ஆமா! நம்மால் முடியாததை,நமக்காக நமக்குள் இருந்து,முடித்தவர் கர்த்தர்
கடந்த வருடத்தில்,நமக்கு கிடைத்த எல்லா வெற்றிகளும் கர்தருடையது...
நிகழ்காலத்திலும்,வருங்காலத்திலும்
வரப்போகிற எல்லா வெற்றிகளும் கர்த்தருடையது தான்,ஏனென்றால் நாம்,அவருடையவர்கள்,
அவருக்கு சொந்தமானவர்கள்,
அவரது சொந்த இரத்த கிரயத்தால்,
விலைக்கு வாங்கப்பட்டவர்கள்,
அவர் இல்லாமல்,நம்மால் ஒன்றும் செய்ய முடியாது...

பிரவீன் : ஆமா! கர்த்தராகிய இயேசுவை பிரிந்தது  நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது...கடந்த வருடம் நமக்கு கிடைத்த வெற்றிகள்,
நம் அறிவாலும்,திறமையாலும்,
வந்ததல்ல,அது ஆண்டவருடைய வார்த்தையாலும்,அவர் கொடுத்த
வாக்குத்தத்தங்களினாலும்
வந்தது..

பரத்: ஆமா! தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறது (2 கொரி1:20) என்று எழுதியிருக்கிறது..

பிரவீன்: ஆமா தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நமது அறிவின் அடிப்படையில்,திறமையின், அடிப்படையில்,செல்வாக்கின்  அடிப்படையில் நமக்கு  வந்து கிடைக்கிறது  இல்லை,அவைகள் தேவன் நம்மீது வைத்த அன்பின் வெளிப்பாடாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம்,நமக்கு கிடைத்திருக்கிறது,
விசுவாசத்தினால் அவைகள் நமக்கு சொந்தமும் ஆகிறது.

பரத்: (ஏசாயா 58:11)-ல் இவ்வாறாக தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்...

"கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்;
நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும்,வற்றாத
நீரூற்றைப்போலவும் இருப்பாய்"

பிரவீன்: ஆம்,நிச்சயமாகவே!
கர்த்தர் நித்தமும் நம்மை நடத்தி,
மகா வறட்சியான காலங்களில்
நம் ஆத்துமாவைத் திருப்தியாக்குவார்.

பரத்: ஆமா பிரவீன் நமது வாழ்வில் வறட்சியான சூழ்நிலையை வரப்போவது கிடையாது,
ஏனென்றால் கர்த்தர் நமது
மேய்ப்பராய் இருக்கிறார்,
நாம் அவரின் மேய்ச்சலின்
ஆடுகளாய் இருக்கிறோம்,
எனவே நமது வாழ்வில் வறட்சி
என்ற பேச்சுக்கே இடம் கிடையாது...
ஆனால் இந்த உலகத்தில் வறட்சி உள்ளது... நாம் கர்த்தர்  நல்லவர்
என்ற சத்தியத்தில் வேரூன்டப்பட்டவர்களாய்,
அவர் நம்மை நலமும் விசாலமுமான,
திருப்திகரமாக பாதைகளில் நடத்த வல்லவர் என்கிற விசுவாசத்திலே உறுதியாக இருந்தால், உலகத்தின் வறட்சி நம்மை அனுகாது...

பிரவீன்: ஆமா நண்பா! இந்த உலகத்தில் வறட்சி இருந்தாலும்,
இனி மகா வறட்சியான காலம் வந்தாலும்,கர்த்தர் நம்மை நடத்துகிறபடியால்,நம்முடைய
பாதை என்றுமே பாலும் தேனும்
ஓடுகிற நலமும் விசாலமுமான பாதைதான்

பரத்: ஆமா! அவர் நம்முடைய ஆத்துமாவைத் திருப்தியாக்கி,
நம் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்;
நாம் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும்,வற்றாத
நீரூற்றைப்போலவும் நாம் நிச்சயம்  இருப்போம்,அதில் எனக்கு எந்த சந்தேகமும்  இல்லை...
ஏனென்றால் நம்மை நடத்துகிறவர் வானத்திற்கும்,பூமிக்கும்
சொந்தக்காரர் அல்லவா!

பிரவீன்: ஆமா! நம்மை விட அறிவாலிகளும்,திறமைசாலிகளும் நம்மை சுற்றி நெறய பேர் இருக்காங்க ஆனா அவங்க அவிசுவாசிகளாய் இருப்பதால்,கர்த்தருடைய நடத்துதல் இல்லாதவர்களாய்,பாவத்திற்கும்,
சாபத்திற்கும்,வியாதிக்கும்,
தரித்திரத்திற்கும் அடிமைப்படுத்தப்பட்டு
அடிமட்டத்தில் இருக்கிறார்கள்,
அவர்களுக்கு எட்டாத உயரத்தில், நம்மை தூக்கி வைத்தவர் 'கர்த்தர்', இதை நம் வாழ்நாளில் என்றும், மறக்கவே கூடாது...

பரத்: ஆமா மறக்கவே கூடாது,
இதுவரைக்கும் நம் வாழ்வில் நடந்த எல்லா நன்மைகளுக்கு காரணர் கர்த்தர் மாத்திரம் தான்,
எந்த தீமைக்கும் கர்த்தர் காரணர் அல்லவே அல்ல.. இதையும் நாம் மறக்கவே கூடாது...

பிரவீன்: ஆமா! கர்த்தர் நல்லவர்
நன்மை மட்டுமே செய்கிறவர்...
நம் வாழ்வில் பெற்ற நன்மையான ஈவுகளுக்கு அவர்தான் காரணர்,
எந்த தீமைக்கும் அவர் காரணர்
அல்ல..

பரத்: ஆமா நண்பா கடந்த வருடத்தில்  அவர் நமக்கு போதித்து,நடத்திவந்த பாதைகளுக்காகவும்..நம்
வாழ்நாள் முழுவதும் அவர்
நடத்த போகிற பாலும் தேனும்
ஓடுகிற நலமும் விசாலமுமான பாதைகளுக்காகவும்,கர்த்தரை,
 நன்றி நிறைந்த உள்ளத்தோடு
என்றும் துதிப்போம்..அவரின்
நாமத்தின் மகிமைக்காக மாத்திரமே என்றும் உழைப்போம்...

பிரவீன்: ஆமா,இந்த வருடத்தின்,
ஆரம்ப நாள்முதல்,நாம் இந்த
பூமியில் வாழ்கிற கடைசி நாள்
வரை..நாம் பெறப்போகிற எல்லா
வெற்றிகள்,உயர்வுகள் என அனைத்திலும்,நமது சுய
பெருமையை முற்றிலும் தவிர்ப்போம், நான் அல்ல,கிறிஸ்துவே,என்று நமது எல்ல உயர்விலும்,கர்த்தரின்
நாமத்தை மாத்திரம் உயர்த்துவோம்.
வருகிற வருடத்திலும் அவர்
நிச்சம் நமக்கு போதிப்பார்,
நாம்  நடக்கவேண்டிய வழியை காட்டுவார்,நம்மேல் அவர் கண்ணை வைத்து, நமக்கு என்றும்
ஆலோசனை சொல்லுவார்....

ஆமென்... அல்லேலூயா...

நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
(சங்கீதம் 32:8)

======================
Revelation by spirit of God
======================

No comments:

Post a Comment