Wednesday 19 October 2016

கள்ள போதகர்கள் மற்றும்
கள்ள தீர்க்கதரிசிகளின்,பொய் உபதேசத்திலிருந்து கிறிஸ்தவர்கள் தங்களை எப்படி காத்துக்கொள்வது ?

பால்ராஜ்: இன்றய காலகட்டத்தில் கிறிஸ்தவர்கள்,கள்ள போதகர்கள், மற்றும் கள்ள தீர்க்கதரிசிகளை அடையாளம் கண்டுகொண்டு, சாத்தானின் வஞ்ஜக கள்ள உபதேசத்தில் சிக்கிகொள்ளாமல், தங்களை காத்துகொள்வது மிகவும் அவசியமாக இருக்கிறது...

டேனியல்: ஆமா கள்ள உபதேசங்கள் ஆவிக்குரிய பெலனில்லாத  கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை கெடுத்து அவர்களின்
வாழ்க்கையை சீரழித்துவிடும்..
ஆரம்பத்தில் விசுவாசிகளாக இருந்தவர்கள் கள்ள உபதேசத்திற்கு செவிகொடுத்ததால்,இயேசுவைவிட்டு
தூரம் போய் நரக ஆக்கினைக்குள் செல்லும் நிலையும் நேரிடும்...

பால்ராஜ்: ஆமா கள்ள போதகர்கள்  கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள் என்று தேவனுடைய வார்த்தைகள் எச்சரிக்கின்றன.....
(மத்தேயு 24:23-27; 2பேதுரு 3:3;
  மற்றும் யூதா 1:17-18).

டேனியல் : பொய் உபதேசங்கள் மற்றும் கள்ள போதனைகளுக்கு எதிராக நம்மை காத்துக்கொள்ள நாம்  சத்தியத்தை நன்கு அறிந்து
கொள்வதே சிறந்த வழியாகும்.

பால்ராஜ்: ஆமா பொய்யை,போலியை  எதுவென்று கண்டுபிடிக்க,சத்தியத்தை உண்மையை நல்ல முறையில் கற்றுக்கொள்ள வேண்டும்.

டேனியல் : ஆமா எந்த ஒரு விசுவாசி சரியாக சத்திய #வசனத்தை கையாளுகிறானோ (2தீமத்தேயு 2:15) மற்றும் வேதத்தை கருத்தாக தியானிக்கிறானோ அவனால் தவறான உபதேசத்தை எளிதாக கண்டுகொள்ள முடியும்..... ஒரு சின்ன உதாரணம் சொல்றேன்.... மத்தேயு 3:16-17ல் சொல்லப்பட்ட பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் செயல்பாட்டை வாசித்திருக்கும் ஒரு விசுவாசி திரித்துவத்தை மறுக்கும் எந்த கள்ள  போதனையையும் உடனடியாக கேள்வி கேட்பான்...

எனவே முதலாவது நாம் வேதத்தை தியானிக்க வேண்டும் மற்றும் வேத வசனத்தின் படி நாம் கேட்க்க கூடிய எல்லா போதனைகளையும் நிதானிக்க வேண்டும்.

பால்ராஜ் : “மரமானது அதன் கனியினால் அறியப்படும்” என்று இயேசு சொன்னார் (மத்தேயு 12:33). கனியை பார்க்கிற போதே அவர்களுடைய போதனைகள்  சரியானதா? அல்லது தவறானதா?  என்பதை நாம் பகுத்தாய்வு செய்ய முடியும்.........

டேனியல் : ஆமா அவர்களின் உபதேசங்கள் கள்ள போதனையா ? இல்லை நல்ல போதனையா ?
என்பதை அறிந்து கொள்ள..
 எனக்கு தெரிந்த சில வழிமுறைகளை சொல்கிறேன்....

1) அவர்கள் இயேசுவை பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும்....

2) அவர்கள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை போதிக்கிறாரா?

3) அவர்கள் வெளிப்படுத்தும் குணாதிசயங்கள்  தன்மைகள் இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனை  மகிமைபடுத்துகிறதா?

***********************************
1) அவர்கள் இயேசுவை பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும்....

மத்தேயு 16:15-16 இயேசு கேட்கிறார், நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்? பேதுரு பிரதியுத்தரமாக, ஒரே ஒரு பதில்தான் சொல்கிறார்..........
“நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்,”

ஆனால் கள்ள உபதேசிகள் இயேசுவை தேவனுடைய குமாரன் என்று அழைத்து அடையாளப்படுத்த மாட்டார்கள்... அவர்கள்  இயேசு மரியாளின் குமாரன் என்று அடையாளப்படுத்துவார்கள்...

பால்ராஜ்: ஆமா பேதுருவுக்கு நன்றாக தெரியும் இயேசு,மரியாளின் வயிற்றில் பிறந்தவர் என்று ஆனால் அவர் இயேசுவை மரியாளின் குமாரன் என்று அடையாளப்படுத்தவில்லை.. அவரை தேவனுடைய குமாரன் என்று அடையாளப்படுத்துகிறார். அதனால் தான் மத்தேயு 16:17-ல் இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்;
மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். என்று கூறினார்.....

மேலும் பலர் இயேசுவை ஒரு சாதாரண தீர்க்கதரிசி என்றும் அடையாளப்படுத்துவார்கள்,அவர் சிலுவையில் மரிக்கவில்லை என்றும் கிறிஸ்துவின் உபதேசத்திற்கு மாறுபாடானவைகளை போதிப்பார்கள்
இவர்கள் எல்லோரும் கள்ள உபதேசிகளின் கூட்டதின் அங்கத்தினர்கள் ஆவார்கள்.....

டேனியல் : ஆமா! 2 யோவான் 9ல் வாசிக்கிறோமே.....

“கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற
எவனும் தேவனை உடையவனல்ல, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.”

பால்ராஜ்: மேலும் இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய மீட்பின் செயல் இந்த இரண்டும் எல்லாவற்றை பார்க்கிலும் மிக முக்கியமானது,
இயேசு கிறிஸ்து தேவனுக்கு சமமானவர் என்பதை கள்ள உபதேசிகள் மறுக்கிறவர்களாக இருப்பார்கள்.அவருடைய தியாக மரணத்தை குறைத்து மதிப்பிடுபவர்கள், அல்லது கிறிஸ்துவினுடைய  தன்மையை மறுப்பவர்களுக்கு கவனமாக இருக்க வேண்டும்.

***********************************

டேனியல் : அடுத்து......

2) அவர்கள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை போதிக்கிறாரா?

சுவிசேஷம் என்பது 2 கொரிந்தியர் 15:1-4ன் படி இயேசு கிறிஸ்துவின் மரணம்,அடக்கம், மற்றும் உயிர்த்தெழுதல் பற்றிய நற்செய்தி
என வரையறுக்கப்படுகிறது. இவைகளை அவர்களின் போதனைகள் வெளிப்படுத்துகிறாதா என்று நாம் நிதானிக வேண்டும்...

பவுல் கலாத்தியர் 1:7ல் எச்சரிப்பது போல “சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்கள்.”

தேவன் நமக்கு கொடுத்த செய்தியை மாற்ற போப்பாண்டவருக்கோ அல்லது பெரிய பாஸ்டருக்கோ, புனிதருக்கோ
தேவ தூதருக்கோ அல்லது வேறு எந்த சிருஷ்டிகளுக்கோ அதிகாரம் கிடையாது..... இதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்... இக்காலகட்டத்தில் அனேகர்கள் தேவனுடைய வசனத்தைவிட  தரிசனங்களுயும்,சொப்பனங்களையும்
காட்சி கொடுக்கிற நிகழ்வுகளையும் நம்புகிறார்கள்..

தேவனுடைய வசனத்திற்கு ஒத்துப்போகாத எந்த  தரிசனங்களும் சொப்பனங்களும்,காட்சி கொடுத்தலும் புதிய உபதேசங்களும்,
தேவனிடத்திலிருந்து வந்தது அல்ல

"நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்"
(கலாத்தியர் 1:8-9)

பால்ராஜ்: ஆமா.....

***********************************

டேனியல் : 3)அவர்கள் வெளிப்படுத்தும் குணாதிசயங்கள்  தன்மைகள் இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனை  மகிமைபடுத்துகிறதா?

கள்ள போதகர்களை குறித்து யூதா 11 சொல்கிறது, இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச்செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.” இந்த வசனத்தின் படி கள்ள போதகர்கள் அவர்களுடைய பெருமையினால் (காயினை தேவன் தவிர்ப்பதற்கான காரணம்), பேராசையினால் (பிலேயாம் காசுக்காக தீர்க்கதரிசனம் சொன்னான்) மற்றும்  மீறுதலினால் (கோரா தன்னை மோசேக்கு மேலாக உயர்த்தினான்) அறியப்படுவார்கள். இயேசு இப்படிப்பட்டவர்களுக்கு கவனமாக இருக்கும் படி சொன்னார் மற்றும் இவர்களுடைய கனியின் படி இவர்களை நாம் அறியலாம்
 (மத்தேயு 7:20).

இப்படிபட்டவர்கள் தங்களுக்கு தாங்களே தீர்க்கதரிசி,அப்போஸ்தலன்,
என்று பட்டம் வைத்துக்கொண்டு,
கள்ள தீர்க்கதரிசனம் சொல்லி மக்களை வஞ்சிப்பார்கள், அவர்கள் தேவனுடைய நாமத்தின் மகிமைக்காய் காரியங்களை செய்ய மாட்டார்கள்,
சுய பெருமை, சுய விளப்பரம், பேசுவார்கள் தங்களை அவர்கள்
சூப்பர் பரிசுத்தவான் போல் காட்டுவார்கள்...

நான் பரலோகம் சென்று பக்கோடா சாப்பிட்டேன்,நரகம் சென்று நாஸ்தா  சாப்பிப்டேன்.... கதைவிடுவார்கள்...

வேதம் போதிக்கும் ஆவியின் வரங்கள்
கனிகள் இவைகளுக்கு மாறாக,
கண்டபடி உருலுதல்,குதித்தல் ,
புரளுதல்,தாவுதல்,குதித்தல்
குத்தாட்டம் போடுதல்,மிருகங்கள் போல் ஊளையிடுதல்... இவைகள் பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் என்று சொல்லி மக்களை ஏமாற்றி வஞ்சிக்கிறார்கள்...

கள்ள உபதேசிகளை அடையாளம் கண்டுகொள்ளுதல் குறித்து  நாம் மேலும் அறிந்து கொள்ள ஆதி திருச்சபைசபைகளில் காணப்பட்ட தவறான உபதேசத்தை குறிப்பாக எதிர்க்க எழுதப்பட்ட வேதாகமத்தில் உள்ள புத்தகங்களை ஆய்வு செய்யலாம். குறிப்பாக கலாத்தியர், 2பேதுரு, 1யோவான், 2 யோவான் மற்றும் யூதா.

பால்ராஜ்: எல்லாம் இப்படி வெளிப்படையாக இருந்தும்
கள்ள போதகர்கள் மற்றும் கள்ள தீர்க்கதரிசிகளை இனங்கண்டு கொள்வது அனேக நேரங்களில் கிறிஸ்தவர்களுக்கு கடினமாக இருக்கிறது....

சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வான் (2கொரிந்தியர் 11:14), மற்றும் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வார்கள்
(2கொரிந்தியர் 11:15). என்று வேதம் போதிக்கிறது....

ஆகவே வேதாகம சத்தியத்தை அறிந்து கொள்வதன் மூலம் மட்டுமே நம்மால் போலியையும் பொய்களையும்  இனங்கண்டு கொள்ள முடியும்,அதுவே கள்ள உபதேசங்களிலிருந்து தப்பிக்க ஒரே வழி பரிசுத்த வேதாகமம் மட்டுமே
 வேறு மாற்று வழி இல்லை....

*********************************
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome

marveljerome.blogspot.in

No comments:

Post a Comment